கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

திருக்குறள் அதிகாரம் - 1 -5

(5 )
இருள் சேர் இருவினையும் சேர இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு

கருத்து
இறைவனின் மெய்யான புகழை விருப்பத்தோடு
சொல்லிப் போற்றுபவர்களிடம் அறியாமையால்
விளையும் பெருந்துன்பங்களும் சேர்வதில்லை

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 30 ஜூலை, 2011

திருக்குறள் அதிகாரம் - 1 -4


திருக்குறள் அதிகாரம் -1
கடவுள் வாழ்த்து - 4

(4) வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல


கருத்து
விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின் 
அடிகளைஇடைவிடாமல் நினைப்பவருக்கு 
எவ்விடத்திலும் ,எக்காலத்திலும் துன்பம் 
இல்லை.  

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 29 ஜூலை, 2011

திருக்குறள் அதிகாரம் - 1 -3




திருக்குறள் அதிகாரம் - 1


கடவுள் வாழ்த்து - 3


(3 )
மலர்மிசை ஏகினான் மாண் அடி   சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்


கருத்து
நினைப்பவர் மனமாகிய மலரில் அமரும் இறைவனின்
சிறந்த அடிகளை இடைவிடாமல் நினைப்பவர். இந்
நிலவுலகில் நெடுநாள் நிலைபெற்று  வாழ்வார்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 28 ஜூலை, 2011

திருமுருகாற்றுப்படை -2

(குமரவேளை மதுரைக் கணக்காயனார்
மகனார் நக்கீரனார் பாடியது)


1.திருப்பரங்குன்றம்

குமரவேளின் பெருமை
தெய்வயானையின் கணவன்

பொருள்
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை,
 மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
கடப்பமாலை புரளும் மார்பினன்
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,
தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து,
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து 10
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்


சூரமகளிரின் இயல்பு
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி,
கணைக் கால், வாங்கிய நுசுப்பின், பணைத் தோள்,
கோபத்து அன்ன தோயாப் பூந் துகில், 15
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்,
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்,
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை,
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20
செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு,
பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி,
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து, 25
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி,
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக 30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ்
நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை,
தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின்
குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர் 35
வேங்கை நுண் தாது அப்பி, காண்வர,
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா,
'கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி 40

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 27 ஜூலை, 2011

தமிழ் எழுத்துக்கள்-5


1 -சுட்டு எழுத்துக்கள்
ஓரு பொருளை சுட்டிக்காட்ட உதவும் 
எழுத்துக்கள் சுட்டு எழுத்துக்களாகும்


உதாரணம் 
(1)வன் 
(2)வன் 
(3)வன்
மேலே உள்ளவற்றில் அ இ உ 
ஆகிய எழுத்துக்கள் சுட்டு எழுத்துக்
ளாகும்இக்காலத்தில் இலங்கை 
மக்களால் பயன்படுத்தப்படும் என்ற
 சுட்டு எழுத்தை இந்தியாவிலுள்ள 
தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தப்
படுவதில்லைஅத்துடன் இச்சுட்டு 
எழுத்து இரண்டு வகைப்படும் 
அவையாவன-
(1)அண்மைச்சுட்டு 
(2)சேய்மைச்சுட்டு ஆகும் 


1)
அண்மைச்சுட்டு 
அருகிலிருக்கும் பொருளைச் சுட்டிக்காட்டிவது 
அண்மைச்சுட்டு  ஆகும் 


உதாரணம் 
(1)இவன் 
(2)இந்த வீடு 
(3)இப்பையன்  


2 )
சேய்மை சுட்டு 
தொலைவிலிருக்கும் பொருளை 
சுட்டிக்காடுவது சேய்மை சுட்டு 
ஆகும் 

உதாரணம் 
(1)அவன் 
(2)அந்தவீடு 
(3)அப்பையன் 


2 -வினா எழுத்துக்கள் 
வினாப்பொருளை தரும் ழுத்துக்கள் 
வினா எழுத்துக்கள் ஆகும் அத்துடன் 
வினா எழுத்துக்கள் ஜந்து ஆகும் 
அவையாவன - 
எ யா ஆ ஓ ஏ ஆகும் 


