(1)திக்குதிக்கு
(2)திடுதிடு
(3)திபுதிபு
(4)திருதிரு
(2)திடுதிடு
(3)திபுதிபு
(4)திருதிரு
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இனமாற்றல் | ஓரினக் கணக்கை மற்றோரினக் கணக்காக மாற்றுகை . |
| இனமுறை | ஒத்த சாதி . |
| இனமொழி | எண்வகை விடைகளுள் ஒன்று . |
| இனமோனை | இனவெழுத்தால் வரும் மோனை . |
| இனவழி | மரபுவழி , வமிச பரம்பரை . |
| இனவழிக் கணக்கு | பேரேடு . |
| இனவாரி | இனம் இனமாய் . |
| இனவெதுகை | இனவெழுத்தால் வரும் எதுகை , |
| இனவெழுத்து | தானம் , முயற்சி , அளவு , பொருள் , வடிவு முதலிய ஏதுக்களினால் ஒரு வகைப்பட்டுவரும் எழுத்துகள் ; முயற்சிவகையால் ஒன்றற்கொன்று இனமான எழுத்துகள் . |
| இனன் | சூரியன் ; உறவினன் ; ஒத்தவன் ; ஆசிரியர் . |
| இனாப்பித்தல் | துன்பமுண்டாக்குதல் . |
| இனாம் | பயனோக்கா ஈகை ; நன்கொடை ; மானியம் . |
| இனாம்தார் | மானிய நிலத்துக்குரியவர் . |
| இனி | இப்பொழுது ; இனிமேல் ; பின்பு ; இப்பால் ; இதுமுதல் . |
| இனித்தல் | தித்தித்தல் ; இன்பமாதல் . |
| இனிது | இன்பந்தருவது ; நன்மையானது ; நன்றாக . |
| இனிப்பு | இனிமை ; தித்திப்பு ; மகிழ்ச்சி |
| இனிப்புக்காட்டுதல் | ஆசைகாட்டுதல் ; சுவையாதல் . |
| இனிமேல் | இதற்குப் பிற்பாடு ; இதுமுதல் ; வருங்காலத்து . |
| இனிமை | இனிப்பு , தித்திப்பு ; இன்பம் . |
| இனியர் | இன்பம் தருபவர் ; மகளிர் . |
| இனும் | இன்னும் . |
| இனை | இன்ன ; இத்தனை ; வருத்தம் . |
| இனைத்தல் | வருத்துதல் ; கெடுத்தல் . |
| இனைத்து | இத்தன்மைத்து ; இவ்வளவினது . |
| இனைதல் | வருந்துதல் ; இரங்குதல் ; அஞ்சுதல் . |
| இனைய | இத்தன்மைய ; இதுபோல்வன . |
| இனைவரல் | வருந்துதல் , இரங்குதல் . |
| இனைவு | வருத்தம் ; இரக்கம் . |
| இன்று | இலை ; இந்த நாள் ; ஓரசைச்சொல் . |
| இன்றைக்கு | இந்த நாளுக்கு . |
| இன்றையதினம் | இந்த நாள் . |
| இன்ன | இத்தன்மையான ; இப்படிப்பட்டவை ; ஓர் உவமவுருபு . |
| இன்னணம் | இன்ன வண்ணம் என்பதன் மரூஉ ; இவ்விதம் , இவ்வாறு . |
| இன்னது | இத்தன்மையது ; இது . |
| இன்னம் | இத்தன்மையுடையேம் ; காண்க : இன்னும் ; இனிமேலும் |
| இன்னமும் | காண்க : இன்னும் . |
| இன்னயம் | உபசார மொழி . |
| இன்னர் | இத்தன்மையர் ; உற்பாதம் . |
| இன்னல் | துன்பம் ; தீமை ; குற்றம் . |
| இன்னன் | இப்படிப்பட்டவன் ,இத்தன்மையன் . |
| இன்னா | துன்பம் ; தீங்கு தருபவை ; கீழ்மையான ; இகழ்ச்சி ; வெறுப்பு . |
| இன்னாங்கு | தீமை ; துன்பம் ; கடுஞ்சொல் . |
| இன்னாங்கோசை | கடுமையான ஓசை . |
| இன்னாது | தீது ; துன்பு . |
| இன்னாப்பு | துன்பம் . |
| இன்னாமை | இனியவாகாமை ; துன்பம் , துயரம் ; தீமை . |
| இன்னார் | பகைவர் . |
| இன்னாரினியார் | பகைவரும் நண்பரும் . |
| இன்னாரினையார் | இத்தன்மை உடையவர் . |
| இன்னாலை | இலைக் கள்ளிமரம் . |
| இன்னாவிசை | செய்யுட் குற்றம் இருபத்தேழனுள் ஒன்று . |
| இன்னான் | இத்தன்மையன் ; துன்பம் செய்பவன் . |
| இன்னிசை | இன்ப ஓசை ; பண் ; ஏழு நரம்புள்ள வீணை ; இனிய பாட்டு ; இன்னிசை வெண்பா . |
| இன்னிசைக்காரர் | இசைபாடுவார் , பாணர் . |
| இன்னிசை வெண்பா | நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா . |
| இன்னிசை வெள்ளை | நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா . |
| இன்னியம் | இசைக்கருவிகள் . |
| இன்னியர் | பாணர் . |
| இன்னிலை | இல்லற நிலை ; பதினெண் கீழ்க் கணக்கு நூலுள் ஒன்று என்ப . |
| இன்னினி | இப்பொழுதே . |
| இன்னும் | இவ்வளவு காலம் சென்றும் ; மறுபடியும் ; மேலும் ; அன்றியும் . |
| இன்னுமின்னும் | மேன்மேலும் . |
| இன்னுழி | இன்ன இடத்து . |
| இன்னே | இப்பொழுதே ; இவ்விடத்தே ; இவ்விதமாகவே . |
| இன்னோன் | இப்படிப்பட்டவன் |
| இனக்கட்டு | பந்துக்கட்டு ; உறவினர்களிடையே உள்ள நெருக்கம் , இனக் கூட்டம் ; முறைமை . |
| இனங்காப்பார் | கோவலர் , ஆயர் . |
| இனஞ்சனம் | உற்றார் உறவினர் . |
| இனத்தான் | உறவினன் . |
| இனம் | வகை ; குலம் ; சுற்றம் ; சாதி ; கூட்டம் ; திரள் ; அரசர்க்கு உறுதிச்சுற்றம் ; அமைச்சர் ; உவமானம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இரிபு | அச்சம் ; ஓடுதல் ; தோல்வி ; பகை ; பகைவன் ; வெறுப்பு . |
| இரிபேரம் | வெட்டிவேர் . |
| இரிமான் | எலிவகை . |
| இரியல் | அச்சத்தால் நிலைகெடுகை ; விட்டுப் போதல் ; விரைந்து செல்கை ; அழுகை . |
| இரியல்போக்குதல் | சாய்ந்துகொடுத்தல் |
| இரியல்போதல் | தோற்றோடுதல் . |
| இரீதி | பித்தளை ; இயற்கைக் குணம் ; இரும்புக்கறை ; எல்லை ; கிட்டம் ; நாட்டு வழக்கம் ; நீர் பொசிந்தொழுகல் ; பாரம்பரியமான வழக்கம் ; பித்தளைப் பஸ்பம் . |
| இரு | பெரிய ; கரிய ; இரண்டு . |
| இருக்கணை | சித்திரவேலைக்குதவும் மரவகை . |
| இருக்கம் | நட்சத்திரம் கரடி ; இராசி . |
| இருக்கமாலி | 766 முழ அகலமும் உயரமும் உள்ளதாய் 766 சிகரங்களோடு 96 மேனிலைக்கட்டுகள் கொண்ட கோயில் . |
| இருக்கன் | இருக்குவேதமுணர்ந்தவன் ; பிரமன் . |
| இருக்காழி | இரண்டு விதைகளையுடைய காய் . |
| இருக்கு | வேதமந்திரம் ; இருக்குவேதம் . |
| இருக்குக்குறள் | சிறிய பாவகை . |
| இருக்குகை | இருத்தல் . |
| இருக்குதல் | இருத்தல் . |
| இருக்குவேதம் | முதல் வேதம் |
| இருக்கை | உட்கார்ந்திருக்கை ; ஆசனம் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; கோள்கள் இருக்கும் இராசி ; ஊர் ; கோயில் ; அரசர் போர்புரியக்காலம் கருதியிருக்கும் இருப்பு . |
| இருகண் | ஊனக்கண் ஞானக்கண் . |
| இருகரையன் | இரண்டு நோக்குள்ளவன் . |
| இருகால் | அரை ; இருமுறை ; இரண்டு பாதம் , கவறாட்டத்தில் குறித்த ஓர் எண் . |
| இருகுரங்கின்கை | முசுமுசுக்கை . |
| இராமாலை | கருக்கல் நேரம் ; இருளடைந்த மாலை நேரம் . |
| இராமாவதாரம் | தசரத ராமனாக அவதரித்த திருமால் பிறப்பு ; கம்பராமாயணம் . |
| இராமாறு | இராத்தோறும் . |
| இராமானம் | தினந்தோறும் உள்ள இரவின் அளவு ; இரவு . |
| இராமானுசகூடம் | வைணவ வழிப்போக்கர்கள் தங்கும் சாவடி . |
| இராமானுச தரிசனம் | விசிஷ்டாத்துவைதம் , இராமானுசரால் நிறுவப்பட்ட தத்துவம் . |
| இராமானுசம் | வைணவர் பயன்படுத்தும் ஒருவகைச் செப்புப் பாத்திரம் . |
| இராமானுசீயர் | இராமனுசர் மதத்தைப் பின்பற்றுவோர் , ஸ்ரீவைணவர் . |
| இராமிலன் | கணவன் ; மன்மதன் . |
| இராமேசுரம் வேர் | சாயவேர் . |
| இராமேசுவரம் | இராமனால் நிறுவப்பட்ட ஒரு சிவத்தலம் . |
| இராமை | மன்மதநூல் கற்றவள் ; சிறுவழுதலை . |
| இராயசக்காரன் | எழுத்து வேலைக்காரன் ; எழுத்தன் . |
| இராயசம் | எழுத்து வேலை ; எழுத்து வேலைக்காரன் ; ஆணைப் பத்திரம் . |
| இராயணி | அரசி . |
| இராயர் | விசயநகர அரசர் பட்டப்பெயர் , மகாராட்டிர மாத்துவப் பிராமணர் பட்டப்பெயர் . |
| இராயன் | அரசன் ; பழைய நாணயவகை . |
| இராயிரம் | இராண்டாயிரம் . |
| இராவடம் | அசோகு ; அராவுந்தொழில் . |
| இராவடி | ஏலம் ; பேரேலம் . |
| இராவண சன்னியாசி | தவ வடிவிலிருந்து அவச்செயல் செய்பவன் ; மோசடிக்காரன் . |
| இராவணம் | விளக்கு ; அழுகை . |
| இராவணன் | கடவுள் ; இலங்கையை ஆண்ட மன்னன் |
| இராவணன் புல் | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணன் மீசை | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணன் மோவாய்ப்புல் | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணாகாரம் | பயங்கர வடிவம் . |
| இராவணாசுரம் | வீணைவகை . |
| இராவணாத்தம் | ஒருவகைச் சிறு வீணை . |
| இராவணி | இராவணன் மகனான இந்திரசித்து . |
| இராவதம் | சூரியன் குதிரை ; மேகலோகம் . |
| இராவதி | ஒரு கொடி ; ஓர் ஆறு ; யமபுரம் . |
| இராவிரேகு | தலையணிகளுள் ஒன்று ; அரசிலைச் சுட்டி ; அரைமூடி . |
| இராவுத்தராயன் | குதிரைச் சேவகரின் தலைவன் . |
| இராவுத்தன் | குதிரை வீரன் ; தமிழ் முகம்மதியருள் ஒரு பிரிவினரின் பட்டப்பெயர் . |
| இராவுத்தாங்கம் | ஒருவகைக் கொண்டாட்டம் . |
| இராவுதல் | அராவுதல் . |
| இராவைக்கு | காண்க : இரவைக்கு . |
| இராவோன் | சந்திரன் . |
| இரிக்கி | பெருங்கொடிவகை . |
| இரிகம் | இதயம் , மனம் . |
| இரிசல் | பிளவு ; மனமுறிவு . |
| இரிசால் | காண்க : இருசால் |
| இரிசியா | பூனைக்காலி . |
| இரிஞ்சி | மகிழ் . |
| இரிஞன் | பகைவன் . |
| இரிட்டம் | நன்மை ; வாள் ; தீமை ; பாவம் . |
| இரிணம் | உவர்நிலம் . |
| இரித்தல் | தோற்றோடச் செய்தல் ; கெடுத்தல் ; ஓட்டுதல் . |
| இரித்தை | சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி என்னும் திதிகள் ; நாழிகை . |
| இரிதல் | கெடுதல் ; ஓடுதல் ; விலகுதல் ; வடிதல் ; அஞ்சுதல் . |
| இரிப்பு | அச்சுறுத்தல் ; ஓட்டுதல் ; தோல்வியுறச்செய்தல் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இருத்தல் | உளதாதல் ; நிலைபெறுதல் ; உட்காருதல் ; உள்ளிறங்குதல் ; உயிர் வாழ்தல் ; அணியமாயிருத்தல் ; உத்தேசித்தல் ; ஒரு துணைவினை ; முல்லை உரிப்பொருள் . |
| இருத்தி | சித்தி ; வட்டி . |
| இருத்திப்பேசுதல் | அழுத்திச் சொல்லுதல் . |
| இருத்திப்போடுதல் | நிலைக்கச்செய்தல் ; அசையாமல் செய்தல் . |
| இருத்தினன் | இருத்துவிக்கு ; யாக புரோகிதன் , வேள்வி செய்து வைப்பவன் . |
| இருத்து | வயிரக்குற்றங்களுள் ஒன்று ; நிலையான பொருள் ; அமுக்குகை . |
| இருத்துதல் | உட்காரச் செய்தல் ; தாமதிக்கச்செய்தல் ; அழுத்துதல் ; அடித்து உட்செலுத்துதல் ; நிலைபெறச் செய்தல் ; கீழிறக்குதல் . |
| இருத்துவிக்கு | காண்க : இருத்தினன் . |
| இருத்தை | சேங்கொட்டை ; சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி எனப்படும் நான்கு , ஒன்பது , பதினான்காம் பக்கங்கள் ; இருபத்து நான்கு நிமிடங் கொண்ட ஒரு நாழிகை ; நாழிகை வட்டில் . |
| இருதம் | காண்க : உஞ்சவிருத்தி ; நீர் ; மெய்ம்மை . |
| இருதயகமலம் | உள்ளத்தாமரை . |
| இருதயத்துடிப்பு | மார்பு படபடவென்று அடித்துக்கொள்ளுகை . |
| இருதயம் | இதயம் ; மனம் ; நேசத்துக்கு உறைவிடமான இடம் ; கருத்து ; நடு . |
| இருதலை | இருமுனை . |
| இருதலைக்கபடம் | விலாங்குமீன் . |
| இருதலைக்கொள்ளி | இரு முனையிலும் தீயுள்ளகட்டை ; எப்பக்கத்தும் துன்பஞ் செய்வது . |
| இருதலை ஞாங்கர் | இருதலையும் கூருள்ள முருகன் வேல் . |
