கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 31 மார்ச், 2012

நாககுமார காவியம், -5

வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி

91  தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்
சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான்
ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான்.

வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்

92  குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து
சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான்.

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

93  பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார்
ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான்.


94  இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான்.

வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

95  வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும்
கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.

வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

96  அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்¢குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான்
அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள்.


97  இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்
எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்
நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து
வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான்.

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

98  வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்
ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று
தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான்.

கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

99  அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்
மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்
நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப்
பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே.

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

100  தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்
சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்
பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.

நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

101  சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி
எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி
நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.


நான்காம் சருக்கம்

சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்

102  சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்தன்
ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன்
செப்பு நேர்முலையாள்நல் செயவதி.


103  மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர்
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான்.


104  இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத்
திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார்.

முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

105  புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக்
கண்திறந்து உந்திடும் காவலன்தனை
அண்டிநல் சேவையார் ஆவராம்எனப்
பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின்.

செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

106  மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன்
மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள்.

சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

107  நல்அருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை இல்குண இருடிகள் தம்முடன்
தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவின் நயந்துஇருந்தார்களே.


108  செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை
நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து
இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன்
செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே.

செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

வேறு

109  என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து
சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன்
குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே.


110  அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித்
கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும்
விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில்.

ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்

111  அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப
புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின்
நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார்.

கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்

112  அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து
உரியநல் அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான்.


113  அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்
மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும்
சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே.


114  நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று
வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி
நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க
போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.

நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

115  வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக்
கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும்
நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே.


116  கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்
சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள்
உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான்.

நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

117  வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி
தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து
சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின்
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே.

முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;