கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 1 மார்ச், 2017

உவமைத்தொடர்

உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது.
ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.
பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும்.
ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும்.
உவமைக்கு சில உதாரணங்கள்
  • அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது.
  • அத்தி பூத்தது போல - மிக அரிதாக
  • ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம்
  • ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல்
  • கீரியும் பாம்பும் போல - பகை
  • உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை
  • கரடி பிறை கண்டது போல - மிக அரிது
  • உள்ளீடற்ற புதர் போல - போலி
  • அடியற்ற மரம் போல - மூலபலமற்றது.
  • கடன்பட்டார் நெஞ்சம் போல - பதைபதைப்பு
  • கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு
  • குரங்கின் கை பூமாலை போல - தகுதியில்லாதவர்களுக்கு வழங்குதல்
  • எலியும் பூனையும் போல - சன்டை
  • சூரியனை கண்ட பனி போல - மறைதல்
  • செத்து செத்து எழும் பீனிக்சு போல - அழியாது
  • வலையில் அகப்பட்ட மான் போல - துடித்தல்
  • நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - திக்கு தெரியாமல் தடுமாறுதல்
  • வேலியே பயிரை மேய்ந்தது போல - பாதுகாக்க வேண்டியதே பாதிப்பாய் அமைதல்
  • செவிடன் காதில் சங்கு ஊதுவது போல - பிரயோசனமின்மை
  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - இரண்டு மனம் கொண்டவன்
  • வெண்ணெய் இருக்க நெய்க்கு அழைவதுபோல - அறிவற்ற தன்மை
  • விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
  • பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி
  • தாமரை அலை தண்ணீர் போல - பற்றற்றது
  • உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு
  • இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி
  • சிப்பிக்குள் முத்து போல - மேன்மை
  • இன்று மழர்ந்த தாமரை போல - சிரித்த முகம்
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு
  • நகமும் சதையும் போல - ஒற்றுமை
  • நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை
  • கிணற்றுத் தவளை போல - உலகை அறியாமை
  • வெந்த புண்ணில் வேல் பாயடச்சியது போல - துன்பத்திற்கு மேல் துன்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;