கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

இணைமொழிகள் -ஆ

(1)ஆதி அந்தம்- தொடக்கமும் முடிவும்

(2)ஆடல் பாடல் 


(3)ஆடை அணி


(4)ஆடிப்பாடி-மகிழ்ச்சி


(5)ஆட்டமும் ஓட்டமும் - பெருமுயற்சி



(6)ஆடை ஆபரணம்-உடைஅணி

(7)ஆற அமர

(8)ஆய்ந்து ஓய்ந்து

(9)ஆசா பாசம் 

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 29 செப்டம்பர், 2011

தொடர்மொழிக்குஒருமொழி-2

(1 ) நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட
 தனிப் பிரதேசம்
 (தீவு)


(2)நிகழ்ச்சி ஒன்றை அறிய முதன்
 முதலாக மேடையேற்றுவது
 (அரங்கேற்றம்)


 (3)நூலொன்றுக்கு நூலாசிரியர்
அல்லாத வேறு ஒருவரால்
எழுதப்படும் உரை
 (அணிந்துரை)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 28 செப்டம்பர், 2011

தொல்காப்பியம்-2

தொல்காப்பியம்=தொல்+காப்பியம் 
ஆகும். தொல் ன்பதன் கருத்து
தொண்மையானது அல்லது
பழமையானது ஆகும்.
காப்பியம்=காப்பு +இயம் ஆகும்.
காப்பு என்பதன் கருத்து காவல்
செய்வது அல்லது பாதுகாப்பது
ஆகும்.
இயம் என்பதன் கருத்து முன்
நின்று மெய்திரித்தல்என்னும்
விதிப்படி உறுதிப்பொருள் கூறும்
கதைத் தொடர்நிலைச்செய்யுள்,
வழக்காறுகளை காக்கும்
இலக்கணம்,ஆகும்.
ஆகவே தொல்காப்பியம் என்பது
முன்னின்று மெய்திரித்தல் என்ற
விதியை பாதுகாக்கும் பழமையான
நூலாகும்.
இத் தொல்காப்பியத்தை எழுதியவர் 
தொல்காப்பியர் ஆவார் இத்
தொல்காப்பியம் 1602 பாக்களால் 
ஆனது இக்காப்பியம் கி.மு 300ம்
ஆண்டில் எழுதப்பட்டதுஆகும்
அத்துடன் இதில் மூன்று அதிகாரம்
 உள்ளது
அவையாவன
1. எழுத்ததிகாரம்
2. சொல்லதிகாரம்
3.பொருளதிகாரம் ஆகும்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அகநானுறு-4


களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 26 செப்டம்பர், 2011

அகநானுறு-3


இது அகநானூறு மூன்று பகுப்புகளாக
அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது

அவையாவன 
1 .களிற்றியானைநிரை
2 .மணிமிடை பவளம்
3 .நித்திலக் கோவை

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

முல்லைப்பாட்டு-2


பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்
இயற்றிய

முல்லைப் பாட்டு

கார் பருவத்தின் வருகை

நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி 5

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்

அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10

பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப

நல்ல வாய்ப்புகள்

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 15

இன்னே வருகுவர், தாயர் என்போள்



பெருமுது பெண்டிரின் தேற்ற மொழிகள்

நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீ நின் 20

பருவரல் எவ்வம் களை, மாயோய்! என,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப

பாசறை அமைப்பு

கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25

வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி

பாசறையின் உள் அமைப்பு - யானைப் பாகரின் செயல்

உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35

கல்லா இளைஞர், கவளம் கைப்ப

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை 40

பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணம் ஆக,

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 24 செப்டம்பர், 2011

மதுரைக்காஞ்சி-2


பத்துப் பாட்டுக்களில் ஆறாவது
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார்
பாடிய

மதுரைக் காஞ்சி


இயற்கை வளம்

ஓங்குதிரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக,
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியல் ஞாலத்து,
வல மாதிரத்தான் வளி கொட்ப, 5

வியல் நாள்மீன் நெறி ஒழுக,
பகல் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்,
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க,
மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்க, 10

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த,




செயற்கைச் செழிப்பு நிலை

நோய் இகந்து நோக்கு விளங்க
மேதக, மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு 15

கண்டு தண்டாக் கட்கு இன்பத்து,
உண்டு தண்டா மிகு வளத்தான்,
உயர் பூரிம விழுத் தெருவில்,
பொய் அறியா, வாய்மொழியால்
புகழ் நிறைந்த, நல் மாந்தரொடு 20

நல் ஊழி அடிப் படர,
பல் வெள்ளம் மீக்கூற,
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!


