கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

வெள்ளிக்கிழமை


சனி, 27 ஏப்ரல், 2013

வியாழக்கிழமை


சனி, 20 ஏப்ரல், 2013

ஒரு பொருள் பல சொற்கள்-ச

(1)சந்திரன் - மதி 
    சந்திரன் - திங்கள் 
   சந்திரன் - அம்புலி 
   சந்திரன் - நிலா 

(2)சரஸ்வதி - வாணி
   சரஸ்வதி -  நாமகள் 
   சரஸ்வதி - கலைமகள்

வியாழக்கிழமை


வெள்ளி, 19 ஏப்ரல், 2013

புதன்கிழமை


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சனிக்கிழமை


சனி, 13 ஏப்ரல், 2013

வெள்ளிக்கிழமை


வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அகராதி-ஆ,


சொல்
அருஞ்சொற்பொருள்
ஆத்திகம் கடவுள் உண்டென்னும் கொள்கை ; யானைக்கூட்டம் .
ஆத்திகன் கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் .
ஆத்திசூடி ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ; ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று .
ஆத்திசூலை குதிரை நோய்வகை .
ஆத்திட்டி நீர்முள்ளி .
ஆத்தியந்தம் காண்க : ஆதியந்தம் .
ஆத்தியந்திகபிரளயம் பிரளயத்தால் உலகம் முடியும் காலம் .
ஆத்தியாத்துமிகம் தன்னைப்பற்றி வரும் துன்பம் .
ஆத்தியான்மிகம் தன்னைப்பற்றி வரும் துன்பம் .
ஆத்தியை துர்க்கை .
ஆண்வழி ஆண் சந்ததியிலிருந்து உண்டான பரம்பரை .
ஆணகம் சுரைக்கொடி .
ஆணங்காய் ஆண்பனையின் பாளை ; பனம்பூ .
ஆணத்தி கட்டளை .
ஆணம் நேயம் ; பற்றுக்கோடு ; கொள்கலம் ; குழம்பு ; குழம்பிலுள்ள காய் ; சிறுமை .
ஆணர் பாணர் ; பாடகர் .
ஆணலி ஆண்தோற்றம் மிக்க அலி .
ஆணவம் செருக்கு ; காண்க : ஆணவமலம் ; கோளகபாடாணம் .
ஆணவமலம் மும்மலங்களுள் ஒன்று ; மூலமலம் ; உடம்பை 'யான்' என்று இருக்கை .
ஆணவமறைப்பு ஆணவ மலத்தால் உயிருக்கு உண்டாகும் அறியாமை .
ஆணழகன் அழகு வாய்ந்தவன் .
ஆணன் ஆண்மையுடையவன் ; அன்புடையோன் .
ஆணாடுதல் விருப்பப்படி நடத்தல் ;
ஆணாப்பிறந்தோன் மனிதன் ; ஆவிரை .
ஆணாள் ஆண் நட்சத்திரங்கள் ; அவை : பரணி , கார்த்திகை , உரோகிணி , புனர்பூசம் , பூசம் , அத்தம் , அனுடம் , திருவோணம் , பூரட்டாதி , உத்திரட்டாதி .
ஆணாறு மேற்குநோக்கி ஓடும் ஆறு .
ஆணி இரும்பாணி ; அச்சாணி ; எழுத்தாணி ; மரவாணி ; உரையாணி ; புண்ணாணி ; மேன்மை ; ஆதாரம் ; ஆசை ; சயனம் ; பேரழகு ; எல்லை .
ஆணிக்கல் பொன் நிறுக்கும் கல் .
ஆணிக்குருத்து பனையின் அடிக்குருத்து .
ஆணிக்கை உறுதி .
ஆணிக்கொள்ளுதல் இருப்பிடத்தை நிலைபெறச் செய்து கொள்ளுதல் ; இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல் .
ஆணிக்கோவை உரையாணி கோத்த மாலை .
ஆணிச்சவ்வு விழிப்படலம் .
ஆணிச்சிதல் சீப்பிடித்த புண்ணாணி .
ஆணித்தரம் முதல்தரம் ; உறுதி .
ஆணிதைத்தல் பொருத்த ஆணியடித்தல் ; கால் முதலியவற்றில் ஆணிபாய்தல் .
ஆணிப்புண் உள்ளாணியுள்ள சிலந்தி .
ஆணிப்பூ கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் .
ஆணிப்பூடு கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் .
ஆணிப்பொன் உயர் மாற்றுப் பொன் .
ஆணிமலர் ஆணியின் தலை .
ஆணிமலர்திருப்பி திருப்புளி .
ஆணிமுத்து உயர்தரமான முத்து .
ஆணியச்சு ஆணியுண்டாக்கும் அச்சு .
ஆணியம் நாட்படி .
ஆணியிடுதல் கண் நிலைக்குத்துதல் .
ஆணிவேர் மூலவேர் .
ஆணு நேயம் ; இனிமை ; நன்மை ; இரசம் .
ஆணுடம்பு ஆண்குறி .
ஆணெழுத்து உயிரெழுத்து .
ஆணை கட்டளை ; அதிகாரம் ; நீதிமன்றம் முதலிய விடங்களில் கூறும் உறுதிமொழி ; சூளுரை ; மெய் ; தடுக்கை ; இலாஞ்சனை ; வெற்றி ; ஆன்றோர் மரபு ; சிவபிரானது சிற்சத்தி .
ஆணையிடுதல் கட்டளையிடுதல் ; சூளுரைத்தல் .
ஆணையோலை கட்டளைத் திருமுகம் .
ஆணைவழிநிற்றல் அரசர் கட்டளைப்படி நடத்தல் ; வேளாண் மாந்தர் ஒழுக்கங்களுள் ஒன்று .
ஆணைவிடுதல் சூளுறவை நீக்குதல் .
ஆணொழிமிகுசொல் இருதிணையிலும் பெயர் அல்லது தொழிலினால் பெண்பாலாகப் பால் பிரியுஞ்சொல் .
ஆத்தம் விருப்பம் ; குருவுக்குச் செய்யும் பணிவிடை ; அன்பு .
ஆத்தல் யாத்தல் ; அமைத்தல் ; கட்டுதல் .