| இருதலைநோய் | எழுஞாயிறு என்னும் நோய் . |
| இருதலைப் பகரங்கள் | எழுத்துகளை உள்ளடக்கி நிற்கும்[ ] என்னும் குறியீடுகள் . |
| இருதலைப்பாம்பு | இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு . |
| இருதலைப்புடையன் | இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு . |
| இருதலைப்புள் | இரண்டு தலைகளுள்ள பறவை . |
| இருதலைமணியம் | நண்பன்போல் நடித்து இருவரிடையே கலகம் விளைவிக்கும் தொழில் |
| இருதலைமணியன் | பாம்பில் ஒருவகை ; கோள்சொல்லுவோன் . |
| இருதலை மாணிக்கம் | ஒரு மந்திரம் ; முத்தி பஞ்சாட்சரம் . |
| இருதலைமூரி | காண்க : இருதலைப்பாம்பு . |
| இருதலைவிரியன் | பாம்புவகை . |
| இருதாரைக் கத்தி | இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி . |
| இருதிணை | உயர்திணை அஃறிணை ; இயங்குதிணை நிலைத்திணை . |
| இருது | ருது ; இரண்டு மாத பருவம் ; மகளிர் பூப்பு ; முதற் பூப்பு ; தக்க காலம் ; கடவுளின் முத்தொழில் ; பிரபை . |
| இருதுகாலம் | மாதவிடாய்க் காலம் ; கரித்தரிக்கும் காலம் . |
| இருதுசங்கமணம் | பூப்புற்ற நாளில் முதன் முதலாகத் தலைவன் தலைவியரைக் கூட்டுதற்குச் செய்யுஞ் சடங்கு . |
| இருதுசந்தி | இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம் . |
| இருதுசாந்தி | பூப்புற்ற பெண்ணுக்குத் தீங்கு நேரிடாதபடி செய்யும் சடங்கு ; சோபனகலியாணம் ; சாந்திக் கலியாணம் . |
| இருதுநுகர்பு | பருவங்கட்குரிய அனுபவம் . |
| இருதுமதி | பூப்படைந்த பெண் , கருத்தரித்தற்குரிய நிலையிலிருப்பவள் . |
| இருகுறள் நேரிசைவெண்பா | இரண்டு குறட்பாக்களைக் கொண்ட நேரிசைவெண்பாவகை . |
| இருகை | இரண்டு கைகள் ; இருபக்கம் . |
| இருகோட்டறுவை | முன்னும் பின்னும் தொங்கலாக விடும் துகில் . |
| இருங்கரம் | பதக்கு . |
| இருசகம் | மாதுளை . |
| இருசாதி | கலப்புச் சாதி . |
| இருசால் | தண்டற்பணம் செலுத்துகை ; கருவூலத்துக்கு அனுப்பும் பணம் . |
| இருசி | பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; ஒரு பெண்பிசாசு . |
| இருசீர்ப்பாணி | இரட்டைத் தாளம் . |
| இருசு | நேர்மை ; வண்டியச்சு ; மூங்கில் . |
| இருசுகந்தபூண்டு | மருக்கொழுந்து . |
| இருசுடர் | சந்திரசூரியர் . |
| இருசுழி | இரட்டைச்சுழி . |
| இருஞ்சிறை | காவல் ; மதில் ; நரகம் . |
| இருட்கண்டம் | கழுத்தணிவகை . |
| இருட்கண்டர் | சிவபெருமான் . |
| இருட்சரன் | இருட்டில் திரிவோன் ; இராக்கதன் . |
| இருட்சி | இருள் ; இருட்டு ; மயக்கம் . |
| இருட்டு | இருள் ; அறியாமை . |
| இருட்டுதல் | இருளடைதல் ; மந்தாரமிடுதல் . |
| இருட்பகை | சூரியன் . |
| இருட்பகைவன் | சூரியன் . |
| இருட்படலம் | இருளின் தொகுதி . |
| இருட்பிழம்பு | இருளின் தொகுதி . |
| இருட்பூ | ஒருவகை மரம் . |
| இருடி | ஆந்தை ; முனிவன் வேதம் . |
| இருடிகம் | இந்திரியம் . |
| இருடீகம் | இந்திரியம் . |
| இருடிகேசன் | திருமால் . |
| இருடீகேசன் | திருமால் . |
| இருண்டி | சண்பகம் . |
| இருண்மதி | தேய்பிறைச் சந்திரன் ; அமாவாசை . |
| இருண்மலம் | ஆணவமலம் |
| இருண்மை | இருளுடைமை ; இருண்டிருக்கும் தன்மை . |
| இருணபாதகன் | கடன் தீர்க்காமல் மோசம் செய்பவன் . |
| இருணம் | உவர்நிலம் ; கடன் ; கழிக்கப்படும் எண் ; கோட்டை ; நிலம் ; நீர் . |
| இருணாள் | இருள் நாள் ; தேய்பிறைப் பக்கத்து நாள் . |
| இருணி | பன்றி . |
| இருணிலம் | நரகம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இருபிறப்பாளன் | பார்ப்பனன் ; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகவுள்ளவன் ; சந்திரன் ; சுக்கிரன் . |
| இருபிறப்பு | இரண்டு வகையான பிறப்பு ; பல் ; பார்ப்பனர் ; சந்திரன் ; பறவை . |
| இருபிறவி | இருசாதி சேர்ந்து பிறக்கும் உயிரினம் . |
| இருபுட்சன் | இடியேறு ; இந்திரன் ; துறக்கம் . |
| இருபுட்சி | இந்திரன் . |
| இருபுடைமெய்க்காட்டு | ஒன்றே இருவேறு வகையாகத் தோற்றுவது . |
| இருபுரியாதல் | மாறுபாடாதல் . |
| இருந்தும் | ஆகவும் . |
| இருந்தேத்துவார் | அரசனை உட்கார்ந்தே புகழ்வார் , மாகதர் . |
| இருந்தை | கரி . |
| இருநடுவாதல் | இடைமுரிதல் . |
| இருநா | பிளவுபட்ட நாக்கையுடையது ; உடும்பு ; பாம்பு . |
| இருநிதி | சங்கநிதி பதுமநிதி . |
| இருநிதிக்கிழவன் | சங்கநிதி பதுமநிதிக்கு உரியவன் குபேரன் . |
| இருநிதிக்கோன் | சங்கநிதி பதுமநிதிக்கு உரியவன் குபேரன் . |
| இருநியமம் | இருவேறு கடைகள் ; அல்லங்காடி நாளங்காடி . |
| இருநிலம் | பெரிய பூமி . |
| இருநிறமணிக்கல் | இரத்தினவகை . |
| இருநினைவு | இரண்டுபட்ட எண்ணம் . |
| இருநீர் | பெருநீர்ப்பரப்பு , கடல் . |
| இருப்பணிச்சட்டம் | வண்டியோட்டுவோன் இருத்தற்குரிய முகப்புச் சட்டம் . |
| இருப்பவல் | ஒரு மருந்துப் பூண்டு . |
| இருப்பன | நிலைத்திணைப் பொருள்கள் . |
| இருப்பாணி | இரும்பினால் செய்த ஆணி . |
| இருப்பிடம் | வாழும் இடம் ; இருக்கை ; பிருட்டம் . |
| இருப்பு | இருக்கை ; மலவாய் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; நிலை ; கையிருப்பு ; பொருண்முதல் . |
| இருப்புக்கச்சை | வீரர் அணியும் இருப்புடை . |
| இருப்புக்கட்டி | வரிவகை . |
| இருப்புக்கட்டை | சாவியின் தண்டு ; சுத்தியல் . |
| இருப்புக்கம்பை | வண்டி ஓட்டுபவனுக்கு வண்டியின்முன் அமைக்கப்பட்ட இருக்கை . |
| இருப்புக்காய்வேளை | இரும்புக்காய்வேளை என்னும் செடி . |
| இருப்புக்கிட்டம் | இரும்பு உருகிய கட்டி . |
| இருப்புக்கொல்லி | சிவனார்வேம்பு . |
| இருப்புக்கோல் | நாராசம் ; அறுவை மருத்துவனின் கருவியுள் ஒன்று . |
| இருப்புச்சட்டம் | காண்க : இருப்பணிச்சட்டம் . |
| இருப்புச்சலாகை | இரும்பினால் ஆன நீண்ட கோல் . |
| இருப்புச்சிட்டம் | காண்க : இருப்புக்கிட்டம் . |
| இருப்புச்சில் | சிறுவர் விளையாட்டுக் கருவி . |
| இருப்புச்சீரா | இரும்பினாலான சட்டை . |
| இருப்புச்சுவடு | இரும்பினாலான சட்டை . |
| இருப்புச்சுற்று | இரும்புப் பூண் . |
| இருப்புத்தாள் | இருப்புக்கோல் . |
| இருப்புத்திட்டம் | செலவு நீக்கி மீதியுள்ள தொகை . |
| இருப்புநகம் | வெற்றிலை கிள்ளும் கருவி . |
| இருப்புநாராசம் | ஓர் இரும்பு ஆயுதம் ; ஓலையில் கோக்கப்படும் இருப்புக்கோல் . |
| இருப்புநெஞ்சு | இரக்கமில்லாத நெஞ்சு , வன்மனம் . |
| இருப்புப்பத்திரம் | இரும்புத் தகடு . |
| இருப்புப்பாதை | இரயில் பாதை , தண்டவாளவழி . |
| இருப்புப்பாரை | குழி தோண்டுங் கருவி . |
| இருப்புப்பாளம் | இரும்புக்கட்டி . |
| இருப்புமணல் | இரும்பு கலந்த மண் . |
| இருப்புமுள் | தாறு ; யானை அல்லது குதிரையைக் குத்தும் கோல் . |
| இருப்புமுறி | செடிவகை . |
| இருப்புயிர் | நரகர் உயிர் . |
| இருப்புலக்கை | இரும்பாலான உலக்கை . |
| இருப்புலி | துவரை . |
| இருப்பூறல் | இரும்புக் கறை . |
| இருப்பூறற்பணம் | கலப்பு வெள்ளிநாணயம் . |
| இருப்பெழு | உழலை ; குறுக்காக இடும் இரும்புக் கம்பி . |
| இருப்பை | இலுப்பைமரம் . |
| இருப்பைப்பூச்சம்பா | நெல்வகை . |
| இருபது | இரண்டு பத்து . |
| இருபஃது | இரண்டு பத்து . |
| இருபன்னியம் | சேங்கொட்டை . |
| இருபால் | இருமை ; இம்மை மறுமை ; இரண்டு பக்கம் . |
| இருபாவிருபஃது | பிரபந்தவகை , வெண்பா அகவல் மாறிமாறி இருபது பாடல் அந்தாதியாய் வருவது ; மெய்கண்ட சாத்திரத்துள் ஒன்று . |
| இருபான் | இருபது . |
| இருதுவலி | இருதுகாலகுன்மம் என்னும் நோய் . |
| இருதுவாதல் | பெண் பூப்படைதல் . |
| இருந்த திருக்கோலம் | திருமாலின் வீற்றிருக்கும் இருப்பு . |
| இருந்ததேகுடியாக | எல்லாருமாக . |
| இருந்தாற்போல் | திடீரென்று . |
| இருந்தில் | காண்க : இருந்தை . |
| இருந்து | காண்க : இருந்தை ; ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| இருந்துபோதல் |
செயலறுதல் ; கீழே அழுந்துதல் ; விலைபோகாது தங்குதல் |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இருமுற்றிரட்டை | ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வருவது . |
| இருமுறி | இருப்புமுறி என்னும் செடி . |
| இருமை | பெருமை ; கருமை ; இருதன்மை ; இருபொருள் ; இம்மை மறுமைகள் . |
| இருலிங்கவட்டி | சாதிலிங்கம் . |
| இருவகை அறம் | இல்லறம் துறவறம் . |
| இருவகை ஏது | ஞாபகஏது காரகஏது . |
| இருவகைக் கூத்து | சாந்தி விநோதம் . |
| இருவகைத்தோற்றம் | இயங்கும்பொருள் இயங்காப் பொருள் , சரம் அசரம் . |
| இருவகைப்பொருவு | உறழ்பொருவு உவமைப் பொருவு . |
| இருவகைப்பொருள் | கல்விப்பொருள் செல்வப்பொருள் . |
| இருவணைக்கட்டை | வண்டியின் முகவணை . |
| இருவயிற்பற்று | அகப்பற்று புறப்பற்று . |
| இருவருந்தபுநிலை | எயிலின் அகத்தும் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை . |
| இருவல் நொருவல் | இடிந்தும் இடியாதது ; நன்றாக மெல்லப்படாத உணவு . |
| இருவல் நொறுவல் | இடிந்தும் இடியாதது ; நன்றாக மெல்லப்படாத உணவு . |
| இருவாட்சி | கருமுகைச் செடி . |
| இருவாட்டித்தரை | மணலும் களியுமான நிலம் . |
| இருவாடி | காணக : இருவாட்சி . |
| இருவாம் | நாமிருவரும் . |
| இருவாய்க்குருவி | ஒருவகை மலைப்பறவை . |
| இருவாய்ச்சி | காண்க : இருவாட்சி . |
| இருவாரம் | மேல்வாரமும் குடிவாரமும் . |
| இருவி | தினை முதலியவற்றின் அரிதாள் ; வச்சநாபி என்னும் நச்சுப்பூண்டு . |
| இருவிக்காந்தம் | ஒரு நச்சு மூலிகை . |
| இருவில் | கரிய ஒளி . |
| இருவிள | பனையோலை ; வேணாட்டகத்து ஓர் ஊர் ; கருவூரினகத்து ஒரு சேரி . |
| இருவினை | நல்வினை தீவினைகள் . |
| இருபுலன் | மலசலங்கழிநிலை . |
| இருபுறவசை | வசைபோன்ற வாழ்த்து . |
| இருபுறவாழ்த்து | வாழ்த்துப்போன்ற வசை . |
| இருபுனல் | கீழ்நீர் மேல்நீர்கள் . |
| இருபூ | இருபோகம் , ஆண்டுக்கு இருமுறை பெறும் விளைச்சல் . |
| இருபூலை | பூலா ; வெள்ளைப் பூலாஞ்சி . |
| இருபெயரொட்டு | பொதுவும் சிறப்புமாக வரும் இரு பெயர்கள் 'ஆகிய' என்னும் பண்புருபு இடையே தொக்குநிற்ப இணைந்து வருவது . |
| இருபேருரு | இரு வேறு வடிவம் ஒருங்கிணைந்து காண்பது ; குதிரை முகமும் ஆள் உடலுங்கொண்ட சூரன் ; நரசிங்கன் ; ஆண்டலைப்புள் ; மாதொருகூறன் . |
| இருபொருள் | கல்வியும் செல்வமும் ; வெவ்வேறு வகையான இரண்டு கருத்து . |