அகத்தியரின் வழிவந்த சான்றோன்

பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர் 25

இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட,
அஞ்சு வந்த போர்க்களத்தான்,
ஆண் தலை அணங்கு அடுப்பின்,
வய வேந்தர் ஒண் குருதி 30

சினத் தீயின் பெயர்பு பொங்க,
தெறல் அருங் கடுந் துப்பின்,
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்,
தொடித் தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு, 35

நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர,
அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் 40

தொள் முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந!


வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல்
நால் வகைப் படைகளின் வலிமை

விழுச் சூழிய, விளங்கு ஓடைய,
கடுஞ் சினத்த, கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய, 45

வரை மருளும் உயர் தோன்றல,
வினை நவின்ற பேர் யானை
சினம் சிறந்து களன் உழக்கவும்
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும் 50

வாம் பரிய கடுந் திண் தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நல்வழி-4

11.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது


12.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு


13.
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்


14.
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்


15.
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 22 செப்டம்பர், 2011

பெயர் வினைசொற்கள்

(4)ஆடு  = ஒருமிருகம் (பெயர்ச்சொல்)
    ஆடு = ஆடுதல்(வினைச்சொல்)

(5)இளை = காவற்காடு(பெயர்ச்சொல்)
     இளை = மெலிதல்(வினைச்சொல்)

(6)இழை - ஆபரணம்,நூல்(பெயர்ச்சொல்)
     இழை - முடைதல்(வினைச்சொல்)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 21 செப்டம்பர், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - இ