ஆத்தவாக்கியம் நட்பாளர் மொழி ; வேதசாத்திரங்கள் .
ஆத்தன் விருப்பமானவன் ; அருகன் ; நம்பத்தக்கோன் .
ஆத்தாடி வியப்புக் குறிப்பு ; இளைப்பாறற் குறிப்பு .
ஆத்தாரமூத்தாள் பூனைக்காலிக்கொடி .
ஆத்தா தாய் ; பார்வதி .
ஆத்தாள் தாய் ; பார்வதி .
ஆத்தானம் அரசவை ; கோபுரவாயில் .
ஆத்தி மரவகை ; திருவாத்தி ; செல்வம் ; அடைகை ; சம்பந்தம் ; இலாபம் ; பெண்பால் விகுதி ; அச்ச வியப்புக்குறிப்பு .
ஆண்மகன் ஆண் குழந்தை ; கணவன் ; ஆணிற்சிறந்தோன் .
ஆண்மரம் உள்வயிரமுள்ள மரம் ; காண்க : சேமரம் ; அழிஞ்சில் .
ஆண்மாரி அடங்காக் குணமுள்ளவள் .
ஆண்மை ஆளும்தன்மை ; ஆண்தன்மை ; வெற்றி ; வலிமை ; அகங்காரம் ; உடைமை ; வாய்மை .
ஆண்மைத்தனம் ஆண்மைத்தன்மை .
ஆண்மைப் பொதுப்பெயர் உயர்தினை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர் .
ஆண்மையாளர் வலிமையுற்றோர் ; திறம் படைத்தவர் ; வீரர் .
ஆண்மையிலி பெண்தன்மை உடையவன் ; ஆளும் தன்மை இல்லாதவன் .
ஆண்வசம்பு சிலும்பலுள்ள வசம்பு .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆதம் அன்பு ; ஆதரவு ; கூந்தற்பனை .
ஆதம்பேதி செப்புநெருஞ்சில் பூண்டு .
ஆதமிலி ஆதரவற்றவன் , திக்கற்றவன் .
ஆதர் அறிவில்லாதவர் ; குருடர் .
ஆதரணை ஆதரவு .
ஆதரம் அன்பு ; ஆசை ; உபசாரம் ; ஓடக்கூலி ; சிலம்பு .
ஆதரவு அன்பு ; உதவி ; தோற்றுகை ; ஆதாரம் .
ஆதரவுச்சீட்டு பற்றுச்சீட்டு .
ஆதரவுசொல்லுதல் தேறுதல்சொல்லுதல் .
ஆதராதிசயம் அன்புமிகுதி .
ஆதரிக்கை அன்புசெய்தல் ; பேணுதல் .
ஆதரிசம் கண்ணாடி ; உரை ; மூல ஏடு .
ஆதரிசனம் கண்ணாடி ; உரை ; மூல ஏடு .
ஆதரித்தல் ஆசைகூர்தல் ; உபசரித்தல் ; பாதுகாத்தல் ; உதவிசெய்தல் ; தழுவிப் பேசுதல் .
ஆதல் ஆவது எனப் பொருள்படும் இடைச்சொல் ; நூல் ; கூத்து ; தரிசனம் ; நுணுக்கம் ; ஆசை ; உண்டாதல் ; நிகழ்தல் ; முடிதல் ; இணக்கமாதல் ; வளர்தல் ; அமைதல் ; ஒப்பாதல் .
ஆதலால் ஆகையால் .
ஆதவம் காண்க : ஆதபம் ; ஒளி ; கொன்றைப்பூ .
ஆதவன் காண்க : ஆதபன் ; வேதியன் ; சூரியகாந்தி .
ஆதளை காண்க : ஆமணக்கு ; காட்டாமணக்கு வகை ; மாதுளை ; பெருந்துன்பம் .
ஆதளைமாதளை மயக்கம் ; வருத்தம் .
ஆதன் ஆன்மா ; அறிவில்லாதவன் ; குருடன் ; பழைய காலத்து மக்கள் இயற்பெயர் வகை ; அருகன் ; ஆரியன் ; வாதனை .
ஆதன்மை பேதைமை .
ஆதன்மையால் ஆகையால் .
ஆதனம் காண்க : ஆசனம் ; யோகாசனம் ; பிருட்டம் ; பீடம் ; தரை ; சீலை ; சொத்து ; யானைக்கழுத்து .
ஆதனமூர்த்தி படிமம் ; இலிங்கம் .
ஆதாபாதா மகமதியர்களிடையே வரவேற்குங் காலத்தில் சொல்லும் உபசாரவார்த்தை .
ஆதாயஞ்செலவு வரவுசெலவு .
ஆதாயப்பங்கு இலாபப் பங்கு .
ஆத்திரக்காரன் அவசரப்படுபவன் .
ஆத்திரகம் இஞ்சி .
ஆத்திரம் பரபரப்பு ; சினம் .
ஆத்திரேயன் சந்திரன் ; அத்திரி குலத்தில் பிறந்தவன் .
ஆத்திரேயி பூப்புள்ளவள் ; ஓர் ஆறு .
ஆத்திரை காண்க : யாத்திரை ; சுற்றுலா .
ஆத்திரையன் அத்திரி குலத்தில் பிறந்தவன் .
ஆத்திறைப்பாட்டம் கால்நடை வரி .
ஆத்தின்னி பாணன் .
ஆத்துமகத்தியை தற்கொலை .
ஆத்துமகுப்தா காண்க : பூனைக்காலி .
ஆத்துமசக்தி ஆன்மாவுக்குரிய ஆற்றல் .
ஆத்துமசன் மகன் .
ஆத்துமசிநேகிதன் உயிர்த்தோழன் .
ஆத்துமசுத்தி ஆத்துமாவின் தூய்மை ; காண்க : ஆன்மசுத்தி .
ஆத்துமஞானம் தன்னையறியும் அறிவு .
ஆத்துமஞானி தன்னையறிந்தவன் .
ஆத்துமதரிசனம் ஆன்மாவின் நிலையை அறிகை ; காண்க : ஆன்மதரிசனம் .
ஆத்துமநாசம் தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை .
ஆத்துமநிவேதனம் உயிர்ப்பலி ; தன்னை அர்ப்பணஞ் செய்கை .
ஆத்துமபந்து ஆன்மாவின் உறுதிச் சுற்றம் ; அத்தை மகன் , அம்மான் மகன் முதலிய உறவுகள் .
ஆத்துமபுத்தி தன் அறிவு .
ஆத்துமபோதம் காண்க : ஆத்துமஞானம் .
ஆத்துமம் உயிர் ; உயிரி ; அரத்தை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
ஆத்துமராமன் ஆத்ம திருப்தியுடையவன் .
ஆத்துமரூபம் ஆன்மலாபம் ; காண்க : ஆன்மரூபம் .
ஆத்துமலாபம் உயிர் உய்கை ; சொந்த இலாபம் ; தன்னையறிகை .