| இருபோகம் | இருமுறை விளைவு ; நிலமுடையோனுக்கும் குடிகளுக்கும் உரிய பங்கு . |
| இருபோது | காலை மாலைகள் . |
| இரும் | இருமல் ; பெரிய ; கரிய . |
| இரும்பலி | செடிவகைகளுள் ஒன்று . |
| இரும்பிலி | செடிவகைகளுள் ஒன்று . |
| இரும்பன் | அகழெலி . |
| இரும்பாலை | பாலை மரவகை ; இரும்புத்தொழிற்சாலை . |
| இரும்பினீர்மை | இழிந்தநிலை . |
| இரும்பு | கரும்பொன் ; ஆயுதம் ; பொன் ; செங்காந்தள் ; கிம்புரி ; கடிவாளம் . |
| இரும்புக்காய்வேளை | வேளைவகை . |
| இரும்புக்கொல்லன் | கருங்கொல்லன் . |
| இரும்புச்சலாகை | அறுவைச் சிகிச்சைக் கருவிவகை ; இருப்பு நாராசம் . |
| இரும்புத்துப்பு | மண்டூரம் ; இருப்புக்கிட்டம் . |
| இரும்புத்துரு | மண்டூரம் ; இருப்புக்கிட்டம் . |
| இரும்புப்பெட்டி | உருக்கால் அமைந்த பேழை . |
| இரும்புப் பொடி | அரப்பொடி . |
| இரும்புயிர் | நரகருயிர் . |
| இரும்புலி | ஒருவகைச் செடி ; துவரை . |
| இரும்புள் | மகன்றில் பறவை . |
| இரும்புளி | மரவகை . |
| இரும்பை | காண்க : இருப்பை ; குடம் ; பாம்பு . |
| இரும்பொறை | மிகுந்த பொறுமை ; சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று . |
| இருமடங்கு | இரட்டித்த அளவு . |
| இருமடி | இருமடங்கு ; இருவேறு முறையில் மாறிவருகை . |
| இருமடியாகுபெயர் | ஆகுபெயர்வகை ; 'கார்' என்னும் கருமையின் பெயர் முதலில் மேகத்தையும் , பின் அம் மேகம் மழை பொழியும் கார் காலத்தையும் உணர்த்துதல் போல்வது . |
| இருமடியேவல் | ஈரேவல் ; பிறவினையின்மேற் பிறவினை ; 'கற்பிப்பி ' என்றாற்போல வருவன . |
| இருமரபு | தாய்வழி தந்தை வழிகள் . |
| இருமருந்து | சோறும் தண்ணீரும் . |
| இருமல் | கக்கல் ; காசம் ; ஆட்டு நோய்வகை . |
| இருமனப்பெண்டிர் | பரத்தையர் . |
| இருமனம் | வஞ்சகம் ; துணிபின்மை . |
| இருமா | பத்தில் ஒரு பங்கு . |
| இருமாவரை | அரைக்கால் , எட்டில் ஒரு பங்கு . |
| இருமான் | எலிவகை . |
| இருமிமலைத்தகி | பூனைக்கண் குங்கிலியம் . |
| இருமு | இருமல் . |
| இருமுதல் | கக்குதல் |
| இருமுதுகுரவர் | பெற்றோர் . |
| இருமுதுமக்கள | பெற்றோர் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இரேகி | ஒன்றுபடு ; நற்பேறுடையவன்(ள்) ; கீழ்மகன்(ள்) . |
| இரேகித்தல் | ஒன்றுபடுதல் ; எழுதுதல் ; சேருதல் ; பழகுதல் . |
| இரேகுத்தி | ஒரு பண்வகை . |
| இரேகை | வரி ; கைகால் ; முகம் முதலியவற்றிலுள்ள வரை ; வரை ; எழுத்து ; சந்திரகலை ; அரசிறை ; தராசு , படி முதலியவற்றின் அளவு கோடு ; இடையறா ஒழுங்கு ; வஞ்சம் ; சித்திரம் . |
| இரேசககுணா | கடுகு . |
| இரேசகம் | பிராணாயாமம் ; காற்றை மூக்கால் புறத்தே கழிக்கை ; பேதிமருந்து . |
| இரேசகி | கடுக்காய் ; சீந்தில் . |
| இரேசகித்தல் | மூச்சுக் காற்றை வெளிவிடுதல் . |
| இரேசம் | இதள் , சூதம் , பாதரசம் . |
| இரேசன் | வெள்ளைப்பூண்டு ; அரசன் ; வருணன் ; திருமால் . |
| இரேசனம் | விரேசனம் ; குறைத்தல் ; மூக்கின் ஒரு தொளையிலிருந்து காற்றை வெளிவிடுதல் ; வெறுமையாக்கல் . |
| இரேசனி | சிவதை ; ஞாழல் ; நேர்வாளவித்து ; மனோசிலை என்னும் நஞ்சுவகை . |
| இரேசித்தல் | மூச்சை வெளியே விடுகை . |
| இரேசிதம் | குதிரை நடையுள் ஒன்று ; குதிரை வட்டமாய் ஓடல் ; நாட்டியவகை . |
| இரேசுதல் | செரியாமை . |
| இரேணு | துகள் ; பூந்துகள் ; பற்பாடகப் புல் . |
| இரேணுகை | காட்டுமிளகு ; தவிடு ; தக்கோலம் ; பரசுராமன் தாய் . |
| இரேதசு | விந்து , சுக்கிலம் . |
| இரேபன் | கொடியன் ; நிந்திக்கத்தக்கவன் |
| இரேயம் | காய்ச்சி வடித்த சாராயம் ; கள் . |
| இரேவடம் | சூறைக்காற்று ; வலம்புரிச் சங்கு ; மூங்கில் . |
| இரேவதி | ஒரு நட்சத்திரம் ; பலராமன் மனைவி . |
| இரேவற்சின்னி | நாட்டு மஞ்சட் சீனக்கிழங்கு ; மரவகை . |
| இரேவு | ஆயத்துறை ; இறங்குதுறை . |
| இரேவை | நருமதை ஆறு ; அவுரி . |
| இரை | ஒலி ; பறவை , விலங்கு முதலியவற்றின் உணவு ; உண்ட உணவு ; நாக்குப்பூச்சி ; பூமி ; நீர் ; கள் ; வாக்கு . |
| இரைக்குடல் | இரைப்பை . |
| இரைக்குழல் | உணவு செல்லுங்குழல் . |
| இரைகொள்ளி | இரையொதுக்கும் பறவையின் மிடறு ; பெருந்தீனி தின்போன்(ள்) . |
| இரைச்சல் | ஆரவாரம் , ஒலி . |
| இரைசல் | மாணிக்கக் குற்றவகை ; சுரசுரப்பு . |
| இரைத்தல் | ஒலித்தல் ; சீறுதல் ; மூச்சுவாங்குதல் ; வீங்குதல் . |
| இரைத்து | இரண்டு ; புலிதொடக்கி . |
| இரைதல் | ஒலித்தல் ; கூச்சலிடுதல் . |
| இரைதேர்தல் | உணவு தேடுதல் . |
| இரைதேறுதல் | உணவு செரியாமல் தங்குதல் . |
| இரைப்பற்று | செரியாத உணவு . |
| இரைப்பு | இரைச்சல் ; மூச்சு வாங்குகை ; இரைப்புநோய் ; மோகம் ; கரப்பான்பூச்சி . |
| இரைப்புமாந்தம் | மாந்தவகை . |
| இரைப்பூச்சி | நாக்குப்பூச்சி |
| இரைப்பெட்டி | பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை ; பிச்சை வாங்கும் பெட்டி . |
| இரைப்பெலி | இழுப்புண்டாக்கும் எலி . |
| இரைப்பை | இரைக்குடல் . |
| இருவினையொப்பு | புண்ணிய பாவங்களை ஒரு தன்மையாகச் செய்துவிடுகை . |
| இருவீடு | ஒருவகை மரம் . |
| இருவுதல் | இருக்கச்செய்தல் . |
| இருவேம் | இருவராகிய நாம் . |
| இருவேரி | வெட்டிவேர் . |
| இருவேலி | வெட்டிவேர் . |
| இருவேல் | பர்மா நாட்டு மரவகை . |
| இருள் | அந்தகாரம் ; கறுப்பு ; மயக்கம் ; அறியாமை ; துனபம் ; நரகவிசேடம் ; பிறப்பு ; குற்றம் ; மரகதக்குற்றம் ; எட்டனுள் ஒன்றாகிய கருகல் ; மலம் ; யானை ; இருவேல் ; இருள்மரம் . |
| இருள்தல் | ஒளிமங்குதல் ; கறுப்பாதல் ; அறியாமை கொள்ளுதல் . |
| இருளுதல் | ஒளிமங்குதல் ; கறுப்பாதல் ; அறியாமை கொள்ளுதல் . |
| இருள்பாலை | ஏழிலைப் பாலை . |
| இருள்மரம் | ஒருவகைப் பெரிய மரம் . |
| இருள்வட்டம் | எழுநரகத்துள் ஒன்று . |
| இருள்வரை | கிரௌஞ்சமலை . |
| இருள்வலி | சூரியன் . |
| இருள்வாசி | காண்க : இருவாட்சி |
| இருள்வீடு | நூக்கமரம் ; சோதிவிருட்சம் . |
| இருள்வேல் | காண்க : இருவேல் . |
| இருளடித்தல் | இருளால் தீங்குண்டாதல் ; வெளிப்படாது மறைத்தல் . |
| இருளடைதல் | பொலிவின்றியிருத்தல் . |
| இருளல் | காண்க : இருள்(ளு)தல் . |
| இருளறை | ஆணவமலம் . |
| இருளன் | ஒருசார் வேடச் சாதியான் ; ஒரு சிறு தேவதை ; வரிக்கூத்துவகை . |
| இருளி | பன்றி ; கருஞ்சீரகம் ; இருசி , பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; நாணம் . |
| இருளுலகம் | நரகம் . |
| இருளுவா | அமாவாசை . |
| இருளை | நாணம் . |
| இருளோவியகரை | முத்தி . |
| இரேக்கு | தங்கத்தாள் ; பூவிதழ் ; ஒருவகைச் சல்லா . |
| இரேகம் | அச்சம் ; ஐயம் ; தவளை ; உடல் ; வயிற்றுக்கழிச்சல் . |
| இரேகழி | காண்க : இடைகழி . |
| இரேகாம்சம் | பூமியைத் தென்வடலாக 360 சமபங்குகளாய்ப் பிரிக்கப்பட்டவற்றுள் ஒரு பாகம் |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இலக்கணச்சிதைவு | இலக்கண நூலிலே விதித்த விதிகளுக்கு விலக்காகச் சிதைந்து வழங்கும் சொல் ; தவறாய் வழங்கும் சொல் . |
| இலக்கணச்சுழி | குதிரைகளுக்கு உடையனவாகச் சொல்லப்படும் நல்ல சுழி . |
| இலக்கணச்சொல் | காண்க : இலக்கணமுடையது . |
| இலக்கண நூல் | ஒரு மொழியைப் பேசுதற்கும் எழுதுதற்கும் உரிய முறையைக் கற்பிக்கும் நூல் ; ஏதாயினும் ஒரு பொருளின் இயல்பை விளக்கும் நூல் . |
| இலக்கணப்போலி | இலக்கணம் உடையதுபோல் அடிப்பட்ட சான்றோராலே தொன்று தொட்டு வழங்கப்படும் சொல் . |
| இலக்கணம் | சிறப்பியல்பு ; இயல்பு ; அடையாளம் ; நல்வாழ்வை உரைக்கும் உடற்குறி ; அழகு ; ஒழுங்கு ; இலக்கியத்தினமைதி ; எழுத்திலக்கணம் , சொல்லிலக்கணம் ; பொருளிலக்கணம் , யாப்பிலக்கணம் , அணியிலக்கணம் என்னும் ஐவகை இலக்கணம் . |
| இலக்கணமுடையது | இலக்கண வழியால் வரும் சொல் . |
| இலக்கண வழக்கு | இலக்கண நடை . |
| இலக்கண வழு | இலக்கணப் பிழை . |
| இலக்கணி | இலக்கணம் அறிந்தவன் ; அழகன் . |
| இலக்கணை | ஒரு பொருளை நேரே உணர்த்தும் சொல் , அப் பொருளை உணர்த்தாது அதனோடு இயைபுடைய மற்றொரு பொருளை உணர்த்துவது . |
| இலக்கம் | விளக்கம் ; குறிப்பொருள் ; நூறாயிரம் ; எண் ; எண்குறி ; இலக்கு ; காணுதல் . |
| இலக்கமடைத்தல் | எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைக் கட்டங்களில் அடைத்தல் . |
| இலக்கமிடுதல் | எண் குறித்தல் ; கணக்கிடுதல் . |
| இலக்கர் | இலக்கமென்னும் தொகையினர் ; ஆடை ; கந்தை ; சீலை . |
| இலக்காந்தரம் | இடையிலக்கம் . |
| இலக்காரம் | சீலை ; ஆடை . |
| இல்பொருள் | அசத்து ; இல்லாத பொருள் . |
| இல்பொருள் உவமை | இல்லாத ஒன்றனைக் கற்பித்துக்காட்டும் உவமை , அபூத உவமை . |
| இல்லக்கிழத்தி | மனைவி . |
| இல்லகம் | வீடு . |
| இல்லடை | அடைக்கலம் ; அடைமானப்பொருள் ; ஒட்டடை ; பண்டசாலை ; இல்லுவமம் |
| இல்லடைக்கலம் | அடைக்கலப் பொருள் ; அடைமானப்பொருள் . |
| இல்லத்துப்பிள்ளை | ஈழவர் பட்டப்பெயர் . |
| இல்லது | பிரகிருதி ; இல்லாதது ; கிடைக்காதது ; இல்பொருள் ; மனையிலுள்ளது ; மனைவியினுடையது . |
| இல்லம் | வீடு ; மனைவி ; இல்வாழ்க்கை ; தேற்றாமரம் . |
| இல்லல் | நடக்கை ; கடத்தல் ; போகுதல் . |
| இல்லவள் | மனைவி ; வறியவள் . |
| இல்லவன் | கணவன் ; தலைவன் ; வறிஞன் . |
| இல்லவை | இல்லாதவை ; மனையில் உள்ளவை . |
| இல்லறம் | இல்வாழ்க்கை , இல்லத்தில் மனையாளோடு கூடிவாழும் ஒழுக்கம் ; இல்வாழ்வார் கடமை . |
| இல்லாக்குடி | வறுமைக் குடும்பம் . |
| இல்லாக்குற்றம் | வறுமை ; அபாண்டம் . |
| இல்லாண்முல்லை | பாசறைத் தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை ; தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைக் கூறும் புறத்துறை . |
| இல்லாண்மை | குடியினை ஆளும் தன்மை ; தன் குடியிலுள்ளாரை உயரச்செய்து தன்வழிப் படுத்தல் . |
| இல்லாத்தனம் | வறுமை . |
| இல்லாததும்பொல்லாததும் | பொய்யும் தீங்கு விளைப்பதும் . |
| இல்லாதபொய் | முழுப் பொய் |
| இல்லாதவன் | வறியவன் . |
| இல்லாமை | இன்மை , வறுமை . |
| இல்லாவாட்டி | வறியவள் . |
| இல்லாள் | மனைவி ; மருத முல்லை நிலங்களின் தலைவியர் ; வறுமையுடையவள் . |
| இல்லாளன் | இல்லறத்தான் ; கணவன் . |
| இல்லாளி | இல்லறத்தான் ; கணவன் . |
| இல்லி | சில்லி , பொள்ளல் , ஓட்டை ; தேற்றாமரத்தின் இலை ; வால்மிளகு ; ஒருவகைப் புழு . |