உதாரணம் 
(1)து உன் வீடு? எ 
(2)யார் உன் தந்தையார்? யா 
(3)அறிஞனா நீ? ஆ 
(4)யானோ அரசன்? ஓ 
(5)ன் இங்கு வந்தாய் ? ஏ 
(6)இவன்தானே செய்தான் ? ஏ 
இந்த வசனங்களில் எ யா என்னும் இரு 
வினா எழுத்துக்களும் சொல்லின் முதலில் 
மட்டும் வரும் ஆனால் ஆ ஓ ஆகிய 
இரு எழுத்துக்களும் சொல்லின் இறுதியில் 
மட்டும் வரும் .ஏ என்ற வினா எழுத்து 
சொல்லின் முதலிலும் இறுதியிலும் 
வரும் 

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 26 ஜூலை, 2011

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

1.திருக்குறள் -  திருவள்ளுவர்
2.நான்மணிக்கடிகை - 6ஆம் நூ.ஆ.-விளம்பி நாகனார்
3.இன்னா நாற்பது - 5ஆம் நூ.ஆ.-கபிலதேவர்
4.இனியவை நாற்பது -5ஆம் நூ.ஆ.-பூதஞ்சேந்தனார்
5.களவழி நாற்பது -5ஆம் நூ.ஆ. பொய்கையார்
6.திரிகடுகம் -  4ஆம் நூ.ஆ.-நல்லாதனார்
7.ஆசாரக்கோவை-7ஆம் நூ.ஆ.-பெருவாயின் முள்ளியார்
8.பழமொழி நானூறு-6ஆம் நூ.ஆ.மூன்றுரை அரையனார்
9.சிறுபஞ்சமூலம்-6ஆம் நூ.ஆ.-காரியாசான்
10.முதுமொழிக்காஞ்சி-4ஆம் நூ.ஆ.-கூடலூர் கிழார்
11.ஏலாதி-6ஆம் நூ.ஆ.-கணிமேதாவியார்
12.கார் நாற்பது-6ஆம் நூ.ஆ.-கண்ணன் கூத்தனார்
13.ஐந்திணை ஐம்பது-6ஆம் நூ.ஆ.-மாறன் பொறையனார்
14.திணைமொழி ஐம்பது-6ஆம் நூ.ஆ.-கண்ணன் பூதனார்
15.ஐந்திணை எழுபது-6ஆம் நூ.ஆ.-மூவாதியார்
16.திணைமாலை நூற்றைம்பது-6ஆம் நூ.ஆ.-கணிமேதாவியார்
17.கைந்நிலை-6ஆம் நூ.ஆ.-புல்லங்காடனார்
18.நாலடியார்-7ஆம் நூ.ஆ.-சமணமுனிவர்கள் பலர்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 25 ஜூலை, 2011

சங்கமருவியகாலம்


கி்.பி. 100 - 600 ம் ஆண்டு காலப்பகுதியே சங்கம்
மருவியகாலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம்
நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்கு
உட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டயநாட்டை
யும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.நடு
நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்கு
ட்பட்டன.களப்பிரர் பாளிமொழியையும்,பல்லவர்
பிராகிருதமொழியையும் ஆதரித்தனர்.இவர்களின்
ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழி, தமிழ்க்கலைகள்,
தமிழ்ப்பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ்
மொழியில் பெரியளவிலும் சிறப்பானமுறையிலும்
நூல்கள் தோன்றவில்லை. எனவே,தமிழ்இலக்கிய
வரலாற்றிலே இக்காலப்பகுதியினை சங்கம்மருவிய
காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர்.
இருண்டஇக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள்
தோன்றின.பதினெண்கீழக்கணக்கு நூல்கள் சிலப்பதி
காரம் மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில்
எழுந்தனவெனக் கூறுவர் இவற்றுள் பதினெண்கீழ்க்
கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர்
குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும்
சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்
நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்ப
தை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை"
என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுவர் இந்த இருண்ட
காலப் பகுதியிலேயே காரைக்காலம்மையாரும்
திருமூலரும் வாழ்ந்தனர் காரைகாலம்மையார் அற்புதத்
திருவந்தாதி திருவிரட்டை மணிமாலை திருவாலங்
காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை
இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில்
சேர்க்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 24 ஜூலை, 2011

இக்காலம்


1.
பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்துக்
குறிய  இலக்கியம்இரண்டு வகைப்படும்.
அவையாவன 
அ.கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
ஆ.புதினம் ஆகும்

    2,
    இருபதாம் நூற்றாண்டுகாலத்துக்குறிய
    இலக்கியம் நான்கு வகைப்படும்
    அவையாவன 
    அ.கட்டுரை
    ஆ.சிறுகதை
    இ.புதுக்கவிதை
    ஈ.ஆராய்ச்சிக் கட்டுரைஆகும்
      3.
      இருபத்தோராம் நூற்றாண்டுகாலத்துக்
      குறிய இலக்கியம்இரண்டு வகைப்படும்
      அவையாவன 
      அ.அறிவியல் தமிழ்
      ஆ.கணினித் தமிழ் ஆகும்

      ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


      சனி, 23 ஜூலை, 2011

      நெடுநல்வாடை-1

      பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

      சனிக்கிழமை வாழ்த்துக்கள்


      வெள்ளி, 22 ஜூலை, 2011

      மதுரைக்காஞ்சி-1

      சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு
      என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக்
      காஞ்சி.இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும்
      நீளமானது இதுவே. மங்குடி மருதனார் என்னும்
      புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில்
      782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்
      செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்
      பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டிநாட்டின் தலை
      நகரமான மதுரையின் அழகையும், வளத்தையும்
      கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்
      களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின்
      தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப்
      பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கு
      ம் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த
      உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும்
      பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை
       போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள்
      செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌
      தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க்
       கூறுகிறார்.

      வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


      வியாழன், 21 ஜூலை, 2011

      நற்றிணை-1

      இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.  இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒருபகுதியும் கிடைக்க வில்லை.நற்றிணைப் பாடல்கள் யாவும்  அகப்பொருள் பாடல்கள் ஆகும்

      வியாழக்கிழமை


      புதன், 20 ஜூலை, 2011

      கலித்தொகை -1

      இது சங்ககாலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத் தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். அத்துடன் இதில் பல புலவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான இக் கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.

      புதன்கிழமை வாழ்த்துக்கள்


      செவ்வாய், 19 ஜூலை, 2011

      இடைக்காலம்-1

      இக்காலத்தில் அடங்கியஇலக்கியத்தை
      ஜந்து வகையாக பிரிக்கலாம் 
       அவையாவன
      1.பக்தி இலக்கியம் 
      2.காப்பிய இலக்கியம் 
      3.உரைநூல்கள்
      4.புராண இலக்கியம் 
      5.இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
      ஆகும்.

      1.பக்தி இலக்கியம் 

      இந்த இலக்கியமானது கிபி 700 ம்
      ஆண்டில் இருந்து கிபி 900ம்
      ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
      இலக்கியமாகும்.

      2.காப்பிய இலக்கியம் 
      இந்த இலக்கியமானது கிபி 900 ம் 
      ஆண்டில் இருந்து கிபி 1200ம் 
      ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 
      இலக்கியமாகும்.

      3.உரைநூல்கள் 
      இந்த உரைநூல்களானது 
      கிபி 1200 ம் ஆண்டில் இருந்து 
      கிபி 1500ம் ஆண்டுகளுக்கு 
      இடைப்பட்ட இலக்கியமாகும்

      4.புராண இலக்கியம் 
      இந்த இலக்கியமானது கிபி1500ம் 
      ஆண்டில் இருந்து கிபி 1800ம் 
      ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 
      இலக்கியமாகும்.
      அவையாவன
      1.புராணங்கள்
      2.தலபுராணங்கள் 

      5.இஸ்லாமியதமிழ் 
         இலக்கியம்

      செவ்வாய்க்கிழமை


      திங்கள், 18 ஜூலை, 2011

      தமிழர் நிலத்திணைகள்-1

      பண்டைத் தமிழர் தமது இயற்கைச்
      சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்கள்
      ஆகும். இவை ஐந்து வகைகளாகப்
      பிரிக்கப்பட்டன.
      அவையாவன
      1.முல்லை
      2,குறிஞ்சி
      3.மருதம்
      4.பாலை
      5.நெய்தல்
      என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.

      1.முல்லைத் திணை - காடும், காடு சார்ந்த நிலம்
      2.குறிஞ்சித் திணை-மலையும் மலை சார்ந்த இடம்
      3.பாலைத் திணை- முல்லைத் திணை,குறிஞ்சித் திணை
                                               இவையிரண்டுக்கும் இடையில்
                                               அமைந்த பாழ் நிலம் .
      4.மருதத் திணை -வயலும் வயல் சார்ந்த நிலம்
      5.நெய்தல் திணை  கடலும் கடல் சார்ந்த இடம்

      இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான
      பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு
      இணைந்தவையாக அமைந்திருந்தன.

      நானிலம்
      தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை.
      கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில்
      அவற்றைப் பாலை என்றனர்.

      திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


      ஞாயிறு, 17 ஜூலை, 2011

      ஜங்குறுநூறு-1

      எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு
      நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு ஆகும்.
      இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச்
      சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி,
      பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம்
      சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு
      பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு
      அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

      ஞாயிற்றுக்கிழமை


      சனி, 16 ஜூலை, 2011

      தொல்காப்பியம்-1

      தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இது கி.மு. நான்காம் நூற்றாண் டில்எழுதப்பட்டது. இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார். இந்தநூலில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம்,என்ற மூன்று அதிகாரங்கள்உள்ளன. ஒவ்வோர் அதிகாரத் திலும் ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன. தமிழிலுள்ள இலக்கண நூல்களி லேயே மிகவும் பெரியதுதொல்காப்பியம் ஆகும். பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள்இலக்கணமும், யாப்பு இலக்கணமும் சொல்லப் பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில் அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இன்று தமிழில் உள்ள ஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பி யம் திகழ்கிறது.

      தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர் என்று அறியமுடிகிறது. பாயிரம் என்பது தற்காலத்தில்எழுதப்படும் முன்னுரை போன்றது. நிலந் தரு திருவின்பாண்டிய மன்னனின் அவையில் அதங் கோட்டாசான் தலைமையில்தொல்காப்பியம் அரங்கே றியது என்று பாயிரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

      தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. சிறு இலக்கண விதிகளைக் கூடவிட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க் கினியர், சேனாவரையர் , தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர்ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

      சனிக்கிழமை வாழ்த்துக்கள்


      வெள்ளி, 15 ஜூலை, 2011

      திருமுருகாற்றுப்படை -1

      பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில்
      வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை
      ஆகும். இது புலவராற்றுப் படையெனவும் முருகெனவும்
       வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்
      பாவால் அமைந்தது ஆகும் இந் நூலை இயற்றியவர் 
      மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார் 
      இவரது இயற்பெயர் கீரன் என்பதாம் இவர் இயற்றிய 
      இன்னொரு நுள் நெடுநல்வாடை ஆகும் அத்துடன் 
      இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் 
       சார்த்தி வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச்
      சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத்
      தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான்.
      இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை
      வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப்
      பிரிக்கப்பட்டுள்ளது 

      வெள்ளிக்கிழமை


      வியாழன், 14 ஜூலை, 2011

      சிற்றிலக்கியம் 1

      தமிழ் மொழியில் காணப்படும் இலக்கிய
      வகைமைகளில் ஒன்று சிற்றிலக்கியம்
      ஆகும்.இச்சிற்றிலக்கியவகைகளில்
      குறிப்பிடுவதற்குறிய இலக்கிய
      வகைகளுள் சில
      1.குறவஞ்சி,
      2.தூது,
      3.மடல்,
      4.உலா,
      5. பள்ளு,
      6.கலம்பகம்ஆகும்

      வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

      புதன், 13 ஜூலை, 2011

      மலைபடுகடாம்-1 ஆரம்பம்

      சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார்.நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன

      புதன்கிழமை


      செவ்வாய், 12 ஜூலை, 2011

      நாலடியார் 2

      செல்வம் நிலையாமை 1

      அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

      மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்

      சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று

      உண்டாக வைக்கற்பாற் றன்று.

      செவ்வாய்க்கிழமை


      திங்கள், 11 ஜூலை, 2011

      நாலடியார் 1

      கடவுள் வாழ்த்து

      வான் இடு வில்லின் வரவறியா வாய்மையால்
      கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
      சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
      முன்னி யவைமுடிக என்று.

      திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

      ஞாயிறு, 10 ஜூலை, 2011

      திருக்குறள் அதிகாரம் - 1 -2


      கடவுள்  வாழ்த்து  - 2


      (2 )
      கற்றதனால் ஆய பயன்என்கொல்  வாலறிவன்
      நற்றாள் தொழா  ௮ர் எனின் .


      கருத்து    


       துய அறிவினை   உடைய இறைவனின் நல்ல அடிகளைத் தொழாமல் இருப்பாரானால் ;அவர்
      கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன ?
      (ஒன்றுமில்லை)

      ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்



      சனி, 9 ஜூலை, 2011

      சங்ககால நூல்கள்

      எட்டுத்தொகை நூல்கள்



      நற்றிணை
      குறுந்தொகை
      ஐங்குறுநூறு
      கபிலர்
      பதிற்றுப்பத்து
      பரிபாடல்
      கலித்தொகை
      நல்லந்துவனார் முதலிய பலர்
      அகநானூறு
      பலர்
      புறநானூறு
      பலர்


