கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 31 ஆகஸ்ட், 2011

கொன்றைவேந்தன்-2

ககர வருக்கம்

14.    கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
15.    காவல்தானே பாவையர்க்கு அழகு
16.    கிட்டாதாயின் வெட்டென மற
17.    கீழோர் ஆயினும் தாழ உரை
18.    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19.    கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20.    கெடுவது செய்யின் விடுவது கருமம்
21.    கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22.    கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
23.    கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24.    கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25.    கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சங்ககால காலம்

தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான
அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி
பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட
மூன்று தமிழ்சங்கங்கள் இருந்தன.பாண்டிய மன்னர்களின்
ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்
மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும்,
முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும்,
இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்
காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து
 போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திரு
மாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக
எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர்.
ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும்
ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க
கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.


செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 29 ஆகஸ்ட், 2011

நல்வழி-2


1.
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய  வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்   


2.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி


3.
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு


4.
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு


5.
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

கூட்டத்தை குறிக்கும் சொற்கள்-2

(4)உடு = திரள்
(5)கள்வர் = கூட்டம்
(6)குண்டர் = கும்பல்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 27 ஆகஸ்ட், 2011

குறிஞ்சிப்பாட்டு


(ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர்பாடியது)

தோழி அறத்தொடு நிற்றல்

'அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல்,
ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,

வேறு பல் உருவின் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும், நறுந் தோள் நெகிழவும்,
புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும்,

உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின்

இதன் பொருள்
இதற்குக் குறிஞ்சியென்று பெயர் கூறினார், இயற்கைப்புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின் ; அன்றியும் முதலானும் கருவானும் குறிஞ்சிக்குரியனவே கூறுதலானும் அப் பெயர் கூறினார். "அறத்தொடு நிற்குங் காலத் தன்றி, யறத்தியன் மரபில டோழி யென்ப" (தொல். பொருள். சூ. 12) என்பதனால், தோழி அறத்தொடு நிற்குங் காலம்வந்து செவிலிக்கு அறத்தொடு நின்றவழி அதற்கிலக்கணங்கூறிய, "எளித்த லேத்தல் வேட்கையுரைத்தல், கூறுதலுசாத லேதீடு தலைப்பா, டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ, யவ்வெழு வகைய தென்மனார் புலவர்" (தொல். பொருள். சூ. 13) என்னும் சூத்திரத்து ஏழனுள், கூறுதலுசாதலொழிந்தஆறுங்கூறி அறத்தொடு நிற்கின்றாளென்றுணர்க.
1. அன்னாய் வாழி - தாயே வாழ்வாயாக ;
[வேண் டன்னை :] அன்னை வேண்டு-தாயே யான் கூறுகின்ற வார்த்தையை விரும்புவாயாக ;
1-12. [ஒண்ணுத, லொலிமென் கூந்தலென் றோழி மேனி, விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ, யகலு ளாங்க ணறியுநர் வினாயும், பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும், வேறுபல் லுருவிற் கடவுட் பேணி, நறையும் விரையு மோச்சியு மலவுற், றெய்யா மையலை நீயும் வருந்துதி, நற்கவின் றொலையவு நறுந்தோ ணெகிழவும், புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு, முட்கரந் துறையு முய்யா வரும்படர், ெ்சப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் :]
ஒள் நுதல் (1) ஒலி மெல் கூந்தல் (2) விறல் (3) மேனி என் தோழி (2) உள் கரந்து உறையும் உய்யா அருபடர் (11) - ஒள்ளிய நுதலினையும் தழைக்கும் மெல்லிய மயிரினையும் பிறர் நிறத்தினைவென்ற வெற்றியினையுடைய நிறத்தினையுமுடைய என்னுடைய தோழி தன்மனத்துள்ளே







சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

கிறித்தவம் தொடர்பான தமிழ் இலக்கியங்கள்


கிறித்தவ தமிழ் இலக்கியங்கள் 
கிறித்தவ சமய பின்புலம் கொண்டோர்
ஆக்கிய இதர ஆக்கங்களும் கிறித்தவ
 தமிழ் இலக்கியமாக வகைப்படுத்தப்ப
டுவதுண்டு. பதினைந்தாம் நூற்றாண்டின்
இறுதி தொடங்கி கிறித்தவ அறிமுகம்
தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் நிகழ்கிறது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடும், ஈழமும்
கிறித்தவ ஐரோப்பியரின் குடியேற்றவாத
ஆட்சிக்கு உட்படுகின்றன. இக்காலத்தில்
சாதிக்கொடுமை சலுகைகள் சமயஈடுபாடு
போன்ற பலகாரணங்களால் தமிழர்கள்
பலர் கிறித்தவ சமயத்துக்கு மதம் மாறினர்.
கிறித்தவ தமிழ் இலக்கியத்தில் ஒரு
குறிப்பிடத்தக்க பகுதி ஐரோப்பியர்களின்
தமிழ்ப் பணிகள் ஆகும். சமயத்தைப் பரப்ப
அவர்கள் தமிழை கற்றனர். அச்சுப் பணி,
அகராதித் தொகுப்பு, மொழிப் பெயர்ப்பு,
பேச்சு இலக்கணத் தொகுப்பு, உரைநடை
விருத்தி, இலக்கியப் பங்களிப்பு என பல
வழிகளில் இவர்கள் பங்களிப்பைச்
செய்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்



வியாழன், 25 ஆகஸ்ட், 2011

உலகநீதி -4

(3 )மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்.
    
     கருத்து
   
     பெற்றதாயை ஒரு நாளும் மறக்க கூடாது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 24 ஆகஸ்ட், 2011

கலித்தொகை - 2


இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது
பெருங்கடுங்கோன் பாலைகபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம்அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லைநல்லந் துவன்நெய்தல்
கலவிவலார் கண்ட கலி

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தாலாட்டுப்பாடல்


தாலாட்டுப்பாடல்கள்

கிராமத்துப் பெண்கள் தங்கள்
குழந்தைகளை உறங்கவைப்ப
திற்காகப் பலபாடல்களை
பாடுவது வழக்கம் அப்படிப்
பாடும் பாடல்களையே
தாலாட்டுப்பாடல்கள் என
அழைப்போம் இப்பாடல்கள்
இசைநயம் மிக்கவை இந்த
இசையை அனுபவித்த
வண்ணம் குழந்தை உறங்கும் .

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 22 ஆகஸ்ட், 2011

எதிர்கருத்துச் சொற்கள் - ஆ

  (1)ஆசை - நிராசை
  (2)ஆட்சேபம் -அங்கீகாரம்
  (3)ஆண்டான் - அடிமை
  (4)ஆத்திகன் - நாத்திகன்
  (5)ஆதரவு - அநாதரவு
  (6)ஆதாரம் -நிராதாரம்
  (7)ஆதி - அந்தம்
  (8)ஆபாசம் - தூய்மை
  (9)ஆயாசம் - அநாயாசம்
(10)ஆயுதன் - நிராயுதன்
(11)ஆசை - நிராசை
(12)ஆட்சேபம் -அங்கீகாரம்
(13)ஆண்டான் - அடிமை
(14)ஆத்திகன் - நாத்திகன்
(15)ஆதரவு - அநாதரவு
(16)ஆதாரம் -நிராதாரம்
(17)ஆதி - அந்தம்
(18)ஆபாசம் - தூய்மை
(19)ஆயாசம் - அநாயாசம்
(20)ஆயுதன் - நிராயுதன்
(21)ஆவேசம் - சாந்தம்
(22)ஆரம்பம் - முடிவு
(23)ஆரோகணம் - அவரோகணம்
(24)ஆர்தல் - குறைதல்
(25)ஆர்ப்பாட்டம் - அமைதி

