கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 27 நவம்பர், 2013

சொற்கள்.ஆங்கிலம்- தமிழ்

Acknowledgement - பெறுகைச் சீட்டு
Acre - குறுக்கம்
Agent – முகவர்
Air-condition - செந்தனப்பு
Air-condition room - செந்தனக் கட்டுப்பாட்டு அறை
Alarm - எழுப்பு மணி
Apple - அரத்தி
Appointment Order - அமர்த்தோலை
Atlas - ஞாலப்படப் புத்தகம்
Attestation - ஒப்பிட்டுச் சான்று
Aeroplane - வானூர்தி
    B
Bacteria - குச்சிப்பூச்சி
Banian - உள்ளொட்டி
Bank - வைப்பகம்
Biscuit - ஈரட்டி
Bishop - மேற்காணியர், கண்காணியர்
Blood - அரத்தம், குருதி
Boiler - வேம்பான்
Bonus - நன்னர்
Book - Keeping - கணக்கு வைப்பு
Botany - நிலைத்திணை
Brake - தகைப்பான்
Bulb - குமிழி
Bungalow - வளமனை
Bureau - நிலைப்பேழை
Bus - பேரியங்கி
    C
Cake - பணியம்
Camp - பாளயம்
Capsule – முகிழம்
Case - வழக்கு
Ceiling Fan - முகட்டு விசிறி
Cement - சுதைமா
Census - குடிமதிப்பு
Century - நூற்றகம்
Certificate - சான்றிதழ்
Chain - தொடரி
Champion - ஆற்றலாளர்
Cheque - காசோலை
Circus Show - வட்டரங்குக் காட்சி
Club - மன்றம், மகிழ்மன்றம்
Coat - குப்பாயம்
Coffee - குளம்பி
Communism - கூட்டுடமை
Concrete - கற்காரை
Conduct Certificate - நன்நடத்தைச் சான்றிதழ்
Congress Party - பேராயக் கட்சி
Contonement - படை வீடு
Convent - கன்னித்துறவியர் மடம்
Course - கடவை
Crown - மணிமுடி
Cyber - சுன்னம், சுழி
Cycle – மிதிவண்டி
    D
Delegate - விடை முகவர்
Deposit - இட்டு வைப்பு
Dictionary - அகர முதலி
Director - இயக்குநர், நெறியாளர்
Doctor (Medical) - பண்டுவர் (மருத்துவர்)
Doctor (Scholar) - பண்டாரகர் (அறிஞர்)
Dozen - எல்லன்
Draft - வரைவோலை
    E
Easy Chair - சாய் நாற்காலி
Encyclopaedia Britanica - பிரிதானியக் கலைக்களஞ்சியம்
Engaged - ஈடுபாடுள்ளது
Engineer - பொறியாளர்
Equal - ஒத்த, சம
Equivalent - நிகர்மதிப்பான்
Evidence - சான்று
Experience - பட்டறிவு
Express - விரைவான்
    F
Faith - நம்பகம
Fiddle - கின்னரி
Fortnightly - அரைமாதிகை
Fountain Pen - ஊற்றுத்தூவல்
Fruit Salad - பழக்கூழ
Furlong - படைச்சால
Funnel – வைத்தூற்றி
    G
Grape - கொடி முந்திரி
Gun - துமுக்கி
    H
Hearing - கேட்பாடு
His Excellencey - மேதகு
His Highness - மேன்மைமிகு
His Holiness - தவத்திரு
His Majesty - மாட்சிமிகு
Horlicks - பான்மா
Hotel - உண்டிச்சாலை
Hybrid - இருபிறப்பி
Hydrogen - நீர்வளி
    I
Idea - ஏடல்
Index - பொருளட்டவணை
Inspector - உள்னோட்டகர்
Intermediate - இடைநடு
Interview - நேர்காணல்
    J
Jeep - மலையியங்கி
Judge - தீர்ப்பாளர்
Justice Party - நயன்மைக் கட்சி
    K
Key - திறவுகோல்
Kilo - அயிரம்
Kilometre - அயிரமாத்திரி
    L
Late - மேனாள்