(001)இரவி - சூரியன்
(002)இடுக்கண் - துன்பம் 
(003)இடுக்கண் - துயரம் 
(004)இடுக்கண் - அல்லம்
(005)இடர் - துன்பம்
(006)இடர் - இடுக்கண்
(007)இரக்கம் - கருணை
(008)இழிவு - ஏசு 
(009)இகத்தல் - கடத்தல்
(010)இகத்தல் - மீறல்
(011)இகபரம் - இம்மை
(012)இகபரம் - மறுமை
(013)இகல் - பகை
(014)இகழ்ச்சி - அவமதிப்பு
(015)இக்கட்டு - துன்பம்
(016)இங்கிதம் - இனிமை
(017)இங்கிதம் - நோக்கம்
(018)இசைப்பொறி - செவி
(019)இச்சை - விருப்பம்
(020)இடங்கர் - முதலை
(021)இடபம் - எருது
(022)இடம் - தானம்
(023)இடம் - வீடு
(024)இடுகாடு - சுடுகாடு
(025)இடுங்கண் - துன்பம்
(026)இடை - நுசுப்பு
(027)இடை - நடு
(028)இடையீடு - குற்றம்
(029)இடையீடு - தடை
(030)இடையூறு - துன்பம்
(031)இடையூறு - தடை
(032)இட்டம் - விருப்பம்
(033)இணக்கம் - உடன்பாடு
(034)இணர் - பூங்கொத்து
(035)இணைதல் - சேர்த்தல்
(036)இணைப்பு - சேர்க்கை
(037)இதம் - இனிமை
(038)இதயம் - மனம்
(039)இதழ் - உதடு
(040)இதிகாசம் - பழங்கதை
(041)இந்தனம் - விறகு
(042)இந்திரஜாலம் - மாயவித்தை
(043)இந்திரதனு - வானவில்
(044)இந்திரியம் - கருவி
(045)இந்து - சந்திரன்
(046)இபம் - யானை
(047)இமைப்பொழுது - கணப்பொழுது
(048)இம்பர் - இவ்வுலகம்
(049)இயக்கம் - அசைதல்
(050)இம்மை - இப்பிறப்பு
(051)இயமன் - கூற்றுவன்
(052)இயம் - வாத்தியம்
(053)இரஞ்சிதம் - விருப்பம்
(054)இரட்சணியம் - காத்தல்
(055)இரட்டுதல் - ஒலித்தல்
(056)இரணியம் - பொன்
(057)இரண்டகம் - துரோகம்
(058)இரதம் - தேர்
(059)இரத்தம் - குருதி
(060)இரம்மியம் - மனநிறைவு
(061)இரவலர் - இரப்போர்
(062)இரவி - சூரியன்
(063)இராசதானி - தலைநகர்
(064)இரை - உணவு
(065)இலகு - எளிது
(066)இலக்கம் - எண் 
(067)இலக்கு - குறிக்கோள் 
(068)இலக்குமி - திருமகள் 
(069)இலட்சனை - அடையாளம் 
(070)இலஞ்சம் - பரிதானம் 
(071)இலட்சணம் - இலக்கணம் 
(072)இலட்சியம் - குறி 
(073)இலட்சியம் - மதிப்பு 
(074)இலட்சியம் - இலக்கு 
(075)இலம்பாடு - வறுமை
(076)இலாவனியம் - அழகு
(077)இலிங்கம் - அடையாளம்
(078)இலௌகிதம் - உலக சம்பந்தம்
(079)இல் - வீடு
(080)இல் - மனைவி
(081)இல்லம் - வீடு
(082)இழிசனர் - கீழ்மக்கள்
(083)இழிதகவு - இழிவு
(084)இழுக்கம் - குற்றம்
(085)இழை - ஆபரணம்
(086)இழை - நூல்
(087)இளந்தாரி - வாலிபன்
(088)இளமை - முருகு
(089)இளவல் - தம்பி
(090)இளை - காவற்காடு
(091)இறக்கை - சிறகு
(092)இறுதி - முடிவு
(093)இறுமாப்பு - பெருமை
(094)இறும்பூதி - அதிசயம்
(095)இறும்பூதி - வியப்பு
(096)இறை - அரசன்
(097)இறைவன் - கடவுள்
(098)இறைச்சி - ஊண்
(099)இறைமாட்சி - நல்லாட்சி
(100)இறைமை - தலைமை
(101)இன்கண் - இன்பம்
(102)இன்பம் - ஆனந்தம்
(103)இன்னல் - துன்பம்
(104)இன்னாமை - தீமை
(105)இன்னார் - பகைவர்
(106)இனியார் - நண்பர்
(107)இங்கிதம் - குறிப்பு, 
(108)இங்கிதம் - குறிப்பறிதல் 
(109)இதிகாசம் - மறவனப்பு
(110)இந்திரன் - வேந்தன்
(111)இந்தியா - நாவலம்
(112)இந்துக்கள் - தென் மதத்தார்
(113)இமயமலை - பனிமலை
(114)இரகசியம் - மந்தணம்
(115)இரசவாதம் - பொன்னாக்கம்
(116)இராசதம் - மாந்திகம்
(117)இராசி - ஒப்புரவு
(118)இராஜேந்திரன் – அரசேந்திரன்
(119)இருதயம் - நெஞ்சம் 

(120)இருதயம் -இதயம்
(121)இலட்சியம் - குறிக்கோள்
(122)இலட்சுமி – திருமகள்
(123)இஷ்டம் – விருப்பம் 

 (124)இணை - துணை, 
 (125)இணை - இரட்டை
(126)இனை - இன்ன
(127)இனை -வருத்தம்
(128)இணைத்து - சேர்த்து
(129)இனைத்து - இத்தன்மையது
(130)இவண் - இவ்வாறு
(131)இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இரட்டைக் கிளவி

ஒரு சொல் இரட்டித்து வருவதை இரட்டைக்
கிளவி எனப்படும் அத்துடன் இவ் இரட்டைக்
கிளவியானது இசை பற்றியும் பண்பு பற்றியும்
குறிப்பு பற்றியும் வரும் ஆனால் இவ்
இரட்டைக் கிளவியானது பிரிந்து நின்று
பொருள் தராது

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 19 செப்டம்பர், 2011

நெடுநல்வாடை-2

இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

கொன்றை வேந்தன்-4

தகர வருக்கம்


37.    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38.    தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39.    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
40.    தீராக் கோபம் போராய் முடியும்
41.    துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42.    தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43.    தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்
44.    தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45.    தையும் மாசியும் வையகத்து உறங்கு
46.    தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
47.    தோழனோடும் ஏழைமை பேசேல்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 17 செப்டம்பர், 2011

சங்க இலக்கியம்

பிற சான்றுகள்
சங்க இலக்கியங்களைத் தவிர, கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, 
டொலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியா
விற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் 
தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மெளரியப் பேரரசுக்கு தெற்
கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது 
கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரவேலனின் 
ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசுகளைப் பற்றி 
குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற 
இடங்களில் மேற்கொள்ளபட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் 
வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.



சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தமிழ் எழுத்துக்கள்-7

உயிர் மெய்யெழுத்துக்கள்
உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்து
க்களும்சேர்ந்து வரும் எழுத்துக்கள் 
உயிர்மெய்யெழுத்துக்கள் ஆகும்
அத்துடன் இது ஒரு சார்பெழுத்தாகும்

உதாரணம் -1
க் +அ= க
ங்+=ங
ச் +அ=ச
ஞ்+அ=ஞ
ட் +அ=
ண்+அ=ண 
த்+அ=
ந்+அ=ந 
ப்+அ=ப 
ம்+அ=
ய்+அ=ய 
ர்+ அ=ர 
ல்+அ=
வ்+அ=வ 
ழ்+அ=ழ 
ள்+அ=ள 
ற்+அ=ற 
ன்+அ=

உயிர்மெய்யெழுத்துக்கள் 
க ங ச ஞ ட ண த ந ப ம ய 
ர ல வ ழ ள ற ன

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 15 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய வரலாறு-2

பழங்காலம்
பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய
அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின்
ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள்
தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில்
தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்ட
தாகவும் நம்பப்படுகிறது. அத்துடன்
அச்சங்கங்களை மூன்று வகையாக
பிரிக்கப்படாதாகவும் கருதப்படுகிறது
அவையாவன
1.முதற்சங்கம்
2.இடைச்சங்கம்
3.கடைச்சங்கம் ஆகும் 

இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே
கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது
கிடைத்துள்ளதாகவும் அத்துடன் முன்னி
ரண்டு சங்கங்களையும் சேர்ந்த அதாவது
முதற்சங்க இடைச்சங்கநூல்கள் யாவும்
அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்க
ளின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன்
சேர்ந்து அழிந்து போய்விட்டது எனினும்
முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ 
அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் 
இருந்தது பற்றியோ போதிய உறுதியான 
ஆதாரங்கள் எதுவுமில்லை என்று தொல்
பொருள் ஆராச்சியாளர்கள் கருத்து 
கூறுகிறார்கள் 

 அக்காலத்தில் எழுதப்பட்ட 
இலக்கியங்கள் 
 இரண்டாகும் 
 அவையாவன
1. சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)

2.நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 14 செப்டம்பர், 2011

நல்வழி-3

6.
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு


7.
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


8.
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.


9.
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந்  நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து


10.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே  நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தமிழர் நிலத்திணைகள்-2 முல்லைத்திணை

முல்லைநிலத்திணைக்குரிய உரிப்பொருளான
"இருத்தலை" பற்றி, நச்சினார்க்கினியர்,இனித் 
தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிரு
த்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று 
தானே கூறுதல். பருவம் வருந்துணையும் 
ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை 
இருத்தல்" என்று விளக்குவார்முல்லைத்திணைக்
குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும் 
வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும் 
முல்லை" எனச் சுட்டுகிறார்.மேலும், தொல்காப்பியர்,
"ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்ஆவயின் 
வரூஉம் கிழவரும்உளரே."என்று முல்லைத் திணை
க்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.





முல்லைத் திணைக்குரிய 
முதற்பொருள்:பெரும்பொழுது - கார்காலம்.
சிறுபொழுது - மாலை.

கருப்பொருள்:
முல்லைத்திணைக் கடவுள் - திருமால் (நெடுமால்) .


உரிப்பொருள்:- 
நிலத்தலைவர்கள்: குறும்பொறை நாடன்,
தோன்றல் என அழைக்கப்பட்டனர்;
மற்றும் இடையர், இடைச்சியர், ஆயர்,
ஆய்ச்சியர் ஆகியோர்.


பறவை:- 
கானக்கோழி, சிவல்,

விலங்கு:
மான், முயல்

ஊர்:- 
பாடி, சேரி, பள்ளி என்று அழைக்கப்பட்டன.

பூக்கள்:- 

முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ.