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - ஆ

(1)ஆ - பசு
(2)ஆகம் - உடல்
(3)ஆகம் -நெஞ்சு
(4)ஆகாரம் - உறைவிடம்
(5)ஆகாரம் - சுரங்கம்
(6)ஆகவம் - போர்
(7)ஆகவம் - சீலை
(8)ஆகாரம் - உணவு
(9)ஆக்கினை - துன்பம்
(10)ஆக்கினை - கட்டளை
(11)ஆசனம் - இருக்கை
(12)ஆசாடபூதி - மோசக்காரன்
(13)ஆசாரம் - ஒழுக்கம்
(14)ஆசி - வாழ்த்து
(15)ஆசீர்வாதம் - வாழ்த்து
(16)ஆடகம் - பொன்
(17)ஆடவன் - ஆண்மகன்
(18)ஆடை - சீலை
(19)ஆடை - பால் ஏடு
(20)ஆடை -உடை
(21)ஆட்கொள்ளல் - அடிமையாதல்
(22)ஆட்சேபம் - மறுப்பு
(23)ஆணவம் - செருக்கு
(24 )ஆணித்தரம் - உறுதி
(25)ஆணை - சத்தியம்
(26)ஆண்டகை - சிறந்தோன்
(27)ஆண்டு - வருடம்
(28)ஆதரவு - அன்பு
(29)ஆதவன் - சூரியன்
(30)ஆதாரம் - பற்றுக்கோடு
(31)ஆதி - தொடக்கம்
(32)ஆதிகாலம் -முற்காலம்
(33)ஆதிபத்தியம் - அதிகாரம்
(34)ஆதலன் - தரித்திரன்
(35)ஆநிரை - பசுக்கூட்டம்
(36)ஆபத்து - இடையூறு
(37)ஆபரணம் - அணிகலம்
(38)ஆமோதித்தல் - உடன்படல்
(39)ஆயன் - இடையன்
(40)ஆயுள் - வாழ்நாள்
(41)ஆரணம் - வேதம்
(42)ஆரணியம் - காடு
(43)ஆரம் - மாலை
(44)ஆரம்பம் - தொடக்கம்
(45)ஆராய்ச்சி - சோதனை
(46)ஆரவாரம் - பேரொலி
(47)ஆராதனை - வணக்கம்
(48)ஆரோக்கியம் - நோயின்மை
(49)ஆர்வம் - விருப்பம்
(50)ஆர்வலன் - அன்பன்
(51)ஆலம் - விடம்
(52)ஆலவட்டம் - விசிறி
(53)ஆலை - தொழிற்சாலை
(54)ஆவணம் - பதிவேடு 
(55)ஆவி - உயிர்
(56)ஆவேசம் - கன்னதம்
(57)ஆவேசம் - வெறி
(58)ஆழி - கடல்
(59)ஆழி - மோதிரம்
(60)ஆளி - சிங்கம்
(61)ஆற்றல் - வலிமை
(62)ஆற்றாமை -பொறுக்க இயலாமை
(63)ஆற்றுப்படுத்தல் - வழிப்படுத்தல்
(64)ஆனந்தம் - மகிழ்ச்சி
(65)ஆனைப்பந்தி - யானைக்கூட்டம்
(66)ஆன்மா - உயிர்
(67)ஆஸ்தி - சொத்து
(68)ஆகாய விமானம் – வானூர்தி
(69)ஆகாரம் – உணவு,
(70)ஆகாரம் – உண்டி
(71)ஆசனம் - இருக்கை
(72)ஆசித்தல் – விரும்புதல்
(73)ஆசிர்வாதம் – வாழ்த்து
(74)ஆச்சரியம் – வியப்பு
(75)ஆச்சாரம் - ஒழுக்கம்
(76)ஆடம்பரம் - பகட்டு
(77)ஆடி - கடகம்
(78)ஆட்சேபனை – மறுப்பு,
(79)ஆட்சேபனை – தடை
(80)ஆதங்கம் - மனக்கவலை
(81)ஆதரவு – அரவணைப்பு,
(82)ஆதரவு – களைகண்
(83)ஆதரி – தாங்கு,
(84)ஆதரி – அரவணை
(85)ஆதாரம் - நிலைக்களம்
(86)ஆத்திசம் - நம்புமதம்
(87)ஆவுஸ்திரேலியா - தென்கண்டம்
(88)ஆபத்து – இடுக்கண்,
(89)ஆபத்து – இடையூறு
(90)ஆபரணம்- அணிகலன்
(91)ஆப்பிள் – அரத்தி
(92)ஆமோதி - வழிமொழி
(93)ஆயத்தம் – அணியம்
(94)ஆயுள் – வாழ்நாள்
(95)ஆரம்பம் – தொடக்கம்
(96)ஆரோகணம் – ஆரோசை
(97)ஆரோக்கியம் - உடல்நலம்
(98)ஆலாபனை – ஆளத்தி
(99)ஆலோசனை - கருத்து
(100)ஆவணி (மாதம்) – மடங்கல்
(101)ஆனந்தம் – மகிழ்ச்சி,
(102)ஆனந்தம் – களிப்பு
(103)ஆனி (மாதம்) - ஆடவை
(104)ஆன்மா (ஆத்மா) – ஆதன்
(105)ஆஸ்தி – செல்வம்
(106)ஆட்சேபி  - தடு 
(107)ஆணகம் - சுரை
 (108)ஆனகம் - துந்துபி
(109)ஆணம் - பற்றுக்கோடு
(110)ஆனம் - தெப்பம், 
(111)ஆனம் -கள்
(112)ஆணி - எழுத்தாணி, 
 (113)ஆணி -இரும்பாணி
 (114)ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
 (115)ஆணேறு -ஆண்மகன்
 (116)ஆனேறு - காளை, 
 (117)ஆனேறு - எருது
 (118)ஆண் - ஆடவன்
 (119)ஆன் - பசு
 (120)ஆணை - கட்டளை, 
 (121)ஆணை -ஆட்சி
 (122)ஆனை - யானை

