| 148 | உய்தல் வாயுரைத் தாயதன் மேலு நைதலில் லாத்தெளி வோடுநன் ஞான பெய்துதந் தாய் பிழைத் தேற்கினி தாவோர் செய்த தீமை கெடக்கட னாட்டிற் | 
| 149 | யாஅ தடிக ளதருளா மாஅ துடைஅடி யிவைதா வேஎ தடவியன் மலைமேல் தீஇ தடுதலை விலங்குஞ் சினகர | 
குண்டலகேசி வாதம் 
| 150 | கொல்லை முல்லைபைங் கோங்குருந்தங் கோடறண் குரவ நல்ல மல்லிகை நறவம்ஞாழல் தாழைபுன் னாகம் பல்லி தழ்ப்பனிக் குவளை பானல் பாதிரி பிறவு மெல்லை யின்மல ரேந்தி றைவன திடவகைக் கெழுந்தாள். | 
| 151 | நீட்சி யோக்கமோ டகலநினையநின் றெங்கணு நோக்கி மாட்சி யால்வலங் கொண்டுமாதவத் திறைவனிற் பிழையாக் காட்சி யேனெனி லெல்லாக்கதவமுந் திறக்கெனத் திறப்ப வாட்சி மூவுல குடையவடிகட மடியிணை தொழுதாள். | 
| 152 | அத்தி யாளியோ டாமானட்ட மங்கல மரிய பத்தி பாவைபல் பறவைபயில்கொடி திமிசொடு பிறவும் வித்த கம்பெரி துடையவசித்திர வுருவநன் மலராற் சித்த நன்னெறி பயந்தான்திருவடிக்கு அருச்சனை செய்தாள். | 
| 153 | தூமஞ் சாந்தொடு சுண்ணந்துதியொடு பரவுபு தொழுதே தாமந் தாழ்தர நாற்றித்தத்துவ தரிசிய துருவே யாமென றையென வியந்தாங்கன்ன வாயிரத் தோரெண் ணாம நல்லிசை தொடுத்துநாதகீ தங்களை நவிற்றும். | 
| 154 | கன்று காலனைக் கடந்தாய்காதற் காமனைக் கடிந்தாய் தொன்று மூத்தலைத் துறந்தாய்தோற்ற மாக்கட லிறந்தா யொன்ற நோய்பகை யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர வென்றி ருந்தனை நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா. | 
| 155 | சாத னோய்சரை பிறவிதாஞ்செய் திவினைக் கடலுண் மாது யருழந் துறுநோய்மறுகு மன்னுயிர்க் கெல்லாந் தீதி னன்னெறி பயந்துதிரைசெய் நீள்கரை யொருவிப் போத ரும்புணை படைத்தாய்புலவர்தம் புலவர்க்கும் புலவா. | 
| 156 | அரிய வாயின செய்திட்டமரர் துந்துபி யறைந்து புரிய பூமழை பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த விரிகொ டண்டளிர்ப் பிண்டிமரநிழ லிருந்திரு வினையும் பிரியும் பெற்றியை யுரைத்தாய்பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய். | 
| 157 | பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கார்நின் றிரட்டச் சிங்க வாசனத் திருந்துதெளிந்தொளி மண்டில நிழற்றத் திங்கண் முக்குடை கவிப்பத்தேவர்தந் திருந்தவை தெருள வங்க பூவம தறைந்தாயறிவர்தம் மறிவர்க்கு மறிவா. | 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.