| இல்லிக் கண்ணன் | மிகச் சிறிய கண்ணுடையான் ; கூச்சுக் கண்ணுள்ளவன் . |
| இல்லிக்காது | சிறிய துளையையுடைய காது . |
| இல்லிக்குடம் | ஓட்டைக் குடம் . |
| இல்லிடம் | வீடு ; ஊர் . |
| இல்லிமூக்கு | சில்லிமூக்கு ; இரத்தம் வடியும் மூக்கு . |
| இல்லிறத்தல் | பிறன் மனையாளை விழைதல் . |
| இல்லுவமம் | உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல் . |
| இல்லுவமை | உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல் . |
| இல்லுறைகல் | அம்மிக்கல் . |
| இல்லுறைதெய்வம் | வீட்டில் வாழும் தெய்வம் . |
| இல்லெலி | வீட்டெலி . |
| இல்லெனல் | இல்லையென்று சொல்லி மறுத்தல் ; பொருள் இல்லை என்று சொல்லுதல் ; இறந்து போனான் என்று சொல்லுதல் ; சூனிய மாகுகை . |
| இல்லை | உண்டு என்பதன் எதிர்மறை ; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று ; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று . |
| இல்லைசெய்தல் | மறுத்தல் . |
| இல்லொடுவரவு | குடிப்பிறப்பு . |
| இல்லொழுக்கம் | காண்க : இல்லறம் . |
| இல்வழக்கு | பொய்வழக்கு ; இல்லதனை இல்லையென்கை . |
| இல்வாழ்க்கை | மனையாளோடு கூடிவாழ்கை ; இல்லறத்தில் வாழ்கை . |
| இல்வாழ்பேய் | பொருந்தா மனைவி . |
| இல்வாழ்வான் | இல்லறத்தோடு கூடி வாழ்பவன் . |
| இல்வாழ்வு | காண்க : இல்வாழ்க்கை . |
| இல | இலவு ; இலவமரம் ; 'ஏடீ' என்னும் பொருளில் வரும் விளிப்பெயர் . |
| இலக்கணக்கருமம் | சாமுத்திரிகம் ; அங்க இலக்கண நூல் . |
| இரைமீட்டல் | அசைபோடுதல் . |
| இரையெடுத்தல் | பறவை , பாம்பு முதலியன உணவுகொள்ளுதல் ; உணவு தின்னுதல் ; அசைபோடுதல் . |
| இரௌத்தன் | காணக : இராவுத்தன் . |
| இரௌத்திரம் | பெருஞ்சினம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று ; பகலிரவுகளுக்குத் தனித்தனியே உரிய பதினைந்து முழுத்தங்களுள் முதலாவது . |
| இரௌத்திரி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்து நாலாம் ஆண்டு ; ஒரு சிவசித்தி . |
| இரௌரவம் | ஒரு நரகம் ; சிவாகமத்துள் ஒன்று . |
| இல் | இடம் ; வீடு ; இல்லறம் ; மனைவி ; மருதமுல்லை நிலங்களின் தலைவியர் ; குடி ; இராசி ; தேற்றாங்கொட்டை ; இன்மை ; சாவு ; எதிர்மறை இடைநிலை ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; ஏழாம் வேற்றுமை உருபு . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இலகுபதனன் | எளிதாகப் பறப்பவன் . |
| இலகுவியாக்கியானம் | சிற்றுரை . |
| இலகுளீசன் | சிவபிரான் கூறான ஒரு குருமூர்த்தம் . |
| இலகோட்டா | மரவகை . |
| இலங்கடை | இல்லாதபோது . |
| இலங்கணம் | தடை ; கடக்கை ; பட்டினி கிடக்கை . |
| இலங்கனம் | தடை ; கடக்கை ; பட்டினி கிடக்கை . |
| இலங்கம் | கூடுகை ; எறும்பு ; கூட்டம் ; மூடம் ; களரி . |
| இலங்கர் | நங்கூரம் . |
| இலங்காபுரம் | இராவணனின் தலைநகரம் . |
| இலங்காபுரி | இராவணனின் தலைநகரம் . |
| இலங்கிகன் | துறவி . |
| இலங்கிசார் | அலைக்கழிவு ; இடைஞ்சல் . |
| இலங்கித்தல் | குதித்தல் ; கடத்தல் . |
| இலங்கு | குளம் . |
| இலங்குதல் | ஒளிசெய்தல் ; விளக்கமாகத் தெரிதல் . |
| இலங்குபொழுது | படுஞாயிறு ; சூரியன் மறையும் வேளை . |
| இலங்கேசன் | இலங்கைத் தலைவன் ; இராவணண் . |
| இலங்கை | ஆற்றிடைக்குறை ; ஈழ மண்டிலம் ; இராவணன் தலைநகர் ; தொண்டைநாட்டின் ஓர் ஊரான மாவிலங்கை . |
| இலங்கோடு | கீழுடை ; சல்லடம் ; சன்னியாசிகளுடைய உடை . |
| இலச்சித்தல் | நாணுதல் . |
| இலச்சினை | அடையாளம் ; முத்திரை ; முத்திரை மோதிரம் . |
| இலச்சை | கூச்சம் ; நாணம் . |
| இலச்சைகெட்ட மரம் | சுண்டிமரம் ; கல்தேக்கு மரம் . |
| இலச்சைப்படுதல் | நாணுதல் . |
| இலசுனம் | வெள்ளைப் பூண்டு ; மாணிக்கக் குணத்துள் ஒன்று . |
| இலசுனி | மாணிக்கக் குணத்துள் ஒன்று . |
| இலஞ்சம் | பரிதானம் , கைக்கூலி . |
| இலஞ்சி | வாவி ; ஏரி ; கொப்பூழ் ; குணம் ; சாரைப்பாம்பு ; மகிழமரம் ; மதில் ; புன்கு ; மாமரம் ; சவுக்கம் என்னும் ஆடைவகை . |
| இலஞ்சியம் | கீழ்காய்நெல்லிப் பூண்டு . |
| இலஞ்சிலி | ஏலம் . |
| இலட்சணம் | காண்க : இலக்கணம் . |
| இலட்சம் | அடையாளம் ; இலக்கம் , நூறாயிரம் |
| இலட்சயம் | எண்ணத்தக்கது . |
| இலட்சாதிகாரி | பெருஞ்செல்வன் . |
| இலட்சாதிபதி | பெருஞ்செல்வன் . |
| இலட்சாதிலட்சம் | பெருந்தொகை . |
| இலட்சிதம் | இலக்கணம் அமைக்கப்பட்டது ; காணப்பட்டது ; குறியினாலே விளக்கப்பட்டது . |
| இலட்சியம் | குறி ; குறிக்கோள் , நோக்கம் ; மதிப்பு . |
| இலட்சியார்த்தம் | காண்க : இலக்கியார்த்தம் . |
| இலட்சுமணம் | மரவகை ; தாளிப்பூண்டு . |
| இலட்சுமி | காண்க : இலக்குமி . |
| இலட்சுமி வண்டு | கரப்பான்பூச்சி . |
| இலட்சோபலட்சம் | காண்க : இலட்சாதிலட்சம் . |
| இலட்டு | உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை . |
| இலட்டுகம் | உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை . |
| இலட்டுவம் | உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை . |
| இலட்டை | அப்பம் . |
| இலக்கித்தல் | உருவரைதல் . |
| இலக்கிதம் | இலட்சிதம் , குறிக்கப்பட்டது . |
| இலக்கியம் | இலக்கணம் அமையப் பெற்ற பொருள் ; ஆன்றோர் நூல் ; எடுத்துக்காட்டு ; குறி . |
| இலக்கியார்த்தம் | இலக்கணையால் அறியும் பொருள் . |
| இலக்கினச்சட்டுவருக்கம் | இராசிக்குரிய ஆறு செயல்கள் ; அவை : ஓரை , சுடர்ச் செலவு , திரேக்காணம் , நவாமிசம் , துவாதசாமிசம் , கோட்கூறு என்பன . |
| இலக்கினம் | இராசியின் உதயம் ; நல்ல வேளை . |
| இலக்கினாதிபதி | இலக்கினத்திற்கு உடையவன் . |
| இலக்கு | குறிப்பொருள் ; அம்பெய்யும் குறி ; அடையாளம் ; இடம் ; நாடிய பொருள் ; எதிரி ; அளவு ; சமயம் ; அசாதாரண தருமம் . |
| இலக்குதல் | அடையாளம் இடுதல் ; இலங்கப்பண்ணுதல் ; வரைதல் . |
| இலக்குப் பார்த்தல் | குறிபார்த்தல் ; சமயம் பார்த்தல் . |
| இலக்குமணை | சாரசப் பறவையின் பேடு . |
| இலக்குமி | திருமால் தேவி ; செல்வம் ; மஞ்சள் ; முத்து ; அழகு . |
| இலக்குவைத்தல் | குறிவைத்தல் . |
| இலக்கை | ஆடை ; மாதச்சம்பளம் ; பாதுகாவல் . |
| இலகடம் | யானை மேலிடும் இருக்கை , அம்பாரி . |
| இலகம் | ஊமத்தைப் பூண்டு . |
| இலகரி | கத்தூரி ; மது ; பெருந்திரை ; மகிழ்ச்சி ; வெறி . |
| இலகல் | எழுத்து ; அகில் ; நொய்ம்மை . |
| இலகாம் | கடிவாளம் . |
| இலகான் | கடிவாளம் . |
| இலகிமா | எண்வகைச் சித்திகளுள் நொய்மையதாகும் ஆற்றல் . |
| இலகிரி | மயக்கமூட்டும் பொருள்கள் ; அபின் ; கஞ்சா ; சாதிக்காய் ; சாதிபத்திரி . |
| இலகு | எளிது ; சிறுமை ; காலவகை ; தணிவு ; குற்றெழுத்து . |
| இலகுசம் | ஈரப்பலாமரம் . |
| இலகுத்துவம் | நொய்ம்மை , கனமற்ற தன்மை . |
| இலகுதல் | விளங்குதல் ; மிகுதல் ; ஒளிசெய்தல் . |
| இலகுநட்சத்திரம் | நுட்பமான நட்சத்திரம் ; அசுவினி , பூசம் , அஸ்தம் என்னும் நட்சத்திரங்கள் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இலவுகிகம் | உலகியல் ; மரபு ; உலகப்போக்கை உணர்ந்து நடத்தல் . |
| இலளித பஞ்சகம் | ஓர் இசை விகற்பம் . |
| இலளிதம் | இச்சை ; பொருளின் தெளிவு ; அழகியது ; ஒரு பண் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; விரும்பப்பட்டது . |
| இலளிதை | பார்வதி ; ஒருவகை முத்தாரம் ; கத்தூரி ; முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று . |
| இலாக்கா | ஆட்சிப்பிரிவு ; ஆட்சித்துறை . |
| இலாக்கிரி | செம்மெழுகு . |
| இலாக்கை | செம்பஞ்சு ; அரக்கு . |
| இலாகவம் | திறமை ; உடல்நலம் ; கவனமின்மை ; எளிமை ; நிந்தனை ; சுருக்கம் ; விரைவு . |
| இலாகன் | மீன்வகை . |
| இலம் | இல்லம் ; இல்லறம் ; வறுமை . |
| இலம்பகம் | நூலின் உட்பிரிவு ; மாலை ; தலைக்கோலம் என்னும் நுதலனி . |
| இலம்படுதல் | வறுமையடைதல் . |
| இலம்படை | இடுக்கண் ; வறுமை . |
| இலம்பம் | தொங்கல் ; மாலை ; நிறுதிட்டம் ; வானநூலில் கூறும் ஒரு பாகை அளவு ; உயர்வு ; அகலம் ; கைக்கூலி . |
| இலம்பமானம் | கழுத்தில் தொங்கும் தாழ்வடம் . |
| இலம்பனம் | காண்க : இலம்பம் . |
| இலம்பாட்டோன் | வறியவன் . |
| இலம்பாடி | ஒரு சாதி ; வறியவன்(ள்) . |
| இலம்பாடு | வறுமை ; துன்பம் . |
| இலம்பிகை | அண்ணாக்கு , உள்நாக்கு . |
| இலம்பிலி | மரவகை . |
| இலம்பு | தொங்குகை . |
| இலம்பை | வறுமை ; இடுக்கண் ; அவலநிலை . |
| இலம்போதரன் | பெருவயிறன் ; விநாயகக் கடவுள் . |
| இலமலர் | இலவமலர் . |
| இலயகாலம் | அழியுங்காலம் , ஊழிக்காலம் . |
| இலயசக்தி | அருவ சிவனின் சத்தி . |
| இலயசிவன் | அறிவிலும் ஆற்றலிலும் கலந்திருக்கும் அருவ சிவன் . |
| இலயஞானம் | சுருதி ஒப்புமை காணும் அறிவு ; கீத ஞானம் , இலய ஞானம் , சுருதி ஞானம் , தாள ஞானம் என்னும் நால்வகைக் கேள்விகளுள் ஒன்று . |
| இலயத்தானம் | ஒடுங்குமிடம் . |
| இலயதத்துவம் | ஊழிக் காலத்துத் தன் தொழில்கள் எல்லாம் ஒடுங்கிக் காரண மாத்திரையாய் நிற்கும் இறைவன் நிலை . |
| இலயம் | அழிவு ; இரண்டறக் கலக்கை ; அறிவு மட்டுமே திருமேனியாக உள்ள கடவுள் நிலை ; ஒழிவு ; தாளவறுதி ; சுருதிலயம் ; கூத்து வேறுபாடு . |
| இலயமாதல் | ஒன்றாதல் ; அழிதல் . |
| இலயமுத்தி | பரம்பொருளொடு இரண்டறக் கலக்கையாகிய முத்தி . |
| இலயன் | காண்க : இலயம் ; சிவன் |
| இலயி | காண்க : இலயம் ; சிவன் |
| இலயித்தல் | ஒடுங்குதல் ; இரண்டு பொருள் வேற்றுமையறக் கலத்தல் , ஒன்றாதல் ; அழிதல் . |
| இலயை | தாளப் பிரமாணம் பத்தனுள் ஒன்று . |
| இலலாடம் | நெற்றி . |
| இலலாடலிபி | தலையெழுத்து . |
| இலலாடிகை | சந்தன முதலியவற்றால் நெற்றியில் இடும் பொட்டு ; நெற்றியில் அணியும் சுட்டி . |
| இலலாமம் | அடையாளம் ; அரசச்சின்னம் ; அழகு ; அணிகலன் ; இரேகை ; குதிரை ; கொடி ; கொம்பு ; தன் சாதியில் உயர்ந்தது ; நெற்றியணி ; நெற்றிக்குறி ; பிடர்மயிர் ; பெருமை ; வால் . |
| இலலிதபஞ்சமி | ஒரு பண்வகை . |
| இலலிதம் | அழகு ; அபிநயம் ; உபசாரம் ; ஒரு பண் விகற்பம் ; காமக்குறி ; பரிகாசம் ; மகளிர் விளையாட்டு ; இனிமை . |
| இலலிதை | முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று ; பார்வதி ; பெண் ; மான்மதம் . |
| இலவங்கச் சுருட்பாக்கு | பாக்குவகை . |