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 20 ஆகஸ்ட், 2011

உலக நீதி - 3

(2)ஒருவரையும் பொல்லாங்கு 
    சொல்லவேண்டாம்.
    கருத்து
மற்றவர் மனம் நோகும்படி 
தீய சொற்களைப் பேசக்கூடாது.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

உலகநீதி -2

(1 )ஓதாமல் ஒரு நாளும் 
      இருக்கவேண்டாம்.
    
கருத்து 
    ஒருநாளும் படிக்காமல் 
    இருக்ககூடாது

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இணைமொழிகள் -அ

(1) அருமை பெருமை -சிறப்பு

(2)அக்கம்பக்கம் -பார்த்துபேசு


(3)அறம் மறம் - புண்ணியமும் பாவமும்

(4)அன்றும் இன்றும்


(5)அங்கும் இங்கும் -பலபக்கமும்


(6)அல்லும் பகலும்- நாள்முழுவது

(7)அரைகுறை - முற்றுப்பெறாமை

(8)அணைதுணை - உதவி

(9)அருமைபெருமை - மிகச்சிறப்பு

(10)அற்பசொற்பம் -மிகக்கொஞ்சம்

(11)அன்பும் அருளும் - பாசமும் பக்தியும்

(12)அண்டை அயல்

(13)அந்தியும் சந்தியும்

(14)அகட விகடம் 

(15)அடிமுடி 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 17 ஆகஸ்ட், 2011

இடைக்காலம்-2 -பக்தி இலக்கியம்

இந்த இலக்கியம் பெருமளவில் தோன்றியது
 பல்லவர் காலத்திலேதான் வேறு எந்தமொழி
யிலும் தமிழில் தோன்றியளவு பக்தி இலக்கியம் 
தோன்றவில்லை இக்காலத்தில் எழுந்த பக்தி 
இலக்கியம் இருவகைப்பட்டது. 
அவையாவன 
1 .தனித்தனிப்  பதிகங்களால் பக்தி அனுபவங்களை 
வெளிப்படுத்துதல், 
2 .பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் 
என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப் 
பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி 
அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் 
பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன. 
பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை 
இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. 
பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை 
தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை 
பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த 
அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் 
காரணம் எனலாம்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

ஆத்திசூடி-2

(11)ஓதுவ தொழியேல் 
(12)ஔவியம் பேசேல்
(13)அஃம் சுருங்கேல் 
(14 )கண்டொன்று சொல்லேல் 
(15 )போல் வளை
(16 )சனிநீ ராடு
(17 )ஞயம்பட வுரை 
(18 )டம்பட வீடெடேல்
(19 )கமறிந் திணங்க 
(20)தந்தைதாய்ப் பேண்.

