கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் என்பது அதனை செம்மொழியாக அழைப்பதில் இருந்தே வெளிப்படையாக தெரிந்து விடக்கூடும்.
தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் பறைசாற்றும் தமிழின் ஆழத்தை அதன் சிறப்பை, எளிமையை. அந்த வகையில் தமிழ் என்றாலே ஓர் தனித்துவமே.
அதேபோன்று தமிழில் ஓர் தனி எழுத்து கூட ஓர் சொல்லாக வடிவம் பெற்று பொருள் தரும் தன்மை எம் மொழியின் சிறப்பு.
247 தமிழ் எழுத்துக்களில் பல எழுத்துக்கள் ஓர் எழுத்து சொல்லாக காணப்படுகின்றன. ஓர் எழுத்து சொல் என்பது ஒரே ஒரு எழுத்து ஒரு சொல்லாக மாற்றம் அடைந்து பொருள் தருவது ஆகும்.
ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். தமிழ் கவிகளில் இவற்றைக் காணமுடியும்.
அதாவது “அ” எனும் இந்த தனி எழுத்து “எட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா” போன்ற பொருள்களைத் தரும். அவ்வாறான தனி எழுத்து, சொல்லாக மாறி பொருள் அமைகின்ற எழுத்துக்களைப் பார்க்கலாம்.
  • அ - எட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா
  • ஆ - பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
  • ஈ - கொடு, பறக்கும் பூச்சி
  • உ - சிவன்
  • ஊ - தசை, இறைச்சி
  • ஏ - அம்பு
  • ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  • ஓ -வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  • கா - சோலை, காத்தல்
  • கூ - பூமி, கூவுதல்
  • கை - கரம், உறுப்பு
  • கோ - அரசன், தலைவன், இறைவன்
  • சா -இறப்பு, மரணம், பேய், சாதல்
  • சீ - இகழ்ச்சி, திருமகள்
  • சே - எருது, அழிஞ்சில் மரம்
  • சோ - மதில்
  • தா - கொடு, கேட்பது
  • தீ - நெருப்பு
  • து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  • தூ - வெண்மை, தூய்மை
  • தே -நாயகன், தெய்வம்
  • தை - மாதம்
  • நா - நாக்கு
  • நீ -நின்னை
  • நே - அன்பு, நேயம்
  • நை - வருந்து, நைதல்
  • நொ - நொண்டி, துன்பம்
  • நோ - நோவு, வருத்தம்
  • நௌ - மரக்கலம்
  • பா - பாட்டு, நிழல், அழகு
  • பூ - மலர்
  • பே - மேகம், நுரை, அழகு
  • பை - பாம்புப் படம், பசுமை, உறை
  • போ- செல்
  • மா - மாமரம், பெரிய, விலங்கு
  • மீ - ஆகாயம், மேலே, உயரம்
  • மு -மூப்பு
  • மூ - மூன்று
  • மே - மேன்மை, மேல்
  • மை - அஞ்சனம், கண்மை, இருள்
  • மோ - முகர்தல், மோதல்
  • யா - அகலம், மரம்
  • வா - அழைத்தல்
  • வீ - பறவை, பூ, அழகு
  • வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
  • வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;