ஆத்துமவதம் காண்க : ஆத்துமகத்தியை .
ஆத்துமவதிகாசனம் நல்லிருக்கை என்னும் யோகாசனம் .
ஆத்துமவிசாரம் ஆத்துமாவை அறியும் சிந்தனை .
ஆத்துமவிரக்கங்காட்டுதல் மனப்பூர்த்தியாக அன்பும் அருளும் காட்டுதல் .
ஆத்துமா உயிர் ; சீவான்மா ; உயிரி .
ஆத்துமாபகாரம் ஆத்துமாவின் இயல்பினை வேறாக நினைக்கை ; பரதந்திரனான சீவனைச் சுதந்திரனாக நினைக்கை .
ஆத்துமார்த்தம் ஆத்தும இலாபத்திற்குரியது ; தன்பொருட்டு ; மிக்க நட்பு .
ஆத்துமானந்தம் தனக்குள் மகிழ்கை ; தற்போதத்தால் நிகழும் மகிழ்ச்சி .
ஆத்துமானுபவம் தன்னைத் தான் அனுபவிக்கை .
ஆத்துமிகம் காண்க : ஆத்தியாத்துமிகம் ; ஆன்மா சம்பந்தமுடையது .
ஆத்தை தாய் ; வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் .
ஆத்மா காண்க : ஆத்துமா .
ஆதங்கம் நோய் ; அச்சம் ; துன்பம் ; முரசின் ஓசை .
ஆதண் நோய் ; வருத்தம் .
ஆதண்டை காண்க : ஆதொண்டை .
ஆததாயிகள் கொடியோர் ; அவராவார் ; தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார் , கருவியிற் கொல்வார் , கள்வர் , ஆறலைப்பார் , சூறைகொள்வார் , பிறனில் விழைவார் .
ஆதபத்திரம் குடை ; வெண்குடை .
ஆதபம் வெயில் ; பிரகிருதிகளுள் ஒன்று .
ஆதபயோகம் வெயிற்கடுமை தாங்கும் யோகநிலை .
ஆதபன் சூரியன் .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆதிச்சுவடி காண்க : அரிச்சுவடி .
ஆதிசத்தி பஞ்ச சக்திகளுள் ஒன்று ; ஆதியாகிய சக்தி .
ஆதிசேடன் பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கிறது எனக் கூறும் 'அனந்தன்' என்கிற பாம்பு .
ஆதிசைவம் சைவ சமயப் பிரிவுகள் பதினாறனுள் ஒன்று .
ஆதிசைவர் சிவாலயங்களில் பூசை புரியும் அதிகாரிகளாகிய குருக்கள் .
ஆதிட்டம் கட்டளையிடப்பட்டது , சொல்லப்பட்டது ; உண்டுகழிந்த மிச்சில் .
ஆதித்தநோக்கு சூரியனுடைய பார்வை .
ஆதித்தபுடம் சூரிய நிலையைக் குறிக்கும் இராசிபாகை .
ஆதித்தபுத்தி சூரியனது நாட்கதி .
ஆதித்தம் காவிக்கல் ; துரிசு .
ஆதித்தமண்டலம் சூரிய வட்டம் ; இதயத்திலுள்ள ஒரு யோகத்தானம் ; சூரிய உலகம் .
ஆதித்தர் தேவர் ; பன்னிரு சூரியர் .
ஆதிவாரம் ஞாயிற்றுக்கிழமை .
ஆதித்தவாரம் ஞாயிற்றுக்கிழமை .
ஆதித்தன் சூரியன் ; உவர்மண் .
ஆதித்தியம் விருந்தோம்பல் ; ஒரு சோதிடநூல் .
ஆதித்தியன் சூரியன் ; விருந்தோம்புவோன் .
ஆதிதாசர் சிவபெருமானின் அணுக்கத் தொண்டர் , சண்டேசுவரர் .
ஆதிதாளம் தாளவகை .
ஆதிதிராவிடர் தமிழகப் பழங்குடி மக்கள் .
ஆதிதேயம் உண்டி , நீர் முதலியன அளித்து வழிபடல் .
ஆதிதேயன் விருந்தினரைப் போற்றுவோன் ; தேவன் .
ஆதிதேவன் கடவுள் .
ஆதிதைவிகம் தெய்வத்தால் வருந்துன்பம் .
ஆதிநாடி ஆதாரமாயுள்ள நாடி .
ஆதிநாதர் நவநாத சித்தருள் ஒருவர் ; முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவர் .
ஆதிநாதன் கடவுள் .
ஆதிநாராயணன் திருமால் ; வயிரக்கல் .
ஆதிநாள் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை .
ஆதிநித்தியர் படைக்கப்பட்டும் ஒரு நாளும் அழியாதவர் .
ஆதிநூல் முதனூல் ; வேதம் .
ஆதிபகவன் கடவுள் .
ஆதிபத்தியம் தலைமை ; இராசிச் சக்கரத்துள் குறிப்பிட்ட வீட்டுக்குடையவன் .
ஆதிபரன் கடவுள் .
ஆதிபலம் சாதிக்காய் .
ஆதிபன் இறைவன் .
ஆதிபுங்கவன் கடவுள் ; அருகன் .
ஆதிபுரி திருவொற்றியூர் .
ஆதிபூதன் பிரமன் , முன்பிறந்தவன் , முன்னுள்ளவன் .
ஆதிபூமி திருமண வேள்வி நடத்தும் இடம் .
ஆதிபௌதிகம் பஞ்ச பூதங்களாலும் தன்னை ஒழிந்த உயிரினங்களாலும் உண்டாகும் துன்பம் .
ஆதிமகாகுரு துரிசு .
ஆதிமகாநாதம் உலோகமணல் .
ஆதாயம் இலாபம் ; இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் .
ஆதாரசக்தி சிவசக்தி .
ஆதாரசிலை கற்சிலையைத் தாங்கும் அடிக்கல் .
ஆதாரணை ஆராதனை செய்யும்போது உண்டாகும் தெய்வ ஆவேசம் .
ஆதாரதண்டம் முதுகெலும்பு .
ஆதாரநிலை பற்றுக்கோடு .
ஆதாரபீடம் காண்க : ஆதாரசிலை .
ஆதாரம் பற்றுக்கோடு ; ஆதரவுச்சாதனம் ; பிரமாணம் ; உடல் ; மழை ; ஆறாதாரம் ; மூலம் ; அடகு ; ஏரி ; பாத்தி ; அதிகரணம் .