செவ்வாய்க்கிழமை


திங்கள், 15 ஆகஸ்ட், 2011

புதிய அருஞ்சொற்கள்-2

(6) இலத்திரன் - மின்னணு

(7) உச்சவரம்பு - மேல் எல்லை

(8) உலகாயுதம் - நீர்ச்சுரவாதம்

(9) ஊழல் -  இலஞ்சம் வாங்குதல்
                      போன்ற கூடாத செயல்

(10)எடுகோள் - கருதுகோள் 

அகத்தியம் -2

அகத்தியம் என்ற நூலை 
எழுதிய அகத்தியரின் 
மாணவர்கள் 

1)செம்பூண்சேய்
2)வையாபிகன்
3)அதங்கோட்டாசான்
4)அபிநயனன்
5)காக்கை பாடினி
6)தொல்காப்பியர்
7)வையாபிகன்
8)பனம்பாரனார்
9)கழாகரம்பர்
10)நத்தத்தன்
11)வாமனன்
12)துராலிங்கன்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பெரும்பாண் ஆற்றுப்படை-1

இப் பெரும்பாணாற்றுப்படை.500 அடிகளைக்
கொண்டு அமைந்தது பேரியாழ் வாசிக்கும்
பாணன் ஒருவன் வறுமையால் வாடும்
இன்னொரு பாணனைத் தொண்டைமான்
இளந்திரையன்என்னும் மன்னனிடம் ஆற்றுப்
படுத்துவதாக அமைந்தது இந்தஆற்றுப்படை
நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங்
கண்ணனார் என்னும் புலவர் ஆவார் .

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்



    சனி, 13 ஆகஸ்ட், 2011

    சேர மன்னர்களின் பட்டியல்

    முற்காலச் சேரர்கள் 

    1.சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
           கி.மு 1200

     கடைச்சங்க காலச் சேரர்கள் 

    1.உதியஞ்சேரலாதன்
       கி.பி. 45-70

    2.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
       கி.பி. 71-129

    3.பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
       கி.பி. 80-105

    4.களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
       கி.பி. 106-130

    5.செங்குட்டுவன்
       கி.பி. 129-184

    6.அந்துவஞ்சேரல் இரும்பொறை
       (காலம் தெரியவில்லை)

    7.செல்வக்கடுங்கோவாழியாதன் இரும்பொறை
         கி.பி. 123-148

    8.ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
        கி.பி. 130-167

    9.தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
       கி.பி. 148-165

    10.இளஞ்சேரல் இரும்பொறை
         கி.பி. 165-180

    11.குட்டுவன் கோதை
         கி.பி. 184-194

    12.மாரிவெண்கோ
         காலம் தெரியவில்லை

    13.சேரமான் வஞ்சன்
       காலம் தெரியவில்லை

    14.மருதம் பாடிய இளங்கடுங்கோ
        காலம் தெரியவில்லை

    15 சேரமான் கணைக்கால் இரும்பொறை
        காலம் தெரியவில்லை

    16.சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
         காலம் தெரியவில்லை

