கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 29 பிப்ரவரி, 2012

விடுகதைகள்-9

(9)வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ
    அது என்ன?



விடை-சிரிப்பு

புதன்கிழமை வாழ்த்துக்கள்


யசோதர காவியம்-11


கொலை, பொய், களவு, பிறன்மனை நயத்தல், புலால் உண்ணல், கள் உண்ணல், தேன் உண்ணல் முதலான பாவச் செயல்களைச் செய்யாமையே அறம் ஆகும். அந்த அறங்களை இந்நூல் சொல்கிறது. சொல்லும் முறையில் உள்ள எளிமை, இனிமை நம்மைக் கவர்கிறது.

ஆக்குவது ஏதுஎனில் வெகுளி ஆக்குக 
போக்குவது ஏதுஎனில் வெகுளி போக்குக 
நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக 
காக்குவது ஏது எனில் விரதம் காக்கவே

இந்தப் பாடல் உணர்த்தும் பொருள் அனைவரும் புரிந்து கொள்ளுகிற முறையில் எளிமையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கொலையினது இன்மை (கொல்லாமை) கூறில் குவலயத்து இறைமை செய்யும்; மலைதல் இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும்’ (237: 1-2) என்று அறக் கருத்துகளை மிக எளிமையாக எடுத்து மொழிகிறது இந்த நூல்.

மலைபடுகடாம்-10


அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்

உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்,
அரசு நிலை தளர்க்கும், அருப்பமும் உடைய;
பின்னியன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,
முன்னோன் வாங்கிய கடு விசைக் கணைக் கோல் 380

இன் இசை நல் யாழ்ப் பத்தரும், விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும், ஓம்பி,
கை பிணி விடாஅது பைபயக் கழிமின்,
களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவப் பலவே; 385

ஒன்னாத் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென,
நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக, 390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்

புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்

பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்


நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்

செல்லும் தேஎத்து, பெயர் மருங்கு அறிமார்,
கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த 395

கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை,
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே:
தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவிகை
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே, 400

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்
ஆங்கனம் அற்றே, நம்மனோர்க்கே;
அசைவுழி அசைஇ, அஞ்சாது கழிமின்

கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்

புலி உற, வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி,
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து, 405

சிலை ஒலி வெரீஇய செங் கண் மரை விடை
தலை இறும்பு கதழும் நாறு கொடிப் புறவின்,
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளை ஆன் தீம் பால், மிளை சூழ் கோவலர்,
வளையோர் உவப்ப, தருவனர் சொரிதலின், 410

பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல, புதுவிர் ஆகுவிர்;
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன,
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ,
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் 415

பல் யாட்டு இனம் நிரை எல்லினிர் புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்;
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி,
தீத் துணை ஆகச் சேந்தனிர் கழிமின் 420

திருக்குறள் அதிகாரம் - 7 -6

மக்கட் பேறு 
(6) 
குழல்இனிது யாழ்இனிது என்பதம்
 மக்கள் மழலைச்சொல் கேளா தவர் 

கருத்து 
தம் பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் 
கேட்டு மகிழாதவர்கள் குழல் இசைஇனியது , யாழ் இசை 

விடுகதைகள்-8

(8 )வீடு வாசல் காப்பவன்;விசுவாசமாய்
     இருப்பவன்:கடிக்கவும்  மாட்டான்:
     குரைக்கவும் மாட்டான்: கதவை ஒட்டி
     கிடப்பான்:
     அவன் யார் ?



