கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 31 மார்ச், 2012

நாககுமார காவியம், -5

வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி

91  தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்
சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான்
ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான்.

வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்

92  குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து
சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான்.

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

93  பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார்
ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான்.


94  இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான்.

வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

95  வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும்
கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.

வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

96  அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்¢குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான்
அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள்.


97  இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்
எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்
நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து
வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான்.

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

98  வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்
ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று
தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான்.

கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

99  அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்
மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்
நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப்
பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே.

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

100  தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்
சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்
பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.

நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

101  சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி
எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி
நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.


நான்காம் சருக்கம்

சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்

102  சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்தன்
ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன்
செப்பு நேர்முலையாள்நல் செயவதி.


103  மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர்
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான்.


104  இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத்
திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார்.

முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

105  புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக்
கண்திறந்து உந்திடும் காவலன்தனை
அண்டிநல் சேவையார் ஆவராம்எனப்
பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின்.

செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

106  மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன்
மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள்.

சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

107  நல்அருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை இல்குண இருடிகள் தம்முடன்
தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவின் நயந்துஇருந்தார்களே.


108  செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை
நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து
இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன்
செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே.

செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

வேறு

109  என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து
சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன்
குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே.


110  அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித்
கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும்
விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில்.

ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்

111  அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப
புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின்
நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார்.

கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்

112  அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து
உரியநல் அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான்.


113  அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்
மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும்
சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே.


114  நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று
வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி
நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க
போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.

நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

115  வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக்
கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும்
நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே.


116  கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்
சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள்
உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான்.

நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

117  வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி
தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து
சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின்
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே.

முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்


திருக்குறள் அதிகாரம் - 9-8

விருந்தோம்பல், 
(8)
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

கருத்து 
விருந்தினரை உபசரித்து  அதன் பயனை
அடையாதவர் தம் பொருளை வருந்திக்
காத்து(பின் இழந்து)ஆதரவு அற்றவர்
களானோம் என இரங்குவர்.  

நீலகேசி-19

68மணிநகு நெடுமுடி மறவேன் மன்னவன் மகளெனின் மடவாய்
அணிநகை யாயமோ டாடி அரும்பெறற் சுற்றமோ டிருப்பாய்
பிணிமிகு பேய்வன மிதனுட் போதுற லொருதலை பிறவோ
துணிவொடு துறந்தவர்க் கல்லாற் றுன்னதற் கரிதிது பிறர்க்கே.


69வேணுவோ டினையன பிறவும் வியப்புறு பெருவனம் வினவிற்
பேணுதற் கரிதிது பெரிதும் பிணிதரு பேய்வன மெனவே
வாணுதன் மயிர்குளிர்த் துரைக்கும் மாதவத் தடிகளென் றானுங்
காணுதற் கரியன வுருவங் கண்டறி வனகளு முளவோ.


70புக்கிருந் தொருமனை யுறைவார் போவதும் வருவதுங் கண்டான்
மக்களுந் தாயரந் தம்முள் மருள்வதும் வெருள்வது முளதோ
மிக்கபல் கதிகளு முயிரின் மெய்ம்மையு முணர்ந்தவர்க் கரிதே
ஒக்குமற் றவையுள வேனு முரைப்பது பொருத்தமின் றெமக்கே.


71சந்திர முனிவர னுரைப்பத்தளிரியல் சாவுகள் சாரா
மந்திர முளதெனி னடிகள்மனத்தொடு பணிமின மெனவே
யந்தரத்தவர்களும் வணங்குமருந்தவ னவையுனை யடையா
இந்திரன் வேண்டினும் பேய்களென்னமற் றிலங்கிழை மடவோள்;


72துப்படு துவரிதழ் துடிக்குந்துகிலிடை யகலல்கு றுளக்குஞ்
செப்படு வனமுலை செறிக்குஞ்சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கு
மொப்படு துடியிடை யொசிக்குமுவ்வுறு மதிமுக முழற்று
மிப்படி யவளிவை செயலுமிவையெனை யெமக்கென வுரைத்தான்.


