கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 30 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 18 -3

வெஃகாமை 
(3)
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

கருத்து 
அறநெறியால் அடையும் இன்பத்தை
விரும்புகின்றவர் ,நிலையில்லாத
சிற்றின்பத்தை விரும்பி அறம்
அல்லாதவற்றை செய்யமாட்டார்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 29 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 18-2

வெஃகாமை 
(2)
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நானு பவர்.

கருத்து 
நடுவு நிலைமை அல்லாமைக்கு
அஞ்சுகின்றவர் தமக்குண்டாகும்
பயனை விரும்பிப் பழியான
செயல்களைச் செய்ய மாட்டார் .

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 28 மார்ச், 2013

ஒரு பொருள் பல சொற்கள்-கா

(1)காரணம்-ஏது 
   காரணம்-நிமித்தம் 
   காரணம்-மூலம் 
    காரணம்-வழி

(2)காற்று - கால் 
    காற்று -பவளம் 
    காற்று - மாருதம் 
    காற்று - வளி
    காற்று - தென்றல்

(3)காடு-காணகம் 
    காடு-கானம்
    காடு-அடவி                               
    காடு-ஆரண்யம்
    காடு-வனம்

புதன், 27 மார்ச், 2013

ஒரு பொருள் பல சொற்கள்-க

(1)கடல் -உவர் 
    கடல் -சாகரம் 
    கடல் -சமுத்திரம் 
    கடல் -பரவை
    கடல் -ஆழி 
   கடல் -அலை


(2)கல்வி-கலை
    கல்வி-கேள்வி 
    கல்வி-வித்தை 
    கல்வி-விஞ்ஞை

(3)களிப்பு-உவகை 
    களிப்பு-மகிழ்ச்சி 
    களிப்பு-ஆனந்தம் 
    களிப்பு-இன்பம்

(4)கடவுள் - இறைவன் 
    கடவுள் - ஈசன் 
    கடவுள் - பரன்
    கடவுள் - தெய்வம்

(5)கள் - மது 
    கள் - தேன் 
    கள் - சொல் 
   கள் - விளம்பி

(6)கலப்பை - ஏர் 
   கலப்பை - மேழி 
  கலப்பை - இலாங்கனி



திருக்குறள் அதிகாரம் - 18-1

வெஃகாமை 
(1)
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

கருத்து 
நடுவு நிலைமை இல்லாமல் பிறருடைய
நல்ல பொருளை விரும்பினாள் ,அது
அவன் குடியைக் கெடுத்துப் பல
குற்றங்களையும் அப்பொழுதே தரும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


திருக்குறள் அதிகாரம் - 17-10

அழுக்காறாமை 
(10)
அழுக்கற்று அகன்றாரும்  இல்லைஅஃது இல்லார் 
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் 

கருத்து 
பொறாமை கொண்டு பெரியவரானவரும் 
இல்லை ;அஃது இல்லாதாரில் மேன்மையில்
இருந்து நீங்கினாரும் இல்

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 26 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 17-9

அழுக்காறாமை 
(9)
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கெடும் நினைக்கப் படும்.

கருத்து 
பொறாமை கொண்ட உள்ளம் உடையவனின்
செல்வமும்,பொறாமை இல்லாதவனுடைய
வறுமையும் ஆராயத்தக்கவை

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 25 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 17-8

அழுக்காறாமை 
(8)
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயழி உய்த்து விடும்.

கருத்து 
பொறாமை என்று சொல்லப்படும் ஒரு
பாவி ,ஒருவனுடைய செல்வத்தைக்
கெடுத்து அவனைத் தீயவழியில்
செலுத்திவிடும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 17 மார்ச், 2013

சனி, 16 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 17-7

அழுக்காறாமை 
(7)
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன்
தவ்வையைக் காட்டி விடும்.

கருத்து 
பொறாமைப் பண்புடையவனைத் திருமகள்
பொறாமை கொண்டு தன் தமக்கையாகிய
மூதேவிக்குக் காட்டிக் கொடுத்து விடுவாள் .

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 15 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 17-6

அழுக்காறாமை 
(6)
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் கெடும்.

கருத்து
பிறருக்குக் கொடுக்கும் பொருளைக் கண்டு
பொறாமைப்படுகின்றவனுடைய உறவினர்
உணவும் உடையும் இல்லாமல் அழிவர் .

