கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 28 ஜூலை, 2011

திருமுருகாற்றுப்படை -2

(குமரவேளை மதுரைக் கணக்காயனார்
மகனார் நக்கீரனார் பாடியது)


1.திருப்பரங்குன்றம்

குமரவேளின் பெருமை
தெய்வயானையின் கணவன்

பொருள்
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை,
 மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
கடப்பமாலை புரளும் மார்பினன்
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,
தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து,
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து 10
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்


சூரமகளிரின் இயல்பு
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி,
கணைக் கால், வாங்கிய நுசுப்பின், பணைத் தோள்,
கோபத்து அன்ன தோயாப் பூந் துகில், 15
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்,
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்,
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை,
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20
செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு,
பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி,
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து, 25
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி,
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக 30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ்
நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை,
தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின்
குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர் 35
வேங்கை நுண் தாது அப்பி, காண்வர,
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா,
'கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி 40

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;