    சனிக்கிழமை வாழ்த்துக்கள்


    வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

    அகநானுறு-2


    நின்ற நீதி வென்ற நேமிப்
    பழுதில் கொள்கை வழுதியார் அவைக்கண்
    அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
    வான் தோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
    அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை (5)
    ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
    நெடிய ஆகி அடிநிமிர்ந்து ஒழுகிய
    இன்பப் பகுதி இன்பொருட் பாடல்
    நானூறு எடுத்து நூல்நவில் புலவர்
    களித்த மும்மதக் 'களிற்றியானை நிரை' (10)
    மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
    மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
    அத்தகு மரபின் முத்திற மாக
    முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
    மருத்து என் பண்பினோர் உரைத்தவை நாடின் (15)
    அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி
    அரியவை ஆகிய பொருண்மை நோக்கிக்
    கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத்
    தகவொடு சிறந்த அகவல் நடையால்
    கருத்து இனிது இயற்றியோனே பரித்தேர் (20)
    வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
    நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின்
    கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத்
    தீதில் கொள்கை மூதூருள்ளும்
    ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
    செம்மை சான்ற தேவன்
    தொப்மை சான்ற நன்மையோனே.

    வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


    வியாழன், 11 ஆகஸ்ட், 2011

    குறிஞ்சிப்பாட்டு


    இக் குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் 
    நூல் தொகுப்பில் அடங்கிய ஒரு நூலாகும் இக் குறிஞ்சிப் 
    பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 
    அடிகளை உடையது அத்துடன்  இப் பாடல் அகப்பொருள் 
    சார்ந்த பாடலாகும்.அதாவது தினைப்புலம் காக்கச் சென்ற 
    தலைவி அங்கு ஒரு ஆண் மகனிடம் தன் மனதைப் பறி 
    கொடுக்கிறாள்.அதன் பின்னர்  பல காரணங்களினால் 
    அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கின்றாள்.இதனை 
    அவள் தோழி கவனிக்கிறாள் அதன் பின்னர் தோழி தன் 
    தாயிடம்  தவிக்கும் நிலையில் இருக்கும் தன் தலைவி
    யின் நிலையை எடுத்து விளக்குகிறாள் 

    வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


    புதன், 10 ஆகஸ்ட், 2011

    பத்துப்பாட்டு

    சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ்
    நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,பதினெண்
    கீழ்க்கணக்கு என்பன அடங்குகின்றன.இவற்றுள் திரு
    முருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை,சிறுபாணாற்
    றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு,
    மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு,
    பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்துநூல்கள்
    அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகி
    றது.இவையனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக்
    குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று
    தொடர்பற்றவை, வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு
    கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு
    எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில்
    எழுந்ததென்பதே பலரது கருத்து.இத் தொகுதியிலுள்ள
    நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை.
    இவற்றில்பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு
    பற்றிய பலஅரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
    வரலாற்றுச் சம்பவங்கள்,அரசர்களினதும் வள்ளல்களின
    தும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்
    காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை
    பற்றியவருணனைகள் போன்றவை தொடர்பான பல
    தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது.இத்
    தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவற்பாக்களா
    ல் ஆனவை.இவற்றுள் 103அடிகளைக் கொண்டமைந்த
    முல்லைப் பாட்டுக்கும்,782அடிகளையுடைய மதுரைக்
    காஞ்சிக்கும்இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக
    ஏனையநூல்கள் அமைந்துள்ளன.சுவடிகளில் எழுதப்
    பட்டுப்பயன்படுத்தப்பட்டுவந்த இந்நூல்கள் பிற்காலத்தில்
    அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச்
    சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில்,
    டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1889 ஆம் ஆண்டு
    முதன்முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார் இதன் பின்னர்
    வேறும் பலர் முழுத்தொகுதியாகவும் இதில் உள்ள நூல்
    களிற் சிலவற்றைத் தனித்தனியாகவும் புதிய உரைகளு
    டன் வெளியிட்டுள்ளனர்.