விடை - பூட்டு (தாழ்பாள்)

ஒத்தகருத்துச் சொற்கள் - யு

    (1)யுகம் – ஊழி
    (2)யுத்தம் – போர்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


யசோதர காவியம்-10


மக்களுக்குத் தீவினை தொடரும் வழி இன்னதென உணர்த்தி, அவ்வழியில் செல்லாது தடுத்து, நல்வினை செய்யச் செய்து, அதனால் வரும் புண்ணியத்தையும் போகத்தையும் அடையச் செய்வதே சமணக் காப்பியங்களின் அடிப்படை நோக்கமாகும். வினைப்பயன் தொடரும் என்பதே இக்காப்பியம் நமக்குத் தரும் செய்தி. உயிர்க்கொலை பெரும்பாவம்; அது கீழான விலங்குப் பிறவிக்கு இட்டுச் செல்லும். மீளாத நரகத்தில் புகச் செய்யும். பலியிடுதலும், பாவனையால் பலியிடுதலும் கொலையே. அறியாமல் செய்தாலும் கொலை கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். இசை உலக இன்பத்தை மிகுவிக்கும். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். பாவங்களைப் போக்கும் வழி அறவோர் அறவுரை கேட்டலே. இதுவே இக்காப்பியத் தத்துவம், சிந்தனை, நோக்கம்.

மலைபடுகடாம்-9

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; 335

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை;
மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக் 340

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்;
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;
என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி, 345

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்,
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலை படு கடாம் மாதிரத்து இயம்ப


நன்னனது மலை வழியில் செல்லும் வகை

குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர்
முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண் 350

விழவின் அற்று, அவன் வியன் கண் வெற்பே
கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்,
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,
இன்னும் வருவதாக, நமக்கு எனத்
தொல் முறை மரபினிர் ஆகி, பல் மாண் 355

செரு மிக்குப் புகழும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட,
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்து, குறிஞ்சி பாடி,
கைதொழூஉப் பரவி, பழிச்சினிர் கழிமின் 360

குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி

மை படு மா மலை, பனுவலின் பொங்கி,
கை தோய்வு அன்ன கார் மழை, தொழுதி,
தூஉய் அன்ன துவலை துவற்றலின்,
தேஎம் தேறாக் கடும் பரிக் கடும்பொடு,
காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல், 365

கூவல் அன்ன விடரகம் புகுமின்,
இருங் கல் இகுப்பத்து இறு வரை சேராது,
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து,
நின்று நோக்கினும் கண் வாள் வெளவும்,
மண் கனை முழவின்தலை, கோல், கொண்டு 370

தண்டு கால் ஆக, தளர்தல் ஓம்பி,
ஊன்றினிர் கழிமின்; ஊறு தவப் பலவே:
அயில் காய்ந்தன்ன கூர்ங் கல் பாறை,
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து,
கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் 375


திருக்குறள் அதிகாரம் - 7 -5

மக்கட்பேறு
(5)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


கருத்து 
பிள்ளைகளின் உடம்பைத்  தொடுதல் 
உடலுக்கு இன்பம் கொடுப்பதாகும்.
அப் பிள்ளைகளின்  மழலைச்
சொற்களைக் கேட்டல் செவிக்கு
இன்பம் கொடுப்பதாகும்.   

விடுகதைகள்-7

(7 )ஆட்டுவித்தால் ஆடாமல் இருக்காது
      அது என்ன?

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 27 பிப்ரவரி, 2012

திருக்குறள் அதிகாரம் - 7 -4


மக்கட்பேறு (4) 


(4)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் 
மக்கள் சிறுகை அளாவிய கூழ் .


 கருத்து 

தங்களுடைய பிள்ளைகளின் சிறு கைகளால் 
அளையப்பட்ட உணவு , பெற்றோருக்கு 
அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும் . 

விடுகதைகள்-6

(6)  அடங்கிக் கிடப்பான்.எடுத்துக் காதில் 
வைத்தால் கதை ஆயிரம் அளப்பான் 
அவன் யார் ?
 