73காதின கனகப் பைந்தோடுங்கைவெள் வளைகளுங் கழலத்
தாதின வினமலர் பலவுந்தலையன நிலமிசை யுதிரப்
போதன புணரரி நெடுங்கண்புனல்வரப் பூந்துகிற் புடையா
வேதனை பெரிதுடைத் தடிகள்விளிகவிப் பிறப்பென வுரைத்தாள்.


74பிறவியும் பிறவியுட் பிறக்கும் பிணியுமப் பிணியினைத் துணிக்கு
மறவியின் மருந்துமம் மருந்தின்மாட்சியுங் கேட்குறின் மடவா
யறவிய மனத்தினை யாகி அலங்கழித் தொழிலொழிந் தடங்கி
உறவினை யோம்பினை யிருவென்றுயர்தவ னுரைத்தலு மிருந்தாள்.


75நாற்கதி யுள்ள நரகரை நாஞ்சொல்லின் மூன்றுவகைக்
காற்று வலையங்க ளேந்து நிரையக் கதிநிலந்தா
மேற்ற நிகோதத்தி னிம்ப ரிருளி னிரளிருண்மே
லாற்றப் புகையள றார்மணற் கூர்ம்பர லாய்மணியே.


76ஏழா யவைவிரிந் தெண்பத்து நான்குநூ றாயிரமாம்
போழா மவற்றப் புரையின் விகற்பமும் பொற்றொடியாய்
கீழா ரலிகண் முழுச்செவி கிண்ணர்க ளெண்ணிகந்த
வூழாம் பிறப்புமுவ் வாதமல் லாருரு வொப்பினரே.


77விலங்கின் வகையும் விரிவன யான்சொல்ல வேண்டுதியே
லலங்கலம் பூணா யிருவகை யாமவை யென்கொலென்னின்
நிலங்களி னிற்பவுஞ் செல்பவு மாமென நிற்பனதா
மிலம்பட லின்றியிவ் வையகத் தைந்தா யியன்றனவே.

சூளாமணி-1-2

   நெய்தல்


சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம்.
26



திணை மயக்கம் [மலர்]


கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே.
27


திணை மயக்கம் [ஒலி]


கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.
28



சுரமை நாட்டின் சிறப்பு


மாக்கொடி மாணையு மெளவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே.
29



2.நகரச் சருக்கம்



சுரமை நாட்டுப் போதனமா நகரம்


சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.
30



நகரத்தின் அமைதி


சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.
31


அகழியும் மதிலரணும்


செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.
32



அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு


இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்
33



மாடங்களின் மாண்பு


மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்
கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.
34


இதுவுமது - வேறு


அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.
35



மாடங்களின் சிறப்பு


கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.
36



மாடத்திற் பலவகை ஒலிகள்


மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
முடிமா ணகரது முரல்வ தொக்குமே
37


வண்டுகளின் மயக்கம்


தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே.
38



கடைத்தெரு


பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.
39



சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்


காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.
40


அரசர் தெருவழகு


விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.
41


செல்வச் சிறப்பு


கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.
42


மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி


தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.
43



இன்ப உலகம்


மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக
ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.
44



பயாபதி மன்னன் மாண்பு


மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே
45


பயாபதி மன்னன் சிறப்பு


எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.
46


மக்கட்குப் பகையின்மை


நாமவே னரபதி யுலகங் காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலித தில்லையே.
47



குடிகளை வருத்தி இறை கொள்ளாமை


ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.
48


மன்னனின் முந்நிழல்


அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.
49



இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்


மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ
50

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 30 மார்ச், 2012

சூளாமணி-1-1

பாயிரம்


கடவுள் வாழ்த்து


வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்


நுதல் முதலிய பொருள்


அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச் சரண் சென்ற மேனாள்
பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்


அவை அடக்கம்


கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே


நூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்


நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்
தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்
தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்
கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே


செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த
நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்
அங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த
திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே


நூல் வந்த வழி


விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை
பஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே




முதல் பாகம்


1.நாட்டுச் சருக்கம்


சுரமை நாட்டின் சிறப்பு


மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது
துஞ்சுந்ணணள் ந்஢தியது சுரமை யென்பவே.
1


கயல்களும் கண்களூம்


பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.
2


வயல்களும் ஊர்களும்


ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.
3


பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை


நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
பொழிலகம் பூவையுங் கிளீ஢யும் பாடுமே
குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே.
4


வண்டுகளுங் கொங்கைகளும்


காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே.
5


சுரமை நாட்டின் நானிலவளம்


வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன்னரலு நாடதே.
6


குறிஞ்சி நிலம்


முன்றி லெங்கு முருகயர் பாணியும்
சென்று வீழரு வித்திர ளோசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.
7


முல்லை நிலம்


ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.
8


மருத நிலம்


அணங்க னாரண வாடல் முழவமும்
கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.
9


நெய்தல் நிலம்


கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.
10


குறிஞ்சி நிலம்


கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.
11


முல்லை நிலம்


கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்
முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ
மன்றெ லாமண நாரும ருங்கினே.
12


மருதம்


நாற விண்டன நெய்தலு நாண்மதுச்
சேறு விண்டசெந் தாமரைக் கானமும்
ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்
ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.
13



நெய்தல்


கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே.
14


குறிஞ்சி


நீல வால வட்டத்தி னிறங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.
15


முல்லை


நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.
16


மருதம்


துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றதுபு லம்பின பொய்கையே.
17



நெய்தல்


வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்
முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்
டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.
18


குறிஞ்சி


காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
டேந்து சந்தனச் சர லிருங்கைமா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்,
19


முல்லை


தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.
20


மருதம்


அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே.
21



நெய்தல்


கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலும் கழியெலாம்.
22


குறிஞ்சி


கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்
மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.
23


முல்லை


பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.
24


மருதம்


மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.     

யசோதர காவியம்-13

(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)


நரககதி வரலாறு


37முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ
றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம்
அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்
உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.


விலங்குகதி வரலாறு


38அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல்
பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு
வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.


மனுஷ்யகதி வரலாறு்


39ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட
பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.


தேவகதி வரலாறு


40இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி
வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந
திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ.
தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்


தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்


41துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா
அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத்
தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே
அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே.


42வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி
தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக
இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந்
தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ.


43மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்
தி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.


44ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன்
மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் [றோ
நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும்
பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான்.


அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்


45அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின்
நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி
விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற
கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள்.


இதுவுமது.


46அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந்
திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.)
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்


இதுவுமது


47பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத்
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.


48இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம்
நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை
என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி
இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள்.


இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.


49ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி
நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி
வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான்
நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண்


இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.


50‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி
அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா
குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின்
யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘


இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்


51உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்
பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்
அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும்
பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.


சித்தர் வணக்கம்


52ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ்
வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார்
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித்
தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பா£.¢


அருகர் வணக்கம்


53பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற
திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும்
உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித்
திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.


ஆசார்¢யர் வணக்கம்


54ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார
மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார்
பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித்
தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார்.


உபாத்தியாயர் வணக்கம்


55அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப்
பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட்
டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.


சர்வசாது வணக்கம்


56பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற
கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச்
சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச்
சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார்.



57
இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு
தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி
முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக
கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.


இளைஞர் புன்முறுவல் செய்தல்


58கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால்
இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.


இளைஞர் மன்னனை வாழ்த்துதல்


59மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா
தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்
சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று
நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார். 

நீலகேசி-18

58சிந்தித் தாளிது செறியெயிற் றரிவைய துருவாய்ப்
பந்தித் தாகிய பழவினை கெடுகெனப் படிற்றால்
வந்தித் தியான்கொண்ட வடிவினின் மனநிறை யழித்தா
னொந்தித் தீநிகர் நோன்புகை விடுமிவ னெனவே.]