    புதன்கிழமை வாழ்த்துக்கள்


    செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

    சிறுபாணாற்றுப்படை-1

    நற்றத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


    திங்கள், 8 ஆகஸ்ட், 2011

    அகத்தியம்-1

    அகத்தியம் என்ற இந்த நூலானது
    மிகப்பழைமையான தமிழ்இலக்கண
    நூல் எனக் கருத்தப்படுகின்றது.
    அகத்தியர் என்பவர் இயற்றிய நூல்
    ஆதலால் இது அகத்தியம் என்று
    வழங்கப்படுகின்றது. முதல்,இடை,
    கடை என வரையறுக்கப்படும் முச்
    சங்க காலங்களிலும் இதுவே, தமிழ்
    இலக்கணத்துக்கான, முதல் நூலாகத்
    திகழ்ந்தது எனஆய்வாளர் கூறுகின்றனர்.
    இது, பிற்கால இலக்கண நூல்களைப்
    போல்,இயற்றமிழுக்கு மட்டுமன்றி,
    இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும்
    இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.
    தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள்
    மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து
    கிடைத்துள்ளனஇப்பொழுது நமக்குக்
    கிடைக்கும் மிகப் பழையதமிழ்நூலான
    தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே
    ஆகும்.என விக்கிபீடியா கூறுகிறது

    திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


    ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

    திருக்குறள் அதிகாரம் - 1 -6



    கடவுள் வாழ்த்து - 6

    (6 )பொறிவாயில் ஜந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க 
         நெறிநின்றார் நீடுவாழ் வார் 

    கருத்து 

    ஜம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஜவகை 
    ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற
    ஒழுக்க நெறியில் நின்றவர் நெடுநாள் நிலை பெற்று
    வாழ்வார்

    ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


    சனி, 6 ஆகஸ்ட், 2011

    அகநானுறு-1


    தமிழ்நூல் தொகுப்பில் உள்ள
    ஒரு நூல் இதுவாகும்.அத்துடன்
    இது சங்ககாலத்தைச் சேர்ந்த
    எட்டுத்தொகை எனப்படும்
    நூல்களில் இதுவும் ஒன்றாகும்
    அத்துடன் இது ஓர் அகத்திணை
    சார்ந்த நூல் என்பதோடு இதில்
    நானூறு பாடல்களும் அடங்கி
    உள்ளதால் இது அகநானூறு என
    அழைக்கப்படுகிறது .அத்துடன்
    இதற்கு நெடுந்தொகை என்ற
    பெயரும் உண்டு இவ் அகநானுறில்
    அடங்கியுள்ள பாடல்கள் ஒரே
    புலவராலோ அல்லது ஒரே
    காலத்திலேயோ இயற்றப்பட்டவை
    யல்ல. இது பல்வேறுபட்ட புலவர்க
    ளாள் பல்வேறுபட்ட காலங்களில்
    பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
    இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள்
    மிகக் குறைந்த அளவாகப் 13அடி
    களையும், கூடிய அளவு 31 அடிகளை
    யும் கொண்டு அமைந்துள்ளன.எட்டுத்
    தொகை நூல்களுள் குறுந்தொகை
    நற்றிணை அகநானூறு, ஐங்குறுநூறு,
    கலித்தொகைஆகிய ஐந்தும் அகம்
    பற்றியன. இவற்றுள் அகம் என்னும்
    சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு
    மட்டுமே. அகத்தொகையுள் நீண்ட
    பாடல்களைக் கொண்டமையால் இதனை,
    'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.கடவுள்
    வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில்
    400 பாடல்கள் உள்ளன.இவற்றினை மூன்று
    பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
    அவையாவன

    1 . களிற்றியானை நிரை
    இதில் 1 தொடக்கம் 120 பாடல்கள்
    உள்ளது
    2.மணி மிடை பவளம்
    இதில் 121 தொடக்கம் 300 பாடல்கள்
    உள்ளது