| இலவங்கச் சூர்ப்பாக்கு | பாக்குவகை . |
| இலவங்கப் பட்டை | கருவாப்பட்டை ; தாளிசபத்திரி . |
| இலவங்கப்பூ | கிராம்பு ; காதணிவகை . |
| இலவங்கபத்திரி | ஒரு மருந்திலை . |
| இலவங்கம் | கிராம்பு ; கருவாமரம் . |
| இலவசம் | விலையில்லாதது . |
| இலவயம் | விலையில்லாதது . |
| இலவணம் | உப்பு . |
| இலவண வித்தை | மாயவித்தைகளுள் ஒன்று . |
| இலவந்தி | இயந்திர வாவி ; வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை . |
| இலவந்திகை | இயந்திர வாவி ; வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை . |
| இலவந்தீவு | ஏழு தீவுகளுள் ஐந்தாவது . |
| இலவம் | இலவு ; இலவந்தீவு ; அற்பம் ; காலவகை ; ஒரு கால அளவு ; இலவங்கம் ; கிராம்பு ; சாதிக்காய் ; பசு , ஆடு முதலியவற்றின் மயிர் ; பூசை . |
| இலவம்பஞ்சு | இலவமரத்துப் பஞ்சு . |
| இலவலேசம் | மிகச் சிறியது . |
| இலவித்திரம் | அரிவாள் . |
| இலவு | இலவமரம் ; தேற்றாமரம் . |
| இலண்டம் | இலத்தி ; குதிரை , யானை முதலியவற்றின் மலம் . |
| இலணை | அரசமரம் . |
| இலத்தி | காண்க : இலண்டம் . |
| இலத்தை | காண்க : இலண்டம் . |
| இலதை | படர்கொடி ; வள்ளிக்கொடி ; வால்மிளகுகொடி ; இலந்தை ; முள்மரவகை ; மரக்கொம்பு ; நூற்கும் நூல் ; இணையாவினைக்கை வகை ; ஒருவகை ஒலி . |
| இலதைக்கை | பிண்டிக்கை முப்பத்து மூன்றனுள் ஒன்று . |
| இலந்தை | முள்மரவகை ; ஒரு பழமரவகை ; நீர்நிலை . |
| இலந்தைத்தம்பலம் | இலந்தைப்பட்டையில் பூச்சிகளாலான புடைப்பு . |
| இலபனம் | வாய் . |
| இலபித்தல் | சித்தித்தல் , வாய்த்தல் , கைகூடுதல் . |
| இலபிதம் | நேர்வது ; உண்பது ; பேச்சு ; பேசப்பட்டது ; பேறு ; விதி . |
| இலபிப்பு | சித்திப்பு . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இலாவணம் | போர்வீரர்களின் பட்டி ; பெயர்ப் பதிவு ; மரபின்படி வரும் உத்தியோகத்துக்குக் கொடுக்கும் ஆணை ; வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசி ; உப்பு ; உரையாடல் . |
| இலாவணமெழுதுதல் | படைக்கு ஆள் சேர்த்தல் . |
| இலாவணியம் | அழகு ; உப்புந்தன்மை . |
| இலாவிருதம் | நவகண்டத்துள் ஒன்று . |
| இலாளன் | இல்லாதவன் . |
| இலாளனை | காண்க : இலாலனை . |
| இலாளிதம் | அழகு . |
| இலி | இல்லாதவன்(ள்) ; இல்லாதது . |
| இலிகம் | எழுதுகை . |
| இலிகனம் | எழுதுகை . |
| இலிகி | எழுத்து ; எழுதுகை . |
| இலிகிதம் | எழுதப்பட்டது ; கடிதம் ; எழுதப்பட்ட புத்தகம் ; அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான எழுதுவதில் திறமை . |
| இலிகிதன் | எழுத்தாளன் . |
| இலிகுசம் | எலுமிச்சை மரம் . |
| இலிங்கக்கட்டு | சாதிலிங்கக் கட்டு , இஃது ஒரு வைப்பு மருந்துச் சரக்கு . |
| இலிங்கக்கல் | வளைவுக் கட்டடத்தின் நடுக்கல் . |
| இலிங்ககவசம் | ஆண்குறியின் மேல்தோல் ; சிவலிங்கத்திற்குச் சாத்தப்படும் மேலாடை . |
| இலிங்கங்கட்டி | இலிங்கத்தைக் கழுத்தில் கட்டியிருப்பவன் , வீரசைவன் . |
| இலிங்கசரீரம் | நுண்ணுடல் ; ஆன்மாவோடு கருப்பத்திலே கூடப்பதிந்தும் பருவுடலை விட்டுப் போகும்பொழுது கூடப்போயும் வீடு வரை பின்தொடர்வதான உடல் . |
| இலிங்கசுத்தி | ஐந்துவகைத் தூய்மையுள் ஒன்று . |
| இலிங்கசூலை | ஆண்குறியைப் பற்றிவரும் ஒரு நோய் . |
| இலிங்கத்தாரணம் | இலிங்கம் அணிகை . |
| இலிங்கத்தாரணத்தலம் | இலிங்கம் தரிக்கும் தலம் . |
| இலிங்கதாரி | காண்க : இலிங்கங்கட்டி . |
| இலிங்கப்புடோல் | ஐவிரலிக் கொடி ; கோவைக் கொடி . |
| இலிங்கப்புற்று | ஒரு மேகநோய் . |
| இலிங்கப்பொருத்தம் | மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
| இலிங்கபற்பம் | நீற்று மருந்துவகை . |
| இலிங்கம் | அடையாளம் ; ஆண்குறி ; ஏது ; வடமொழிப் பெயர்ச்சொற்குரிய பால் ; சிவலிங்கம் ; சாதிலிங்கம் ; இலிங்க புராணம் ; பிரகிருதி ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று ; கருவிழியின் நடுவிலிருக்கிற பாவை ; கறை ; நோய்க்குறி . |
| இலிங்கமுத்திரை | பூசை செய்யும்போது காட்டும் முத்திரைவகை . |
| இலிங்கமெழுகு | ஒருவகை மருந்து . |
| இலிங்கரோகம் | ஆண்குறியில் வரும் ஒருவகைப் புண் . |
| இலாகிரி | மதர்ப்பு ; மதுக்களிப்பு . |
| இலாகு | தாங்கல் . |
| இலாகுளம் | சைவப் பிரிவுகளுள் ஒன்று ; பாசுபத சமயப் பிரிவுகளுள் ஒன்று . |
| இலாகை | விதம் . |
| இலாங்கலம் | பூவகை ; பூனை ; கலப்பை ; கொடுங்கை . |
| இலாங்கலி | கலப்பை ; தென்னை ; செங்காந்தள் ; செங்கரந்தைப் பூண்டு ; வெண்தோன்றிப் பூண்டு ; பாம்பு ; பலராமன் . |
| இலாங்கூலம் | விலங்கின் வால் ; ஆண்குறி . |
| இலாங்கூலி | குரங்கு . |
| இலாச்சம் | தானிய அளவைவகை ; ஒரு நில அளவை . |
| இலாச்சி | செருகுபெட்டியின் அறை . |
| இலாசடி | வருத்தம் ; தொல்லை . |
| இலாசடை | வருத்தம் ; தொல்லை . |
| இலாசம் | நனைத்த தவசம் ; பொரி . |
| இலாசவோமம் | திருமணத்தில் பொரியால் செய்யப்படும் ஓமம் . |
| இலாசிகை | கூத்தாடுபவள் . |
| இலாசியம் | கூத்து . |
| இலாஞ்சலி | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சனை | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சனம் | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சி | ஏலம் . |
| இலாஞ்சினைப்பேறு | பழைய வரிவகை . |
| இலாட்சை | செவ்வரக்கு . |
| இலாடசங்கிலி | கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி . |
| இலாடசிங்கி | கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி . |
| இலாடசிந்தூரம் | குதிரைக் காலிரும்பை நீற்றிச் செய்த பொடி . |
| இலாடம் | பரத கண்டத்தில் ஒரு நாடு ; வங்காள தேசப்பகுதி ; நெற்றி ; புளியமரம் ; காளை குதிரைகளின் கால் இலாடம் ; ஒரு மொழி ; சேலை ; மூல நட்சத்திரத்திற்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை ஒட்டிக் கணிக்கும் நாள் . |
| இலாடவி | அகில்மரம் . |
| இலாடன் | இலாட நாட்டான் ; பைராகி . |
| இலாடன் பருத்தி | பருத்திச் செடிவகை . |
| இலாபகரம் | ஊதியம் தருவது . |
| இலாபத்தானம் | இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
| இலாபநட்டம் | பேறும் இழப்பும் . |
| இலாபம் | ஊதியம் ; பயன் ; ஆதாயம் ; தானிய அளவையில் முதல் எண்ணுக்கு வழங்கும் சொல் . |
| இலாபாந்தராயம் | குறித்த பேற்றை இடைநின்று விலக்கும் கருமத்தடை . |
| இலாமச்சம் | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமச்சை | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமிச்சு | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமிச்சை | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாயம் | ஏலவரிசி ; குதிரைப் பந்தி , குதிரைச்சாலை . |
| இலாலனம் | நயஞ்செய்கை ; அன்பு பாராட்டுதல் ; சீராட்டுதல் ; செல்லம் காட்டுதல் . |
| இலாலனை | நயஞ்செய்கை ; அன்பு பாராட்டுதல் ; சீராட்டுதல் ; செல்லம் காட்டுதல் . |
| இலாலி | இச்சக வார்த்தை ; ஏமாற்றுவோன் ; காமி : தீமைக்கு உட்படுத்துவோன் ; ஒரு வாழ்த்து ; மங்கலப் பாடல் . |
| இலாவண்ணியார்ச்சிதம் | சீதனவகை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இலையமுது | வெற்றிலை . |
| இலையான் | ஈ என்னும் பறவை . |
| இல¦லை | விளையாட்டு ; தெய்வம் முதலியவற்றின் விளையாடல் ; சுரத விளையாட்டு ; பரிகாசம் ; சரசம் ; மகளிர் மோக விளையாட்டு ; புணர்ச்சி . |
| இல¦னம் | அழிவு ; அடக்கம் . |
| இலுதை | அணில் . |
| இலுப்பை | காண்க : இருப்பை . |
| இலுப்பைக்கட்டி | இலுப்பைப் பிண்ணாக்கு . |
| இலுப்பைக்கடுகு | இலுப்பெண்ணெயின் அடியில் படியும் வண்டல் ; இலுப்பெண்ணெய்க் கசடு ; இலுப்பைப் பருப்பு . |
| இலுப்பை நெய் | காண்க : இலுப்பையெண்ணெய் . |
| இலுப்பைப் பால் | காண்க : இலுப்பையெண்ணெய் . |
| இலுப்பைப்பூச்சம்பா | நெல்வகை . |
| இலுப்பையெண்ணெய் | இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கும் எண்ணெய் . |
| இலேககன் | எழுதுவோன் ; சித்திரகாரன் . |
| இலேகம் | காண்க : இளகம் . |
| இலேகர் | தேவர் . |
| இலேகனம் | எழுத்து ; பூர்ச்சமரத்தின் பட்டை ; வெட்டுகை ; நாவழித்தல் ; பனையோலை . |
| இலேகனி | எழுத்தாணி , எழுதுகோல் . |
| இலேகித்தல் | எழுதுதல் ; சித்திரித்தல் . |
| இலேகியம் | காண்க : இளகம் , பாகாகக் கிண்டிய மருந்து ; நக்கப்படுவது . |
| இலேகை | எழுத்து ; பூமி ; தழும்பு ; ஓரம் ; சித்திரம் . |
| இலேசம் | அற்பம் ; இலேசவணி ; இரண்டு கலை கொண்ட ஒரு கால அளவு ; நொய்ம்மை ; மிகை . |
| இலேசவணி | குறிப்பை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு வேறொன்றால் நிகழ்ந்ததாக மறைத்துச் சொல்லும் அணி ; குணத்தைக் குற்றமாகவும் குற்றத்தைக் குணமாகவும் சொல்லும் அணி . |
| இலேசு | நொய்ம்மை ; எளிது : அற்பம் ; விதப்புச் சொல் . |
| இலேசுணம் | அரிதாரம் . |
| இலேஞ்சி | சவுக்கம் . |
| இலேபகன் | சாந்து பூசுகிறவன் . |
| இலேபம் | வால்மிளகு கொடி ; பூச்சு ; கறை ; சாந்து ; மெழுகுதல் ; உணவு ; தீநெறி . |
| இலேபனம் | பூச்சு ; பூச்சுமருந்து ; மணத்தைலம் . |
| இலேலிகம் | பாம்பு ; வயிற்றில் வளரும் கீரைப்பூச்சி . |
| இலேவாதேவி | பண்டமாற்றல் ; கொடுக்கல் வாங்கல் . |
| இலேவுந்து | கல்லுப்பு ; கந்தகவுப்பு |
| இலை | மரம் செடிகளின் இலை ; பூவிதழ் ; வெற்றிலை ; கதவின் இலை ; படலை மாலை ; அணிகளின் இலைத்தொழில் ; பச்சிலை ; சக்கரத்தின் ஆரம் ; ஆயுதவலகு . |
| இலைக்கதவு | இலைபோல் மரத்தட்டுகள் தொடுக்கபட்ட கதவு . |
| இலைக்கம்மம் | இலைவடிவாக அணியில் அமைக்கும் தொழில் . |
| இலைக்கறி | கீரை . |
| இலைக்குரம்பை | தழைக்குடில் , பன்னசாலை . |
| இலைக்கொடி | வெற்றிலைக்கொடி . |
| இலைச்சித்தல் | முத்திரையிடுதல் . |
| இலைச்சினை | காண்க : இலச்சினை . |
| இலைச்சுமடன் | வெற்றிலை விற்போன் ; மூடன் . |
| இலைச்சுமி | பதுமராகமணியின் குற்றங்களுள் ஒன்று . |
| இலைச்சுருளி | ஒருவகைப் பூண்டு . |
| இலைச்சை | நிறம் . |
| இலைஞெமல் | இலைச் சருகு . |
| இலைத்தல் | சோர்தல் ; சுவை குறைதல் ; சாரமின்மை ; தன்மை குன்றுதல் ; பச்சை நிறமாதல் . |
| இலைப்பசளி | பெரும்பசளிக்கொடி . |
| இலைப்பணி | இலை வடிவாகச் செய்யும் தொழில் அமைந்த அணி . |
| இலைப்பாசி | ஒரு பூண்டு ; பாசிவகை . |
| இலைப்பி | இலைச்சாம்பல் |
