| 
   பழங்காலத்தில் வாழ்ந்த அகத்திய முனிவரால் இயற்றப்பட்ட நூல் அகத்தியம். இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கும் இதில் இலக்கணம் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. மூன்றுறுப்பு அடக்கிய பிண்டம் என்று இந்நூலை நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையிலும், ஆனாப்பெருமை அகத்தியன், அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்&rsquo என்று இந்நூல் ஆசிரியரையும், இந்நூலையும் பன்னிருப்படலப் பாயிரம் பாராட்டுகிறது.
 
                 இந்நூல் தற்போது கிடைக்கப்பெறவில்லை. எழுத்து, சொல், பொருள், அணி ஆகியன மட்டுமல்லாது சந்தம், வழக்கியல், கூத்து ஆகியவற்றிற்கும் இதில் இலக்கணம் கூறப்பட்டிருந்தது.
 
                 தொல்காப்பியம், நன்னூல், யாப்பெருங்கலம், இலக்கண விளக்கம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் உரையாசிரியர்கள் இடை இடையே அகத்தியத்தைச் சார்ந்தனவாக சில நூற்பாக்களை எடுத்துக்காட்டியுள்ளனர். அவ்வாறு கிடைத்த 183 நூற்பாக்களைத் தொகுத்துப் பவானந்தம் பிள்ளையவர்கள் கி.பி 20 - ஆம் நூற்றாண்டில் பேரகத்தியத் திரட்டு என்றொரு நூலை வெளியிட்டுள்ளார். அந்நூற்பாக்களின் நடை போக்கை ஆராய்ந்தவர்கள் அவை பிற்காலத்தன என கருதுகிறார்கள்.  | 
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
அகத்தியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.