சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| இனமாற்றல் | ஓரினக் கணக்கை மற்றோரினக் கணக்காக மாற்றுகை . |
| இனமுறை | ஒத்த சாதி . |
| இனமொழி | எண்வகை விடைகளுள் ஒன்று . |
| இனமோனை | இனவெழுத்தால் வரும் மோனை . |
| இனவழி | மரபுவழி , வமிச பரம்பரை . |
| இனவழிக் கணக்கு | பேரேடு . |
| இனவாரி | இனம் இனமாய் . |
| இனவெதுகை | இனவெழுத்தால் வரும் எதுகை , |
| இனவெழுத்து | தானம் , முயற்சி , அளவு , பொருள் , வடிவு முதலிய ஏதுக்களினால் ஒரு வகைப்பட்டுவரும் எழுத்துகள் ; முயற்சிவகையால் ஒன்றற்கொன்று இனமான எழுத்துகள் . |
| இனன் | சூரியன் ; உறவினன் ; ஒத்தவன் ; ஆசிரியர் . |
| இனாப்பித்தல் | துன்பமுண்டாக்குதல் . |
| இனாம் | பயனோக்கா ஈகை ; நன்கொடை ; மானியம் . |
| இனாம்தார் | மானிய நிலத்துக்குரியவர் . |
| இனி | இப்பொழுது ; இனிமேல் ; பின்பு ; இப்பால் ; இதுமுதல் . |
| இனித்தல் | தித்தித்தல் ; இன்பமாதல் . |
| இனிது | இன்பந்தருவது ; நன்மையானது ; நன்றாக . |
| இனிப்பு | இனிமை ; தித்திப்பு ; மகிழ்ச்சி |
| இனிப்புக்காட்டுதல் | ஆசைகாட்டுதல் ; சுவையாதல் . |
| இனிமேல் | இதற்குப் பிற்பாடு ; இதுமுதல் ; வருங்காலத்து . |
| இனிமை | இனிப்பு , தித்திப்பு ; இன்பம் . |
| இனியர் | இன்பம் தருபவர் ; மகளிர் . |
| இனும் | இன்னும் . |
| இனை | இன்ன ; இத்தனை ; வருத்தம் . |
| இனைத்தல் | வருத்துதல் ; கெடுத்தல் . |
| இனைத்து | இத்தன்மைத்து ; இவ்வளவினது . |
| இனைதல் | வருந்துதல் ; இரங்குதல் ; அஞ்சுதல் . |
| இனைய | இத்தன்மைய ; இதுபோல்வன . |
| இனைவரல் | வருந்துதல் , இரங்குதல் . |
| இனைவு | வருத்தம் ; இரக்கம் . |
| இன்று | இலை ; இந்த நாள் ; ஓரசைச்சொல் . |
| இன்றைக்கு | இந்த நாளுக்கு . |
| இன்றையதினம் | இந்த நாள் . |
| இன்ன | இத்தன்மையான ; இப்படிப்பட்டவை ; ஓர் உவமவுருபு . |
| இன்னணம் | இன்ன வண்ணம் என்பதன் மரூஉ ; இவ்விதம் , இவ்வாறு . |
| இன்னது | இத்தன்மையது ; இது . |
| இன்னம் | இத்தன்மையுடையேம் ; காண்க : இன்னும் ; இனிமேலும் |
| இன்னமும் | காண்க : இன்னும் . |
| இன்னயம் | உபசார மொழி . |
| இன்னர் | இத்தன்மையர் ; உற்பாதம் . |
| இன்னல் | துன்பம் ; தீமை ; குற்றம் . |
| இன்னன் | இப்படிப்பட்டவன் ,இத்தன்மையன் . |
| இன்னா | துன்பம் ; தீங்கு தருபவை ; கீழ்மையான ; இகழ்ச்சி ; வெறுப்பு . |
| இன்னாங்கு | தீமை ; துன்பம் ; கடுஞ்சொல் . |
| இன்னாங்கோசை | கடுமையான ஓசை . |
| இன்னாது | தீது ; துன்பு . |
| இன்னாப்பு | துன்பம் . |
| இன்னாமை | இனியவாகாமை ; துன்பம் , துயரம் ; தீமை . |
| இன்னார் | பகைவர் . |
| இன்னாரினியார் | பகைவரும் நண்பரும் . |
| இன்னாரினையார் | இத்தன்மை உடையவர் . |
| இன்னாலை | இலைக் கள்ளிமரம் . |
| இன்னாவிசை | செய்யுட் குற்றம் இருபத்தேழனுள் ஒன்று . |
| இன்னான் | இத்தன்மையன் ; துன்பம் செய்பவன் . |
| இன்னிசை | இன்ப ஓசை ; பண் ; ஏழு நரம்புள்ள வீணை ; இனிய பாட்டு ; இன்னிசை வெண்பா . |
| இன்னிசைக்காரர் | இசைபாடுவார் , பாணர் . |
| இன்னிசை வெண்பா | நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா . |
| இன்னிசை வெள்ளை | நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா . |
| இன்னியம் | இசைக்கருவிகள் . |
| இன்னியர் | பாணர் . |
| இன்னிலை | இல்லற நிலை ; பதினெண் கீழ்க் கணக்கு நூலுள் ஒன்று என்ப . |
| இன்னினி | இப்பொழுதே . |
| இன்னும் | இவ்வளவு காலம் சென்றும் ; மறுபடியும் ; மேலும் ; அன்றியும் . |
| இன்னுமின்னும் | மேன்மேலும் . |
| இன்னுழி | இன்ன இடத்து . |
| இன்னே | இப்பொழுதே ; இவ்விடத்தே ; இவ்விதமாகவே . |
| இன்னோன் | இப்படிப்பட்டவன் |
| இனக்கட்டு | பந்துக்கட்டு ; உறவினர்களிடையே உள்ள நெருக்கம் , இனக் கூட்டம் ; முறைமை . |
| இனங்காப்பார் | கோவலர் , ஆயர் . |
| இனஞ்சனம் | உற்றார் உறவினர் . |
| இனத்தான் | உறவினன் . |
| இனம் | வகை ; குலம் ; சுற்றம் ; சாதி ; கூட்டம் ; திரள் ; அரசர்க்கு உறுதிச்சுற்றம் ; அமைச்சர் ; உவமானம் . |
வெள்ளி, 10 மே, 2013
அகராதி, இ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.