| இலைப்புரைகிளைத்தல் | எங்குந்தேடுதல் . |
| இலைப்பொல்லம் | இலை தைக்கை ; வாழையிலைத் துண்டு . |
| இலைபோடுதல் | உணவுக்கு இலைக்கலம் இடுதல் . |
| இலைமறைகாய் | மறைப்பொருள் . |
| இலைமுகப் பைம்பூண் | வெற்றிலைச் சரப்பணி . |
| இலைமூக்கரிகத்தி | வெற்றிலைக் காம்பு அரியும் கத்தி . |
| இலையடை | அப்பருவக்கம் . |
| இலையம் | காண்க : இலயம் . |
| இலையமுதிடுவார் | வெற்றிலை விற்பார் . |
| இலிங்கவட்டம் | கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர் . |
| இலிங்கவிரணம் | ஆண்குறி நோய்வகை . |
| இலிங்கவிருத்தி | வெளிவேடம் போட்டுப் பிழைப்பவன் . |
| இலிங்காங்கம் | ஆண் உறுப்பு . |
| இலிங்காயதர் | காண்க : இலிங்கங்கட்டி . |
| இலிங்கி | அடையாளத்தை உடையது ; சிவலிங்க பூசை செய்வோன் ; இருடி ; துறவி ; கபட சன்னியாசி ; யானை . |
| இலிங்கியர் | அனுமானத்தை முக்கியமாகக் கொண்டு வாதிக்கும் தருக்க நூலாளர் . |
| இலிங்கு | மாவிலங்கைமரம் . |
| இலிங்கோத்தாரம் | பூசித்தலின்பொருட்டுக் குருமுகமாகச் சிவலிங்கம் பெறுதல் . |
| இலிங்கோற்பவர் | சிவமூர்த்தங்களுள் ஒன்று . |
| இலிந்தகம் | கருங்குவளை . |
| இலிபி | இலக்கம் ; எழுத்து ; விதி ; மெழுகுதல் . |
| இலிபித்தல் | எழுதுதல் ; அனுகூலமாதல் ; நியமித்தலை விதித்தல் . |
| இலிர்த்தல் | சிலிர்த்தல் ; தளிர்த்தல் ; பொடித்தல் . |
| இலிற்றுதல் | சுரத்தல் ; துளித்தல் ; சொரிதல் . |
| இல¦க்கை | காண்க : ஈர் ; ஒரு நீட்டலளவை . |
| இல¦லாவதி | அழகிய பெண் ; இல¦லை உடையவள் ; காமச்சேட்டை உடைய பெண் ; துர்க்கை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இழிதல் | இறங்குதல் ; விழுதல் ; இழிவுபடுதல் ; தாழ்தல் ; வெளிப்படுதல் . |
| இழிதிணை | காண்க : அஃறிணை . |
| இழிந்தேறும்வழி | படுகர் ; ஏற்ற இறக்கமான பாதை . |
| இழிந்தோர் | தாழ்ந்தநிலையில் இருக்கின்றவர் . |
| இழிநீர் | வடியுநீர் . |
| இழிப்பு | நிந்திக்கை ; இகழ்வு ; இழிப்புச் சுவை . |
| இழிபாடு | இழிவு . |
| இழிபிறப்பினோன் | இழிசினன் , கீழ்மகன் . |
| இழிபு | இழிவு ; தாழ்வு ; பள்ளம் ; கீழ்மை ; சிறுமை . |
| இழிபுனல் | வடிந்த நீர் ; மலையினின்று விழுகின்ற அருவி . |
| இழிய | ஒழுக . |
| இழியற்கண் | இமை திறந்த கண் . |
| இழியினன் | காண்க : இழிசினன் . |
| இழிவரவு | காண்க : இளிவரவு . |
| இழிவழக்கு | இழிசினர் வழக்கு . |
| இழிவு | தாழ்வு ; இகழ்ச்சி , நிந்தை ; குறைவு ; குற்றம் ; கேடு ; பள்ளம் ; தீட்டு . |
| இழிவுசிறப்பு | இழிந்த தன்மையை மிகுத்து உரைத்தல் . |
| இழின் | ஒருவகை ஒலிக்குறிப்பு . |
| இழினெனல் | ஒருவகை ஒலிக்குறிப்பு . |
| இழு | (வி) ஈர் ; பின்வாங்கு ; வசமாக்கு ; உறிஞ்சு . |
| இலையுதிர்பு | இலையுதிர்கை ; முதுகாடு . |
| இலைவாணிகம் | வெற்றிலை முதலிய இலை விற்றல் . |
| இலைவாணிபம் | வெற்றிலை முதலிய இலை விற்றல் . |
| இலைவாணிகர் | வெற்றிலை விற்போர் ; இலை வாணியர் ; வெற்றிலை பயிர்செய்யும் சாதியார் . |
| இலைவாணிபர் | வெற்றிலை விற்போர் ; இலை வாணியர் ; வெற்றிலை பயிர்செய்யும் சாதியார் . |
| இலைவாணியர் | வெற்றிலை விற்போர் ; இலை வாணியர் ; வெற்றிலை பயிர்செய்யும் சாதியார் . |
| இலைவேல் | இலைத் தொழில்களாற் சிறந்த வேல் . |
| இலௌகிகம் | உலகிற்கு உரியது ; உலக நடை . |
| இவ் | இவை ; சுட்டுச்சொல் . |
| இவ்விரண்டு | இந்த இரண்டு ; தனித்தனி இரண்டு . |
| இவக்காண் | இங்கே ; இந்நேரமளவும் . |
| இவண் | இவ்விடம் ; இம்மை . |
| இவணர் | இவ்வுலகத்தார் . |
| இவர் | இவன் , இவள் என்பவற்றின் பன்மை ; ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச் சொல் . |
| இவர்கள் | இவன் , இவள் என்பவற்றின் பன்மை ; ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச் சொல் . |
| இவர்தல் | உயர்தல் ; செல்லுதல் ; உலாவுதல் ; பார்த்தல் ; ஏறுதல் ; செறிதல் ; பாய்தல் ; பொருந்துதல் ; மேற்கொள்ளுதல் ; விரும்புதல் ; ஒத்தல் ; எழும்புதல் ; நடத்தல் ; கலத்தல் . |
| இவர்வு | ஏறுதல் . |
| இவரித்தல் | எதிர்த்தல் . |
| இவவு | இழிவு ; தாழ்வு . |
| இவறல் | விருப்பம் ; பேரவா ; கடும்பற்றுள்ளம் , ஈயாமை ; மறதி . |
| இவறலன் | தானும் துய்யான் பிறருக்கும் ஈயான் , கடும்பற்றுள்ளன் . |
| இவறன்மை | கடும்பற்றுள்ளம் ; அசட்டை ; ஆசை . |
| இவறியார் | கைவிடாதவர் ; ஆசைப்பட்டோர் . |
| இவறுதல் | ஆசையுறல் ; விரும்புதல் ; மறத்தல் ; மிகுதல் ; உலாவுதல் ; கைவிடாதிருத்தல் ; வேண்டும்வழிப் பொருள் கொடாமை . |
| இவனட்டம் | மிளகு . |
| இவுளி | குதிரை ; மாமரம் . |
| இவுளிமறவன் | குதிரைவீரன் . |
| இவை | அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டுதற்குரிய சொல் . |
| இழத்தல் | தவறவிடுதல் ; சாகக் கொடுத்தல் ; கைவிடுதல் . |
| இழந்தநாள் | பயனின்றிக் கழிந்த நாள் . |
| இழப்பு | இழக்கை , நட்டம் ; பொருளழிவு . |
| இழப்புணி | இழந்தவன்(ள்) . |
| இழவு | இழப்பு ; கேடு ; சாவு ; எச்சில் ; வறுமை . |
| இழவுக்கடித்தல் | சாவுவீட்டில் மார்பில் அடித்து அழுதல் ; வீணுக்கு முயலுதல் . |
| இழவுகொடுத்தல் | வீணிலே வருத்தல் . |
| இழவுசொல்லுதல் | சாவுச்செய்தியை அறிவித்தல் . |
| இழவுவிழுதல் | சாவு நேர்தல் ; கேடு உண்டாதல் . |
| இழவூழ் | கேடு தரும் வினைப்பயன் . |
| இழவோலை | சாவோலை , சாவையறிவிக்குங் கடிதம் . |
| இழி | (வி) இறங்கு . |
| இழிகடை | மிக இழிந்தது . |
| இழிகண் | எப்பொழுதும் பீளைநீர் ஒழுகும் கண் . |
| இழிகுலம் | தாழ்ந்த குடி . |
| இழிகை | கைச்சுரிகை ; கையீட்டி ; இறங்குதல் . |
| இழிங்கு | ஈனம் ; வடு . |
| இழிச்சல்வாய் | திறந்த வாய் . |
| இழிச்சுதல் | இழிவுபடுத்தல் ; இறக்குதல் ; கீழ்ப்படுத்தல் ; அவமதித்தல் ; இடித்தல் ; தள்ளிக்கொடுத்தல் . |
| இழிசினர்மொழி | கீழ்மக்கள் பேச்சு . |
| இழிசினன் | புலைமகன் ; தாழ்ந்தோன் . |
| இழிஞன் | புலைமகன் ; தாழ்ந்தோன் . |
| இழிசொல் | பழிச்சொல் ; பொய்ம்மொழி ; கடுஞ்சொல் ; பயனில்சொல் . |
| இழித்தல் | இறக்குதல் ; இகழுதல் . |
| இழித்துரை | இழிவாகக் கூறும் சொல் . |
| இழிதகவு | இழிவு , எளிமை . |
| இழிதகன் | இழிந்தவன் ; பிறர் பழிக்கதக்க செயலையுடையவன் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இழைக்குளிர்த்தி | துணியின் மென்மை ; புடைவையின் மென்மை . |
| இழைக்கை | இழைத்தல் . |
| இழைகொள்ளுதல் | தைத்தல் . |
| இழைத்த நாள் | விதித்த நாள் , ஏற்படுத்தப்பட்ட கால அளவு . |
| இழைத்தல் | செய்தல் ; குழைத்தல் ; தூற்றல் ; செதுக்குதல் ; வரைதல் ; மூச்சிரைத்தல் ; கூறுதல் ; நுண்ணிதாக ஆராய்தல் ; பூசுதல் ; வஞ்சினங் கூறுதல் ; கலப்பித்தல் ; அமைத்தல் ; இழையாக்குதல் ; மாத்திரை முதலியன உரைத்தல் ; பதித்தல் . |
| இழைத்துணர்தல் | நுட்பமாக ஆராய்ந்துணர்தல் . |
| இழைதல் | நூற்கப்படுதல் ; உராய்தல் ; சோறு முதலியன குழைதல் ; கூடுதல் ; நெருங்கிப்பழகுதல் ; உள்நெகிழ்தல் ; மூச்சுச் சிறுகுதல் ; குறுமூச்சு விடுதல் ; மனம் பொருந்துதல் . |
| இழைந்தவர் | கூடினவர் . |
| இழைநெருக்கம் | இழைக்குளிர்ச்சி , ஆடையின் மென்மை . |
| இழைப்பு | இழைத்தல் . |
| இழைப்புடைவை | நல்லாடை . |
| இழைப்புளி | சீவுளி ; இழைக்குந் தச்சுக்கருவி . |
| இழைபிடித்தல் | காயத்தை மூடித்தைத்தல் . |
| இழைபு | நூலழகுகளுள் ஒன்று , வல்லெழுத்துச் சேராது வருவது . |
| இழைபோடல் | புடைவை பொத்துதல் ; இழையிட்டுத் தைத்தல் . |
| இழையாடுதல் | இழையிட்டுத் தைத்தல் . |
| இழையிடுதல் | இழையிட்டுத் தைத்தல் . |
| இழையூசி | மெல்லிய ஊசி . |
| இழைவாங்கி | மெல்லிய ஊசி . |
| இளஃகுதல் | தளிர்த்தல் . |
| இளக்கம் | இளகிய தன்மை ; நெகிழ்ச்சி ; தளர்ச்சி ; மென்மை ; தணிவு . |
| இளக்கரித்தல் | வேகந்தணிதல் ; செயலில் கவனமின்றியிருத்தல் ; தளர்தல் ; இளகிப் பின்னிடுதல் . |
| இளக்காரம் | இளக்கம் ; மனநெகிழ்ச்சி ; தாழ்நிலை ; குறைவு . |
| இளக்குதல் | நெகிழச்செய்தல் ; அசைத்தல் . |
| இளக்கும் | அசைக்கும் . |
| இளகம் | இலேகியம் , மருந்துவகை . |
| இளகல் | நெகிழ்தல் ; குழைதல் ; அசைதல் ; தழைத்தல் ; மென்மையாதல் ; உருகுதல் ; தணிதல் . |
| இளகுதல் | நெகிழ்தல் ; குழைதல் ; அசைதல் ; தழைத்தல் ; மென்மையாதல் ; உருகுதல் ; தணிதல் . |
| இளங்கதிர் | பயிரின் இளங்கதிர் ; இளங்கிரணம் ; உதயசூரியன் . |
| இளங்கம்பு | கம்புவகை . |
| இளங்கலையான் | ஒரு நெல்வகை . |
| இளங்கள் | புதிய கள் . |
| இளங்கற்றா | இளங்கன்றையுடைய பசு . |
| இளங்கன்று | சிறுகன்று ; மரக்கன்று ; முதிராத கன்று . |
| இளங்காய் | முதிராத காய் . |
| இளங்கார் | கார்நெல் . |
| இளங்கால் | தென்றல் ; வெற்றிலையிளங்கொடி ; இளமைப் பருவம் . |
| இளங்காலை | அதிகாலை ; இளமைப் பருவம் . |
| இளங்காற்று | மெல்லிய காற்று , தென்றல் . |
| இளங்கிடை | ஊர்மாடுகள் எல்லாம் திரளும் வரை சேர்ந்த மாடுகளை மேய்ப்போன் நிறுத்தி வைக்கும் இடம் . |
| இளங்கிளை | தங்கை ; இளமைச் சுற்றம் . |
| இளங்குரல் | சிறுகுரல் ; பயிரிளங்கதிர் . |
| இளங்குருத்து | முதிராத குருத்து . |
| இளங்கேள்வி | துணை மேலாளன் . |
| இழுக்கடித்தல் | அலையவைத்தல் . |
| இழுக்கம் | பிழை ; ஒழுக்கந் தவறுகை ; தீயநடத்தை ; ஈனம் ; தளர்வு ; தாமதம் . |
| இழுக்கல் | வழுக்குகை ; வழுக்குநிலம் ; தளர்வு ; தவறுதல் . |
| இழுக்காமை | மறவாமை . |
| இழுக்காறு | தீநெறி , தீயொழுக்கம் . |
| இழுக்கு | குற்றம் ; பொல்லாங்கு ; நிந்தை ; தாழ்வு ; மறதி ; வழுக்கு ; தவறு . |
| இழுக்குதல் | தவறுதல் ; வழுக்குதல் ; இழத்தல் ; தளர்தல் ; துன்புறுதல் ; தள்ளிவிடல் ; மறத்தல் ; பின்வாங்கல் . |
| இழுகுணி | சோம்பேறி ; பிசினாறி . |
| இழுகுதல் | பூசுதல் ; பரத்தல் ; படிதல் ; தாமதித்தல் . |
| இழுங்கு | நீங்குகை ; ஈனம் , வழு . |
| இழுத்தல் | உறிஞ்சுதல் ; ஈர்த்தல் ; வலித்தல் ; வசமாக்கல் ; காலம் நீட்டித்தல் ; சுழித்து வாங்குதல் ; பின்வாங்குதல் ; புறத்திலுள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்தல் ; ஒலியை நீட்டுதல் ; சுரம் பாடுதல் . |
| இழுத்துவிடுதல் | செயலை நீட்டித்துவிடுதல் ; வலிந்து தொடர்புண்டாக்குதல் ; வெளிப்படுத்தல் ; புதிதாய் உண்டாக்குதல் . |
| இழுது | வெண்ணெய் ; நெய் ; நிணம் ; தேன் ; கள் ; குழம்பு ; சேறு ; தித்திப்பு . |