59யாம நீங்கலு மரசன்ற னொருமக ளுரைசால்
காம லேகைதன் னுருவொடு திருவெனத் தோன்றித்
தாமஞ் சாந்துதண் மலரின்ன பலகொண்டு துணைசால்
சேமங் காவல சேவடி போற்றெனச் சென்றாள்.


60வணங்கி வந்திடம் வலங்கொண்டு வழிபடு பொழுதில்
கணங்க டாம்பல கடன்சொல்லிக் கலந்தெடுத் தேத்தித்
துணங்கை யாடத்தன் றுகிலிடை மேகலை துளங்க
வணங்கு மெய்யவ ளருந்தவ னுழைவர நினைந்தாள்.


61காவ லாளகுங் கடையிறந் திவண்வர வொழிக
வேவ லாளரு மிதற்கெய்து மியல்குறை முயல்க
கூலி யான்குறை யுளதெனக் குறுகுமி னமரென்
றோவில் பல்புக ழுறுதவ னறியநின் றுரைக்கும்.


62ஆண்டைக் கோட்டத்தை அணைந்ததோ ரகலிலை யால
மாண்டைக் காயதோர் மரமுத லிருந்தமா தவனைக்
காண்டக் காயென்செய்கருவினை தணிக்கெனப் பணிந்தாள்
வேண்டிக் கொண்டவவ் வியத்தகுவிளங்குரு வுடையாள்


63வேண்டிய வுருவத னாலும் வேட்கைசெய் யுருவத னாலுங்
காண்டகு மடவர லுருவங் காமுறு வதுநனி தாங்கி
யீண்டிய மிகுகுணத் திறைவ னியல்பினை யெனையது நினையா
நீண்டதோர் கொடியயற் கொடிபோ னிறைதவ வருளென நின்றாள்.


64உடம்பொடு முயிரிடை மிடைந்த வொற்றுமை வேற்றுமை விகற்பிற்
றொடர்ந்தபல் வினைகளைத் துணிக்குஞ் சுதநெறி முறைமையு மறிவான்
படர்ந்ததன் யோகினை நிறுவிப்பணிந்தவரட் காசிடை மொழிந்தா
னிடம்பக மகளிவள் பெரிது மிராசபுத் திரியல ளெனவே.


65என்னைஈண் டைக்கு வரவென் றருந்தவன் வினவலு மெழிலார்
பொன்னனாள் புடைபெயர்த் திட்ட பொலங்கல மனங்கலக் குவபோன்
மின்னொளி யோடுற மிழற்றமிழற்றுவ கிளியென மொழிந்தாள்
முன்னநான் பரவிய வரங்கண்முடிகுறை கொடுப்பதற் கெனவே.


66யாதுநீ கொண்ட வரமென் றருந்தவ னியல்பினின் வினவ
வேதினாட் டிறையெங்க ளிறைமே லியல்பின்றி யெழலொழி கெனவே
போதுசாந் தவியொடு புகையும் பொருந்திய பொருந்தெய்வக் கெனலு
மோதிஞா னியிது வாயி னுரையழ கீதென மொழிந்தான்.


67தோடுகொண் டொருசெவி விளங்கத் துளங்குவ மகரமொன் றாடப்
பாடுவண் டோடுசுரும் பரற்றப் பல்கலம் வயிரவில் வீச
வாடுகொம் பனையவ ருரைக்கு மச்சமோ பெரிதுடைத் தடிகள்
காடுகண் டாற்பிறர்க் கறியேன் கவற்றுவ தொக்குமீ தெனக்கே.

திருக்குறள் அதிகாரம் - 9-7

விருந்தோம்பல்
(7)
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

கருத்து "விருந்தோம்புதலாகிய வேள்வியின்"
பயன் இன்ன அளவினை உடையது
என்று கூறத்தக்கதன்று;விருந்தினரின்
தகுதிக்கு ஏற்ற அளவினதாகும். 

நாககுமார காவியம், -4

64 பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்
நையும்இடை மாதரும் நாகநல் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியே
வெய்யவேல்கண் தாயுடன் வியன்மனை அடைந்தனன்.

பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை

65 மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன்
நின்னுடைப் புதல்வன் நீராடல்காணப் போனதுஎன்
நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின் ஆடல்என்
நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன்.

தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்

66 அரசன்உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே
சிரசுஇறங்கித் துக்கமாய்ச் சீர்கரத்து இருந்தனள்
விரகுநல் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
அரசன்உரை சொல்லக்கேட்டு ஆனைமிசை ஏறினான்.


67 வாத்தியம் முழங்கவும் மதவாரணம் அடக்கவும்
ஏத்துஅரிய வீதிதொறும் ஈடுஇல்வட்ட சாரியும்
பார்த்துஅரிய நடனமும் பல்இயங்கள் ஆர்ப்பவே
சீற்றமொடு உலாச்செலச் சீர்அரசன் கேட்டனன்.

அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்

68 நன்அடியார் சொல்லினர் நாகநல் குமரன்என்
இன்உரையை மீறினன் இனிஅவன் மனைபுகுந்து
பொன்அணிகள் நற்பொருள் நாடிமிக் கவர்கொள
என்றுஅரசன் கூறலும் இனப்பொருள் கவர்ந்தனர்.

நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்

69 ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதர
நீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான்.

அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்

70 அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழ
அரவமணி ஆரமும் ஆன முத்து மாலையும்
கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும்
எரிமணிகள் இலதைவேந்து என்னஇக் கூற்றென.

நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்

71 சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன்
சூதில்ஆட என்னுடன் சுதன்அழைப்ப வந்தபின்
சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில்
சூதுஇரண்டு ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன்.

தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்

72 இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்துஉடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருள் கொடுத்தபின்
அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன்.

புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்

73 மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில்
நன்நகர் சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்று
அந்நகரின் நாமமும் அலங்கரிய புரம்எனத்
தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே.


மூன்றாம் சருக்கம்

கவிக்கூற்று

74 அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும்
பிரிவுஇன்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்¢கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன்.

நாககுமாரனின் தோழர் வரலாறு

75 பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர்அணி கொடிகள் ஓங்கும் உத்தர மதுரை தன்னில்
வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர் செயவர்மாவின்
சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும்.

வியாள-மாவியாளரின் தோற்றம்

76 வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும்
சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில்
காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர்
வேந்தன்வந்து அடி வணங்கி விரித்துஒன்று வினவினானே.


77 என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோ
அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை பண்ணும்
என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான்.

வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்

78 மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப்
பின்னவர் அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்இறை தேடிப் போந்தார் தரைமகள் திலதம் போலும்
பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே.

பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்

79 நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் றேவி பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன்
கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந் தரிஎன்பாள்ஆம்
விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார்.


80 மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டு
தன்உடையப் புதல்வி தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரிவியாளனுக்கு
மன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே.

நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்

81 சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநல் குமரன் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு
சிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே.

சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்

82 செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார்
கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே.

சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்

83 சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேல் குமரன் தோன்றி அவனும்வந்து எதிர்த்த போது
மானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை ஏவ
கோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே.

மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி

84 நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்ன
போகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன
ஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான்.

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்

85 நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே
செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே.

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்

86 தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து
தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து
அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில்.

மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்

வேறு

87 மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின்
இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன்.


88 எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று
அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும்
தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து
இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே.

வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி

வேறு

89 நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி
கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று
என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம்.

திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்

90 வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில்
உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான்.


வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 29 மார்ச், 2012

சூளாமணி

இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல். ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.   

நீலகேசி-17

48சீல நல்லன சினவரன் றிருமொழி தெளிந்தான்
கால மூன்றினுங் கடையில்பல் பொருளுணர் வுடையான்
மேலு மின்னபல் வியந்தரம் வெருட்டுத லறிவான்
நீல கேசிதன் னெறியின்மை யிதுவென நினைந்தான்.