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 14 மார்ச், 2013

ஆகுபெயர்

 ஆகுபெயர் 
 ஒன்றன் பெயர் தனக்குரிய பொருளை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

 உ.ம்) 
 உலகம் சிரித்தது. 
என் பள்ளி வென்றது. 
 இவற்றில் உலகம், பள்ளி என்னும் இடப்பெயர்கள் 
இடத்தை உணர்த்தாமல் முறையே உலகில் உள்ள 
மக்களையும் பள்ளியில் உள்ள மாணவர்களையும் 
உணர்த்துகின்றன. எனவே இவை ஆகுபெயர் எனப்பட்டன. 

 ஆகுபெயரை எண்ணிக்கை அடிப்படையில் பலவாகக் கூறலாம்

 1) பொருளாகு பெயர் 
 2) இடவாகு பெயர் 
 3) காலவாகு பெயர் 
 4) சினையாகு பெயர் 
 5) பண்பாகு பெயர் 
 6) தொழிலாகு பெயர் 
 7) அளவையாகு பெயர்
 8) சொல்லாகு பெயர்
 9) தானியாகு பெயர் 
 10) கருவியாகு பெயர் 
 11) காரியவாகு பெயர் 
 12) கருத்தாவாகு பெயர் 
 13) உவமையாகு பெயர்

முதல் ஆறு ஆகுபெயர்கள் 
 பொருள்பெயர், 
இடப்பெயர், 
காலப்பெயர், 
சினைப்பெயர், 
பண்புப் பெயர், 
தொழில்பெயர்
 என்னும் அறுவகைப் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆகுபெயர்களைப் பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள் என்பர். 

 பொருளாகு பெயர் 

 முதற்பொருளின் பெயர் அதன் சினைப் பொருளுக்கு ஆகி வருவது பொருளாகு பெயர் எனப்படும். இது முதலாகு பெயர் என்றும் வழங்கப்பெறும். (உ.ம்) முல்லை மணம் வீசியது. இதில் முல்லை என்பது முல்லைக் கொடியின் பெயர். இங்கே மணம் வீசியது என்னும் குறிப்பால் இது சினைப் பொருளாகிய முல்லைப் பூவுக்கு ஆகி வந்துள்ளது. 

இடவாகு பெயர் 

 ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும். (எ.கா) ஊர் சிரித்தது. இதில் ஊர் என்னும் இடப்பெயர் சிரித்தது என்னும் குறிப்பால் ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்துள்ளது. 

காலவாகு பெயர் 
ஒரு காலத்தின் பெயர் அந்தக் காலத்தோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும். 

 (உ.ம்) கார் அறுவடை ஆயிற்று. 
 இதில் கார் என்பது காலப்பெயர். இங்கே அறுவடை ஆயிற்று என்னும் குறிப்பால் இது கார்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்துள்ளது. 

 சினையாகு பெயர் 
 ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.
 (உ.ம்) தலைக்குப் பத்து ரூபாய் கொடு. இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர், பத்து ரூபாய் கொடு என்னும் குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது. முதலாகு பெயர் சினையாகு பெயர் முதற்பெயர் சினைப் பொருளுக்கு ஆகி வரும். சினைப்பெயர் முதற்பொருளுக்கு ஆகி வரும்.

 பண்பாகு பெயர் 
 ஒரு பண்பின் பெயர் அப்பண்புடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது குணவாகு பெயர் என்றும் வழங்கப்பெறும். (எ.கா) இனிப்பு உண்டான். இதில் இனிப்பு என்னும் சுவைப் பண்பின் பெயர் அச்சுவை கொண்ட பொருளுக்கு ஆகி வந்துள்ளது. 

தொழிலாகு பெயர் 
 ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும். (எ.கா) சுண்டல் உண்டான். இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

 அளவை ஆகு பெயர்
 எண்ணல் எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலிய அளவைப் பெயர்கள் ஆகுபெயர்களாக வரும். 

எண்ணல் அளவையாகு பெயர் 
 ஓர் எண்ணல் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவையாகு பெயர் எனப்படும். 

 (உ.ம்)
 ஒன்று பெற்றால் ஒளி மயம். 
 இதில் ஒன்று என்னும் எண்ணல் அளவைப் பெயர் அந்த எண்ணுள்ள பொருளுக்கு (குழந்தைக்கு) ஆகி வந்திருப்பதால் எண்ணல் அளவையாகு பெயர் எனப்பட்டது. 

 எடுத்தல் அளவையாகு பெயர் 
ஓர் எடுத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவையாகு பெயர் எனப்படும். (எ.கா) மூன்று கிலோ வாங்கி வா. இதில் கிலோ என்னும் எடுத்தல் அளவைப் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது. 

