கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 19 ஜூன், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - அ

ஓரு சொல்லின் பொருளுக்கு ஒத்த
பொருளைத் தரும் சொல் அச்
சொல்லுக்கு ஒத்த கருத்து சொல்
ஆகும்.
(1)அகிலம் -பூமி
(2) அமர்தல் - இருத்தல்
(3) அடவி - காடு
(4) அரமியம் - நிலாமுற்றம்
(5) அரமியம் -   ,உட்பரிகை          
(6)  அனல் -நெருப்பு
(7) அப்பா-தந்தை
(8) அம்மா-தாய்
(9) அஃகம் - தானியம்
(10) அகங்காரம் - செருக்கு
(11)அகதி - கதியற்றவன்
(12)அகதி - கதியிலி
(13)அகம் - மனம்
(14)அகம் - மனை
(15)அகம்பாவம் - செருக்கு
(16)அகரமுதலி - அகராதி
(17)அகரு - அகில்
(18)அகலம் - விரிவு
(19)அகலல் - நீக்கல்
(20)அகல் - தகழி
(21)அகவை - வயது
(22)அகழ் - அகழி
(23) அகிலம் - உலகம்
(24)அக்கச்சி - அக்கா
(25)அக்கம் - துலாக்கோல்
(26)அக்கறை - சிரத்தை
(27) அக்கறை - கருத்து
(28)அக்கறை - விருப்பு
(29)அக்கறை - அவசியம்
(30)அக்கிரமம் -அநீதி
(31)அக்கினி - நெருப்பு
(32)அங்கதம் - மார்பு
(33)அங்கதம் - வசைப்பாட்டு
(34)அங்கத்துவம் - உறுப்புரிமை
(35)அங்கம் - கட்டில் ,
(36) அங்கம் - உடல்உறுப்பு
(37)அங்கலாய்ப்பு - கலக்கம்
(38)அங்காடி - சந்தை
(39)அங்கி -சட்டை
(40)அங்குரம் -முளை
(41)அசதி - சோர்வு
(42)அசடு - குற்றம்
(43)அசட்டை - பாராமுகம்
(44)அசரீரி - உருவிலிவாக்கு
(45)அசரீரி - வானொலி
(46)அசலம் - மலை
(47)அசுவமேதம் - குதிரை
(48)அசுவமேதம் - வேள்வி
(49)அசுவம் -குதிரை
(50)அசுழம் -நாய்
(50)அச்சம் -பயம்
(51)அடி - பாதம்
(52)அடிகோலுதல் - தொடங்குதல்
(53)அடிசில் - உணவு
(54)அடிச்சுவடு - காலடித்தடம்
(55)அடியிடல் - தொடங்குதல்
(56)அடியார் - தொண்டர்
(57)அடுக்களை - சமையலறை
(58)அடைக்கலம் - புகலிடம்,
(59) அடைக்கலம் - சரண்புகல்
(60)அணங்கு - தெய்வப்பெண்
(61)அடைக்கலம் - புகலிடம்
(62)அடைக்கலம் - சரண்புகல்
(63)அணங்கு - பெண்தெய்வம்
(64) அணி - ஆபரணம்
(65)அணை - அணைக்கட்டு
(66)அண்மை - சமீபம்
(67)அண்டம் - உலகம்
(68)அண்டர் - தேவர்
(69)அண்ணல் - சிறந்தோன்
(70)அதிதி - விருந்தினர்
(71)அதிபதி - தலைவன்
(72)அத்தம் - ஆண்டு
(73) அத்தம்  - காடு
(74)அத்திரம் -அம்பு
(75)அதரம் - உதடு
(76)அதர் - வழி
(77)அதிகாரி - தலைவன்
(78)அதிசயம் - புதுமை
(79)அத்தாட்சி - சான்று
(80)அநந்தம்- முடிவுற்றது
(81)அநாதி - தோற்றமின்மை
(82)அநாதை- திக்கற்றவன்
(83)அனுகூலம் - செயல் கைகூடல்
(84)அனுக்கிரகம் - அருள்
(85)அனுசரணை - இசைவு
(86)அனுதாபம் - இரக்கம்
(87)அந்தகன் - குருடன்
(88)அந்தகாரம் -இருள்
(89)அந்தகம் - முடிவு
(90)அந்தரங்கம் - இரகசியம்
(91)அந்தரங்கம் - மறைபொருள்
(92)அந்தி - மாலைபொழுது
(93)அபசாரம் - குற்றம்
(94)அபயம் - அடைக்கலம்
(95)அபரபக்கம் - தேய்பிறை
(96)அபராதம் - தண்டனை
(97)அபராதி - குற்றவாளி
(98)அபாண்டம்- பழி
(99)அபாயம் - ஆபத்து
(100)அபிராமி - பார்வதி
(101)அபிலாசை - விருப்பம்
(102)அபூர்வம் - அருமை
(103)அப்பு - நீர்
(104)அமரர் - தேவர்
(105)அமராவதி - இந்திரனுடைய நகரம்
(106)அமர் - போர்
(107)அமலன் - குற்றமற்றவன்
(108)அமுது - சோறு
(109)அமைதி - அடக்கம்
(110)அம்பலம் - வெளி
(111)அம்பலம் - மேடம்
(112)அம்பி - தோணி
(113)அம்பிகை - பார்வதி
(114)அம்புயம் - தாமரை
(115)அம்புலி - சந்திரன்
(116)அம்மணம் - நிர்வாணம்
(117)அம்மை - தாய்
(118)அயனம் - பிறப்பு
(119)அயில் - கூர்மை
(120)அயில் - வேல்
