கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 30 ஜூன், 2011

நன்னெறி-1

கடவுள் வாழ்த்து

(1 )மின்னெறி சடாமுடி விநாயகனடி தொழ
     நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.


பதவுரை

மின் ஏறி - மின்னல் போலும் ஒலியை
                        வீசுகின்ற,

சடாமுடி -சடை முடியுடைய,

விநாயகன் அடி தொழ -விநாயகக் கடவுளின்
                                                    திருவடிகளை
                                                   வணங்குதலால்,

நன்னெறி வெண்பா
நாற்பதும் வரும்          - நன்னெறி என்ற நூலின்
                                                நாற்பது வெண்பாவும்
                                                வரும்,

ஏ                                             -ஈற்றசை

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

புதன், 29 ஜூன், 2011

திருக்குறள் அதிகாரம் - 1 - 1

திருக்குறள் அதிகாரம் - 1
கடவுள் வாழ்த்து -1  

அறத்துப்பால் பாயிரவியல்
 கடவுளை வாழ்த்துதல்

(1 ) அகர முதல எழுத்தெல்லாம்
     ஆதி பகவன் முதற்கே உலகு

 கருத்து 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை
(ஆனவை ) முதலாகக் கொண்டிரு
க்கின்றன. அதனைப்போல உலகம்
ஒன்றே ஆகிப் பலவாய்ப் பிரிந்தவ
னாகிய முழு முதற் கடவுளை
முதல்வனாக கொண்டிருக்கின்றது .

வெள்ளிக்கிழமை


 

செவ்வாய், 28 ஜூன், 2011

தொகைநிலைத்தொடர்கள் 1

(1)இருசுடர் - சூரியன்,சந்திரன்
(2)இருதிணை - உயர்திணை ,அஃறினை
(3)இருக்குறவர் - தாய்,தந்தையர்
(4)இருமரபு - தாய்மரபு,தந்தைமரபு
(5)இருநிதி - சங்கநிதி ,பதுமநிதி

செவ்வாய்கிழமை


திங்கள், 27 ஜூன், 2011

தமிழ் எழுத்துக்கள்- 4

(1-ஆ)

மெய் எழுத்துக்கள் 
தமிழ் மொழிக்கு உடல் போல் விளங்கும் 
எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் ஆகும்
அத்துடன் இவை புள்ளி அல்லது ஒற்று 
பெற்றிருப்பதால் இவை புள்ளி எழுத்துக்கள் 
அல்லது ஒற்று எழுத்துக்கள் எனப்படும்
அவையாவன-
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்


(1-ஆ-1)
மெய் எழுத்து வகைகள்
இவை மூன்று வகைப்படும் 
அவையாவன -
(1)வல்லினம்
(2)மெல்லினம்
(3)இடையினம்


(1-ஆ- 1-1)
வல்லினம்
வன்மையாக ஒலிக்கும் மெய்எழுத்துக்கள் 
வல்லினம் எனப்படும் .
அவையாவன-
க் ச் ட் த் ப் ற் என்ற ஆறு எழுத்துக்களும் 
வல்லின எழுத்துக்கள் ஆகும்


உதாரணம்
(1)சுக்கு
(2)பச்சை
(3)பட்டு
(4)பத்து
(5)அப்பா
(6)பற்று
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில் 
க் ச் ட் த் ப் ற் என்ற எழுத்துக்கள் 
வன்மையாக ஒலிப்பதால் வல்லினம் 
எனப்படும்


(1-ஆ- 1-2)
மெல்லினம்
மென்மையாக ஒலிக்கும் மெய்எழுத்துக்கள் 
மெல்லினம் எனப்படும்
அவையாவன -
ங் ஞ் ண் ந் ம் ன் ஆகிய ஆறு எழுத்துக்களும்
மெல்லினம் ஆகும்


உதாரணம்-
(1)சங்கு
(2)பஞ்சு
(3)நண்டு
(4)பந்து
(5)கம்பு
(6)அன்பு

மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில் 
ங் ஞ் ண் ந் ம் ன் என்ற எழுத்துக்கள் 
மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் 
எனப்படும்


(1-ஆ- 1-3)
இடையினம்

வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் 
ஒலிக்கும் மெய்எழுத்துக்கள் இடையினம் 
எனப்படும்
அவையாவன -
ய் ர் ல் வ் ழ் ள்ஆகிய மெய்எழுத்துக்கள் 
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் 
ஒலிப்பதால் இடையினம் எனப்படும்


