கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 1 மார்ச், 2017

ர, ற பொருள் வேறுபாடு

ர, ற பொருள் வேறுபாடு

  • அர - பாம்பு
  • அற - தெளிய, முற்றுமாக
  • அரவு - பாம்பு
  • அறவு - அறுதல், தொலைதல்
  • அரம் - ஒரு கருவி
  • அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
  • அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன்
  • அறி - அறிந்துகொள்
  • அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான
  • அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
  • அரன் - சிவன்
  • அறன் - தர்மம், அறக்கடவுள்
  • அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று. 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
  • அறிவை - அறிவாய்
  • அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை
  • அறுகு - குறைந்து போதல்
  • அக்கரை - அந்தக் கரை
  • அக்கறை - ஈடுபாடு
  • அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
  • அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
  • அரைதல் - தேய்தல்
  • அறைதல் - அடித்தல், சொல்லுதல்
  • அப்புரம் - அந்தப் பக்கம்
  • அப்புறம் - பிறகு
  • அர்ப்பணம் - உரித்தாக்குதல்
  • அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
  • அரு - உருவமற்றது
  • அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு
  • அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
  • அறுமை - நிலையின்மை, ஆறு
  • ஆரு - குடம், நண்டு
  • ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
  • ஆர - நிறைய, அனுபவிக்க
  • ஆற - சூடு ஆற (குறைய)
  • ஆரல் - ஒருவகை மீன்
  • ஆறல் - சூடு குறைதல்
  • இரத்தல் - யாசித்தல்
  • இறத்தல் - இறந்துபோதல், சாதல்
  • இரகு - சூரியன்
  • இறகு - சிறகு
  • இரக்கம் - கருணை
  • இறக்கம் - சரிவு, மரணம்
  • இரங்கு - கருணைகாட்டு
  • இறங்கு - கீழிறங்கி வா
  • இரவம் - இரவு
  • இறவம் - இறால் மீன்
  • இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
  • இறவி - இறத்தல்
  • இரவு - இரவு நேரம், யாசித்தல்
  • இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
  • இரை -ஒலி, உணவு
  • இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை
  • இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்
  • இறு - ஒடி, கெடு, சொல்லு
  • இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
  • இறும்பு - வண்டு, சிறுமலை
  • இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
  • இறுப்பு - வடிப்பு
  • இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
  • இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்
  • இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
  • இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
  • இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்
  • இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
  • உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
  • உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
  • உரவோர் - அறிஞர், முனிவர்
  • உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
  • உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி
  • உறி - உறிவெண்ணெய், தூக்கு
  • உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
  • உறு - மிகுதி
  • உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்
  • உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
  • உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
  • உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை
  • உரைப்பு - தங்குதல், தோய்தல்
  • உறைப்பு - காரம், கொடுமை
  • உரையல் - சொல்லல்
  • உறையல் - மாறுபாடு, பிணக்கு
  • உரிய - உரிமையான
  • உறிய - உறிஞ்ச
  • ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
  • ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
  • ஊரு - அச்சம், தொடை
  • ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை
  • எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்
  • எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்
  • ஏர - ஓர் உவமஉருபு
  • ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