(121)அரங்கம் - சபை
(122)அரசன் - மன்னன்
(123)அரசிறை - கப்பம்
(124)அரசு - அரசன்
(125)அரசு - அரசியல்
(126)அரணியம் - காடு
(127)அரமியம் -நிலாமுற்றம்
(128)அரம்பை -தெய்வப்பெண்
(129)அரவிந்தம்-தாமரை
(130)அரவு-பாம்பு
(131)அரிச்சுவடி-அரிவரி
(132)அரிச்சுவடு - ஏடு
(133)அரி - வண்டு
(134)அரி - சிங்கம்
(135)அரினை - கள்
(136)அரியணை -சிங்காசனம்
(137)அருக்கன் -சூரியன்
(138)அருங்கலம் - ஆபரணம்
(139)அருணன் - கதிரோன்
(140)அருணோதயம் -வைகறை
(141)அருமை -ஆபூர்வம்
(142)அரும்பல் -முளைத்தல்
(143)அரும்பு - இளமீசை
(144) அரும்பு - மொட்டு
(145)அருவம் - உருவமற்றது
(146)அருவர் - தமிழர்
(147)அருவி - சிற்றாறு
(148)அருள் - திருவருள்
(149)அரை - பாதி
(150)அரைஞான் - இடுப்புக்கயிறு
(151)அர்ச்சித்தல் -வணங்குதல்
(152)அர்த்தமண்டபம் - கருவறை
(153)அர்ப்பணம் - ஒப்பிடுதல்
(154)அலகு - நெல்மணி
(155)அலகு - கூறு
(156)அலகு - சொண்டு
(157)அலகு - பிரிவு
(158)அலகை - பேய்
(159)அலக்கண் -துன்பம்
(160)அலங்கல் - மாலை
(161)அலங்கை - துளசி
(162)அலங்கோலம் - அவலட்சணம்
(163)அலமரல் -மனச்சுழற்சி
(164)அலவன் - ஆண் நண்டு
(165)அலவு - ஆண்பனை
(166)அலுங்கு - எறும்புதின்னி
(167)அல்குதல் -குறைதல்
(168)அல்லங்காடி -அந்திச்சந்தை
(169)அல்லல் - துன்பம்
(170)அவகாசம் - காலக்கெடு
(171)அவசம் - பரவசம்
(172)அவதாரம் - பிறப்பு
(173)அவதானம் -நிதானம்
(174)அவதூறு - பழிச்சொல்
(175)அவதூறு -நிந்தனை
(176)அவயம் - உறுப்பு
(177)அவயான் - பெருச்சாளி
(178)அவரோகணம் - இறங்குதல்
(179)அவலம் - துன்பம்
(180)அவலம் - அழுகை
(181)அவனி - உலகம்
(182)அவா - மிக்கஆசை
(183)அவா - பேராசை
(184)ஆவி - வேள்விப்பொருள்
(185)அவிச்சை - அஞ்ஞானம்
(186)அவை - சபை
(187)அவ்வை - தாய் ,தவப்பெண்
(188)அழும் - பிணம்
(189)அழுக்காறு - பொறாமை
(190)அழுங்கு - ஆமை
(191)அளகம் - கூந்தல்
(192)அளக்கர் - கடல்
(193)அளி - வண்டு
(194)அளை - வளை
(195)அளை - தயிர்
(196)அறங்கடை - பாவம்
(197)அறம் - தர்மம்
(198)அறிகுறி - அடையாளம் 
(199)அறிஞர் - அறிவாளி
(200)அறிவியல் - விஞ்ஞானம்
(201)அறிவுரை - புத்திமதி
(202)அறுதி - முடிவு
(203)அறுதி -வரையறை
(204)அறுதியிடல் - நிச்சயித்தல்
(205)அறுபதம் -வண்டு
(206)அறுமை - ஆறு
(207)அறைகூவல் - போருக்கழைத்தல்
(208)அறைபோதல்- வஞ்சனை செய்தல்
(209)அற்கன் - சூரியன் ,கதிரவன்
(210)அற்றம் -அச்சம் ,சோர்வு
(211)அனந்தம் -அளவின்மை
(212)அனவரதம் -எப்பொழுதும்
(213)அனல் - தீ
(214)அனுசாரம் - ஒழுக்கமின்மை
(215)அனுகூலம் - காரியசித்தி
(216)அனுக்கிரகம் - அருள்
(217)அனுச்சை - விடை
(218)அனுட்டானம் -நிலைநிறுத்தல்
(219)அனுமதி - சம்மதம்
(220)அன்பு - காதல்
(221)அன்னதாழை - அன்னாசி
(222)அன்னப்பால் - கஞ்சி
(223)அன்னம் - சோறு
(224)அன்னை - தாய்
(225)அருக்கன்- பூமி
(226) அம்புலி - சந்திரன் 
(227)அகலம் - மலை
(228) அல்லல் - துன்பம் 
(229)அரவிந்தம் - தாமரை
(230) அம்புயம் - தாமரை
(231) அகங்காரம் - ஆணவம்
(232) அநாதி - பழைமை
(233) அநாதி - புராதானம்
(234) அடவி - காடு 
(235)அழகு - எழில் 
(236)அழகு - மாட்சி 
(237)அழகு - வனப்பு  
(238) அரசன் - வேந்தன்
(239)அடிசில் - ஆகாரம் 
(240) அக்கினி - தீ
(241)அரவம் - பாம்பு
(242)அகதி - ஏதிலி
(243)அக்கினி நட்சத்திரம் - எரிநாள்
(244)அங்கவஸ்திரம் - மேலாடை
(245)அங்குலம் - விரலம்
(246)அசரீரி - உருவிலி
(247)அஞ்சலி - கும்பீடு, 