உதாரணம்-
(1)செய்தான்
(2)மார்பு
(3)பல்
(4)அவ்வை
(5)தமிழ்
(6)பள்ளி
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில் 

ய் ர் ல் வ் ழ் ள்ஆகிய மெய்எழுத்துக்கள் 
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் 
ஒலிப்பதால் இடையினம் எனப்படும்

திங்கள் கிழமை வாழ்த்துக்கள்



ஞாயிறு, 26 ஜூன், 2011

சொற்களை சேர்த்தெழுதுதல்

(1)மலர் + வனம் = மலர்வனம்

(2)மண் + வெட்டி = மண்வெட்டி 

(3)பாக்கு + வெட்டி = பாக்குவெட்டி 

(4)கடல் + அலை =கடலலை 

(5)அறம் + இல்லை = அறமில்லை

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 25 ஜூன், 2011

கூட்டத்தை குறிக்கும் சொற்கள்-1

(1)அறிஞர் - அவை

(2)ஆடு - மந்தை

(3)ஆ - நிரை

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 24 ஜூன், 2011

பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்

(1)அகழ் = அகழி (பெயர்ச்சொல்  )
     அகழ் =தோண்டு(வினைச் சொல்)

(2)அடி = பாதம் (பெயர்ச்சொல்)
    அடி = அடித்தல் (வினைச்சொல்)

(3)அணி = ஆபரணம்(பெயர்ச்சொல்)
    அணி = அணிதல் (வினைச்சொல்)

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 23 ஜூன், 2011

பன்னிரண்டு நிலங்கள்

பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)

1) தென்பாண்டி நாடு 
2) குட்ட நாடு 
3) குட நாடு 
4) கற்கா நாடு 
5) வேணாடு 
6) பூழிநாடு 
7) பன்றி நாடு 
8) அருவா நாடு 
9) அருவா வடதலை நாடு 
10) சீதநாடு 
11)மலாடு 
12) புனல் நாடு
என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.




வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 22 ஜூன், 2011

எதிர்கருத்துச் சொற்கள் -அ

  (1) அகங்கை - புறங்கை

  (2) அகம் - புறம்

  (3) அகவல் -அணுகல்

  (4) அகழ்தல் -தூர்த்தல்

  (5) அகற்றுதல் - இணைத்தல்

  (6) அகிம்சை -இம்சை

  (7) அங்கீகரித்தல் -நீராகரித்தல்

  (8) அங்கீகாரம் -பகிஷ்கரிப்பு

  (9) அசட்டுத்தனம் - சாமர்த்தியம்

(10) அசதி - சுறுசுறுப்பு

11)அசல் - நகல்,பிரதி

(12)அசாதாரணம் -சாதாரணம்


(13)அசுரர் - சுரர்


(14)அஜீரணம் - ஜீரணம்

(15)அசைவு - நிலைப்பாடு


(16)அச்சம் - தைரியம்


(17)அடக்கம் - செருக்கு


(18)அடக்கவொடுக்கம்-தான்தோன்றித்தனம்


(19)அடர்த்தி -பரவல்


(20)அடி - நுனி,முடி 


(21)அடைப்பு - திறப்பு

(22)அலங்காரம் -அலங்கோலம்

(23)அணுகல் - விலகல்

(24)அணு - மலை

(25)அணைத்தல் -கொளுத்துதல்

(26)அண்மை - சேய்மை

(27)அதமம் -உத்தமம்

(28)அதிஷ்டம் - துரதிஷ்டம்

(29)அநேகம் - ஏகம்

(30)அந்தம் -அநந்தம்

(31)அந்தகாரம் - வெளிச்சம்

(32)அந்தரங்கம் - பகிரங்கம்

(33)அந்தி - விடியல்


(34)அந்நியர் - உறவினர்


(35)அபசாரம் -உபசாரம்


(36)அபராதம் -சன்மானம்


(37)அபராதி -நிரபராதி


(38)அபூர்வம் -மிகுதி


(39)அமிர்தம் - ஆலம்


(40)அமிலம் - காரம்


(41)அமிழ்தல் - மிதத்தல்


(42)அமைதி - ஆரவாரம்


(43)அருமை -எளிமை


(44)அருள் - மருள்


(45)அர்த்தம் -அநர்த்தம்


(46)அலங்கோலம் - கோலம்


(47)அலர் - முகிழ்


(48)அலர்தல் - குவிதல்


(49)அல்லங்காடி - நாளங்காடி


(50)அல்வழி - நல்வழி


(51)அவசரம் - நிதானம்

(52)அவசம் - வசம்

(53)அவசியம் - அனாவசியம்

(54)அவமதித்தல் - மதித்தல்

(55)அவித்தை - வித்தை

(56)அழகு -குரூரம்

(57)அழித்தல் - ஆக்கல்

(58)அழிதல் - ஆதல்

(59)அழுகை - சிரிப்பு

(60)அறம் - மறம்

(61அசல் - நகல்

(62) அச்சம் - தைரியம்

(63) அடர்த்தி - ஜது

(64) அடர்த்தி - செறிவு

(65) அமிலம் - காரம்

(66) அழுகை - சிரிப்பு

(67) அவசரம் - நிதானம்

(68) அடக்கம் - ஆவணம்

(69) அனுகூலம் - பிரதிகூலம்

(70) அந்நியர் - உறவினர்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 21 ஜூன், 2011

திசைசொற்கள்-4

போத்துக்கீச மொழிச் சொற்கள் -1

(1)அலவாங்கு
(2)அலுப்புநேத்தி
(3)அன்னாசி
(4)ஆயா
(5)ஏலம்
(6)கடுதாசி
(7)கதிரை
(8)கிறாதி
(9)கொறடா
(10)கோப்பை
(11)சப்பாத்து
(12)சாவி 

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 20 ஜூன், 2011

திசைச்சொற்கள், 3

செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப
(நன்னூல் : 273)

செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டுமொழி பேசும் நாடுகளில் தமி்ழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழுநிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும்சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 19 ஜூன், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - அ