ஆதாரலக்கணை இடவாகுபெயர் .
ஆதாளி பேரொலி ; கலக்கடி ; வீம்புப் பேச்சு .
ஆதாளிக்காரன் வீம்பு பேசுகின்றவன் .
ஆதாளித்தல் ஆயாசப்படுதல் .
ஆதாளிமன்னன் கரடி .
ஆதாளை காண்க : ஆதளை .
ஆதானம் வைக்கை ; பற்றுகை ; குதிரையணி .
ஆதானும் எதுவாயினும் .
ஆதி தொடக்கம் ; தொடக்கமுள்ளது ; காரணம் ; பழைமை ; கடவுள் ; எப்பொருட்கும் இறைவன் ; சூரியன் ; சுக்கிரன் ; திரோதான சக்தி ; காண்க : ஆதிதாளம் ; அதிட்டானம் ; ஒற்றி ; காய்ச்சற்பாடாணம் ; மிருதபாடாணம் ; நாரை ; ஆடாதோடை ; குதிரையின் நேரோட்டம் ; மனநோய் .
ஆதிக்கடுஞ்சாரி நவச்சாரம் .
ஆதிக்கப்பேறு வரிவகை .
ஆதிக்கம் தலைமை ; அரசாளிடம் ; உரிமை ; மிகுதி .
ஆதிக்கற்பேதம் அன்னபேதி .
ஆதிக்கன்னாதம் அன்னபேதி .
ஆதிக்கன் சிறப்புடையோன் ; மரபோன் .
ஆதிக்கியம் தலைமை ; மேன்மை ; உரிமை ; காண்க : ஆதிக்கம் .
ஆதிக்குடி சவர்க்காரம் .
ஆதிக்குரு பூவழலை .
ஆதிகம் சிறுகுறிஞ்சாக்கொடி முதலியன .
ஆதிகவி முதற்புலவன் ; வான்மீகி முனிவர் .
ஆதிகாரணம் முதற்காரணம் .
ஆதிகாலம் பண்டைக்காலம் .
ஆதிகாவியம் முதலில் தோன்றிய காவியம் ; வால்மீகி இராமாயணம் .
ஆதிச்சனி காண்க : மகம் .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆதிரம் நெய் ; நெய்ச்சிட்டி .
ஆதிரவிச்சிலை செங்கழுநீர்க்கல் .
ஆதிரன் பெரியோன் .
ஆதிரை திருவாதிரை நாள் ; மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சாதுவன் மனைவி .
ஆதிரை முதல்வன் சிவன் .
ஆதிரையான் சிவன் .
ஆதிவராகம் பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் .
ஆதிவராகன் பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் .
ஆதிவாகியம் நுண்ணுடம்பு .
ஆதிவாரம் ஞாயிற்றுக்கிழமை .
ஆதிவிந்து கார்முகில்பாடாணம் .
ஆதிவிராகன் சோரபாடாணம் .
ஆதிவிராட்டியன் சூதபாடாணம் ; சோரபாடாணம் .
ஆதிவேதனிகம் கணவன் இரண்டாந் தாரம் கொள்ளும்போது மூத்தாளுக்கு உரிமையாக்கும் பொருள் .
ஆதீண்டுகுற்றி ஆவுரிஞ்சுதறி , பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் .
ஆதீனகர்த்தன் நிலக்கிழார் .
ஆதீனகர்த்தா சைவ மடாதிபதி .
ஆதீனத்தர் காண்க : ஆதீனகர்த்தா .
ஆதீனம் சைவமடம் ; உரிமை ; வசம் .
ஆது பாகர் யானையைத் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல் ; ஆறாம் வேற்றுமையுருபு ; தெப்பம் .
ஆதும் ஒன்றும் , சிறிதும் .
ஆதுமம் அரத்தை .
ஆதுரசாலை அறச்சாலை .
ஆதுரம் பரபரப்பு ; அவா ; நோய் .
ஆதுரன் நோயுற்றோன் ; ஆசையுற்றோன் .
ஆதுலசாலை ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை .
ஆதுலர்சாலை ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை
ஆதுலன் ஆற்றலற்றவன் ; வறியோன் .
ஆதுவம் கள் .
ஆதுனிகன் இக்காலத்தவன் .
ஆதேசம் கட்டளை ; திரிந்த எழுத்து ; காண்க : ஆதேயம் .
ஆதேயம் தாங்கப்படுவது .
ஆதொண்டை காற்றோட்டிக் கொடி ; காற்றோட்டிச் செடி .
ஆதோரணன் யானைப்பாகன் .
ஆந்தரங்கம் காண்க : அந்தரங்கம் .
ஆந்தரம் உள்ளேயிருப்பது ; மறைபொருள் .
ஆந்தராளிகன் நடுநிலையாளன் .
ஆந்திரம் குடல் ; தெலுங்கு நாடு ; தெலுங்கு மொழி .
ஆந்தை பறவைவகை ; பேராமுட்டி ; ஓர் இயற்பெயர் .
ஆந்தைக்காதல் ஆந்தை கூவுதல் ; ஆந்தை நூல் .
ஆந்தோளம் இசையில் இடம்பெறும் கமகம் பத்தனுள் ஒன்று .
ஆந்தோளி சிவிகை .
ஆந்தோளிகம் சிவிகை .
ஆநிலை பசுக்கொட்டில் .
ஆநின்று நிகழ்கால இடைநிலை .
ஆப்தசேவை குருவுக்குச் செய்யும் தொண்டு .
ஆப்தம் நட்பு .
ஆப்தவாக்கியம் பெரியோர்களின் வாக்கியங்கள் .
ஆப்தன் நம்பத்தக்கோன் ; உற்ற நண்பன் .
ஆப்திகம் தலைத்திவசம் .
ஆப்பம் அப்பம் ; ஒருவகைத் தின்பண்டம் ; கும்பராசி .
ஆப்பி பசுவின் சாணி .
ஆப்பிடுதல் அகப்படுதல் .
ஆப்பியந்தரம் உள்ளானது .
ஆப்பியாயனம் மனநிறைவு .
ஆதிமடக்கு அடியின் முதலில் சொல் மடங்கி வருவது .
ஆதிமருந்து திரிகடுகம் ; சுக்கு , மிளகு , திப்பிலி .
ஆதிமலை இமயமலை .
ஆதிமீன் காண்க : அசுவினி .
