கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 31 ஜனவரி, 2013

திருக்குறள் அதிகாரம் - 16-6

பொறையுடைமை 

(6)
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.


கருத்து 

தீமை செய்தாரைத் தண்டித்தாருக்கு ஒரு
நாளைய இன்பமே ; பொறுத்தாருக்கு
உலகம் உள்ளளவும் புகழ் உண்டு.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 30 ஜனவரி, 2013

பலபொருள் ஒருமொழி.பொ

(1)பொறை-மலை
    பொறை-பொறுமை
    பொறை-அடக்கம்

திருக்குறள் அதிகாரம் - 16-5

பொறையுடைமை 
(
5)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து 

கருத்து 

தீமை செய்தாரைப் பொறுக்காமல் 
தண்டித்தாரை ஒரு பொருளாக மதியார் ;
ஆனால் பொறுத்தாரைப் பொன்போல் 
மனதுள் வைத்துப் போற்றுவர் .

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 28 ஜனவரி, 2013

திருக்குறள் அதிகாரம் - 16-4

பொறையுடைமை 
(4)
நிறையுடைமை நீங்காமை வேண்டின் 

பொறையுடைமை போற்றி ஒழுகப்படும்.

கருத்து 

நிறை உடையவனாக இருக்கும் தன்மை
தன்னைவிட நீங்காமல் இருக்கவேண்டுமானால்,
பொறுமையைப்  பாதுகாத்து நடக்கவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 27 ஜனவரி, 2013

திருக்குறள் அதிகாரம் - 16-3

பொறையுடைமை 

(3)
இன்மையுள் இன்மை விருன்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

கருத்து 

வறுமைகளுள் வறுமையாவது ,விருந்தினரைப்
போற்றாது நீக்குதல் ;வலிமைகளுள் வலிமையாவது
அறியாதார் செய்த பிழைகளைப் பொறுத்து கொள்ளுதல்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 18 ஜனவரி, 2013

திருக்குறள் அதிகாரம் - 16-2

பொறையுடைமை 

(2)
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று .

கருத்து 

பிறர் எல்லை கடந்து செய்த தீங்கை
எப்பொழுதும் பொறுக்கவேண்டும் .
அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல்
மறந்து விடுதல் பொறுத்தலை விட
நல்லது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 16 ஜனவரி, 2013

புதன்கிழமை வாழ்த்துக்கள்


திருக்குறள் அதிகாரம் - 16-1

பொறையுடைமை 
 
(1)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை



கருத்து 


தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக்
கொண்டிருக்கும் நிலத்தைப் போல்,தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய
பண்பாகும்.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


#160;