ஓரு சொல்லின் பொருளுக்கு ஒத்த
பொருளைத் தரும் சொல் அச்
சொல்லுக்கு ஒத்த கருத்து சொல்
ஆகும்.
(1)அகிலம் -பூமி
(2) அமர்தல் - இருத்தல்
(3) அடவி - காடு
(4) அரமியம் - நிலாமுற்றம்
(5) அரமியம் -   ,உட்பரிகை          
(6)  அனல் -நெருப்பு
(7) அப்பா-தந்தை
(8) அம்மா-தாய்
(9) அஃகம் - தானியம்
(10) அகங்காரம் - செருக்கு
(11)அகதி - கதியற்றவன்
(12)அகதி - கதியிலி
(13)அகம் - மனம்
(14)அகம் - மனை
(15)அகம்பாவம் - செருக்கு
(16)அகரமுதலி - அகராதி
(17)அகரு - அகில்
(18)அகலம் - விரிவு
(19)அகலல் - நீக்கல்
(20)அகல் - தகழி
(21)அகவை - வயது
(22)அகழ் - அகழி
(23) அகிலம் - உலகம்
(24)அக்கச்சி - அக்கா
(25)அக்கம் - துலாக்கோல்
(26)அக்கறை - சிரத்தை
(27) அக்கறை - கருத்து
(28)அக்கறை - விருப்பு
(29)அக்கறை - அவசியம்
(30)அக்கிரமம் -அநீதி
(31)அக்கினி - நெருப்பு
(32)அங்கதம் - மார்பு
(33)அங்கதம் - வசைப்பாட்டு
(34)அங்கத்துவம் - உறுப்புரிமை
(35)அங்கம் - கட்டில் ,
(36) அங்கம் - உடல்உறுப்பு
(37)அங்கலாய்ப்பு - கலக்கம்
(38)அங்காடி - சந்தை
(39)அங்கி -சட்டை
(40)அங்குரம் -முளை
(41)அசதி - சோர்வு
(42)அசடு - குற்றம்
(43)அசட்டை - பாராமுகம்
(44)அசரீரி - உருவிலிவாக்கு
(45)அசரீரி - வானொலி
(46)அசலம் - மலை
(47)அசுவமேதம் - குதிரை
(48)அசுவமேதம் - வேள்வி
(49)அசுவம் -குதிரை
(50)அசுழம் -நாய்
(50)அச்சம் -பயம்
(51)அடி - பாதம்
(52)அடிகோலுதல் - தொடங்குதல்
(53)அடிசில் - உணவு
(54)அடிச்சுவடு - காலடித்தடம்
(55)அடியிடல் - தொடங்குதல்
(56)அடியார் - தொண்டர்
(57)அடுக்களை - சமையலறை
(58)அடைக்கலம் - புகலிடம்,
(59) அடைக்கலம் - சரண்புகல்
(60)அணங்கு - தெய்வப்பெண்
(61)அடைக்கலம் - புகலிடம்
(62)அடைக்கலம் - சரண்புகல்
(63)அணங்கு - பெண்தெய்வம்
(64) அணி - ஆபரணம்
(65)அணை - அணைக்கட்டு
(66)அண்மை - சமீபம்
(67)அண்டம் - உலகம்
(68)அண்டர் - தேவர்
(69)அண்ணல் - சிறந்தோன்
(70)அதிதி - விருந்தினர்
(71)அதிபதி - தலைவன்
(72)அத்தம் - ஆண்டு
(73) அத்தம்  - காடு
(74)அத்திரம் -அம்பு
(75)அதரம் - உதடு
(76)அதர் - வழி
(77)அதிகாரி - தலைவன்
(78)அதிசயம் - புதுமை
(79)அத்தாட்சி - சான்று
(80)அநந்தம்- முடிவுற்றது
(81)அநாதி - தோற்றமின்மை
(82)அநாதை- திக்கற்றவன்
(83)அனுகூலம் - செயல் கைகூடல்
(84)அனுக்கிரகம் - அருள்
(85)அனுசரணை - இசைவு
(86)அனுதாபம் - இரக்கம்
(87)அந்தகன் - குருடன்
(88)அந்தகாரம் -இருள்
(89)அந்தகம் - முடிவு
(90)அந்தரங்கம் - இரகசியம்
(91)அந்தரங்கம் - மறைபொருள்
(92)அந்தி - மாலைபொழுது
(93)அபசாரம் - குற்றம்
(94)அபயம் - அடைக்கலம்
(95)அபரபக்கம் - தேய்பிறை
(96)அபராதம் - தண்டனை
(97)அபராதி - குற்றவாளி
(98)அபாண்டம்- பழி
(99)அபாயம் - ஆபத்து
(100)அபிராமி - பார்வதி
(101)அபிலாசை - விருப்பம்
(102)அபூர்வம் - அருமை
(103)அப்பு - நீர்
(104)அமரர் - தேவர்
(105)அமராவதி - இந்திரனுடைய நகரம்
(106)அமர் - போர்
(107)அமலன் - குற்றமற்றவன்
(108)அமுது - சோறு
(109)அமைதி - அடக்கம்
(110)அம்பலம் - வெளி
(111)அம்பலம் - மேடம்
(112)அம்பி - தோணி
(113)அம்பிகை - பார்வதி
(114)அம்புயம் - தாமரை
(115)அம்புலி - சந்திரன்
(116)அம்மணம் - நிர்வாணம்
(117)அம்மை - தாய்
(118)அயனம் - பிறப்பு
(119)அயில் - கூர்மை
(120)அயில் - வேல்
(121)அரங்கம் - சபை
(122)அரசன் - மன்னன்
(123)அரசிறை - கப்பம்