ஆதிமுத்தன் ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மா .
ஆதிமூர்த்தி முதற் கடவுள் .
ஆதிமூலபுத்தகம் அரிச்சுவடி .
ஆதிமூலம் முதற்காரணம் , மூலகாரணமானது .
ஆதிமொழி முதன்மொழி , தமிழ்மொழி ; வடமொழி .
ஆதியங்கடவுள் முதற்கடவுள் ; அருகன் .
ஆதியந்தகாலநாடி நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு .
ஆதியந்தகாலம் நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு .
ஆதியந்தணன் பிரமதேவன் .
ஆதியந்தம் முதலும் முடிவும் , அடிமுடி .
ஆதியரிவஞ்சம் போகபூமிவகை .
ஆதியாகமம் பகுசுருதியாகமம் ; விவிலிய நூலில் முதற்பகுதி .
ஆதியாமம் சங்கஞ்செடி .
ஆதியூழி கிருதயுகம் .
ஆதியெழுத்து முதலெழுத்துகள் ; உயிர் 12 , மெய் 18 .
ஆதிரசாலை காண்க : ஆதுலர்சாலை .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆமக்கழிச்சல் சீதபேதி .
ஆவத்து விபத்து , கேடு .
ஆபத்துசம்பத்து தாழ்வு வாழ்வு .
ஆபதம் காண்க : ஆபத்து .
ஆபதமறுத்தல் கேடு நீக்குதல் .
ஆபதுத்தாரணம் கேட்டை நீக்கிக் காத்தல் .
ஆபதுத்தாரணன் துன்பத்தினின்றும் காப்போன் .
ஆபந்தம் அலங்காரம் ; கட்டு ; நுகக்கயிறு .
ஆபம் நீர் ; தீவினை .
ஆபயன் பால் .
ஆபரணச்செப்பு அணிகலப் பேழை .
ஆபரணம் அணிகலம் ; அலங்காரம் .
ஆபற்காலம் ஆபத்துச் சமயம் .
ஆபற்சன்னியாசம் காண்க : ஆபத்சன்னியாசம் .
ஆபனம் காண்க : மிளகு .
ஆபாசம் போலி ; எதுரொளி ; தூய்மையின்மை ; முறைத்தவறு ; அவதூறு .
ஆபாசித்தல் உண்மையான பொருளைப்போலத் தோன்றுதல் , எதிரொளித்தல் .
ஆபாடம் பாயிரம் .
ஆபாத் போர்வீரருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக்கூடிய ஊர் .
ஆபாத்செய்தல் குடியேற்றி வளஞ்செய்தல் .
ஆபாதகேசம் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை .
ஆபாதசூடம் அடிமுதல் முடிவரை .
ஆபாதம் நிகழ்காலம் ; விழுகை ; காண்க : ஆபாதகேசம் .
ஆபாதமத்தம் காண்க : ஆபாதகேசம் .
ஆபாதமத்தகம் காண்க : ஆபாதகேசம் .
ஆபாதன் தீயவன் .
ஆபாலகோபம் எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் .
ஆபாலகோபாலம் எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் .
ஆபாலவிருத்தர் சிறுவர் முதல் முதியோர்வரை உள்ளவர் .
ஆபாலி பேன் .
ஆபானம் மதுக்கடை .
ஆபிசாரம் காண்க : அபிசாரம் ; பகைவன் இறக்குமாறு செய்யும் ஒரு கொடுந்தொழில் .
ஆபிமுக்கியம் அனுகூலமாயிருக்கை .
ஆபீரம் ஆயர்வீதி .
ஆபீரவல்லி இடைச்சேரி .
ஆபீரன் இடையன் .
ஆபீலம் துன்பம் ; அச்சம் .
ஆபீனம் பசுவின் மடி .
ஆபூபிகம் அப்பவரிசை .
ஆபூபிகன் அப்பஞ்சுடுவோன் ; அப்பம் விற்போன் .
ஆபை அழகு ; ஒளி ; தோற்றம் ; நிறம் .
ஆபோக்கிலிமம் இலக்கினத்திற்கு மூன்று , ஆறு , ஒன்பது , பன்னிரண்டாம் இடங்கள் .
ஆபோகம் கீதவுறுப்புள் ஒன்று ; எத்தனம் ; நிறைவு ; வருணன் குடை .
ஆபோசனம் விழுங்குகை ; உண்ணுதலுக்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரை உட்கொள்ளுகை .
ஆம் நீர் ; ஈரம் ; வீடு ; மாமரம் ; அழகு ; சம்மதங் காட்டும் சொல் ; கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல் ; இகழ்ச்சிக் குறிப்பு ; அனுமதி , தகுதி , ஊக்கம் குறிக்கும் சொல் ; ஆவது ; ஆகிய ; சாரியை ; அசைநிலை ; தன்மைப் பன்மை விகுதி ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி .
ஆம்பரியம் மின்சாரம் .
ஆம்பல் அல்லி ; காண்க : ஆம்பற்குழல் ; பண்வகை ; மூங்கில் ; ஊதுகொம்பு ; யானை ; கள் ; ஒரு பேரெண் ; துன்பம் ; அடைவு ; சந்திரன் ; நெல்லிமரம் ; புளியாரைப்பூண்டு ; பேரொலி .
ஆம்பலரி கதிரவன் ; முதலை .
ஆம்பலா புளியாரைப்பூண்டு .
ஆம்பற்குழல் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த ஓர் இசைக்கருவி .
ஆம்பாறுதல் செழிப்புக் குறைதல் .
ஆம்பி காளான் ; பன்றிப்பத்தர் ; ஒலி .
ஆம்பிகேயன் முருகக்கடவுள் ; திரிதராட்டிரன் .
ஆம்பியம் பாதரசம் .
ஆம்பிரம் காண்க : தேமா ; புளிமா ; கள் ; புளிப்பு .
ஆம்பிலம் புளிப்பு ; புளியமரம் ; கள் ; சூரை ; உப்பிலி .