விடை-சங்கு

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் – யா

(1)யாகம் – வேள்வி
(2)யாப்பு -செய்யுள் 

சனி, 25 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் – ய


    (1)யதார்த்தம் – உண்மை

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - மௌ


(1)மௌனம் -அமைதி 

வியாழன், 23 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் –மோ

(1)மோசம் – கேடு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் – மை

(1)மைத்துனர் – கொழுந்தன் 
(2)மைத்துனர் – அளியர் 
(3)மையம் - நடுவம்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - மே

    (1)மேகம் - முகில்
    (2)மேஷம் - மேழம்
    (3)மேஜை - நிலை மேடை

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -மெ

(1) மெய் -உண்மை 

சனி, 18 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -மூ

(1)மூர்க்கன் - முரடன்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -மு

(1)முகஸ்துதி - முகமன்
(2)முகூர்த்தம் - முழுத்தம்
(3)முக்கியமான – இன்றியமையாத
(4)முந்நீர்  -கடல்  

வியாழன், 16 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - மீ

1)மீகான் - மாலுமி  
2)மீதி-மிச்சம் 
3)மீலம்-வானம் 
4)மீளிமை - வீரம்

புதன், 15 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - மி


(1)மிதுனம் - ஆடவை
(2)மிராசுதார் - பண்ணையார்
(3)மிருதங்கம் - மதங்கம்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -மா


(1)மாசி (மாதம்) - கும்பம்
(2)மாத்திரை (மருந்து) - முகிழம்
(3)மார்கழி (மாதம்) - சிலை
(4)மாலுமி - வலவன்
(5)மாஜி - மேனாள்



திங்கள், 13 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -ம


(1)மகத்துவம் - பெருமை
(2)மகாசமுத்திரம் - மாவாரி
(3)மகாத்மா - பேராதன்
(4)மகாமகோபாத்தியாயர்- பெரும் பேராசிரியர்
(5)மகாவித்துவான் - பெரும் புலவர்
(6)மகிமை - மாண்பு, 
(7)மகிமை - மாட்சிமை
(8)மத்திய அரசு - நடுவணரசு
(9)மத்திய தரைக்கடல் - நண்ணிலக்கடல்
(10)மரியாதை - மதிப்புரவு
(11)மனிதன் - மாந்தன்
(12)மனம் -நெஞ்சம்,உள்ளம் 
(13)மகவு -குழந்தை 


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -பௌ

(1)பௌதீகம் - உலகம் 
(2)பௌவம் - கடல்

சனி, 11 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - போ

(1)போதி மரம் - அரச மரம்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள்- பொ

(01) பொடி - தூள்
(02) பொடி - சூரணம்
(03) பொத்தகம் - புத்தகம்
(04) பொய் - வேடம்
(05) பொய்கை - குளம்
(06) பொய்கை - வாவி
(07) பொய்யாமை - தவறாமை
(08) பொருதல் - போர் செய்தல்
(09) பொருநன் - போர் வீரன்
(10) பொல்லாங்கு - தீங்கு
(11) பொழில் - சோலை
(12) பொறி - இயந்திரம்
(13) பொற்பு - அழகு
(14) பொற்பு - பொலிவு

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -பை

(1) பையன் - சிறுவன்

புதன், 8 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் -பே

(1)பேட்டி - நேர்வுரை

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - பெ

(1)பெங்களூர் - வெங்காலூர்

திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள்- பூ

(1)பூசுரர் - நிலத்தேவர்
(2)பூமத்திய ரேகை - நண்ணிலக்கோடு
(3)பூமி - வையகம்
(4)பூரணம் – முழுமை, நிறைவு

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள்- பு

(1)புதன் – அறிவன் (கிழமை)
(2)புரட்டாசி (மாதம்) - கன்னி
(3)புராணம் - பழங்கதை
(4)புராதனம் - பழமை
(5)புரோகிதர் - சடங்காசிரியர்

