கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


திருக்குறள் அதிகாரம் - 15-10

பிறனில் விழையாமை 

(10)

அறள்வரையான்  அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.


கருத்து 

ஒருவன் செய்யவேண்டிய அறங்களைச்
செய்யாது அறமில்லாதவற்றைச்
செய்தாலும் ,பிறன் மனையாளைச்
விரும்பாமல் வாழ்தல் நல்லது.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 29 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-9

பிறனில்விழையாமை 

(9)
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார் .

கருத்து 

கடல் சூழ் உலகில் நன்மைக்கு உரியவர்
யார் என்றால்,பிறன் மனையாளின்
தோளைப் பொருந்தாதவரேயாவர்  

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 28 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-8

பிறனில் விழையாமை 

(8)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.



கருத்து 

பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத
பேராண்மை, சான்றோருக்கு அறம் மட்டுமன்று,
நிறைந்த ஒழுக்கமுமாகும் .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 26 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-7

பிறனில் விழையாமை 

(7)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் 
பெண்மை நயவா தவன்.



கருத்து 

அறத்தின் இயல்போடு கூடி இல்லறம் 
நடத்துபவன் என்பான்,பிறனுக்கு 
உரிமையானவளின் பெண் இன்பத்தை 
விரும்பாதவன்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 25 டிசம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-6


பிறனில் விழையாமை 

(6)
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

கருத்து 

பிறன் மனைவியை விரும்பி அவன்
வீட்டினுள் செல்பவனிடத்தில் பகை,
பாவம்,அச்சம்,நிந்தை ஆகிய நான்கும்
நீங்காமல் இருக்கும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 16 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-5

பிறனில் விழையாமை

(5)
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

கருத்து 

இவளை அடைதல் அரியதன்று என நினைத்து
பிறன் மனையில் புகுகின்றவன் ,எப்பொழுதும்
நீங்காக் குடிப் பழியை அடைவான்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 15 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-4

பிறனில் விழையாமை 

(4)
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல் 


கருத்து 

தினையளவும் தம் குற்றத்தை உணராமல் 
அயலான் வீட்டில் நுழைதல் எவ்வளவு 
பெருமை உடையவரானாலும் என்னவாக 
முடியும் ?

புதன்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 14 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-3

பிறனில் விழையாமை 

(3)


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.


கருத்து 


ஜயமில்லாமல் நம்பியவருடைய மனைவியிடத்து
விருப்பம் கொண்டு தீமையை செய்து நடப்பவர்,
இறந்தவரைவிட வேறுபட்டவரல்லர்.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 12 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-2

பிறனில் விழையாமை 
(2)
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.


கருத்து 

அறம் தவறி நின்றவர் எல்லோருள்ளும் ,
பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிலில்
சென்று நின்றவரைப் போல் அறிவிலி இல்லை .

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 10 நவம்பர், 2012

திங்கள், 5 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 15-1

பிறனில் விழையாமை 
(1)
பிறன்பொருளாள் பொட்டோழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல் 


கருத்து 

பிறன் பொருளாயுள்ளவனை விரும்பி 
நடக்கும் அறியாமை ,உலகில் அறம் 
பொருள் இயல்புகளை அறிந்தவரிடத்தில் 
இல்லை.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்



ஞாயிறு, 4 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-10

ஒழுக்கமுடைமை

(10)
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

கருத்து 

உலகத்தோடு பொருந்தி நடக்கும் முறையைக்
கற்காதவர்,பல நூல்களைக் கற்றவராயினும்
அறிவில்லாதவரே யாவர்.

சனி, 3 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-9

ஒழுக்கமுடைமை 

(9)
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல் .


கருத்து 


தவறியும் தீய சொற்களைத் தம் வாயினால்
சொல்லுதல் நல்லோழுக்கமுடையவருக்குப்
பொருந்தாது.

பலபொருள் ஒருமொழி-ப

(1)பந்தம்-உறவு 
    பந்தம்-கட்டு 
    பந்தம்-கயிறு 
    பந்தம்-பாசம் 
    பந்தம்-மலம்

வெள்ளி, 2 நவம்பர், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-8

ஒழுக்கமுடைமை 

(8)
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

கருத்து 

நல்லொழுக்கம் நல்லின்ப வாழ்க்கைக்குக்
காரணமாகும்;தீயொழுக்கம் எப்பொழுதும்
துன்பத்தைக் கொடுக்கும்.

புதன், 31 அக்டோபர், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-7

ஒழுக்கமுடைமை 

(7)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி .

கருத்து 

ஒழுக்கத்தினால் எல்லோரும் மேன்மை அடைவர்;
ஒழுக்கம் தவறுதலால் அடையத் தகாத பெரும் 
பழியை அடைவர்.

சனி, 1 செப்டம்பர், 2012

பன்பாடு-தமிழர்


தமிழர் பண்பாடு

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக   உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
நன்றி - தமிழ்க்குடில்
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்

திருக்குறள் அதிகாரம் - 14-6

ஒழுக்கமுடைமை 

(6)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

கருத்து 
அறிவுடையோர் ,ஒழுக்கம் தவறுதலால்
குற்றம் உண்டாவதை உணர்ந்து ,
ஒழுக்கத்தினின்று நீங்கார்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-5

ஒழுக்கமுடைமை 
(5)
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

கருத்து 

பொறாமை உடையவனிடத்தில் செல்வம்
இல்லாததைப் போல ஒழுக்கமில்லாதவனிடத்தில்
உயர்வு இல்லை 

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-தா

(1)தாலம்-பனை 
    தாலம்-நா 
    தாலம்-பூமி

திருக்குறள் அதிகாரம் - 14-4

ஒழுக்கமுடைமை 


(4)
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கருத்து 

நூல்களைக் கற்பவன் கற்றதை மறந்தாலும்
திரும்பவும் கற்றுக்கொள்ளலாம் ;ஆனால்
அவனுடைய ஒழுக்கம் குறைவுபட்டால்
அவனுடைய குடிச் சிறப்பும் கெடும்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-3

ஒழுக்கமுடைமை 
(3)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.