 முகத்தல் அளவையாகு பெயர் 
 ஒரு முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது முகத்தல் அளவையாகு பெயர் எனப்படும். (எ.கா) ஐந்து லிட்டர் வாங்கி வா. இதில் லிட்டர் என்னும் முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது. 

  நீட்டல் அளவையாகு பெயர் 
 ஒரு நீட்டல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவையாகு பெயர் எனப்படும் 

உ.ம்.
இரண்டு மீட்டர் கொடுங்கள். இதில் மீட்டர் என்னும் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.


சொல்லாகு பெயர் 
 சொல்லைக் குறிக்கும் பெயர் சொல்லுடைய பொருளுக்கு ஆகி வருவது சொல்லாகு பெயர் எனப்படும். 

(உ.ம்)
 இந்த உரை எனக்கு மனப்பாடம். இதில் உரை என்னும் சொல், அச்சொல்லின் பொருள் அமைந்த நூலுக்கு ஆகி வந்துள்ளது.

தானியாகு பெயர் 

 ஓர் இடத்தில் உள்ள பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்கு (தானத்திற்கு) ஆகி வருவது தானியாகு பெயர் எனப்படும்.

 (உ.ம்)
 அடுப்பிலிருந்து பாலை இறக்கு. 
  பால் என்பது அது சார்ந்திருக்கும் 
பாத்திரத்தைக் குறிக்கிறது. பாலை இறக்கு 
என்றால் பால் இருக்கும் பாத்திரத்தை 
இறக்கு என்றே பொருள் கொள்ளப்படுகிறது. 


கருவியாகு பெயர் 
 ஒரு கருவியின் பெயர் அக்கருவியால் ஆகும் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும். 

 (உ.ம்)
நான் குறள் படித்தேன். 
 இதில் குறள் என்பது குறள் வெண்பாவைக் குறிக்கும் சொல். ஆனால் இங்கே குறள் வெண்பாவால் ஆக்கப்பட்ட பாக்களைக் குறிக்கிறது.


காரியவாகு பெயர் 
 ஒரு காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு (கருவிக்கு) ஆகி வந்தால் காரியவாகு பெயர் எனப்படும். (எ.கா) நான் அலங்காரம் கற்றேன். இதில் அலங்காரம் என்னும் சொல் அலங்காரத்தைக் (அணியை) கற்பிக்கும் நூலுக்கு ஆகி வந்துள்ளது. 

  கருத்தாவாகு பெயர் 

 ஒரு கருத்தாவின் பெயர் அக்கருத்தாவால் செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவது கருத்தாவாகு பெயர் எனப்படும்.

 (உ.ம்) இவருக்கு வள்ளுவர் மனப்பாடம். 
 இதில் வள்ளுவர் என்னும் சொல் வள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் நூலுக்கு ஆகி வந்துள்ளது. 


 உவமையாகு பெயர் 
 ஓர் உவமையின் பெயர் அதனால் உணர்த்தப் பெறும் உவமேயத்திற்கு ஆகி வருவது உவமையாகு பெயர் எனப்படும். 

உ.ம்
காளை வந்தான். 
 இதில் காளை என்னும் சொல், காளை போன்ற வீரனுக்கு ஆகி வந்துள்ளது. 
 காளை --- -உவமை
வீரன் - -பொருள்

 பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத் தொல்முறை உரைப்பன ஆகுபெயரே

 பொருட்பெயர்,இடப்பெயர்,காலப்பெயர், சினைப் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயரை அடிப்படையாகக் கொண்ட வையும், எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலான அளவைப் பெயர்களும், சொல், தானி, கருவி, காரியம், கருத்தா முதலானவையும் தம்மோடு தொடர்புடைய வேறு பொருளுக்குப் பெயராகிப் பழங்காலம் முதல் சொல்லப்பட்டு வருவன ஆகுபெயர் என்பது இதன் பொருள்.

திருக்குறள் அதிகாரம் - 17-5

அழுக்காறாமை 
(5)
அழுக்காறு உடையவர்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடின் பது.

கருத்து 
பொறாமைப் பண்பு உடையவருக்கு வேறு
பகை வேண்டாம் ,அதுவே போதும் பகைவர்
தீங்கு செய்யத்தவறினாலும்,அது தவறாமல்
கேட்டைத் தருவதாகும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 11 மார்ச், 2013

வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் 
ஒரு வினைமுற்று, வினையை உணர்த்தாமல் பெயர்த் தன்மை பெற்று வந்தாலும் பெயர்த்தன்மை பெற்று வேற்றுமை உருபை ஏற்று வந்தாலும் வினையாலணையும் பெயர் எனப்படும். 