49வெருட்டு மாகிலும் வெருட்டுக விகுர்வணை களினாற்
றெருட்டு வேனிவ டிறமின்மை சிறிதிடைப் படலும்
பொருட்டி றங்களைப் புலமையிற் புனைந்துரை பெறுமே
லருட்டி றந்நல வறநெறி பெறுதலு மறிந்தான்.


50மாக மேயுற மலையன்ன சிலையொடு சிலையா
மேக மேயென விசும்பிடை வெடிபட விடியா
நாக மேயென நாவினை நீட்டுவ காட்டாப்
பாக மேயெனப் பலவெனச் சிலவென வுலவும்.


51இலங்கு நீளெயிற் றிடையிடை யழலெழச் சிரியாக்
கலங்கு மார்ப்பொடு சார்ப்படு மழையெனத் தெழியாப்
பிலங்கண் டன்னதன் பெருமுழை வாய்திறந் தழையா
மலங்க நின்றுதன் மடனெடு மயிர்க்கையிட் டுயிர்க்கும்.


52பொங்கு பூமியுட்பொடிபட வடியிணை புடையாப்
பங்க மேசெய்து படபட வயிறடித் திறுகி
யங்கி போலவீழ்ந் தலறிநின் றுலறியங் காக்கு
மெங்குந் தானென வெரிகொள்ளி வளையெனத் திரியும்.


53கல்லி னாற்கடுங் கனலினுங் கடுகென வெடிக்கும்
வில்லின் வாய்ப்பெய்து விளங்குவெண் பகழிகள் விடுக்கும்
மல்லி னாற்சென்று மறித்திடு வேனென நெறிக்கும்
பல்லி னாற்பல பிணங்களி னிணங்களைப் பகிரும்.


54ஓடு முட்குடை யுருவுகொண் டருவென வொளிக்கும்
பாடு பாணியிற் பலபல கலகல வொலியா
ஆடு நாடக மரும்பசி களைகென விரும்பி
ஊடு போவனென் றுரைத்துரைத் துள்ளஞ்செய் தொழியும்.


55குஞ்ச ரம்பெருங் கொடுவரி கடுவிடை கொலைசூ
ழஞ்சு தன்மைய வடலரி யெனவின்ன பிறவும்
வெஞ்சி னம்பெரி துடையன விவையினும் வெருளான்
றஞ்ச மன்றிவன் றவநிறை சுடுமெனத் தவிர்ந்தாள்.


56அச்ச மேயுறுத் தழிக்குவன் தவமென அறியேன்
விச்சை வேறிலன் விழுக்குண முடையனிவ் விறலோன்
இச்சையாலன்றி யிவன்முன்னை நிலையெனக் கரிதா
நச்சு மெய்யென நடுங்கும் னுடம்பென வொடுங்கி.


57ஆற்றல் சான்றவ னருந்தவ வழலெனை யடுமான்
மாற்று மாறென்கொ லெனநனி மனத்தினு ணினையாச்
சீற்றந் தீர்ந்தென்செய் கருவினை தணிகெனப் பணிந்தாள்
கூற்றம் போல்வதோர்கொடுமையையுடையவள் குறைந்தே.

யசோதர காவியம்-12

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.


தற்சிறப்புப்பாயிரம்

கடவுள் வாழ்த்து


1.உலக மூன்று மொருங்குணர் கேவலத்
தலகி லாத வனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.


2நாத னம்முனி சுவ்வத னல்கிய
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்
ஏத மஃகி யசோதர னெய்திய
தோத வுள்ள மொருப்படு கின்றதே.



அவையடக்கம்


3உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென
எள்ளு கின்றன ரில்லை விளக்கினை
உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்
கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே.


நூல் நுவல் பொருள்


4மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்
பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும்
வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்
தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே.



நூல்


முதற் சருக்கம்


நாட்டுச் சிறப்பு


5பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை
நம்பு நீரணி நாடுள தூடுபோய்
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ
திம்ப ரீடில தௌதய மென்பதே.


நகரச் சிறப்பு்


6திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்
வசை யிலாநகர் வானவர் போகமஃ
தசைவி லாவள காபுரி தானலால்
இசைவி லாதவி ராசபு ரம்மதே.


7இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது
மஞ்சு லாமதி சூடின மாளிகை
அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்
விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.