      பத்துப்பாட்டு நூல்கள்
      திருமுருகாற்றுப்படை
      8ஆம் நூ.ஆ.
      நக்கீரர்
      பொருநராற்றுப்படை
      முடத்தாமக்கண்ணியார்
      சிறுபாணாற்றுப்படை
      4 - 6ஆம் நூ.ஆ.
      நற்றாத்தனார்
      பெரும்பாணாற்றுப்படை
      கடியலூர் உருத்திரங்கண்ணனார்
      நெடுநல்வாடை
      2 - 4ஆம் நூ.ஆ.
      நக்கீரர்
      குறிஞ்சிப் பாட்டு
      கபிலர்
      முல்லைப்பாட்டு
      நப்பூதனார்
      மதுரைக் காஞ்சி
      2 - 4ஆம் நூ.ஆ.
      மாங்குடி மருதனார்
      பட்டினப் பாலை
      3ஆம் நூ.ஆ.
      மலைபடுகடாம்
      2 - 4ஆம் நூ.ஆ.
      பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

      சனிக்கிழமை


      வெள்ளி, 8 ஜூலை, 2011

      பழங்காலம் - சங்க இலக்கியம்

       தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட
       காலப்பகுதியில் எழுதப்பட்ட
      செவ்வியல் இலக்கியங்கள்
       ஆகும். சங்க இலக்கியம்
      474 புலவர்களால் எழுதப்பட்ட
      2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
      இப்புலவர்களுள் பல தரப்பட்ட
      தொழில் நிலையுள்ளோரும்
      பெண்களும், நாடாளும் மன்னரும்
      உண்டு. சங்க இலக்கியங்கள்
      அக்காலகட்டத்தில் வாழ்ந்த
       தமிழர்களின் தினசரி வாழ்க்கை
      நிலைமைகளைப் படம்பிடித்துக்
      காட்டுவதாய் உள்ளன. பண்டைத்
      தமிழரது காதல், போர், வீரம்,
      ஆட்சியமைப்பு, வணிகம் போன்
      ற நடப்புகளைச் சங்க இலக்கியப்
      பாடல்கள் அறியத்தருகின்றன


      வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


      வியாழன், 7 ஜூலை, 2011

      புறநானூறு-1


      யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
      தீதும், நன்றும், பிறர் தர வாரா;
      நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
      சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
      இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
      இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
      வானம் தண் துளி தலைஇ ஆனாது,
      கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
      நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
      முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
      காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
      பெரியோரை வியத்தலும் இலமே!
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!


      -கணியன் பூங்குன்றனார்


      (புறநானூறு - 192)

      வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


      புதன், 6 ஜூலை, 2011

      பழங்காலம் - கடைச்சங்கம்

       இச் சங்கம்  கி.மு. 300 ம் ஆண்டு 
       முதல் கி.பி. 300 ஆண்டு வரை 
      இருந்ததாக என்று கூறப்படுகிறது
      அத்துடன் இச்சங்கத்தின் காலத்தை 
      சங்ககாலம் எனப் பொதுவாக
      அழைக்கப்பட்டது. இக்கடைச்சங்க
      மானது மதுரையில் நடந்தது.கடைச்
      சங்க கால மன்னர்கள் 49 பேர் 
      மதுரையைத் தலைநகராகக் கொண்டு 
      ஆண்டனர் என்றும் அத்துடன் 449 
      புலவர்கள் பங்களித்தனர் என்றும் 
      1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து 
      அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர் 
      என்றும் சிலம்பின் உரைப்பாயிரம் 
      கூறுகின்றது.சங்க காலம் என்று 
      தமிழில் வழங்கப்படும் கூட்டுச் 
      சொல்லில் உள்ள சங்கம் என்பது 
      சமசுக்கிருத மொழியிலிருந்து 
      வந்த சொல் என்பதால் சங்க காலம்
      என்று சொல்லுவதற்குப் பதில் கழகக் 
      காலம் என்று சொல்லும் வழக்கும் 
      உருவானதுஎன்று கருத்துக்கள் 
      தெரிவிக்கப்படுகின்றன 

      புதன்கிழமை வாழ்த்துக்கள்


      செவ்வாய், 5 ஜூலை, 2011

      பொருநர் ஆற்றுப்படை -1

      பொருநர் ஆற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் 
      கரிகால் வளவன் எனப்படும் சோழமன்னனைப் 
      பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.
      இதனை முடத்தாமக் கண்ணியார் என்ற ஆசிரியர் 
      எழுதினார். அத்துடன்  . இது 248 அடிகளைக் கொண்ட 
      ஆசிரியப்பாவாலானது.
      #160;