கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


திருக்குறள் அதிகாரம் - 15-10

பிறனில் விழையாமை 

(10)

அறள்வரையான்  அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.


கருத்து 

ஒருவன் செய்யவேண்டிய அறங்களைச்
செய்யாது அறமில்லாதவற்றைச்
செய்தாலும் ,பிறன் மனையாளைச்
விரும்பாமல் வாழ்தல் நல்லது.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 29 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-9

பிறனில்விழையாமை 

(9)
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார் .

கருத்து 

கடல் சூழ் உலகில் நன்மைக்கு உரியவர்
யார் என்றால்,பிறன் மனையாளின்
தோளைப் பொருந்தாதவரேயாவர்  

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 28 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-8

பிறனில் விழையாமை 

(8)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.



கருத்து 

பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத
பேராண்மை, சான்றோருக்கு அறம் மட்டுமன்று,
நிறைந்த ஒழுக்கமுமாகும் .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 26 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-7

பிறனில் விழையாமை 

(7)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் 
பெண்மை நயவா தவன்.



கருத்து 

அறத்தின் இயல்போடு கூடி இல்லறம் 
நடத்துபவன் என்பான்,பிறனுக்கு 
உரிமையானவளின் பெண் இன்பத்தை 
விரும்பாதவன்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 25 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-6


பிறனில் விழையாமை 

(6)
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

கருத்து 

பிறன் மனைவியை விரும்பி அவன்
வீட்டினுள் செல்பவனிடத்தில் பகை,
பாவம்,அச்சம்,நிந்தை ஆகிய நான்கும்
நீங்காமல் இருக்கும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


#160;