(248)அஞ்சலி - இறுதி வணக்கம் 
(249)அஞ்சலி - வணக்கம்
(250)அத்தியாவசியம் - இன்றியமையாமை
(251)அதிகாரபூர்வம் - அதிகாரச் சான்று
(252)அதிசய மனிதர் - இறும்பூதாளர்
(253)அதிர்ஷ்டம் - ஆகூழ்
(254)அத்வைதம் – இரண்டன்மை
(255)அநேக – பல
(256)அநேகமாக - பெரும்பாலும்
(257)அந்தரங்கம் - மர்மம் 

(258)அந்தரங்கம் -கமுக்கம்
(259)அந்தரங்கம் -மறைமுகம் 
(260)அந்தஸ்து - தகுதி
(261)அபயம் - அடைக்கலம் 

(262)அபாயம் - ஏதம், 
(263)அபாயம் - கேடு
(264)அபராதம் - தண்டம்
(265)அபாயம் - இடர்
(266)அபிப்ராயம் - கருத்து, 

(267) அபிப்ராயம் - ஏடல் 
(268)அபிமானம் – நல்லெண்ணம்
(269)அபிவிருத்தி – மிகுவளர்ச்சி
(270)அபிஷேகம் – திருமுழுக்கு
(271)அபூர்வம் – அருமை
(272)அப்பியாசம் - பயிற்சி
(273)அமரர் - நினைவில் உரை

(274)அமரர் - காலஞ் சென்ற 
(275)அமாவாசை - காருவா
(276)அமோகம் - மிகுதி
(277)அரபிக்கடல் - குட கடல்
(278)அராஜகம் - அரசின்மை
(279)அர்ச்சகர் - வழிபாட்டாசான் 

(280)அர்ச்சகர் - பூசாரி
(281)அர்த்தம் - பொருள்
(282)அலட்சியம் - புறக்கணிப்பு
(283)அவசகுனம் - தீக்குறி
(284)அவசியம் – வேண்டியது, 

(285)அவசியம்  - தேவை 
(286)அவதாரம் – தோற்றரவு
(287)அவயவம் - உடலுறுப்பு
(288)அற்புதம் - இறும்பூது, 

(289)அற்புதம் - நேர்த்தியான 
(290)அனுபல்லவி  - துணைப் பல்லவி
(291)அனுபவம் - பட்டறிவு
(292)அனுபவித்தல் - நுகர்தல்
(293)அனுமானம் – உய்த்துணர்வு
(294)அனுஷ்டி – கடைபிடி, 

(295)அனுஷ்டி – கைக்கொள் 
(296)அன்னாசி – செந்தாழை
(297)அன்னியம் – அயல்
(298)அஸ்திவாரம் - அடிப்படை 

(299)அணல் - தாடி, கழுத்து
(300)அனல் - நெருப்பு 
(301)அணி - அழகு
(302)அனி - நெற்பொறி
(303)அணு - நுண்மை
(304)அனு - தாடை, அற்பம்
(305)அணுக்கம் - அண்டை, 
(306)அணுக்கம் - அண்மை.
(307)அனுக்கம் - வருத்தம், 
(308)அனுக்கம் - அச்சம்
(309)அணை - படுக்கை, 
(310)அணை - அணைத்துக் கொள்ளுதல்
(311)அனை - அன்னை, 
(312)அனை -மீன்
(313)அணைய - சேர, 
(314)அணைய - அடைய
(315)அனைய - அத்தகைய
(316)அண்மை - அருகில்
(317)அன்மை - தீமை, 
(318)அன்மை - அல்ல
(319)அங்கண் - அவ்விடம்
(320)அங்கன் - மகன்
(321)அண்ணம் - மேல்வாய்
(322)அன்னம் - சோறு, 
(323)அன்னம் -அன்னப்பறவை
(324)அண்ணன் - தமையன்
(325)அன்னன் - அத்தகையவன்
(326)அவண் - அவ்வாறு'
(327)அவன் - சேய்மைச் சுட்டு, 
(328)அவன் - ஆண்மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;