 (உ.ம்) 
 பாடியவன் பாராட்டுப் பெற்றான். 
பாடியவனுக்குப் பரிசு கிடைத்தது. 
 இதில் முதல் எடுத்துக்காட்டில் உள்ள வினைமுற்று, 
பெயர்த்தன்மை பெற்று வந்துள்ளது. 

இரண்டாவது எடுத்துக்காட்டு பெயர்த்தன்மை பெற்று 
வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது. 

 வினையாலணையும் பெயர் முன்று வகைப்படும். 
அவை, 
 1) தன்மை வினையாலணையும் பெயர் 2)
 முன்னிலை வினையாலணையும் பெயர் 3) 
படர்க்கை வினையாலணையும் பெயர் 
 என்பவை ஆகும்.


தன்மை வினையாலணையும் பெயர் 
 தன்மை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் 
தன்மை வினையாலணையும் பெயர் எனப்படும்.

 (உ.ம்) எடுத்தேனைப் பார்த்தாயா. 
எடுத்தேமைப் பார்த்தாயா. 
 இதில் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.

முன்னிலை வினையாலணையும் பெயர் 
 முன்னிலை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் முன்னிலை வினையாலணையும் பெயர் எனப்படும். 

(உ.ம்) சென்றாயைக் கண்டேன். 
சென்றீரைக் கண்டேன் 
 இதிலும் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.

படர்க்கை வினையாலணையும் பெயர் 
 படர்க்கை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் படர்க்கை வினையாலணையும் பெயர் எனப்படும். 

 ( உ.ம்)படித்தவனுக்குப் பரிசு கிடைத்தது. 
 தன்மை வினையாலணையும் பெயர், 
முன்னிலை வினையாலணையும் பெயர், 
படர்க்கை வினையாலணையும் பெயர் 
ஆகிய மூன்றும் உடன்பாட்டுப் பொருளில் 
வந்துள்ளன. 

வினையாலணையும் பெயர் எதிர்மறைப் பொருளில் வருவதும் உண்டு. 
 (உ.ம்) பாடாதவர் பரிசு பெறமுடியாது. இதில் பாடாதவர் என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது. 

தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் 
தொழிற்பெயர் வினையாலணையும் பெயர்
 1. தொழிலை மட்டும் உணர்த்தும்.
 1. தொழிலையும் தொழில் செய்த பொருளையும் உணர்த்தும்.

 2. படர்க்கை இடத்தில் மட்டும் வரும். 
 2. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும். 

3.காலம் காட்டாது.
3. காலம் காட்டும். வினையின் பெயரே படர்க்கை;

 தொழிற்பெயர், படர்க்கை இடத்தில்
 மட்டும் வரும். வினையாலணையும் பெயர் மூவிடத்திலும் வரும் என்பது இந்த நூற்பாவின் பொருள்.

திருக்குறள் அதிகாரம் - 17-4

அழுக்காறாமை 
(4)
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து .

கருத்து 
தவறான வழியால் குற்றம் உண்டாதவை
அறிந்து ,அறிவுடையார் அறம் அல்லாதவற்றைப்
பொறாமையினால் செய்ய மாட்டார் .

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 10 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 17-3

அழுக்காறாமை 
(3)
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்காறுப் பான்.

கருத்து 
பிறருடைய செல்வத்தைக் கண்டு மகிழாது
பொறாமைப்படுகிறவன் தனக்கு அறத்தையும்
செல்வத்தையும் விரும்பாதவன் என்று
சொல்லப்படுவான் .

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 7 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 17-2

அழுக்காறாமை 
(2)
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அண்மை பெறின் .

கருத்து
எவரிடத்தும் பொறாமை இல்லாதிருக்கப்
பெற்றால்,ஒருவன் பெறத் தக்க மேலான
செல்வங்களுள் ,அதனை ஒப்பது எதுவும்


இல்லை.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 1 மார்ச், 2013

திருக்குறள் அதிகாரம் - 17-1

அழுக்காறாமை 


(1)
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு .


கருத்து
 
ஒருவன் தன் உள்ளத்தில் பொறாமை
இல்லாமல் இருக்கும் தன்மையை,
தனக்குரிய ஒழுக்கத்தின் நெறியாகக்
கொள்ளவேண்டும்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


#160;