(124)அரசு - அரசன்
(125)அரசு - அரசியல்
(126)அரணியம் - காடு
(127)அரமியம் -நிலாமுற்றம்
(128)அரம்பை -தெய்வப்பெண்
(129)அரவிந்தம்-தாமரை
(130)அரவு-பாம்பு
(131)அரிச்சுவடி-அரிவரி
(132)அரிச்சுவடு - ஏடு
(133)அரி - வண்டு
(134)அரி - சிங்கம்
(135)அரினை - கள்
(136)அரியணை -சிங்காசனம்
(137)அருக்கன் -சூரியன்
(138)அருங்கலம் - ஆபரணம்
(139)அருணன் - கதிரோன்
(140)அருணோதயம் -வைகறை
(141)அருமை -ஆபூர்வம்
(142)அரும்பல் -முளைத்தல்
(143)அரும்பு - இளமீசை
(144) அரும்பு - மொட்டு
(145)அருவம் - உருவமற்றது
(146)அருவர் - தமிழர்
(147)அருவி - சிற்றாறு
(148)அருள் - திருவருள்
(149)அரை - பாதி
(150)அரைஞான் - இடுப்புக்கயிறு
(151)அர்ச்சித்தல் -வணங்குதல்
(152)அர்த்தமண்டபம் - கருவறை
(153)அர்ப்பணம் - ஒப்பிடுதல்
(154)அலகு - நெல்மணி
(155)அலகு - கூறு
(156)அலகு - சொண்டு
(157)அலகு - பிரிவு
(158)அலகை - பேய்
(159)அலக்கண் -துன்பம்
(160)அலங்கல் - மாலை
(161)அலங்கை - துளசி
(162)அலங்கோலம் - அவலட்சணம்
(163)அலமரல் -மனச்சுழற்சி
(164)அலவன் - ஆண் நண்டு
(165)அலவு - ஆண்பனை
(166)அலுங்கு - எறும்புதின்னி
(167)அல்குதல் -குறைதல்
(168)அல்லங்காடி -அந்திச்சந்தை
(169)அல்லல் - துன்பம்
(170)அவகாசம் - காலக்கெடு
(171)அவசம் - பரவசம்
(172)அவதாரம் - பிறப்பு
(173)அவதானம் -நிதானம்
(174)அவதூறு - பழிச்சொல்
(175)அவதூறு -நிந்தனை
(176)அவயம் - உறுப்பு
(177)அவயான் - பெருச்சாளி
(178)அவரோகணம் - இறங்குதல்
(179)அவலம் - துன்பம்
(180)அவலம் - அழுகை
(181)அவனி - உலகம்
(182)அவா - மிக்கஆசை
(183)அவா - பேராசை
(184)ஆவி - வேள்விப்பொருள்
(185)அவிச்சை - அஞ்ஞானம்
(186)அவை - சபை
(187)அவ்வை - தாய் ,தவப்பெண்
(188)அழும் - பிணம்
(189)அழுக்காறு - பொறாமை
(190)அழுங்கு - ஆமை
(191)அளகம் - கூந்தல்
(192)அளக்கர் - கடல்
(193)அளி - வண்டு
(194)அளை - வளை
(195)அளை - தயிர்
(196)அறங்கடை - பாவம்
(197)அறம் - தர்மம்
(198)அறிகுறி - அடையாளம் 
(199)அறிஞர் - அறிவாளி
(200)அறிவியல் - விஞ்ஞானம்
(201)அறிவுரை - புத்திமதி
(202)அறுதி - முடிவு
(203)அறுதி -வரையறை
(204)அறுதியிடல் - நிச்சயித்தல்
(205)அறுபதம் -வண்டு
(206)அறுமை - ஆறு
(207)அறைகூவல் - போருக்கழைத்தல்
(208)அறைபோதல்- வஞ்சனை செய்தல்
(209)அற்கன் - சூரியன் ,கதிரவன்
(210)அற்றம் -அச்சம் ,சோர்வு
(211)அனந்தம் -அளவின்மை
(212)அனவரதம் -எப்பொழுதும்
(213)அனல் - தீ
(214)அனுசாரம் - ஒழுக்கமின்மை
(215)அனுகூலம் - காரியசித்தி
(216)அனுக்கிரகம் - அருள்
(217)அனுச்சை - விடை
(218)அனுட்டானம் -நிலைநிறுத்தல்
(219)அனுமதி - சம்மதம்
(220)அன்பு - காதல்
(221)அன்னதாழை - அன்னாசி
(222)அன்னப்பால் - கஞ்சி
(223)அன்னம் - சோறு
(224)அன்னை - தாய்
(225)அருக்கன்- பூமி
(226) அம்புலி - சந்திரன் 
(227)அகலம் - மலை
(228) அல்லல் - துன்பம் 
(229)அரவிந்தம் - தாமரை
(230) அம்புயம் - தாமரை
(231) அகங்காரம் - ஆணவம்
(232) அநாதி - பழைமை
(233) அநாதி - புராதானம்
(234) அடவி - காடு 
(235)அழகு - எழில் 
(236)அழகு - மாட்சி 
(237)அழகு - வனப்பு  
(238) அரசன் - வேந்தன்
(239)அடிசில் - ஆகாரம் 
(240) அக்கினி - தீ
(241)அரவம் - பாம்பு
(242)அகதி - ஏதிலி
(243)அக்கினி நட்சத்திரம் - எரிநாள்
(244)அங்கவஸ்திரம் - மேலாடை
(245)அங்குலம் - விரலம்
(246)அசரீரி - உருவிலி
(247)அஞ்சலி - கும்பீடு, 