    3 .நித்திலக் கோவை
    இதில் 301 தொடக்கம் 400 பாடல்கள்
    உள்ளது

    அத்துடன அகநானுறில் உள்ள பாடல்கள்
    யாவும் தக்கதொரு நியமத்தைக் கொண்டு
    அமைந்துள்ளன.அத்துடன் ஒற்றைப்பட்ட
    எண்களில் அமைந்துள்ள பாடல்கள் 200-ம்
    பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டை
    ப்பட்ட எண்களில் அமைந்துள்ள பாடல்கள்
    2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித்திணையைச்
    சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்
    படுபவை 40-ம் முல்லைத்திணையைச் சேர்ந்
    தவை. இரட்டைப்பட்ட எண்களில் 6 எனப்
    படுபவை 40-ம் மருதத்திணையைச் சேர்ந்தவை.
    இரட்டைப்பட்ட எண்களில் 10 எனப்படுபவை
    40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.இத்
    தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி
    கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத்
    தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப்
    பெருவழுதியார். இத்தொகை பாடிய புலவர்கள்
    நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப்புலவர்கள்
    146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில்
    மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர்
    அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர்
    வணிகர், வேளாளர் எனப்பட்ட பல தரப்பினர்
    புலவர்களாக இருந்துள்ளனர் என்பதை அவர்கள்
    தங்கள் பெயர்களின்முன்னால் அமையும் அடை
    மொழிகளால் தெரிவித்துள்ளனர் இதில் உள்ள
    மூன்று பாடல்களின் 114, 117, 165ஆகியவற்றில்
    ஆசிரியர்களின் பெயர்கள் காணப்படவில்லை

    சனிக்கிழமை வாழ்த்துக்கள்


    வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

    குறுந்தொகை-1

    சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை
     இது  401 பாடல்களின் தொகுப்பு ஆகும் அத்துடன் இதில் காணப்படும் பாடல்கள் யாவும் நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்துள்ளது ஆகும் . இதுவும் ஏனைய பல பழந் தமிழ் நூல்களைப் போல 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டும் என்றும் ஒருபாடல் இடைச் செருகலாக இருக்ககூடும் என்றும் சில மக்கள் கருதுகின்றார்கள் .அத்துடன்  இது பல வகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது ஆகும் .இதில் உள்ள பாடல்கள் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஆகவேதான்  இது  குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. அத்துடன் இதில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார் .குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி, பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல் தொகுதி என்பதால் குறுந்தொகை என்று பெயர் பெற்றது. குறுந்தொகை நூலின் செய்யுள் தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' என்பது பழங் குறிப்பு. இதனைத் தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205

    வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


    வியாழன், 4 ஆகஸ்ட், 2011

    பட்டினப்பாலை-1

    சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில்
    அடங்கிய ஒருநூல் பட்டினப்பாலை.பெரும்பாணாற்று
    ப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்
    கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியு
    ள்ளார். பண்டைய சோழ நாட்டின் வாழ்க்கை முறை
    யையும், அதன் செல்வ வளத்தையும் எடுத்து இயம்பும்
    இப்பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப்பாடலில்
    சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமை
    களை எடுத்துக்கூறுகிறார் புலவர்.

    வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


    புதன், 3 ஆகஸ்ட், 2011

    புறநானூறு-2


    இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும் .அத்துடன் இது புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.இத் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்டது .  இப் புறநானூற்றின் பாடல்கள் யாவும் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் அவர்களுடன் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் கூறுகின்றன  .

    புதன்கிழமை வாழ்த்துக்கள்


    செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

    பரிபாடல்-1

    இது சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று ஆகும் .இப் பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்களும் , செவ்வேல் முருகனுக்கு 31 பாடல்களும் , காடுகாள் (காட்டில் இருக்கும்) காளிக்கு அதாவது கொற்றவைக்கு 1 பாடலும் உள்ளன ,அத்துடன் இதில்  படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல் களும் , பெரியநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்களும் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. ஆனால் இவற்றில் காணப்படும் பாடல்கள் யாவும் முழுமையாகக் எமக்கு கிடைக்கவில்லை என விக்கிபீடியா கூறுகிறது .

    செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


    திங்கள், 1 ஆகஸ்ட், 2011

    முல்லைப்பாட்டு-1 ஆரம்பம்

    சங்கத்தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என
    அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே
    முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியு
    ள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103
    அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில்
    இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்
    செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக்
    கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும்,
     தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்
    படவில்லை.

    திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


    #160;