கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 16 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-5

பிறனில் விழையாமை

(5)
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

கருத்து 

இவளை அடைதல் அரியதன்று என நினைத்து
பிறன் மனையில் புகுகின்றவன் ,எப்பொழுதும்
நீங்காக் குடிப் பழியை அடைவான்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 15 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-4

பிறனில் விழையாமை 

(4)
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல் 


கருத்து 

தினையளவும் தம் குற்றத்தை உணராமல் 
அயலான் வீட்டில் நுழைதல் எவ்வளவு 
பெருமை உடையவரானாலும் என்னவாக 
முடியும் ?

புதன்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 14 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-3

பிறனில் விழையாமை 

(3)


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.


கருத்து 


ஜயமில்லாமல் நம்பியவருடைய மனைவியிடத்து
விருப்பம் கொண்டு தீமையை செய்து நடப்பவர்,
இறந்தவரைவிட வேறுபட்டவரல்லர்.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 12 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-2

பிறனில் விழையாமை 
(2)
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.


கருத்து 

அறம் தவறி நின்றவர் எல்லோருள்ளும் ,
பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிலில்
சென்று நின்றவரைப் போல் அறிவிலி இல்லை .

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 10 நவம்பர், 2012

திங்கள், 5 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-1

பிறனில் விழையாமை 
(1)
பிறன்பொருளாள் பொட்டோழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல் 


கருத்து 

பிறன் பொருளாயுள்ளவனை விரும்பி 
நடக்கும் அறியாமை ,உலகில் அறம் 
பொருள் இயல்புகளை அறிந்தவரிடத்தில் 
இல்லை.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்



ஞாயிறு, 4 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-10

ஒழுக்கமுடைமை

(10)
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

கருத்து 

உலகத்தோடு பொருந்தி நடக்கும் முறையைக்
கற்காதவர்,பல நூல்களைக் கற்றவராயினும்
அறிவில்லாதவரே யாவர்.

சனி, 3 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-9

ஒழுக்கமுடைமை 

(9)
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல் .


கருத்து 


தவறியும் தீய சொற்களைத் தம் வாயினால்
சொல்லுதல் நல்லோழுக்கமுடையவருக்குப்
பொருந்தாது.

பலபொருள் ஒருமொழி-ப

(1)பந்தம்-உறவு 
    பந்தம்-கட்டு 
    பந்தம்-கயிறு 
    பந்தம்-பாசம் 
    பந்தம்-மலம்

வெள்ளி, 2 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-8

ஒழுக்கமுடைமை 

(8)
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

கருத்து 

நல்லொழுக்கம் நல்லின்ப வாழ்க்கைக்குக்
காரணமாகும்;தீயொழுக்கம் எப்பொழுதும்
துன்பத்தைக் கொடுக்கும்.
#160;