(248)அஞ்சலி - இறுதி வணக்கம் 
(249)அஞ்சலி - வணக்கம்
(250)அத்தியாவசியம் - இன்றியமையாமை
(251)அதிகாரபூர்வம் - அதிகாரச் சான்று
(252)அதிசய மனிதர் - இறும்பூதாளர்
(253)அதிர்ஷ்டம் - ஆகூழ்
(254)அத்வைதம் – இரண்டன்மை
(255)அநேக – பல
(256)அநேகமாக - பெரும்பாலும்
(257)அந்தரங்கம் - மர்மம் 

(258)அந்தரங்கம் -கமுக்கம்
(259)அந்தரங்கம் -மறைமுகம் 
(260)அந்தஸ்து - தகுதி
(261)அபயம் - அடைக்கலம் 

(262)அபாயம் - ஏதம், 
(263)அபாயம் - கேடு
(264)அபராதம் - தண்டம்
(265)அபாயம் - இடர்
(266)அபிப்ராயம் - கருத்து, 

(267) அபிப்ராயம் - ஏடல் 
(268)அபிமானம் – நல்லெண்ணம்
(269)அபிவிருத்தி – மிகுவளர்ச்சி
(270)அபிஷேகம் – திருமுழுக்கு
(271)அபூர்வம் – அருமை
(272)அப்பியாசம் - பயிற்சி
(273)அமரர் - நினைவில் உரை

(274)அமரர் - காலஞ் சென்ற 
(275)அமாவாசை - காருவா
(276)அமோகம் - மிகுதி
(277)அரபிக்கடல் - குட கடல்
(278)அராஜகம் - அரசின்மை
(279)அர்ச்சகர் - வழிபாட்டாசான் 

(280)அர்ச்சகர் - பூசாரி
(281)அர்த்தம் - பொருள்
(282)அலட்சியம் - புறக்கணிப்பு
(283)அவசகுனம் - தீக்குறி
(284)அவசியம் – வேண்டியது, 

(285)அவசியம்  - தேவை 
(286)அவதாரம் – தோற்றரவு
(287)அவயவம் - உடலுறுப்பு
(288)அற்புதம் - இறும்பூது, 

(289)அற்புதம் - நேர்த்தியான 
(290)அனுபல்லவி  - துணைப் பல்லவி
(291)அனுபவம் - பட்டறிவு
(292)அனுபவித்தல் - நுகர்தல்
(293)அனுமானம் – உய்த்துணர்வு
(294)அனுஷ்டி – கடைபிடி, 

(295)அனுஷ்டி – கைக்கொள் 
(296)அன்னாசி – செந்தாழை
(297)அன்னியம் – அயல்
(298)அஸ்திவாரம் - அடிப்படை 

(299)அணல் - தாடி, கழுத்து
(300)அனல் - நெருப்பு 
(301)அணி - அழகு
(302)அனி - நெற்பொறி
(303)அணு - நுண்மை
(304)அனு - தாடை, அற்பம்
(305)அணுக்கம் - அண்டை, 
(306)அணுக்கம் - அண்மை.
(307)அனுக்கம் - வருத்தம், 
(308)அனுக்கம் - அச்சம்
(309)அணை - படுக்கை, 
(310)அணை - அணைத்துக் கொள்ளுதல்
(311)அனை - அன்னை, 
(312)அனை -மீன்
(313)அணைய - சேர, 
(314)அணைய - அடைய
(315)அனைய - அத்தகைய
(316)அண்மை - அருகில்
(317)அன்மை - தீமை, 
(318)அன்மை - அல்ல
(319)அங்கண் - அவ்விடம்
(320)அங்கன் - மகன்
(321)அண்ணம் - மேல்வாய்
(322)அன்னம் - சோறு, 
(323)அன்னம் -அன்னப்பறவை
(324)அண்ணன் - தமையன்
(325)அன்னன் - அத்தகையவன்
(326)அவண் - அவ்வாறு'
(327)அவன் - சேய்மைச் சுட்டு, 
(328)அவன் - ஆண்மகன்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்

சனி, 18 ஜூன், 2011

திசைச்சொற்கள், -2

சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.