  • ஏரி - நீர்நிலை, குளம்
  • ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
  • ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
  • ஒறு - தண்டி, அழி, இகழ்
  • ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
  • ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்
  • ஒருவு - நீங்கு
  • ஒறுவு - வருத்தம், துன்பம்
  • கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
  • கறடு - தரமற்ற முத்து
  • கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை
  • கறம் - கொடுமை, வன்செய்கை
  • கரவு - பொய், வஞ்சனை, மறைவு
கறவு - கப்பம் கரவை - கம்மாளர் கருவி கறவை - பாற்பசு கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை கறி - இறைச்சி, மிளகு கரத்தல் - மறைத்தல் கறத்தல் - கவர்தல், பால் கறத்தல்
கருத்து - எண்ணம் கறுத்து - கருநிறங்கொண்டு
கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம்
கருப்பு - பஞ்சம் கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை
கரை - எல்லை, தடுப்பு, ஓரம் கறை - அழுக்கு, குற்றம், ரத்தம்
கரையான் - மீனவன் கறையான் - செல் (ஓர் உயிரி)
கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து
கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம் கற்பூரம் - பொன்னாங்கண்ணி
காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன் காறி - காறிஉமிழும் கழிவு
காரு - வண்ணான், தேவதச்சன் காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு
காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை காறை - ஒரு கழுத்தணி
கீரி - ஓர் உயிரினம் கீறி - பிளந்து, அரிந்து
குரங்கு - ஒரு விலங்கு குறங்கு - தொடை, கொக்கி
குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர் குறவர் - ஒரு ஜாதியினர்
குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி குறவை - ஒருவகை மீன்
குரத்தி - தலைவி, குருவின் மனைவி குறத்தி - குறத்தி ஜாதிப் பெண்
குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை குறுகு - அண்மைப்படுத்து
குருகினம் - பறவை இனம் குறுகினம் - நெருங்கினோம்
குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை
குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம் குறு - குறுகு
கூரல் - ஒரு மீன், பறவை இறகு கூறல் - சொல்லுதல், விற்றல்
கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில் கூறை - புது ஆடை, சீலை
கூரிய - கூர்மையான கூறிய - சொன்ன
கூர - குளிர்ச்சி மிக கூற - சொல்ல, வேண்டல்
கோரல் - கூறுதல் கோறல் - கொல்லல்
கோரை - புல்வகை கோறை - குவளை, பொந்து
கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம் கோறல் - குளிர் காற்று, மழை
சிரை - சிரைத்தல், முடிநீக்கல் சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
சீரிய -​ சினந்த,​​ சிறந்த,​​ சீராய்​ சீறிய -​ சினந்த​
சுரா​ -​ கள்​ சுறா​ -​ சுறா மீன்​
சூரல்​ -​ மூங்​கில்,​​ பிரம்பு​ சூறல்​ -​ தோண்​டல்​
சுருக்கு​ -​ வலை,​​ சுருக்​கம்,​​ கட்டு,​​ பூமாலை,​​ வகை,​​ குறைவு,​​ நெய்த்​து​டுப்பு​ சுறுக்கு​ -​ விரைவு​
செரு​ -​ போர்,​​ ஊடல்​ செறு​ -​ வயல்,​​ பாத்தி,​​ குளம்​
செரு​நர்​ -​ பகை​வர்,​​ படை​வீ​ரர்​ செறு​நர்​ -​ பகை​வர்​
சொரி​ -​ தினவு,​​ அரிப்பு,​​ பொழி​ சொறி -​ சிரங்கு,​​ சொறி​தல்​
தரித்​தல்​ -​ அணி​தல்,​​ பொறுத்​தல்,​​ தங்​கல்,​​ தாம​தித்​தல்,​​ தாங்​கு​தல்​ தறித்​தல் -​ வெட்​டு​தல்​
தரி​ -​ அணி,​​ அணிந்​து​கொள்​ தறி -​ தூண்,​​ ஆப்பு,​​ நெசவு இயந்​தி​ரம்,​​ முளைக்​கோல்​
தரு​தல் -​ கொடுத்​தல்​ தறு​தல்​ -​ இறு​கக்​கட்​டு​தல்​
தாரு​ -​ மரம்,​​ தேவ​தாரு,​​ பித்​தளை​ தாறு​ -​ குலை,​​ அங்​கு​சம்,​​ முள்,​​ இரும்பு,​​ முள்​கோல்​
திரம்​ -​ மலை,​​ உறுதி,​​ நிலை,​​ பூமி​ திறம்​ -​ உறுதி,​​ நரம்​புள்ள வீணை,​ கூறு​பாடு,​​ சுற்​றம்,​​ குலம்,​​ பக்​கம்,​​ வல்​லமை,​​ ஒழுக்​கம்,​​ மேன்மை, வர​லாறு,​​ கார​ணம்​
திரை​ -​ அலை,​​ கடல்,​​ திரைச்​சீலை​ திறை​ -​ கப்​பம்​
துரவு​ -​ கிணறு​ துறவு​ -​ துறத்​தல்,​​ துற​வ​றம்​
துரை​ -​ பெரி​யோன்,​​ தலை​வன்​ துறை​ -​ நீர்த்​துறை,​​ வழி,​​ இடம்,​​ நூல்,​​ கடற்​கரை,​​ உபா​யம்,​​ பாவி​னம்​
துரு​ -​ களிம்பு​ துறு​ -​ கூட்​டம்,​​ நெருக்​கம்​
தூரல்​ -​ தூரு​தல்,​​ வருத்​தம்​ தூறல்​ -​ மழைத்​துளி,​​ பழி சொல்​லு​தல்​
