கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 ஏப்ரல், 2014

இணைமொழிகள்- ந்

நகை நட்டு
நடை உடை
நயத்தாலும் பயத்தாலும்
நரையும் திரையும்
நல்லது கெட்டது
நன்மை தீமை -நல்லது பொல்லாதது 
நாயும் பேயும்
நாளும் கிழமையும்
நொண்டி சண்டி
நோய் நொடி
நோய் நொடி - மிகக்கடுமை

வியாழன், 24 ஏப்ரல், 2014

ஒரு பொருள் பல சொற்கள்

(28)நாள்- தினம் பகல் வைகல்

(29)துன்பம்- இடர் அல்லல் இடும்பை
                        இன்னல் இடுக்கன்

(30)பாட்டு-கவி கவிதைசெய்யுள் பா

(31)மனம்-அகம் உள்ளம் உள் உளம் சித்தம் நெஞ்சு

புதன், 23 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -10திருக்குறள் புறங்கூறாமை

புறங்கூறாமை

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


கருத்து 

பிறர் குற்றத்தை காண்பது போல் நம் 
குற்றத்தையும் காண வல்லவராயின் 
நிலை பெற்ற உயிர் வாழ்க்கைக்குத் 
துன்பம் உண்டோ?

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -9திருக்குறள்புறங்கூறாமை

புறங்கூறாமை


அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. 


கருத்து           

ஒருவர் நேரில் இல்லாததைக் கண்டு 
பழிச்சொல் கூறுகின்றவனின் உடல் 
பாரத்தை இவனையும் சுமப்பதே எனக்கு 
அறம் எனக் கருதி நிலம் சுமக்கின்றதே

திங்கள், 21 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -8திருக்குறள்புறங்கூறாமை

புறங்கூறாமை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 


கருத்து  

தம்முடன் நெருங்கி பழகியவரின் 
குற்றத்தையும் பரப்புகின்ற 
இயல்பினை உடையவர் அயல
வரிடத்து என்னதான் செய்யார்   

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -7திருக்குறள்புறங்கூறாமை

புறங்கூறாமை

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.  

கருத்து


 மகிழும் படிப் பேசி நட்புக் கொள்ளுதல்
 நல்ல தென்று தெரியாதவர் , நண்பர் 
தம்மை விட்டுப் பிரியும் படியாகப் 
புறங்கூறிப் பிரித்து விடுவர்

சனி, 19 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -6திருக்குறள் புறங்கூறாமை

புறங்கூறாமை

(6 )
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
திறன்தெரிந்து கூறப் படும்.

கருத்து   

பிறர் குற்றங்களைக் காணுகின்றவனுடைய
இழிந்த செயல்களுள் மிக இழிந்தவகைகளைப்
பிறர் ஆராய்ந்து சொல்வர்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -5திருக்குறள் புறங்கூமை

புறங்கூறாமை 

(5)
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அண்மை புறஞ்சொல்லும் 
பன்மையாற் காணப்படும்.    

கருத்து 

ஒருவன் புறங்கூறும் இழிந்த பண்பைக் கொண்டு,
அவனுடைய அறத்தை நல்லதென்று போற்றும் 
நெஞ்சம் இல்லாத தன்மையை அறியப்படும்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -4திருக்குறள் புறங்கூமை

புறங்கூறாமை 

(4)
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்நின்று பின்நோக்கச் சொல் 

கருத்து 

எதிர் நின்று கண்ணோட்டமின்றிக் கடுமையாக
சொன்னாலும் சொல்லலாம் ; அவன் நேரில்
இல்லாதபோது பின் விளைவை ஆராயாத
சொல்லைச் சொல்லலாகாது .

புதன், 16 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -3திருக்குறள் புறங்கூறாமை

புறங்கூறாமை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலில் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்

கருத்து 

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலினும்,
அவ்வாறு செய்யாது வறுமையுற்று இறந்து விடுதல்
நூல்கள் சொல்லும் ஆக்கத்தை தரும் 

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

திருக்குறள் அதிகாரம் - 19 -2திருக்குறள் புறங்கூறாமை


புறங்கூறாமை 

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறழீஇப் பொய்த்து நகை.

கருத்து

ஒருவன் இல்லாதபொழுது அவனைப்
புறங்கூறி அவனைக் கண்டவிடத்துப்
பொய்யாக அவனைப் புகழ்தல் ,அறத்தைக்
கெடுத்து பாவம் செய்ததை விட தீது.

திங்கள், 14 ஏப்ரல், 2014

புதுவருட வாழ்த்துக்கள்


திருக்குறள் அதிகாரம் - 19 -1திருக்குறள் புறங்கூறாமை

புறங்கூறாமை 

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றால் இனிது .

கருத்து

ஒருவன் அறம் என்னும் சொல்லைத்
தானும் சொல்லாதவனாகி தீய
செய்து வாழ்பவனாகினும் அவன்
புறங்க்கூராதவன் என்று பிறரால்
சொல்லும்படி நடத்தல் நல்லது .
#160;