Layout - இடுவமைப்பு
Lift - மின்தூக்கி
Limited - மட்டிட்டது
Logic - ஏரணம்
Lorry - சரக்கியங்கி
    M
Machine - பொறி
Memorandum – நினைவுக்குறிப்பு
Memento – நினைவுப் பரிசு
Metal - மாழை
Microscop - நுண்காட்டி
Milkmaid - இடைச்சி
Miracle - இறும்பூது
Mission - விடையூழியம்
Mixer - கலவை
Money Order - பணவிடை
Monthly - மாதிகை
    N
Nation - நாடு
Nationality - நாட்டினம்
Nile River - நீல ஆறு
Non-Vegetarian Food - புலால் உணவு
    O
Orange - நரந்தம்
Order - ஏவம்
Organizer - அமைப்பாளர்
Ovaltin - முட்டை வடிவி
Oxford University - எருதந்துறைப் பல்கலைக்கழகம்
Oxigen - உயிர்வளி
    P
Pacific Ocean - அமைதி மாவாரி
Passport - கிள்ளாக்கு, கடவுச்சீட்டு
Pen - தூவல்
Pencil - கரிக்கோல், எழுதுகோல்
Pendulum - தொங்கட்டான்
Peon - ஏவலர
Personification - ஆட்படுத்தம்
Petrol - கன்னெய்
Plan - திட்டம்
Platinum Jubilee - ஒள்ளி விழா
Pleasure Car - இன்னியங்கி
Post Office - அஞ்சலகம்
Practial – புரிவியல், நடைமுறை
Prayer - மன்றாட்டு
Problem - சிக்கல்
Project - வினைத்திட்டம்
    R
Radium - கதிரியம்
Ready - அணியம்
Red Cross - செங்குறுக்கை
Refrigirator - தண்மி
Representative - படிநிகராளி
Reverend (Rev) - அருட்திரு
Rickshaw - இழுவண்டி
Rose - முளரி
Rose Milk - செம்பால்
    S
Sacrifice - ஈகம்
Savage – விலங்காண்டி
Seat - இருக்கை
Shaving - முகம் மழித்தல், முகம் மழிப்பு
Sir - வயவர்
Soap - சவர்க்காரம்
Society - கழகம்
Sofa - மெத்தை இருக்கை
Squad - சதளம்
Stainless Steel - வெள்ளிரும்பு
Stamp - அஞ்சல் தலை, முத்திரை
Stool - முட்டான்
Sub-Divison - உட்பிரிவு
Summer Season - வேனிற்காலம்
Surgeon - அறுவையர்
Suspenson - இடைநீக்கம்
Sweater - வேர்ப்பான்
Syllabus- பாடப்பட்டி
    T
Table - நிலைமேடை (மேசை)
Taperecorder - நாடாப்பதிவான்
Tea - தேனீர், கொழுந்துநீர்
Theory - தெரிவியல்
Thesis - இடுநூல்
Telegram - தொலைவரி
Toilet - கழிப்பறை
Train - தொடர்வண்டி
Treatment - பண்டுவம்
Tubelight - குழாய் விளக்கு
Tumbler - குவளை
Typoid - குடற்காய்ச்சல்
    U
Undergo - ஊறுபாடு
Univeristy Chancellor - பல்கலைக்கழக வேந்தர்
Urgent - சடுத்தம்
    V
Vegetarian Food - மரக்கறி உணவு
Vice-Chanceller - துணைவேந்தர்
Visa - அம்பகம் Volume - மடலம்
Vote - நேரி, குடவோலை
Vulgar - இடக்கர்
    W
Waybill - கடத்தச்சாத்து
Weekly - கிழமையன்
Will - வேண்முறி
Window - பலகனி
    Y, Z
Youth - இளந்தை
Zero - சுன்னம், சுழி
Zoo - விலங்கினச் சாலை

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சனிக்கிழமை


வியாழன், 14 நவம்பர், 2013

வியாழக்கிழமை


திங்கள், 4 நவம்பர், 2013

பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழுநாடுகள்.

பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழுநாடுகள்.
1) சிங்களம் 
2) சோனகம் 
3) சாவகம் 
4) சீனம் 
5) துளு 
6) குடகம் 
7) கொங்கணம் 
8)கன்னடம் 
9) கொல்லம் 
10) தெலுங்கம் 
11) கலிங்கம் 
12) வங்கம்
13) கங்கம் 
14)மகதம் 
15) கடாரம் 
16) கௌடம் 
17) குசலம்
என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்.



திங்கள்கிழமை


ஞாயிறு, 3 நவம்பர், 2013

வினாத்தாள்,

சரியான விடையின் கீழ் கோடிடுக
………

1) ”சுத்தமே என்றும் சுகமளிக்கும்” என்ற பாடலை பாடியவா;
1)  வித்துவான் வேந்தனார்
2)  கவிமணிதேசிக விநாயகம்பிள்ளை
3)  அழ வள்ளியப்பா
……….
2) பஞ்சபாண்டவர்களுள் ஒருவர்.
1) இராமன் 
2) துரியேதனன் 
3) அரிச்சுணன்
………
3) கந்தியடிகள் எப்போது பிறந்தார்
1) 1940 மாசி 
2) 1869 ஒக்டோபர் 
3) 2008 மே
……..
4) குரு தட்சணையாகக் விரலைக் கொடுத்தவா;.
1) கும்பகர்ணன் 
2) இராமன் 
3) ஏகலைவன்
…..
5) தசரதணின் குருவாக விளங்கியவா;.
1) மாதங்கமுனிவர் 
2) வசிட்டமுனிவர் 
3) அகத்தியமுனிவர்
……….
6) மனநிறைவே ஒருவனுக்கு சிறந்த செய்வமாகும் என்பதனை உணர்த்தும் பழமொழி
1) உப்பிட்டவரை உள்ளவூம் நினை
2) போதுமென்ற மனமே பொன் செய்யூம் மருந்து
3) கடவூளை நம்பினோர் கைவிடப்படார்
…………
7) எமது ஆசிரியர் மாணவர்களை புன்படுத்தமாட்டார் இதில் புண்படுத்தல் என்பது
1) புண்வரும்படி அடித்தல் 
2) உதவிசெய்தல் 
3) மனம்நோக பேசமாட்டார்
…….
8) புறாவைக்காத்த மன்னன்
1) தசரதன் 
2) சிபிச்சக்ரவர்த்தி 
3) பாண்டியன்
……..
9) ”உயிர்களைச் சித்திரவதை செய்யமாட்டோம்” என்பதில் சித்திரவதை என்பது
1) சித்திரம் வரைதல் 
2) துன்பப்படுத்தல் 
3) பகிடிபண்ணுதல்
…..
10) கண்ணன் வீட்டில் மிகவூம் வறுமை காரணமாக அல்லும் பகலும் வேலை செய்தான் என்ற வாக்கியத்தில் உள்ள இணை மொழி
1) வறுமை காரனமாக 
2) அல்லும் பகலும் 
3) ஏற்றஇறக்கம்
……….
(02) ஒத்தகருத்துச் செற்க்களை எழுதுக
1) வனம் …………………………………………… 
 2) பூக்கள்…………………………………………….
3) சினம் …………………………………………… 
 4) அழுக்காறு…………………………………………..
5) பூதரம் …………………………………………..  
 6) நண்பர்……………………………………………..
………
(03) எதிரக்கருத்துச் சொற்களை எழுதுக
1) முதியவர் …………………………………………..        
2) ஏற்றுமதி ………………………………………….
3) இரகசியம்…………………………………………… 
4) சுத்தம் …………………………………………..
5) அண்மை……………………………………………..      
6) புராதனம்

வெள்ளி, 1 நவம்பர், 2013

தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி




தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர்தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

.கா:
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போதுஇயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம்கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமேஅறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக்கூறுவார்.
#160;