ஆம்பு காண்க : காஞ்சொறி .
ஆம்புகு சூரை ; புளியமரம் .
ஆம்புடை உபாயம் .
ஆம்புலம் காண்க : சூரை .
ஆம்பூறு சூரைச்செடி .
ஆம்மிரம் ஒரு பலம் எடை .
ஆமக்கட்டி சுரக்கட்டி .
ஆப்பு முளை ; காண்க : எட்டி ; நோய் ; உணவு ; கட்டு ; உடல் .
ஆப்புத்தள்ளி அச்சுக்கூடக் கருவிகளிலொன்று .
ஆப்புலுதம் குதிரையின் நடைவகை .
ஆப்புளண்டம் காண்க : கரிசலாங்கண்ணி .
ஆபகம் ஆறு ; கங்கை .
ஆபகை ஆறு ; கங்கை .
ஆபணியம் அங்காடிச் சரக்கு ; அங்காடி வீதி .
ஆபத்சகாயன் துன்பத்தில் உதவுவோன் .
ஆபத்சன்னியாசம் இறக்குங்கால் பெறும் துறவு .
ஆபத்தனம் எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் .
ஆவத்தனம் எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் .
ஆபத்து விபத்து , கேடு .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆய்ச்சி தாய் ; பாட்டி ; பெண் ; இடைச்சி .
ஆய்ஞன் ஆராய்பவன் .
ஆய்த்தி காண்க : ஆய்ச்சி .
ஆய்த்து ஆயிற்று .
ஆமக்கள் கணவன் .
ஆமக்கன் கணவன் .
ஆமகணம் குழந்தைகட்குச் சீதவழும்பு விழும் நோய் .
ஆமசன்னி செரியாமையால் வரும் சன்னி .
ஆமசிராத்தம் சமைக்காத உணவுப்பொருளைக் கொண்டு செய்யுஞ் சிராத்தம் .
ஆமசுரம் செரியாமையால் குழந்தைகளுக்கு வரும் சுரம் .
ஆமசூலை செரியாமையால் வரும் வயிற்று வலி .
ஆமடி எட்டிமரவகை .
ஆமண்டம் விளக்கெண்ணெய் விதைதரும் செடி .
ஆமணக்கு விளக்கெண்ணெய் விதைதரும் செடி .
ஆமணக்குநெய் கொட்டைமுத்தெண்ணெய் , விளக்கெண்ணெய் .
ஆமணக்குமுத்து கொட்டைமுத்து .
ஆமணக்கெண்ணெய் காண்க : ஆமணக்குநெய் .
ஆமணத்தி கோரோசனை .
ஆமதி நண்டு .
ஆமந்திரிகை இடக்கை வாத்தியம் .
ஆமநாயம் வழக்கம் ; ஆகமம் ; குலன் .
ஆமம் பக்குவஞ் செய்யப்படாதது ; செரியாமை ; சீதபேதி , காளான் ; கடலை ; துவரை .
ஆமயம் பசுவின் சாணி ; நோய் .
ஆமரகோளம் கடுக்காய்ப்பூ .
ஆமரம் எட்டிமரம் .
ஆமரி சொல் .
ஆமரிகம் காண்க : ஆமலகம் .
ஆமல் காண்க : மூங்கில் ; விடமூங்கில் .
ஆமலகம் நெல்லி .
ஆமலகமலம் காண்க : கொட்டைப்பாசி .
ஆமலகி நெல்லி .
ஆமவாதரோகம் வாதநோய் வகை .
ஆமளம் சிவத்துதிவகை .
ஆமா காட்டுப் பசு ; பால்கொடுக்குந் தாய் ; ஆமாம் .
ஆமாகோளா காண்க : ஆமரகோளம் .
ஆமாசயம் இரைப்பை .
ஆமாத்தியன் அமைச்சன் ; படைத்தலைவன் ; மருத்துவன் .
ஆமாத்திரர் அமைச்சர் ; மருத்துவர் .
ஆமாம் ஒரு சம்மதக் குறிச்சொல் .
ஆமாம்போடுதல் எதற்கும் ஒத்துக் கூறுதல் .
ஆமாறு வழி .
ஆமான் காட்டுப்பசு .
ஆமான்புகல்வி ஆமான் ஏறு .
ஆமானவன் சிறந்தவன் .
ஆமிசம் ஊன் ; கைக்கூலி ; புணர்ச்சி ; போகத்திற்குரிய பொருள் .
ஆமிடம் உணவு ; கண்டுமுதல் ; விளைவுமதிப்பு .
ஆமிநாயம் காண்க : ஆமநாயம் .
ஆமிரம் மாமரம் ; புளிப்பு .
ஆமிரேசர் மாமரத்தின்கீழ்க் கோயில் கொண்டுள்ளவர் , ஏகாம்பரநாதர் .
ஆமிலம் புளிப்பு ; புளியமரம் .
ஆமிலிகை புளிப்பு .
ஆமிலை காண்க : புளியாரை .
ஆமின் காண்க : அமீன் .
ஆமுகம் தொடக்கம் .
ஆமுகர் நந்திதேவர் .
ஆமென் அப்படியே ஆகுக .
ஆமேற்பல்லூரி கோரோசனை .
ஆமை கூர்மம் ; ஓர் உயிரினம் ; ஒரு நோய் ; மணம் .
ஆமைத்தாலி ஆமை வடிவுள்ள தாலி .
ஆமைதவழி ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம் .
ஆமைப்பலகை ஆமை உரு அமைத்த மணை .
ஆமைப்பூட்டு பூட்டுவகை .
ஆமைமடி பால் நிரம்பச்சுரக்கும் சிறுமடி .
ஆமையாழ் செவ்வழி யாழ்வகை .
ஆமையோட்டுக்கட்டி பெரும் புண்கட்டி .
ஆமையோடு ஆமையின் முதுகோடு .
ஆமோசனம் கட்டுதல் ; ஒளிவீசுதல் ; விடுதலை செய்தல் .
ஆமோதம் மகிழ்ச்சி ; மிகுமணம் .
ஆமோதனம் எடுத்து மொழிந்ததற்கு உட்படுகை , முன்மொழிந்ததற்கு உட்படுகை .
ஆமோதித்தல் உடன்பட்டதைத் தெரிவித்தல் .
ஆய் அழகு ; நுண்மை ; சிறுமை ; மென்மை ; வருத்தம் ; இடைச்சாதி ; தாய் ; கடைவள்ளல்களுள் ஒருவன் ; மலம் ; பொன் ; அருவருப்புக்குறிப்பு ; முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; ஏவலொருமை விகுதி ; ஆக ; ஒரு விளியுருபு .
ஆய்க்குடி இடைச்சேரி .
ஆய்க்குழல் புல்லாங்குழல் .