தூரன்​ -​ குலத்​தின் பெயர்​ தூறன்​ -​ மூர்க்​கன்​
துரு​ -​ வீதி​ துதறு​ -​ அழி​
தேரார்​ -​ கல்​லா​த​வர்,​​ கீழ்​மக்​கள்,​​ பகை​வர்​ தேறார்​ -​ அறி​வி​லார்,​​ பகை​வர்
தேரி - மணல் திட்டை, மணல் குன்று தேறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து
நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்
நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன், நாறி - கற்றாழை
நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை நிறுத்தம் - நிறுத்தும் இடம்
நிரை - பசு, ஒழுங்கு, வரிசை நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு
நூரல் - அவிதல், பதங்கெடுதல் நூறல் - அவித்தல்
நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து நேறி - வழி, கோயில், கற்பு
பரட்டை - பரட்டைத்தலை பறட்டை - செழிப்பற்றது
பரதி - கூத்தாடுபவன் பறதி - அவசரம், பறத்தல்
பரத்தல் - அலமறுதல், மிகுதல் பறத்தல் - பறந்துசெல்லல்
பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை பறம்பு - பாரியின் மலை
பரல் - விதை, பருக்கைக்கல் பறல் - பறவை
பரவை - கடல், ஆடல், பரப்பு பறவை - பறப்பவை, ஒரு நோய்
பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு,ஓலைப்பாய்
பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல், பறித்தல் - பிடுங்குதல்
பரிவு - அன்பு, துன்பம், இரக்கம் பறிவு - கழிவு, அதிர்தல்
பருகு - குடி, அருந்து பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம்
பரை - சிவசக்தி பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்
பாரை - கடப்பாரை பாறை - கற்பாறை
பிரை - உறைமோர், பயன் பிறை - பிறைச்சந்திரன்
பீரு - புருவம்,அச்சமுள்ளோன் பீறு - கிழிவு
புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம் புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி,பின்புறம், முதுகு
புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல்,அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம் புறவு - காடு, புறா,
பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல்,மிகுவித்தல் பெறுக்கல் - அரிசி, மிகுத்தல்
பொரி - நெற்பொரி, பொரிதல் பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு
பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல் பொறித்தல் - எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்
பொருப்பு - மலை, பக்கமலை பொறுப்பு - பாரம், பொறுமை
பொரு - போர் பொறு - பொறுத்திரு
மரத்தல் - விறைத்தல் மறத்தல் - மறதி, நினைவின்மை
மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம்,பறைவகை மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்.
மரி - விலங்குகளின் குட்டி மறி - தடை செய்
மரித்தல் - இறத்தல், சாதல் மறித்தல் - தடுத்தல்,திரும்புதல், அழித்தல்.
மரை - மான் மறை - வேதம் (எ.கா:- அறம் பொருள், இன்பம் வீடு என்கிற நால் வேதங்கள்)
மரு - மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து. மறு - குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
மருப்பு - கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு. மறுப்பு - எதிர்ப்பு
மருகு - வாசனை தாவரம் மறுகு - சிறியதெரு
மாரன் - மன்மதன், காமன் மாறன் - பாண்டியன், சடகோபாழ்வார்
முரி - பாலைநிலம், நொய், சிதைவு. முறி - ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
முருக்குதல் - அழித்தல், உருக்குதல். முறுக்குதல் - சுழற்றுதல், திரித்தல்.
வரம் - இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம். வறம் - வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை.
வரவு - வருமானம், வழி வறவு - கஞ்சி
வரப்பு - எல்லை, வரம்பு வறப்பு - வறட்சி, வறுமை, வற்றுதல்
விரகு - விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம். விறகு - எரிகட்டை
விரலி - மஞ்சள் விறலி - மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள்.
விரல் - மனித உடலில் உள்ள உறுப்பு விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.
விராய் - விறகு விறாய் - செருக்கு, இறுமாப்பு
வெரு - அச்சம் வெறு - வெறுத்துவிடு
வெரல் - மூங்கில் வெறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல்
விரை - விரைந்துசெல் விறை - மரத்துப்போ(தல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;