பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்
| பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும் தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும் அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர் பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர். | 178 |
வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்
| வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப் பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம் திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப் பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர். | 179 |
உதயணன் ஆருணி அரசன் போர்
| அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச் சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும் அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன் அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே. | 180 |
போர்க் காட்சிகள்
| விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும் பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும் முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும் வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே. | 181 |
உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்
| மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத் தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால் மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கென ஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே. | 182 |
உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்
| பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென வகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றது தொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன் நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன். | 183 |
உதயணன் அரண்மனை புகுதல்
| மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக் கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார் பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல் ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன். | 184 |
உதயணன் திருமுடி சூடுதல்
| படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன் இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின் தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள். | 185 |
வத்தவ காண்டம்
உதயணன் அரசு வீற்றிருத்தல்
| மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப் பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில் தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல் மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் | 186 |
உதயணனின் கொடை
| மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக் கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான். | 187 |
உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்
| மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத் துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப் பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே. | 188 |
உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்
| அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான் திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு பொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே. | 189 |
பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்
| மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும் மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போல விதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள். | 190 |
உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்
| பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன் ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான். | 191 |
உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்
| கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார் அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள் கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம் இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார். | 192 |
உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்
| வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம் தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன ஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வை வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே. | 193 |
அமைச்சர் உருமண்ணுவா விடுதலை
| என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்து சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடு ஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான். | 194 |
உருமண்ணுவா உதயணனை அடைதல்
| மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக் காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டு மாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறி வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே. | 195 |
வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்
| வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும் ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும் தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்து பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார். | 196 |
உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்
| நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள் வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப் பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டு வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை. | 197 |
யூகியின் உரை
| இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும் திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்று மருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன் அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே. | 198 |
உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்
| ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச் சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தே ஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாச நீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட. | 199 |
பதுமாவதியின் வேண்டுகோள்
| யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான் நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின் பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள் ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான். | 200 |
வாசவதத்தையின் ஊடல்
| என்றவள் சொல்ல நன்றென்றெழின்முடி மன்னன் போந்து சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தில் வென்றிவேற் கண்ணினாளும் வெகுண்டுரை செப்புகின்றாள் கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள். | 201 |
உதயணன் ஊடலைப் போக்குதல்
| பாடக மிலங்கும் பாதப் பதுமையினோடு மன்னன் கூடிய கூட்டந் தன் போற் குணந்தனை நாடி யென்ன ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும் நாடியுன் றனக்கன்னாடானந்திணை யல்ல ளென்றான். | 202 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.