கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 14 பிப்ரவரி, 2013

திருக்குறள் அதிகாரம் - 16-10

பொறையுடைமை 

(10)
உண்ணாது தோற்பவர் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் தோற்பாரின் பின் .


கருத்து 

உணவு உட்கொள்ளது தவம் செய்வார் பெரியவ
ராவார்,பிறர் கடுஞ் சொற்களையும்பொறுப்பவர் 
தவம் செயவாரிலும் பெரியவராவார் .

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 11 பிப்ரவரி, 2013

திருக்குறள் அதிகாரம் - 16-9

பொறையுடைமை
(9)
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
இன்னாச்சொல் தோற்கிற் பவர் .

கருத்து 

தீயவர் கையிலிருந்து பிறக்கும் தீய 
சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்,
துறவிகளை விடத் தூய்மை உடையவராவர்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

திருக்குறள் அதிகாரம் - 16-8

பொறையுடைமை 

(8)
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல் .

கருத்து 


மனச்  செருக்கினால் தீமை செய்தாரைத் தம்
பொறுமையினால் வென்று விடுதல் வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பலபொருள் ஒருமொழி-ம

(1)மஞ்சு-அழகு 
     மஞ்சு-மேகம் 
     மஞ்சு-வலிமை  
     மஞ்சு-ஆபரணம்

திருக்குறள் அதிகாரம் - 16-7

(7)

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று .


கருத்து 


தகுதியில்லாதவற்றைத் தனக்குப் பிறர்
செய்தாலும், அதனால் வரும் துன்பத்துக்கு
வருந்தி அறம் அல்லாத செயல்களைச்
செய்யாதிருத்தல் நல்லது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


#160;