கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

சங்ககாலம்

நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"
என்ற நூலில் மூன்று தமிழ்ச் 
சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து 
நடைபெற்றதாக கூறியுள்ளார். 

 தமிழின் முதல் சங்கம் இந்த 
கடலடியில் உள்ள"தென் மதுரையில்
"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் 
சிவன், முருகர், அகஸ்தியருடன் 39
மன்னர்களும் இணைந்து, "பரிபாடல் 
முதுநாரை முடுகுருக்கு,கலரியவிரை,
 பேரதிகாரம்"ஆகிய நூல்களை 
இயற்றப்பட்டது . 

இதில் அனைத்துமே அழிந்து விட்டது . 
 இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்" 
நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்
களுடன் "அகத்தியம்,தொல்காப்பியம்,
பூதபுராணம், மாபுராணம் "ஆகிய 
நூல்களை இயற்றப்பட்டது . 

இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு
 கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் 
 இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு, 
நாலடியார், திருக்குறள் "ஆகிய நூல்கள் 
 இயற்றப்பட்டது.

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பாயசம் வைக்கவேணும்

பாயசம் வைக்கவேணும்
 பானையிலோ அரிசி இல்லை. 
முற்றிய நெற்கதிரே அரிசி 

கொஞ்சம் தருவாயோ?

இதற்கு

 நெற்கதிர் நானெப்படித்தர 
முடியும்? என்னை வளா்க்கும் 
வயலிடம் போய்க் கேள் என்றது 

வயலிடம் போன கொசு மாமி 
பாயசம் வைக்கவேணும் 

பானையிலோ அரிசியில்லை 
முற்றிய நெற்கதிரே    
கதிரை வளர்த்த வயலே 
கொஞசம் அரிசி தருவாயா? 
என்று கேட்டது

அதற்கு
 வயல் “நானெப்படி தர முடியும் 
ன்னை ஈரமாக்கி உதவும் 
நீரைப் போய்க் கேள்.. என்றது 

நீரிடம் போன கொசு மாமி 
பாயசம் வைக்க வேணும் 

பானையிலோ அரிசியில்லை
முற்றிய நெற்கதிரே 

கதிரைவளர்த்த வயலே 
வயலில் பாய்ந்த நீரே 
கொஞ்சம் அரிசி தருவாயோ என்றது. 

அதற்கு 
வயல் நானெப்படித் தரமுடியும் 
என்னை வரம்பு கட்டி இங்கே பாய விட்ட 
உழவனைப் போய்க் கேள் என்றது. 

உழவனிடம் போன கொசு மாமி 
பாயசம் வைக்க வேணும் 
பானையிலோ அரிசியில்லை 
முற்றிய நெற்கதிரே 
கதிரைவளா்த்த வயலே 
வயலை நனைத்த நீரே 
நீரைப்பாய்ச்சிய உழவா 
கொஞ்சம் அரிசி தருவாயோ?
என்று கேட்டது 

அதற்கு  உழவனும்
சரி தருகிறேன் என்றான் 

உழவன் நீரிடம்கொசுமாமிக்கு 
அரிசி கொடுக்கும்படி கூறினான் 
நீர் வயலிடம் கூறியது 
வயல் கதிரிடம் கூறியது 
கதிர் கொசு மாமிக்கு நெல்லை கொடுத்தது.
 கொசுமாமி நெல்லை குற்றியெடுத்து 
பாயாசம் வைத்து குடித்தாள்

செவ்வாய், 2 டிசம்பர், 2014

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


– பாரதிதாசன்
#160;