| இழுதுதல் | கொழுத்தல் ; நெய்த்தல் . |
| இழுதை | பேய் ; அறிவின்மை ; அறிவிலி ; பொய் . |
| இழுப்பாட்டம் | காலம் நீட்டித்தல் ; உறுதியின்மை . |
| இழுப்பாணி | கலப்பையின் ஏர்க்காலை நுகத்திலே பூட்டும் முளை ; காலங்கடத்துவோன் . |
| இழுப்பு | இழுக்கை ; கவர்ச்சி ; இசிவுநோய் ; நீரிழுப்பு ; காலத்தாழ்வு ; குறைவு ; உறுதியின்மை . |
| இழுப்புண்ணுதல் | இழுக்கப்படுதல் . |
| இழுப்புப்பறிப்பாதல் | போராட்டமாதல் ; போதியதும் போதாததும் ஆதல் . |
| இழுப்புமாந்தம் | ஒரு நாய் , மாந்தவகை . |
| இழுபறி | தொல்லை ; பிணக்கு ; போராட்டம் ; வாது . |
| இழுபறிப்படுதல் | தொல்லைப்படுதல் . |
| இழும் | இனிமை ; உவப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; மென்மை . |
| இழுமு | தித்திப்பு ; களிப்பு ; இனிமை . |
| இழுமெனல் | அனுகரணவோசை ; இனிய ஓசைக்குறிப்பு ; இனிமை ; சீர்மை ; வழுவழுப்பு . |
| இழுவல் | இழுக்கை ; காலந்தாழ்த்தல் ; சுறுசுறுப்பில்லாதவன் ; குறைவு ; உறுதியின்மை . |
| இழுவை | இழுப்பு ; இழுக்கப்படும் பொருள் ; வடம் ; இழுத்த தடம் ; ஒரு முட்செடி . |
| இழை | நூல் ; நூலிழை ; அணிகலன் ; கையிற்கட்டுங்காப்பு . |
| இழைக்கயிறு | நூற்கயிறு ; காப்புநூல் . |
| இழைக்குளிர்ச்சி | துணியின் மென்மை ; புடைவையின் மென்மை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இளிகண் | பீளைக்கண் . |
| இளிச்சகண்ணி | காமக் குறிப்போடு பிறரை நோக்கும் தன்மையுடையாள் . |
| இளிச்சவாயன் | எப்போதும் பல்லைக் காட்டுவோன் ; எளிதில் ஏமாற்றபடுபவன் ; அப்பாவி ; நுட்ப புத்தியில்லாதவன் . |
| இளிச்சற்கண் | காண்க : இளிகண் . |
| இளித்தல் | பல்லைக் காட்டுதல் ; பல்லைக் காட்டிச் சிரித்தல் ; கேலி செய்தல் . |
| இளந்தேவி | அரசனின் இளைய மனைவி . |
| இளந்தை | இளவயதுடையது ; இளமை ; குழந்தை . |
| இளந்தோயல் | உறைந்துவருந் தயிர் ; ஆயுதங்களைப் பதமிடும் தோய்ச்சல் . |
| இளநகை | புன்சிரிப்பு . |
| இளநலம் | இளைய வடிவு ; இளமை இன்பம் . |
| இளநாக்கடித்தல் | உறுதியில்லாமற் பேசல் ; உடன்படாததுபோற் காட்டுதல் . |
| இளநாள் | இளவேனில் . |
| இளநிலா | அந்திநிலா , பிறைச்சந்திரன் . |
| இளநீர் | இளந்தேங்காய் ; தெங்கின் இளங்காயிலுள்ள நீர் ; மணியின் இளநிறம் ; வெள்ளொளி . |
| இளநீர்க்கட்டு | உள்நாக்கு நோய் . |
| இளநீர்க்குழம்பு | இளநீரால் செய்யப்படும் கண் மருந்துவகை . |
| இளநீர்த்தாதல் | தேய்ந்து மெலிதல் . |
| இளநீரமுது | வழிபாட்டில் படைக்கும் இளநீர் . |
| இளநீலம் | வெளிறிய நீலம் . |
| இளநெஞ்சன் | கோழை மனமுடையவன் ; இளகின மனமுடையவன் , இரக்கமுள்ள மனமுடையவன் . |
| இளநெஞ்சு | இளகின மனம் , இரக்கமுள்ள மனம் ; கோழை மனம் . |
| இளநேரம் | மாலை . |
| இளப்பம் | திடமின்மை , உறுதியின்மை ; தாழ்வு ; மென்மை . |
| இளம்பச்சை | நன்றாக பற்றாத பச்சை நிறம் . |
| இளம்பசி | சிறுபசி . |
| இளம்படியார் | இளம்பெண்கள் . |
| இளம்பதம் | இளமை முற்றாநிலை ; இளம்பாகம் ; உருகுபதம் ; வேகாப்பதம் ; நெல் முதலியவற்றின் காய்ச்சற் குறைவு . |
| இளம்பருவம் | இளவயது ; மெல்லிய பதம் . |
| இளம்பாக்கு | பாக்குவகை ; பச்சைப் பாக்கு . |
| இளம்பாகம் | காண்க : இளம்பதம் . |
| இளம்பாடு | இளமையிற் படும்பாடு ; இளம்பதம் ; முற்றாமை . |
| இளம்பாலாசிரியன் | இளம்பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன் . |
| இளம்பிள்ளைவாதம் | குழந்தைகளுக்கு வரும் ஒருவகை வாதநோய் . |
| இளம்பிறை | பிறைச்சந்திரன் ; இணையா வினைக்கைவகை . |
| இளம்புல் | முதிராத புல் ; அறுகு . |
| இளம்பெண் | இளம்பருவத்துப் பெண் ; கற்றாழை . |
| இளமட்டம் | கீழ்மையும் இளமையும் உடையது ; குறுமட்டக் குதிரை ; காண்க : இளவட்டம் . |
| இளமண் | மணல்கொண்ட தரை . |
| இளமணல் | குருத்துமணல் . |
| இளமரக்கா | வயல் சூழ்ந்த சோலை ; இளஞ்சோலை . |
| இளமழை | பயன்படுவதாகிய மேகம் ; சிறு பெயலுள்ள முகில் . |
| இளமார்பு | கருப்பூரவகை . |
| இளமுறை | பின்வழிமுறை . |
| இளமை | இளமைப் பருவம் ; சிறு பருவம் ; மென்மை ; அறிவு முதிராமை : ஒன்றை வேறொன்றாக மயங்கும் மயக்கம் ; காமம் . |
| இளமைச்செவ்வி | சிறுபருவம் ; கோமளம் . |
| இளமையாடுதல் | திரிபுணர்ச்சியுறுதல் . |
| இளவட்டம் | இளமட்டம் , இளம்பருவத்தினர் . |
| இளவணி | காலாட்படை . |
| இளவரசன் | பட்டத்துக்குரிய அரசகுமாரன் ; இளம் பருவத்து அரசன் ; இராச குமாரன் . |
| இளவரசு | அரசகுமாரன் ; பட்டத்துக்குரிய பிள்ளை ; இளமையான அரசமரம் . |
| இளவல் | தம்பி ; குமாரன் ; இளைஞன் ; முதிராதது . |
| இளவழிபாடு | சிறுபிள்ளைக் கல்வி . |
| இளவாடை | மெல்லிய வாடைக்காற்று . |
| இளவாளிப்பு | ஈரம் . |
| இளவுச்சி | உச்சிக் காலத்துக்கு அணித்தான முற்பொழுது . |
| இளவுடையான் | காண்க : இளவரசு . |
| இளவுறை | இளந்தயிர் . |
| இளவெந்நீர் | சிறு சூடான நீர் . |
| இளவெயில் | காலை வெயில் ; முதிராத வெயில் . |
| இளவேனில் | வசந்த காலம் , சித்திரை வைகாசி மாதங்கள் . |
| இளாவிருதம் | நன்னீர்க் கடலாற் சூழப் பெற்ற நிலப்பகுதி , ஒன்பது கண்டத்துள் ஒன்று . |
| இளி | இகழ்ச்சி ; குற்றம் ; சிரிப்பு ; இகழ்ச்சிக் குறிப்பு ; நகை ; யாழின் நரம்புகளுள் ஒன்று ; ஒருவகைச் சுரம் ; இழிவு . |
| இளங்கொடி | சிறுகொடி ; பசுவின் நஞ்சுக்கொடி ; பெண் . |
| இளங்கொம்பு | வளார் . |
| இளங்கொற்றி | இளங்கன்றையுடைய பசு . |
| இளங்கோ | இளவரசன் ; பூவணிகன் . |
| இளங்கோயில் | திருப்பணிக்காக மூர்த்தியை வேறிடத்தில் வைக்குமிடம் . |
| இளசு | காண்க : இளைது . |
| இளஞ்சூடு | சிறு சூடு . |
| இளஞ்சூல் | பயிரின் இளங்கரு ; முதிராப் பிண்டம் . |
| இளஞாயிறு | உதயசூரியன் . |
| இளந்தண்டு | முளைக்கீரை . |
| இளந்தலை | இளமைப் பருவம் ; எளிமை ; கனமின்மை ; மரத்தின் முற்றாத பாகம் . |
| இளந்தாரி | இளைஞன் , வாலிபன் . |
| இளந்தென்றல் | சிறு தென்றல் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இற்றுப்போதல் | நைந்துபோதல் ; அழுகிப் போதல் ; முரிந்துபோதல் . |
| இற்றும் | இன்னும் , மேலும் . |
| இற்றுவிழுதல் | நைந்து கெட்டுவிடுதல் ; முரிந்து விழல் . |
| இற்றை | இன்றைக்கு ; இன்று ; இந்நாள் . |
| இற்றைத்தினம் | இன்று . |
| இற்றைநாள் | இன்று . |
| இறக்கம் | இறங்குகை ; சரிவு ; இறங்குதுறை ; விலங்குகள் செல்வழி ; அம்மை முதலிய இறக்கம் ; நிலை தவறுகை ; உணவு முதலியன உட்செல்லுகை ; இறப்பு . |
| இறக்கல் | காண்க : இறக்குதல் . |
| இறக்கிடல் | இறங்கச்செய்தல் ; தலைகுனிதல் ; கீழ்ப்படுத்தல் ; தாழ்த்தல் . |
| இறக்குதல் | இறங்கச்செய்தல் ; கீழ்ப்படுத்தல் ; தாழ்த்தல் ; தைலம் முதலியன வடித்தல் ; கெடுத்தல் ; சாதல் . |
| இறக்குதுறை | பண்டம் இறக்கும் துறைமுகம் . |
| இறக்குமதி | வேற்று நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் சரக்கு ; துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை ; இறக்கும் துறைமுகச் சரக்கு . |
| இறக்கை | சிறகு ; கிணற்றின் இருபுறங்களிலுமுள்ள துணைச்சுவர் ; இறத்தல் . |
| இறக்கைச் சுவர் | துணைச்சுவர் . |
| இறகர் | பறவையிறகு ; சிறகு . |
| இறகு | சிறகு ; பறவையிறகு ; மயிற்பீலி . |
| இறகுபேனா | இறகாலான எழுதுகோல் . |
| இறகுளர்தல் | சிறகடித்துக் கொள்ளுதல் . |
| இறங்கண்டம் | ஒருவகை அண்டநோய் . |
| இறங்கர் | குடம் . |
| இறங்கல் | ஒருவகை நெல் . |
| இளித்தவாய்ப் பட்டம் | இளித்தவாயன் எனப்படுகை . |
| இளித்தவாயன் | காண்க : இளிச்சவாயன் . |
| இளிதல் | இணுங்குதல் ; உரித்தல் ; இகழப்பட்டு எளியனாதல் . |
| இளிந்தகாய் | இணுங்கின காய் ; பாக்கு . |
| இளிப்படுதல் | அகப்படுதல் ; எளிமையாதல் . |
| இளிப்பு | பல்லிளிக்கை ; பல் காட்டுதல் ; இழிவு ; நிந்தை . |
| இளிம்பு | திறமையின்மை . |
| இளிவரல் | இழிப்புச்சுவை ; இழிவு . |
| இளிவரவு | இகழ்ச்சி ; சிறுமை ; இழிதொழில் . |
| இளிவு | இழிவு ; இகழ்ச்சி ; இழிதகவு ; அருவருப்பு ; அவலச்சுவை நான்கனுள் ஒன்று ; நிந்தை . |
| இளை | தலைக்காவல் ; காவற்காடு ; கட்டுவேலி ; பூமி ; இளமை ; இளையாள் ; தம்பி ; தங்கை ; மேகம் ; பசு ; திருமகள் ; காவல் . |
| இளைச்சி | தங்கை . |
| இளைஞன் | இளவல் ; தம்பி ; சிறுவன் ; இளையோன் . |
| இளைத்தல் | சோர்தல் , தளர்தல் ; மெலிதல் ; இரங்கல் ; பின்னிடுதல் , தோற்றுப்போதல் ; வளங்குன்றுதல் . |
| இளைத்தோர் | எளியவர் . |
| இளைது | இளையது , முதிராதது . |
| இளைப்படுதல் | வலையில் அகப்படுதல் . |
| இளைப்பம் | காண்க : இளப்பம் . |
| இளைப்பாற்றி | களைப்பைப் போக்குவது . |
| இளைப்பாற்றுதல் | இளைப்பாறச் செய்தல் ; களைப்பைப் போக்குதல் ; ஓய்ந்திருத்தல் . |
| இளைப்பாறுதல் | விடாய் தீர்த்தல் ; களைப்பு நீங்கல் ; ஓய்ந்திருத்தல் . |
| இளைப்பாறு மண்டபம் | வசந்த மண்டபம் . |
| இளைப்பு | களைப்பு ; சோர்வு ; வருத்தம் ; மெலிவு ; தொய்வு . |
| இளைமை | காண்க : இளமை . |
| இளைய தம்பி | இளையவனுக்கு இளையவன் . |
| இளைய பிள்ளையார் | முருகக் கடவுள் . |
| இளையபெருமாள் | இலக்குமணண் . |
| இளையர் | இளைஞர் ; பணியாளர் . |
| இளையவர் | இளம்பெண்கள் . |
| இளையவள் | இளமைத் தன்மையுடையவள் ; தங்கை ; திருமகள் ; இளைய மனைவி . |
| இளையவன் | ஆண்டில் குறைந்தவன் ; தம்பி ; முருகன் . |
| இளையள் | தங்கை ; திருமகள் ; பெண் ; இளைய மனைவி . |
| இளையாள் | தங்கை ; திருமகள் ; பெண் ; இளைய மனைவி . |
| இளையன் | இளையவன் , தம்பி . |
| இளையான் | இளையவன் , தம்பி . |
| இளையார் | பெண்கள் ; தோழியர் . |
| இளையாழ்வார் | இராமானுசர் ; இலக்குவன் . |
| இளையெள் | முற்றாத எள் . |
| இளையோன் | காண்க : இளையவன் . |
| இளைவலி | கரிக்காடு . |
| இற்கடை | வீட்டுவாயில் . |
| இற்கிழத்தி | இல்லக் கிழத்தி , மனையாள் . |
| இற்செறித்தல் | தலைவியின் அகவை முதிர்ச்சி நோக்கிப் பெற்றோர் அவளை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்தல் . |
| இற்செறிப்பார் | வீட்டில் சேர்ப்பார் . |
| இற்செறிப்புணர்த்தல் | தலைவி இல்லக் காவலில் வைக்கப்பட்டிருத்தலைத் தோழி தலைவனுக்கு உணர்த்துதல் . |
| இற்செறிப்பு | காண்க : இற்செறித்தல் . |
| இற்செறிவு | காண்க : இற்செறித்தல் . |
| இற்பரத்தை | காமக்கிழத்தியாகக் கொண்ட பரத்தை . |
