கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

சிறுபாணாற்றுப்படை-14

பொதுமக்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
 பாணர்கள் நல்லியக்கோடனை நாடிச் செல்லும் வழிநெடுக உள்ள ஊர் மக்கள் அவர்களுக்கு வழங்கிய விருந்து மானிட மாண்புகள் சங்க காலத்தில் மிக்கிருந்ததை வெளிப்படுத்துகிறது.
முதற்கண் அவர்கள் எயிற்பட்டினம் என்ற கடற்கரைப் பட்டினம் வழியாகச் செல்கின்றனர். அங்குள்ள பரதவர்கள் இவர்களுக்கு வடிகட்டிய கள்ளையும், குழல் மீன் சூட்டையும் (ஒரு வகை சுட்ட மீன்) விருந்தாகப் படைப்பர்.
இரண்டாவதாக அவர்கள் வேலூர் வழியாகச் செல்கின்றனர். அவ்வூர் இடையர்கள் வாழும் பகுதி. அவர்கள் இப்பாணர்களுக்கு மான் இறைச்சியுடன் கலந்த புளியஞ்சோற்றை விருந்தாகப் படைப்பர்.

அடுத்து பாணர்கள், மருத நிலமாகிய மூர் வழியாகச் செல்வர். அங்குள்ள உழவர் பெருமக்கள் வெண்மையான அரிசிச் சோற்றை நண்டின் கறியுடன் சேர்த்துப் படைப்பர். இங்ஙனம் நல்லியக்கோடனின் நாட்டு மக்களும் கூட முன் பின் தெரியாத இந்த பாணர்களுக்குச் சிறந்த உணவாகிய விருந்தைப் படைத்துள்ளனர்.

இவ்வாறாக சிறுபாணாற்றுப்படையை நுணுகி நோக்கும் பொழுது,

வறுமையுற்ற நிலையிலும் பாணர்கள் மானிட மாண்புகள் மிக்கிருந்தனர்
நல்லியக்கோடன் மனித மாண்புகளின் கொள்கலனாக விளங்கினான்.
கடையெழு வள்ளல்கள் வள்ளன்மையில் மிக்கிருந்தனர்
தமிழர்களின் சிறந்த மாண்புகளுள் ஒன்றான விருந்தோம்பும் தன்மையில் பொதுமக்களும் மிக்கிருந்தனர் முதலானவைத் தெரிய வருகிறது. இம்மாண்புளை எல்லாம் இக்கால மக்களும் பெற்று மனித சமுதாயம் தழைத்தோங்க வழி வகுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;