கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 31 மே, 2011

திங்கள், 30 மே, 2011

தமிழ் எழுத்துக்கள்-3

எழுத்துக்கள்
  
ஒரு மொழிக்கு அடிப்படையாக வரும் 
ஒலிகளின் வடிவத்தை தான் எழுத்து எனப்படும். 

தமிழ்
 
  
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் 
எண்ணிக்கை - 247 ஆகும். 


தமிழ் எழுத்துக்கள்
முதல் எழுத்துகள் என்பது தமிழ் மொழியின் 
அடிப்படை மொழிகள் அல்லது எழுத்துகள் 
ஆகும்  தமிழ் மொழியில் உள்ள எழுத்து 
வகைகளை இரண்டு வகையாக 
பிரிக்கலாம் .
அவையாவன- 
           (1)முதல் எழுத்து 
           (2)சார்பு எழுத்து ஆகும் 

                    (1)முதல் எழுத்து 
(அ)பன்னிரெண்டு உயிர் எழுத்துக்கள்

(ஆ)பதினெட்டு மெய் எழுத்துக்கள் 

ஆகியவை யாவும் முதல் எழுத்துக்கள் 
எனப்படும்.

                       (1-அ)உயிர் எழுத்துக்கள் 
தமிழ் மொழிக்கு உயிராக விளங்கும் 
எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் ஆகும் 
அத்துடன் தமிழ்எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது வாயிலிருந்து எவ்வித 
தடையுமின்றி வெளிவரும் எழுத்துக்களை 
உயிர் எழுத்துக்கள்என அழைக்கப்படும். 
வாயினால்உச்சரிக்கும் போது எவ்வித
தடையும் இன்றி வெளிவரும் உயிர் எழுத்து
க்கள் 12 ஆகும்.


அவையாவன 
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஜ ஒ ஓ ஔ


 (1-அ-1)உயிர் எழுத்து வகைகள்
உயிர் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் 
அவையாவன -
(1)குறில் (குற்றெழுத்துக்கள்)
(2)நெடில்(நெட்டெழுத்துக்கள்)ஆகும்


(1-அ-1-1)
குறில்(குற்றெழுத்துக்கள்)
குறுகிய ஓசையுடைய எழுத்துக்கள் 
குற்றெழுத்துக்கள் அல்லது குறில் ஆகும் 
அவையாவன -
அ இ உ எ ஒ ஆகிய ஜந்து 
எழுத்துக்களும் ஆகும்


(1-ஆ-1-2)
நெடில்(நெட்டெழுத்துக்கள்)
நீண்ட ஓசையுடைய எழுத்துக்கள் 
நெடில்(நெட்டெழுத்துக்கள்)ஆகும்
அவையாவன- 
ஆ ஈ ஊ ஏ ஜ ஓ ஔ ஆகிய ஏழு எழுத்துக்களும் ஆகும் 

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 29 மே, 2011

தமிழ் எழுத்துக்கள்-2

"தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இந்த எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன இவ் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு"

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 28 மே, 2011

தமிழ் எழுத்துக்கள்-1

எழுத்து

"ஒரு மொழிக்குப் பயன்படும் அடிப்படை ஒலிகளின் வடிவம் எழுத்து எனப்படும்"

சனிக்கிழமை

  

வெள்ளி, 27 மே, 2011

தமிழ் தாய் வாழ்த்து

 தமிழ் தாய் வாழ்த்து  மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை 


நீராரும் கடல்உடுத்த நிலமடந்தைக்கு எழில்ஒழுகும்
சீராரும் வதனம்எனத் திகழ்பரத கண்டம் இதில் 
தக்கசிறு பிறைநுதலும் திரித்தநறுந் திலகமுமே 
தெக்கணமும் அதில் சிறந்த திரவிடநல் திருநாடும் 
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம்உற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்உயிரும்பலஉலகும்படைத்துஅளித்துடைக்கினும்ஓர் 
எல்லைஅறுபரம்பொருள்முன்இருந்தபடிஇருப்பதுபோல் 
கன்னடமும்களிதெலுங்குகவின்மலையாளமும்துளுவும்
உன்உதிர்த்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும் 
ஆரியம்போல்உலகவழக்கு அழிந்துஒழிந்து சிதையாஉன்
சீர்இளமைத்திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துமே !
                                    
                                மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை 

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 26 மே, 2011

தமிழ் மொழி வாழ்த்து


வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே !

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!

சூழ்கவி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்து மறிந்து
வளர்மொழி வாழியவே!

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

புதன், 25 மே, 2011

தமிழ் வாழ்த்து


புதன்கிழமை


#160;