திசைச்சொல்  - மொழி - தமிழ்
கெட்டி - தெலுங்கு - உறுதி
தெம்பு - தெலுங்கு - ஊக்கம்
பண்டிகை - தெலுங்கு - விழா
வாடகை - தெலுங்கு - குடிக்கூலி
எச்சரிக்கை தெலுங்கு முன் அறிவிப்பு
அசல் உருது முதல்
அனாமத்து உருது கணக்கில் இல்லாதது
இனாம் உருது நன்கொடை
இலாகா உருது துறை
சலாம் உருது வணக்கம்
சாமான் உருது பொருள்
சவால் உருது அறைகூவல்
கம்மி பாரசீகம் குறைவு
கிஸ்தி பாரசீகம் வரி
குஸ்தி பாரசீகம் குத்துச்சண்டை
சரகம் பாரசீகம் எல்லை
சுமார் பாரசீகம் ஏறக்குறைய
தயார் பாரசீகம் ஆயத்தம்
பட்டா பாரசீகம் உரிமம்
டாக்டர் ஆங்கிலம் மருத்துவர்
நைட் ஆங்கிலம் இரவு
பஸ் ஆங்கிலம் பேருந்து


சனிக்கிழமை வாழ்த்துக்கள்

வெள்ளி, 17 ஜூன், 2011

வியாழன், 16 ஜூன், 2011

திசைச்சொற்கள், 1

திசைச்சொல்


தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்துவந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.

(.காஆசாமிசாவி

இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல்சாவி என்னும் சொல்போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல்இச்சொற்கள் தமிழ்மொழியில்கலந்து வருகின்றனஇவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ளபகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள்எனப்படும்.

செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில்வந்து வழங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்.

பெற்றம் - பசு - தென்பாண்டி நாட்டுச்சொல்
தள்ளை - தாய் - குட்ட நாட்டுச்சொல்
அச்சன் -தந்தை - குடநாட்டுச்சொல்
பாழி -சிறுகுளம்பூழிநாட்டுச்சொல்

இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ்மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

புதன், 15 ஜூன், 2011

உலகநீதி -1

உலக மக்களுக்குப் பொதுவான நிதிகளைக் கூறுகிறது இந்த உலகநீதி என்னும் இந்த நூல். இதில் 13 ஆசிரிய விருத்தப் பாக்கள் உள்ளன. ஒவ்வொரு விருத்தத்திலும் உள்ள ஒவ்வொரு அடியும் ஒரு நீதியைச் சொல்கின்றது. இந்த நூலை இயற்றியவர் உலகநாதர். இந்நூலின் கடைசி செய்யுள் மூலம் இது தெரியவருகிறது. அவருடைய காலம், வரலாறு முதலிய விபரங்கள் தெரியவில்லை. இவர் முருக பக்தர் என்பது பாடல்களின் மூலம் தெரியவருகிறது.

புதன்கிழமை வாழ்த்துக்கள்

செவ்வாய், 14 ஜூன், 2011

கொன்றைவேந்தன்-1


கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே


உயிர் வருக்கம்

1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2.ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று

4.ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

5.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

6.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

7.எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

8.ஏவா மக்கள் மூவா மருந்து

9.ஐயம் புகினும் செய்வன செய்

10.ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு

11.ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

12.ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு

13.அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 13 ஜூன், 2011

தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துக்கள்



தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துக்கள் 
ஆறு வகைப்படும் .
அவையாவன
      1 . கடவுள் வாழ்த்து
      2 . ஆ  வாழ்த்து
      3 . அந்தணர் வாழ்த்து
      4 . அரச வாழ்த்து
      5 . நாட்டு வாழ்த்து
      6 . மொழி வாழ்த்து

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

ஞாயிறு, 12 ஜூன், 2011

இணைமொழிகள்

கருத்தாழம் மிக்க தொடர்கள்
பலவற்றை தமிழ்மொழி
கொண்டுள்ளது அவற்றில்
ஒன்றுதான் இணைமொழி
பலசொற்களில் விளக்க
வேண்டிய  ஒருபொருளை
இணைமொழி மூலம்
இலகுவாக விளக்கிவிடலாம்.

உதாரணம்
மாகாத்மா காந்தி நாட்டின்
சுகந்திரத்திற்காக அல்லும்
பகலும் உழைத்தார் .இதில்
வரும் அல்லும் பகலும்
என்பது இணைமொழி ஆகும் .
அத்துடன் அல்லும் பகலும்
என்பது இடைவிடாது என்ற
பொருளை தரும்.
#160;