அரசனியல்பு


8பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி
பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்
மாரி தத்தனென் பானுளன் மன்னவன்.


9அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்
மருவு மானுயர் வானவர் போகமும்
பொருவில் வீடு புணர்திற மும்மிவை
தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.


வேனில் வரவு


10நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை
சரிந்த காதற் றடையில தாகவே
வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்
விரிந்த தின்னிள வேனிற் பருவமே.


வசந்தமன்னனை வரவேற்றல்


11கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன
வாங்கு வாகை வளைத்தன சாமரை
கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி
பாங்கு வண்டொடு பாடின தேனினம்.


இதுவுமது


12மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர
தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர்
கலந்த காதன்மை காட்டுநர் போலவே
வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.


அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்


13உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட
வயந்த மன்னவன் வந்தன னென்றலும்
நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்
வயந்த மாடு வகையின ராயினர்.


14கானும் வாவியுங் காவு மடுத்துடன்
வேனி லாடல் விரும்பிய போழ்தினில்
மான யானைய மன்னவன் றன்னுழை
ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.


ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்


15என்று மிப்பரு வத்தினோ டைப்பசி
சென்று தேவி சிறப்பது செய்துமஃ
தொன்று மோரல மாயின மொன்றலா
நன்ற லாதன நங்களை வந்துறும்.


இதுவுமது


16நோவு செய்திடு நோய்பல வாக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
காவல் மன்ன கடிதெழு கென்றனர்.


அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்


17என்று கூறலு மேதமி தென்றிலன்
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்
நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத்
தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.


தேவியின் கோயிலை அடைதல்


18சண்ட கோபி தகவிலி தத்துவங்
கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத்
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
கண்ட மாரி தனதிட மெய்தினான்.


அரசன் மாரிதேவதையை வணங்குதல்


19பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்
தேவி மாட மடைந்து செறிகழன்
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.


20மன்ன னாணையின் மாமயில் வாரணம்
துன்னு சூகர மாடெரு மைத்தொகை
இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன்.


21யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை
ஈன மில்பலி யாக வியற்றினால்
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்
ஆன பூசனை யாற்றுத லாற்றென.


22வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை
யீடி லாத வியல்பினி லில்வழி
யேட சண்ட கருமதந் தீகென
நாட வோடின னன்னகர் தன்னுளே.


அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்


23ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந்
தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச்
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்
மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.


சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்


24வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்¢
சிந்தையா னெறிக்கட் டீமை தீ¢¢ர்த்திடும் நியம முற்றி
அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்¢
முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.


சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்


25உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்
அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை
யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்
துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.


சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்


26அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்
எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி
நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார்.


இளைஞர் சரிகை செல்லுதல்


27வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார்
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.


இதுவுமது்


28வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி
நல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி
யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி
நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே.


மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்


29அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.


இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்


30எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல்
தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான்.
இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.


31வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித்
தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்
அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில்
தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான்


32நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை
யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின்
அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ
மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்


33அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால்
அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி¢
அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த
நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.


34அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந்
தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்
நல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம்
மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ.


35கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா
இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும்
பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம்.


36பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்
சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே
இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம். 

திருக்குறள் அதிகாரம் - 9-6

விருந்தோம்பல்

(6)
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு .

கருத்து
வந்த விருந்தினரை உபசரித்து வரக் கூடிய
விருந்தினரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்
தேவர்க்கு நல்ல விருந்தாவான் . 

நாககுமார காவியம், 3

சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்துஅரசி ஆக்குதல்


31 அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச்
செவ்விதில் செப்பச் சீருடை மன்னனும்
மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத்
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன்.




32 மன்னன் இன்புற்று மாதேவி ஆகவே
நன்மைப் பட்டம் நயந்து கொடுத்தபின்
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன ஆற்றின் இயைந்துடன் செல்லுநாள்.


பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு


33 வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுள்
பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி
கயந்தம் நீர்அணி காண்டற்குச் சென்றநாள்.