கருத்து 
ஒழுக்கம் உடைமையே உயர்குடிப்பிறப்பின்
தண்மை;ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்த
குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-சே

(1)சேய்-குழந்தை 
     சேய்-மூங்கில் 
     சேய்-தூரம்

பலபொருள் ஒருமொழி-சு

(1)சுருதி- வேதம் 
    சுருதி-ஒலி 
    சுருதி-சுதி 
    சுருதி-மந்திரம் 
    சுருதி-இசை

பலபொருள் ஒருமொழி-சி

(1)சிலை-கற்சிலை
     சிலை-வில் 
     சிலை-மலை

திருக்குறள் அதிகாரம் - 14-2

ஒழுக்கமுடைமை 

(2)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை .


கருத்து


ஒழுக்கத்தை வருந்தியும் ஓம்பிக் காக்க
வேண்டும்;பலவற்றையும் ஆராய்ந்து
ஓம்பித் தெளிந்தாலும் அவ்வோழுக்கமே
துணையாக உள்ளது.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-ச

(1)சரம்-அம்பு 
    சரம்-அசையும்பொருள் 
    சரம்-பூமாலை

திருக்குறள் அதிகாரம் - 14-1

ஒழுக்கமுடைமை 

(1)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.


கருத்து 

ஒழுக்கம் எல்லோருக்கும் மேன்மையைக்
கொடுத்தலால்,அந்த ஒழுக்கத்தை உயிரினும்
மேலானதாக கருதவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-10

அடக்கமுடைமை 

(10)
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து .


கருத்து 

மனதில் கோபம் தோன்றாமல் காத்து,கல்வி
கற்று,அடக்கமுடையவனாக இருக்க வல்லவனின்
வழியில் அறக்கடவுள் புகுந்து நின்று அவனை
அடையும் சமயத்தை பார்த்திருக்கும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 25 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-9

அடக்கமுடைமை 

(9)
தீயீனாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

கருத்து 
தீயீனாற் சுட்டபுண் உடலில் தழும்பு
இருந்தாலும் உள்ளத்தில் ஆறிவிடும் ;
நாவினால் தீயசொல் கூறிச் சுடும்
புண் என்றும் ஆறாது.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-கா

(1)காயம்-உடல் 
    காயம்-பெருங்காயம் 
    காயம்-புண்

திருக்குறள் அதிகாரம் - 13-8

அடக்கமுடைமை 

(8)
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

கருத்து 

தீய சொற்களால் உண்டாகும் தீமை
ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால்,
அதனால் பிற அறங்களினால் உண்டாகும்
நன்மைகளும் விளையாமல் போகும் .

பலபொருள் ஒருமொழி-க

(1) கலம்-ஆபரணம் 
      கலம்- மரக்கலம் 
      கலம்-மண்பாத்திரம்

(2) கலி-துன்பம் 
      கலி- கடல் 
      கலி-ஒலி 
      கலி-கடையுகம்

(3)கடி-வாசனை 
    கடி-காவல் 
   கடி-கடித்தல்

(4)கடை-சந்தை 
    கடை-கடைசி 
   கடை-கடைதல் 
   கடை-பொருட்கள்விற்குமிடம்

(5)கண்டம்-கழுத்து 
    கண்டம்-ஆபத்து 
   கண்டம்-பெரு நிலப்பரப்பு

(6)கல்-படி 
    கல்-தோன்று 
    கல்-கருங்கல்

(7)கலம்-பாத்திரம் 
    கலம்-கப்பல் 
   கலம்-ஆபரணம்

(8)கவி-பாட்டு 
   கவி-குரங்கு 
   கவி-கவிஞன்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-7

அடக்கமுடைமை 
(7)
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

கருத்து

 
எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக்
காத்தல் வேண்டும்;அதனைக் காக்கா
விட்டால் குற்றமான சொற்களைச்
சொல்லி துன்பம் அடைவர் .

பலபொருள் ஒருமொழி-ஒ

(1)ஓளி-மறை 
    ஓளி-பிரகாசம் 
    ஓளி-புகழ்

(2)ஒலி-சத்தம் 

புதன், 22 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-6

அடக்கமுடைமை 

(6)
ஒருமையுள் ஆமைபோல் ஜந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து .

கருத்து  


ஒரு பிறப்பில்,ஆமைபோல் ஜம்பொறிகளையும்
அடக்க வல்லனாயின்,அது அவனுக்கு ஏழு
பிறப்புகளிலும் பாதுகாவலை உடையதாகும்.

பலபொருள் ஒருமொழி-ஏ

(1)ஏறு-எருது 
    ஏறு-இடி 
    ஏறு-விலங்குகளின் ஆண்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-5

அடக்கமுடைமை 
(5)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கு செல்வந் தகைத்து .

கருத்து   
 
அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நன்மை
ஆகும்;அவர்களுள்ளும் செல்வருக்கு அது 
ஒரு செல்வமாகிப் பெருமை கொடுக்கிறது . 

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 20 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-4

அடக்கமுடைமை 


(4)
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது .


கருத்து 


தன் ஒழுக்கத்தில் வேறுபடாது நின்று
அடங்கியிருப்பவனுடைய  உயர்வு
மலையை விட மிகப்பெரியதாகும்.

மாதங்கள்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


#160;