ஆயக்குழல் புல்லாங்குழல் .
ஆய்ச்சல் வேகம் ; முறை ; பாட்டம் .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆயானம் இயற்கைக் குணம் ; வருதல் .
ஆயி தாய் ; ஆயா ; ஒரு சக்தி ; ஒரு மரியாதைச் சொல் .
ஆயிட்டு ஆகையால் .
ஆயிடை அவ்விடம் ; அக்காலத்து .
ஆயிரக்கால் மண்டபம் ஆயிரம் தூண்களுள்ள கோயில் மண்டபம் .
ஆயிரக்காலி மரவட்டை ; துடைப்பம் .
ஆயிரக்கிரணன் சூரியன் .
ஆயிரங்கண்ணன் இந்திரன் .
ஆயிரங்கண்ணோன் இந்திரன் .
ஆயிரங்கண்ணுப் பானை கலியாணத்தில் பயன்படுத்தும் வண்ணப்பானை .
ஆயிரங்கதிரோன் காண்க : ஆயிரக்கிரணன் .
ஆயிரங்காய்ச்சி மிகுதியாகக் காய்க்கும் தென்னை , பலா , மாப் போன்ற மரங்கள் ; துடைப்பம் .
ஆயிரங்காற்சடை துடைப்பம் .
ஆயிரஞ்சோதி சூரியன் .
ஆயிரநாமன் ஆயிரம் திருப்பெயர்களையுடையவன் ; சிவன் ; திருமால் .
ஆயிரம் ஓர் எண் .
ஆயிரம்பெயரோன் காண்க : ஆயிரநாமன் .
ஆயிரமுகத்தோன் வீரபத்திரன் .
ஆயிரவருக்கம் உடற்கவசம் .
ஆய்தக்குறுக்கம் மாத்திரை குறுகிய ஆய்தம் .
ஆய்தப்புள்ளி ஆய்தவெழுத்து .
ஆய்தம் மூன்று புள்ளி (ஃ) வடிவினதாகிய ஓரெழுத்து , சார்பெழுத்துகளுள் ஒன்று .
ஆய்தல் நுணுகுதல் ; வருந்துதல் ; அழகமைதல் ; அசைதல் ; சோதனை செய்தல் ; பிரித்தெடுத்தல் ; ஆலோசித்தல் ; தெரிந்தெடுத்தல் ; கொண்டாடுதல் ; கொய்தல் ; காம்பு களைதல் ; குத்துதல் .
ஆய்தூவி சூட்டுமயிர் ; தலைமேலுள்ள மெல்லிய இறகு .
ஆய்ந்தோர் அறிஞர் ; புலவர் ; பார்ப்பார் .
ஆய்ப்பாடி காண்க : ஆயர்பாடி .
ஆய்ப்பு ஒடுங்குகை .
ஆய்மலர் தாமரை .
ஆய்மா காண்க : ஆவிமா ; சாரப்பருப்பு .
ஆய்மை ஆராயுந்தன்மை ; நுண்ணிய பொருள் .
ஆய்வரல் ஆராய்தல் ; கூடிவருதல் .
ஆய்வருதல் ஆராய்தல் ; கூடிவருதல் .
ஆய்வாளர் ஆராய்ச்சியாளர் .
ஆய்வு ஆராய்கை ; அகலம் ; வருத்தம் ; நுணுக்கம் .
ஆய்வை துயிலிடம் .
ஆயக்கசுரம் முறைக்காய்ச்சல் .
ஆயக்கட்டு குளப்புரவு ; ஊரின் மொத்த நிலவளவுக் கணக்கு ; பொய்ம்மொழி .
ஆயக்கட்டுமானியம் அரசாங்கச் சட்டத்தின் படி (சாசனப்படி) ரொக்கமாக வசூலிக்கும் பணம் .
ஆயக்கர் ஊர்ப்பணியாளருள் ஒருவகையார் .
ஆயக்கல் காரக்கல் .
ஆயக்காரன் சுங்கம் முதலிய வரிவாங்குவோன் .
ஆயக்காரி பொதுமக்கள் .
ஆயக்கால் வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி .
ஆயக்கோல் வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி .
ஆயச்சாவடி சுங்கத்துறை .
ஆயசம் இருப்பாயுதம் ; இரும்புச்சட்டை ; இரும்பினாற் செய்யப்பட்டது .
ஆயசூரி கடுகு .
ஆயத்தம் முன்னேற்பாடு ; அணியம் , சித்தம் ; போருக்குத் தயார் ; கூர்மை ; கோபம் ; தள்ளுகை ; இசைக்கிளையில் ஒன்று .
ஆயத்தலம் மறைவிடம் ; காண்க : ஆயத்துறை .
ஆயத்தார் தோழியர் கூட்டம் ;
ஆயத்தி நாள் ; எல்லை ; அன்பு ; வலி ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை .
ஆயத்துறை சுங்கச்சாவடி .
ஆயதம் நீளம் ; அகலம் குறைந்து நீளமாயிருக்கும் வடிவம் ; அளவிற்பெருமை .
ஆயதனம் ஆலயம் ; இடம் ; வீடு .
ஆயதி வருங்காலம் ; நீட்சி ; பெருமை ; பொருந்துகை .
ஆயந்தி அண்ணன் மனைவி .
ஆயந்தீர்த்தல் வரி செலுத்துதல் .
ஆயப்பாலை பாலைப்பண்வகை .
ஆயம் கமுக்கம் ; தோழியர் கூட்டம் ; வருத்தம் ; மேகம் ; மல்லரிப்பறை ; 34 அங்குல ஆழமுள்ள குழி ; வருவாய் ; குடியிறை ; கடமை ; சூதுகருவி ; கவற்றிற்றாயம் ; சூதாட்டம் ; பசுத்திரள் ; நீளம் ; மக்கள் தொகுதி ; பொன் .
ஆயமானம் உயிர்நிலை ; இரகசியம் .
ஆயமுற்கரவலன் குபேரன் .
ஆயமுற்கரவன் குபேரன் .
ஆயமேரை ஊர்ப்பணியாளர்களுக்குக் கொடுக்கும் தானியப் பகுதி .
ஆயர்பாடி இடைச்சேரி .
ஆயலோட்டல் பயிர் சேதமாகாதபடி மகளிர் பறவைகளை விரட்டுகை .
ஆயவன் அத்தகையவன் .
ஆயவியயம் வரவுசெலவு .
ஆயன் இடையன் .
ஆயனம் ஆண்டு ; நெல்வகை ; கிரணம் .
ஆயனி துர்க்கை .
ஆயா மரவகை ; பாட்டி ; தாதி .
ஆயாசம் களைப்பு ; மனவருத்தம் ; முயற்சி .
ஆயாமம் அடக்குகை ; நீளம் ; அகலம் .
ஆயாள் தாய் ; பாட்டி ; முதியவள் .
ஆயான் தந்தை ; தமையன் .