சனி, 4 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள்-பீ

  (1) பீடம்-அரியணை  
  (2) பீடம்-மேடை 
  (3) பீடிகை - தேர்த்தட்டு 
  (4) பீடிகை - பீடம் 
  (5) பீடு- பெருமை
  (6) பீடு- வலிமை 
  (7) பீடை-துன்பம் 
  (8) பீதி-அச்சம் 
  (9) பீலி-மயிற்தோகை 
(10) பீழை-துன்பம் 
(11) பீளை-கண்ணழுக்கு

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள்-பி


(1)பிடிவாதம் - ஒட்டாரம்
(2)பிரக்ஞை - உணர்ச்சி
(3)பிரசங்கம் - சொற்பொழிவு
(4)பிரசன்னம் - திருமுன்னிலை
(5)பிரசாதம் - அருட்சோறு, 

(6)பிரசாதம் - திருச்சோறு
(7)பிரச்சாரம் - பரப்புரை
(8)பிரச்சினை – சிக்கல், 

(9)பிரச்சினை – தொல்லை
(10)பிரபந்தம் – பனுவல் (கலை நூல்)
(11)பிரபு - பெருமகன்
(12)பிரதிபலன் - கைமாறு
(13)பிரத்தியோகம் - தனிச்சிறப்பு
(14)பிரமாணம் – அளவு, 

(15)பிரமாணம் – ஆணை
(16)பிரயோகம் – ஆட்சி, 
(17)பிரயோகம் – வழங்கல்
(18)பிராண வாயு - உயிர்வளி
(19)பிராது - முறையீடு, 

(20)பிராது - வழக்கு
(21)பிரியாணி - புலவு


வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள்-பா

(1)பாதி - இடை
(2)பாகவதர் – பாடகர்
(3)பாத்திரம் - கலம்
(4)பாயாசம் - கன்னல்
(5)பாரத ரத்னா - நாவன்மணி
(6)சுமை, பொறை
(7)பாவம் - கரிசு, 

(8)பாவம் - அறங்கடை
(9)பாவனை - உன்னம்

(10)பார் - பூமி 

புதன், 1 பிப்ரவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள்-ப

(1)பகதூர் - ஆண்டகை
(2)பகிரங்கம் – வெளிப்படை
(3)பக்குவம் - பருவம், 

(4)பக்குவம் - தெவ்வி
(5)பக்தன் - அடியான்
(6)பக்தி - இறை நம்பிக்கை
(7)பகிஷ்காரம் - புறக்கணிப்பு
(8)பங்குனி (மாதம்) - மீனம்
(9)பசலி - பயிராண்டு
(10)பசு - ஆவு
(11)பசுப்பால் - ஆவின் பால்
(12)பஞ்சாங்கம் - ஐந்திரம்
(13)பஞ்சாமிர்தம் – ஐயமது
(14)பஞ்சேந்திரியம் – ஐம்புலன்
(15)பதார்த்தம் – பண்டம், கறி
(16)பதிலாக - பகரமாக
(17)பத்திரிகை - இதழ், இதழிகை
(18)பத்திரம் – ஆவணம்
(19)பத்தினி - கற்புடையாள்
(20)பத்மபூஷன் - தாமரைச் செல்வர்
(21)பத்மவிபூஷன் - தாமரைப் பெருஞ்செல்வர்
(22)பத்மஸ்ரீ – தாமரைத்திரு
(23)பந்து - இனம்
(24)பரதநாட்டியம் - தமிழ் நடனம்
(25)பரமாத்மா - பரவாதன்
(26)பரம்பரை - தலைமுறை
(27)பரவாயில்லை - தாழ்வில்லை
(28)பரஸ்பரம் – தலைமாறு, 

(29)பரஸ்பரம் – இருதலை
(30)பரிகாசம் - நகையாடல்
(31)பரிகாரம் – கழுவாய்
(32)பரியந்தம் - வரையில்

(33)பக்ஷி - பறவை
(34)பஜனை - தொழுகைப் பாடல்

(35)பணிவு - கீழ்ப்படி
(36)பரவை -கடல் 
(37)பகலோன் -சூரியன் 
#160;