34 வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வார்அணி கொங்கை யார்அவள் என்றலும்
ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்று
தார்அணிகுழல் தாதி உரைத்தனள்.



பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்


வேறு


35 வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக்
கால்மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று
பால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து
நூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே.



ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்


வேறு


36 கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார்
பொல்லாக் கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற்கு எளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள்.



முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்


37 பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நல்தவமும் ஆமோ எனக்குஎன்றாள்
கணிதம்இலாக் குணச்சுதனைக் கீர்த்திஉடனேபெறுவை
மணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான்,




38 நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை அறஉரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள்.


வேறு


39 நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல்
உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம் தன்னில்
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள்.



இரண்டாம் சருக்கம்




சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்


40 வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காதலாலே
புனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்ன
கனவரை மார்பன் கேட்¢பக் காரிகை உரைக்கும் அன்றே.


41 இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீய
கறைஇலா முனிவன் பாதம் கண்டுஅடி பணிந்து தூய
அறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம் மகிழ்ந்து
பிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார்.


பிரிதிதேவி கண்ட கனவு


42 இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்¢து
மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம்
இருள்மனை இமில் ஏறுஒன்றும் இளங்கதிர் கனவில் தோன்றப்
பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே.


சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்


43 வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று
சேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்
ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார்.


புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்


44 அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச்
செம்மையின் இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும்
கம்பம்இல் நிலங்கள் எல்லாம் காத்துநல் தவமும் தாங்கி
வெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார்.


புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்


45 தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்று
புனைமலர் அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமின்அக் குறிகள் உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின்
தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான்.


திகம்பர முனிவரின் மறுமொழி


வேறு


46 பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தான் நீங்கும் திருக்கதவம்
நன்நாக வாவிதனில் நழுவப் பதமும்உண்டாம்
மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான்.




47 அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடு
இருவரும் இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்து
பருமுகில் தவழும்மாடப் பஞ்சநல் அமளிதன்னில்
திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள்.


பிரிதிதேவி கருக் கொள்ளுதல்


வேறு


48 புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்இனிது உண்ண எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும்
பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும்
கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே.


புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்


49 திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில் தோன்றப்
பொங்குநீ¢ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை ஆகித்
தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச்
சிங்கம்நேர் சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார்.


பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்


50 பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி
விரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப்
பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே.


ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்


51 சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப்
பிறைநுதல் தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள்
நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக் காணாச்
சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே.




52 கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப்
பிறைஎயிற்று அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டு
பறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து
இறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே.


நாககுமாரன் எனப் பெயர் பெற்றது


53 நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணி
நாகநல் குமரன் என்று நரபதி நாமம் செய்தான்
நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி இன்ப
நாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள்.


கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்


54 கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும்
அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார்
என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன் காண்க
என்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே.




55 இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்று
அசைவிலா மன்னன் தானும் அதிசய மனத்தன் ஆகித்
திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல் என்ன
வசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன்.


நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்


56 பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள்
அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார்.


நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்

57 நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்ல
நாகநல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு
வேகத்தின்¢ விட்டுவந்து வேந்தநீ கொள்க என்ன
வாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான்.




58 மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு
உற்றஊர் வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டி
வெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ கொள்க என்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே.


நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்


59 அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும்
திறவதின் எய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம்
பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான்.


விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்


60 தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள்
தேசநல் புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசஓணா வகையில் கேட்டேன் பெருந்தவம் இல்லை நீயும்
ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள்.


சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்


61 சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகி
குறிகொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச்
செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை
அறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள்.


நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்


வேறு


62 குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள்
மமரநீரில் ஆடவே வன்னமாலை குங்குமம்
சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில்
சமையும்மாட மீமிசைச் சயந்தரன் இருந்ததே.


விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்


63 வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள்
போந்தனள் மனைவியால் புணரும்சோரன் தன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
ஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே.      
#160;