ஆர்க்கு இலைக்காம்பு ; கிளிஞ்சில் வகை ; எருக்கு ; ஒரு மீன் .
ஆர்க்குவதம் கொன்றைமரம் .
ஆர்க்கை வாரடை ; கட்டுகை ; துரும்பு .
ஆர்கதி திப்பிலி .
ஆர்கலி கடல் ; மழை ; வெள்ளம் ; திப்பி .
ஆர்கோதம் காண்க : சரக்கொன்றை .
ஆர்ச்சவம் ஒத்த நோக்கம் .
ஆர்ச்சனம் பொருளீட்டுகை ; அருச்சிக்கை .
ஆர்ச்சனை பொருளீட்டுகை ; அருச்சிக்கை .
ஆர்ச்சி ஆத்தி .
ஆர்ச்சித்தல் காண்க : ஆர்ச்சனம் .
ஆர்ச்சிதம் சம்பாத்தியம் ; கைப்பற்றப்பட்டது .
ஆர்த்தபம் மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு .
ஆர்த்தவம் மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு .
ஆர்த்தம் துன்பம் அடைந்தது .
ஆர்த்தர் எளியவர் ; நோயுற்றோர் ; பெரியோர் .
ஆர்த்தல் ஒலித்தல் ; போர்புரிதல் ; தட்டுதல் ; அலர்தூற்றுதல் ; கட்டுதல் ; பூணுதல் ; மறைத்தல் ; மின்னுதல் .
ஆர்த்தன் நோயுற்றோன் ; துன்புறுவோன் ; சான்றோன் .
ஆர்த்தார்க்கோன் சோழன் .
ஆர்த்தி வேதனை ; வில்லின் நுனி ; ஆர்வம் ; சிவசத்தியுள் ஒன்று .
ஆர்த்திகை துன்பம் .
ஆர்த்தியம் காட்டுத் தேன் .
ஆர்த்திரகம் இஞ்சி .
ஆர்த்திராதரிசனம் மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி .
ஆருத்திராதரிசனம் மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி .
ஆர்த்திரை திருவாதிரை .
ஆர்த்துதல் ஊட்டுதல் ; நிறைவித்தல் ; நுகர்வித்தல் ; கொடுத்தல் .
ஆர்த்துபம் பேரரத்தை .
ஆர்த்துவம் பேரரத்தை .
ஆர்தல் நிறைதல் ; பரவுதல் ; பொருந்துதல் ; தங்குதல் ; உண்ணுதல் ; துய்த்தல் ; ஒத்தல் ; அணிதல் ; பெறுதல் .
ஆர்ப்பரவம் ஆரவாரம் ; போர் .
ஆர்ப்பரித்தல் ஆரவாரித்தல் .
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் .
ஆர்ப்பாட்டம் ஆரவாரம் ; வீண்பேச்சு .
ஆர்ப்பு பேரொலி ; சிரிப்பு ; மகிழ்ச்சி ; போர் ; மாத்திரை கடந்த சுருதி ; கட்டு ; தைத்த முள்ளின் ஒடிந்த கூர் .
ஆயிரவாரத்தாழியன் திருவடிகளில் ஆயிரம் வரி கொண்ட சக்கரத்தையுடையவன் ; புத்தன் .
ஆயில் மதகரிவேம்பு ; செவ்வகில் ; அசோகு ; ஆயிலிய நாள் .
ஆயிலியம் ஒன்பதாம் மீன் .
ஆயிழை தெரிந்தெடுத்த அணிகலன் ; கன்னியாராசி ; அரிவாள்நுனி .
ஆயின் ஆனால் ; ஆராயின் .
ஆயின்மேனி மரகதவகை .
ஆயின்று ஆயிற்று .
ஆயினும் ஆனாலும் ; ஆவது ; உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல் .
ஆயு ஆயுள் ; எண்குற்றங்களுள் வாழ்நாளை வரையறுப்பது .
ஆயுகம் வாழ்நாள் .
ஆயுசகன் வாயு .
ஆயுசு வாழ்நாள் .
ஆயுசுகாரகன் சனி .
ஆயுசுமான் நீண்ட ஆயுளுடையவன் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .
ஆயுட்கோள் சாதகனுடைய ஆயுளைக் கணிப்பவனாகக் கருதப்படும் சனி .
ஆயுட்டானம் சன்மலக்கினத்திலிருந்து எட்டாமிடம் .
ஆயுட்டோமம் நீண்ட வாணாளின் பொருட்டுச் செய்யும் வேள்வி .
ஆயுதசாலை படைக்கலக் கொட்டில் .
ஆயுதப்பயிற்சி படைக்கலம் பயில்கை .
ஆயுதபாணி கையில் ஆயுதம் கொண்டவன் .
ஆயுதபூசை நவராத்திரியின் இறுதிநாளில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை .
ஆயுதம் படைக்கலம் ; கருவி ; ஆயத்தம் ; இசைக்கிளையில் ஒன்று .
ஆயுதிகன் பதினாயிரம் காலாட் படைக்குத் தலைவன் .
ஆயுநூல் காண்க : ஆயுர்(ள்)வேதம் .
ஆயுர்ப்பாவம் வாணாளின் போக்கு .
ஆயுர்வேதம் மருத்துவ நூல் .
ஆயுள்வேதம் மருத்துவ நூல் .
ஆயுர்வேதாக்கினி கமலாக்கினி , தீபாக்கினி , காடாக்கினி என்னும் மூன்று தீ .
ஆயுவின்மை அருகன் எண்குணத்துள் ஒன்று .
ஆயுள் வாழ்நாள் ; அப்பொழுது .
ஆயுள்வேதர் ஆயுள்வேதம் வல்லார் .
ஆயுள்வேதியர் ஆயுள்வேதம் வல்லார் .
ஆயெறும்பு எறும்புவகை .
ஆயோகம் நீர்க்கரை ; துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி ; அர்ச்சனை .
ஆயோதம் மோர் ; வேட்டம் .
ஆயோதனம் மோர் ; வேட்டம் .
ஆயோர் அவர்கள் ; ஆனோர் .
ஆர் நிறைவு ; பூமி ; கூர்மை ; அழகு ; மலரின் பொருத்துவாய் ; காண்க : ஆத்தி ; திருவாத்தி ; ஆரக்கால் ; தேரின் அகத்தில் செறிகதிர் ; அச்சு மரம் ; செவ்வாய் ; சரக்கொன்றை ; அண்மை ; ஏவல் ; பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி ; மரியாதைப் பன்மை விகுதி ; ஓர் அசை ; அருமையான .
ஆர்க்கங்கோடன் காண்க : கொல்லங்கோவை .
ஆர்க்கம் இலாபம் ; காண்க : ஆரகம் ; ஆரக்கம் ; சந்தனம் ; பித்தளை .

#160;