| இற்பாலர் | நற்குடியிற் பிறந்தவர் . |
| இற்பிறப்பு | நல்ல குடியிற் பிறத்தல் ; உயர்குடிப் பிறப்பு . |
| இற்புலி | பூனை . |
| இற்றி | காண்க : இத்தி . |
| இற்றிசை | இல்லறம் . |
| இற்று | இத்தன்மைத்து ; ஒரு சாரியை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இறாட்டாணியம் | இடுக்கண் , துன்பம் , வருத்தம் . |
| இறாட்டுதல் | உரைசுதல் ; பகைத்தல் . |
| இறாட்டுப்பிறாட்டு | சச்சரவு . |
| இறாத்தல் | ஒரு நிறையளவு , ஆறு பலங்கொண்ட நிறை ; மீன் தீர்வைத் துறை . |
| இறாய்த்தல் | பின்வாங்குதல் . |
| இறால் | இறால்மீன் ; வெள்ளிறால் ; இடபராசி ; கார்த்திகை நாள் ; தேன்கூடு ; எருது . |
| இறாவுதல் | வதக்கி மயிர்போகச் சீவுதல் . |
| இறுக்கம் | நெகிழாத்தன்மை ; அழுத்தம் ; நெருக்கம் ; ஒழுக்கம் கையழுத்தம் ; முட்டுப்பாடு ; புழுக்கம் . |
| இறுக்கர் | பாலை நிலத்தவர் . |
| இறுக்கன் | ஈயாதவன் , கடும்பற்றுள்ளன் . |
| இறுக்கு | இறுக்கிய கட்டு ; இறுக்கிய முடிச்சு ; ஒடுக்குகை ; கண்டிக்கை . |
| இறுக்குதல் | அழுந்தக் கட்டுதல் ; இறுக உடுத்தல் ; ஒடுக்குதல் ; உள்ளழுத்துதல் ; உறையச் செய்தல் . |
| இறுக்குவாதம் | உடலை வளைத்துக்கொள்ளும் ஒருவகை வாதநோய் . |
| இறுகங்கியான் | கரிசலாங்கண்ணி . |
| இறுகநீக்குதல் | கைவிடுதல் . |
| இறுகரை | இடிகரை . |
| இறுகல் | சுருங்குகை ; கடினமாதல் ; பதுமராக மணியின் குற்றங்களுள் ஒன்று . |
| இறுகால் | ஊழிக்காற்று . |
| இறுகுதல் | அழுத்தமாதல் ; கெட்டியாதல் ; உறைதல் ; நெருங்குதல் ; உறுதியாதல் ; நிலைபெறுதல் ; மூர்ச்சிதல் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று . |
| இறுங்கு | சோளவகை ,காக்காய்ச் சோளம் . |
| இறுத்தருதல் | வருதல் . |
| இறுத்தல் | தங்குதல் ; ஒடித்தல் ; சொல்லுதல் ; வடித்தல் ; விடைகூறல் ; முடித்தல் ; வெட்டல் ; கடன் செலுத்தல் ; அழித்தல் ; வீழ்த்துதல் ; எறிதல் ; வினாதல் ; தைத்தல் . |
| இறுதல் | ஒடிதல் , முறிதல் ; கெடுதல் ; அழிதல் ; முடிதல் ; தளர்தல் ; முடிவுறுதல் ; சாதல் . |
| இறுதி | முடிவு ; சாவு ; வரையறை . |
| இறுதிக்காலம் | இறப்புக்காலம் ; ஊழிக்காலம் . |
| இறுதிநிலைத்தீபகம் | கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது . |
| இறுதிநிலைத்தீவகம் | கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது . |
| இறுதிவிளக்கு | கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது . |
| இறுதிவேள்வி | அந்தியேட்டி ; ஈமக்கடன் செய்கை . |
| இறுநாகம் | காண்க : இலாமிச்சை . |
| இறுப்பு | தங்குகை ; குடியிறை ; கடன் செலுத்துகை . |
| இறும்பி | எறும்பு . |
| இறும்பு | குறுங்காடு ; சிறுதூறு ; சிறுமலை ; தாமரைப்பூ ; காந்தட் பூண்டு ; வியப்பு . |
| இறும்பூது | வியப்பு ; பெருமை ; மலை ; தளிர் ; சிறுதூறு ; தாமரைப்பூ . |
| இறுமாத்தல் | பெருமை பாராட்டுதல் ; செருக்கடைதல் ; நிமிர்தல் ; மிக மகிழ்தல் . |
| இறுமாப்பு | பெருமிதம் ; பெருமை பாராட்டுகை ; செருக்கு ; நிமிர்ச்சி . |
| இறுமுறி | கிழிந்துபோன பத்திரம் ; தீரந்துபோன பத்திரம் . |
| இறுவதஞ்சாமை | இழிப்புக்கு அஞ்சாதிருத்தல் ; வணிகர் குணங்களுள் ஒன்று . |
| இறுவரை | முடிவு ; அழியுங்காலம் ; பெரிய மலை ; பக்கமலை ; மலையின் அடிவாரம் . |
| இறுவரையம் | எல்லை ; தற்சமயம் . |
| இறங்கல்மீட்டான் | ஒருவகை நெல் . |
| இறங்குகிணறு | உள்ளே இறங்கிச் செல்வதற்குப் படி வரிசையுள்ள கிணறு . |
| இறங்குதல் | இழிதல் ; தாழ்தல் ; தங்குதல் ; கீழ்ப்படுதல் ; சரிதல் ; தாழ்வடைதல் ; நிலைகுலைதல் ; நாணுதல் . |
| இறங்குதுறை | மக்கள் இறங்கிப் பயன்படுத்தும் நீர்த்துறை . |
| இறங்குபொழுது | பிற்பகல் . |
| இறங்குமுகம் | தணியும் நிலைமை . |
| இறங்குவெயில் | பிற்பகல் வெயில் . |
| இறங்கொற்றி | அனுபவ ஒற்றி . |
| இறஞ்சி | ஆடைவகை ; அவுரி . |
| இறட்டுதல் | முகந்து வீசுதல் . |
| இறடி | தினை ; கருந்தினை . |
| இறத்தல் | கடத்தல் ; கழிதல் ; நெறிகடந்து செல்லுதல் ; சாதல் ; மிகுதல் ; வழக்குவீழ்தல் ; நீங்குதல் . |
| இறந்தகாலம் | சென்ற காலம் . |
| இறந்ததுவிலக்கல் | முப்பத்திரண்டு தந்திர உத்திகளுள் ஒன்று , நூல் செய்வோன் இறந்துபோன வழக்காறுகளை நீக்குதல் . |
| இறந்தன்று | மிக்கது ; சிறந்தது . |
| இறந்தவழக்கு | வீழ்ந்த வழக்கு . |
| இறந்திரி | இத்திமரம் . |
| இறந்துபடுதல் | சாதல் . |
| இறந்துபாடு | இறந்துபடுகை ; சாவு . |
| இறப்ப | மிகவும் , மேன்மேலும் . |
| இறப்பு | அதிக்கிரமம் ; மிகுதி ; போக்கு ; இறப்பு ; உலர்ந்த பொருள் ; வீடுபேறு ; வீட்டின் இறப்பு ; இறந்த காலம் . |
| இறப்பை | இமையிதழ் . |
| இறல் | ஒடிதல் ; கெடுதல் ; இறுதி ; சிறு தூறு ; கிளிஞ்சில் . |
| இறலி | இத்திமரம் ; மருதமரம் ; கொன்றை ; ஏழு தீவுள் ஒன்று . |
| இறவம் | இறால்மீன் . |
| இறவாரம் | தாழ்வாரம் ; தாழ்வாரத்துக் கூரையின் முன்பாகம் . |
| இறவானம் | தோற்கருவிவகை ; காண்க : இறவாரம் . |
| இறவி | சாவு ; இறத்தல் . |
| இறவின்மை | அழியாமை , இறைவன் எண்குணங்களுள் ஒன்று . |
| இறவு | சாவு ; முடிவு ; நீக்கம் ; மிகுதி ; இறால் மீன் ; தேன்கூடு ; வீட்டிறப்பு ; எல்லை . |
| இறவுள் | குறிஞ்சிநிலம் . |
| இறவுளர் | குறிஞ்சிநில மாக்கள் . |
| இறவை | ஏணி ; இறைகூடை ; விரற்புட்டில் . |
| இறா | காண்க : இறவம் . |
| இறாஞ்சுதல் | பறவை பறந்து பாய்தல் ; பறித்தல் ; தட்டியெடுத்தல் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இன் | இனிய ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; சாரியை ; இறந்தகால இடைநிலை . |
| இன்கண் | இன்பம் ; கண்ணோட்டம் . |
| இன்கவி | மதுரகவி ; இன்னோசை தரும்பாக்களைப் பாடும் புலவன் . |
| இன்சொல் | இனிமை பயக்கும் சொல் . |
| இன்பக்கொடி | காண்க : காமவல்லி . |
| இன்பச்செலவு | உல்லாசப் பயணம் , சுற்றுலா . |
| இன்பம் | மனமகிழ்ச்சி ; இனிமை ; ஒன்பான் சுவைகளுள் ஒன்று ; சிற்றின்பம் , காமம் ; திருமணம் ; நூற்பயன்களுள் ஒன்று . |
| இன்பவுபதை | அரசன் தன் அமைச்சரைத் தெரிந்து தெளியக் கொள்ளும் சோதனை நான்கனுள் ஒன்று ; அதாவது , இன்பவுணர்வை எடுத்துரைத்துச் சோதித்தல் . |
| இன்பன் | கணவன் . |
| இன்பித்தல் | மகிழச்சியூட்டுதல் . |
| இன்பு | காண்க : இன்பம் . |
| இன்புறவு | மகிழ்கை . |
| இன்புறா | காண்க : சாயவேர் . |
| இன்பூறல் | காண்க : சாயவேர் . |
| இன்மை | இல்லாமை ; வறுமை ; உடைமைக்கு மறுதலை ; அறுவகை வழக்கினுள் ஒன்று . |
| இன்மைவழக்கு | காண்க : இல்வழக்கு , இல்லதனை இல்லை என்கை . |
| இன்றி | இல்லாமல் . |
| இன்றிய | இல்லாத . |
| இன்றியமையாமை | இல்லாமல் முடியாமை , அவசியம் . |
| இறை | உயரம் ; தலை ; கடவுள் ; தலைவன் ; அரசன் ; உயர்ந்தோன் ; மூத்தோன் ; பெருமையிற் சிறந்தோன் ; கணவன் ; பறவையிறகு ; கடன் ; வீட்டிறப்பு ; மறுமொழி ; மணிக்கட்டு ; குடியிறை ; சிறுமை ; அற்பம் ; காலவிரைவு ; சிவன் ; பிரமன் ; மாமரம் . |
| இறை | (வி) இறைத்துவிடு ; தூவு ; எறி , வீசு ; தங்கு . |
| இறைக்கட்டு | வரி . |
| இறைக்கள்ளன் | காண்க : இறைப்பிளவை . |
| இறைக்காசான் | முருகக்கடவுள் . |
| இறைகுடி | வரி கொடுப்போன் . |
| இறைக்குத்து | சாகுந்தறுவாயில் கண்விழி அசைவற்று இருக்கை . |
| இறைகாவல் | தலையாரிக்குரிய வரி . |
| இறைகிழவன் | அரசனாதல் தன்மையை உடையவன் . |
| இறைகுத்துதல் | மதிப்பிடுதல் ; விரலிறையால் அளவிடுதல் . |
| இறைகூடுதல் | அரசாளுதல் . |
| இறைகூடை | நீரிறைக்குங் கூடை . |
| இறைகூர்தல் | தங்குதல் . |
| இறைச்சி | மாமிசம் ; இறைச்சிப் பொருள் ; கருப்பொருள் ; விருப்பமானது . |
| இறைச்சிப்பொருள் | கருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள் ; புறத்துச் செல்லும் குறிப்புப் பொருள் . |
| இறைச்சிப்போர் | உடம்பு . |
| இறைசூதன் | நான்முகன் . |
| இறைஞ்சலர் | பகைவர் . |
| இறைஞ்சார் | பகைவர் . |
| இறைஞ்சி | மரவுரி . |
| இறைஞ்சு | வளை ; வணங்கு . |
| இறைஞ்சுதல் | தாழ்தல் ; கவிழ்தல் ; வளைதல் ; வணங்குதல் . |
| இறைத்தல் | சிதறுதல் ; நீர் பாய்ச்சுதல் ; நிறைத்தல் ; மிகுதியாகச் செலவிடுதல் . |
| இறைதல் | சிதறிப்போதல் , சிந்துதல் ; வணங்குதல் . |
| இறைதிரியல் | அரசநீதி திறம்பல் . |
| இறைப்பாரம் | உயிர்களைக் காக்கும் அரசனுடைய பொறுப்பு . |
| இறைப்பிணைப்படுதல் | ஒருவன் செலுத்த வேண்டும் வரிக்குப் பிணைகொடுத்தல் . |
| இறைப்பிளவை | கைவிரலிடுக்கில் வரும் ஒருவகைப் புண் . |
| இறைப்பு | நீர் இறைக்கை . |
| இறைப்புப்பட்டரை | கிணற்றுப் பாய்ச்சலுள்ள இடம் . |
| இறைபயப்பது | குறிப்பாகப் பொருளை விளக்கும் விடை . |
| இறைமகள் | தலைவி ; அரசன் மகள் ; துர்க்கை . |
| இறைமகன் | அரசன் ; அரசன் மகன் . |
| இறைமரம் | இறைகூடை தாங்கும் மரம் ; ஏற்றமரம் . |
| இறைமாட்சி | அரசியல் ; அரசனின் நற்குண நற்செயல்கள் . |
| இறைமை | தலைமை ; அரசாட்சி ; தெய்வத்தன்மை . |
| இறைமையாட்டி | தலைவி ; அரசி . |
| இறைமொழி | மறுமொழி ; இறைவன் அருளிய ஆகமம் . |
| இறையமன் | யமனுக்கு மூத்தோன் , சனி . |
| இறையவன் | கடவுள் ; தேவர் தலைவன் ; தலைவன் . |
| இறையாயிரங் கொண்டான் | ஒரு விரல் இறைக்கு ஆயிரங் கல நெற்கொள்ளும் களஞ்சியம் . |
| இறையான் | சிவன் . |
| இறையிலி | வரி நீக்கப்பட்ட நிலம் . |
| இறையிழித்துதல் | வரி நீக்குதல் . |
| இறையுணர்வு | பதிஞானம் , இறைவனையறியும் அறிவு . |
| இறையெண்ணுதல் | விரலிறையால் கணக்கிடுதல் . |
| இறையோன் | கடவுள் ; சிவன் ; குரு ; அரசன் ; தலைவன் . |
| இறைவரை | கணப்பொழுது . |
| இறைவன் | தலைவன் ; கடவுள் ; சிவன் ; திருமால் ; அரசன் ; பிரமன் ; குரு ; மூத்தோன் ; கணவன் ; சிவனார்வேம்பு . |
| இறைவன்வேம்பு | சிவனார்வேம்பு . |
| இறைவனெண்குணம் | கடவுளுக்குரிய எட்டுத் தன்மைகள் ; பிறப்பின்மை , இறப்பின்மை , பற்றின்மை , பெயரின்மை , உவமையின்மை , வினையின்மை , குறைவில் அறிவுடைமை , குலமின்மை . |
| இறைவி | தலைவி ; உமை ; துர்க்கை . |
| இறைவை | இறைகூடை , நீர் இறைக்கும் மரப்பத்தல் ; ஏணி ; புட்டில் . |
| இறைவைமரம் | தண்ணீர் இறைக்கப் பயன்படும் மரத்தால் செய்த ஓடம் போன்ற கருவி . |
| இறுவாக | இறுதியாக . |
| இறுவாய் | முடிவு ; ஈறு ; இறப்பு . |