மரங்கள்:-
கொன்றை, காயா, குருந்தம் முதலியன.

உணவு:- 
வரகு, சாமை,

முதிரை பறை:- 
ஏறு கோட்பறை.


யாழ்:- 
முல்லையாழ்.


நீர்நிலை:- 
கான்யாறு.

தொழில்:- 
நிரைமேய்த்தல், பயிர் விதைத்தல்,
களை கட்டல், அறுத்தல் முதலியன.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழ் - தமிழ் அகராதி - 2

தமிழ் சொற்களுக்குரிய தமிழ் கருத்துகள்
(6 )அஃபோதம் - நிலாமுகிப்புள்

(7 )அஃ றினை - பகுத்தறிவற்ற உயிர்களும் ,
உயிர் அற்றனவும்

(8 ) அகக்கண் - ஞானம்,உள் அறிவு

(9 )அகக்கூத்து - முக்குணம் பற்றிய நடிப்பு

(10 ) அகங்காரம் - இறுமாப்பு ,யாவெனம்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சங்க இலக்கியம்

சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியத்தொகுப்பில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இடம் பெற்றுள்ளன. காலத்தால் தொன்மை பெற்றதான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இது ஒரு இலக்கண நூல் என்றாலும், சங்க கால அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எட்டுத் தொகை என்பது ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு நூல்கள் உள்ளன. அவற்றில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், சீத்தலைச்சாத்தனார் இயற்றிய மணிமேகலையும் சங்க கால சமூகம் மற்றும் அரசியல் குறித்த தகவல்களைத் தருகின்றன.


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 10 செப்டம்பர், 2011

கொன்றை வேந்தன்-3

சகர வருக்கம்

26.    சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
27.    சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
28.    சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
29.    சீரைத் தேடின் ஏரைத் தேடு
30.    சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31.    சூதும் வாதும் வேதனை செய்யும்
32.    செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
33.    சேமம் புகினும் யாமத்து உறங்கு
34.    சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35.    சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36.    சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஜங்குறுநூறு-2

ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 8 செப்டம்பர், 2011

சேர்த்தெழுதுதல்

(6)தா+மரை  = தாமரை 
(7)அப்படி+இருந்தது =அப்படியிருந்தது
(8)மலர்+வனம் =மலர்வனம்
(9)தாய்+நாடு =தாய்நாடு
(10)பூங்கா +வனம் =பூங்காவனம் 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


               



புதன், 7 செப்டம்பர், 2011

புதன் கிழமை


செவ்வாய், 6 செப்டம்பர், 2011

சிற்றிலக்கியம் 2

குறவஞ்சி இலக்கியம்
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க 
ஒன்றாகத் திகழ்வது குறவஞ்சி என்ற 
இலக்கிய வகை ஆகும்.
குறவஞ்சி என்ற பெயர்வரக்காரணம்

குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று
 பிரியும். வஞ்சி என்றால் வஞ்சிக்கொடி 
போன்ற பெண் என்று பொருள். குறவஞ்சி 
என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்
கொடி போன்ற பெண் என்ற பொருளைத் 
தரும். இந்த நூலில் குறத்தி குறி கூறுதல்,
 குறத்தி குறவனுடன் உரையாடுதல், 
குறத்தியின் செயல்கள், குறி வகைகள் 
போன்றவை முதன்மை இடம் பெறுவதால்
 இந்த இலக்கிய வகை குறவஞ்சி என்ற 
பெயரைப் பெற்றுள்ளது என்று விளக்கம் 
அளிப்பர்.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 5 செப்டம்பர், 2011

சேர மன்னர்கள்


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய
மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின்
மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை
ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே
சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி
விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு
எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று
உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான
இவர்கள் கரூரையும் வஞ்சியையும் தலைநகராகக்
கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியை
யும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.முற்காலச்
சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள்
உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி
சிறிதளவு செய்திகள் உள்ளன.சேர அரசர்களைப்
பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன.
குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்தி
களைத் தருகின்றன.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

பதிற்றுப்பத்து-1

 இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும் இதில் (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) . இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப்பத்தாகப் பாடிய பாடல் களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். ஆனால் இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்து உரைக் கின்றன.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 3 செப்டம்பர், 2011

சங்கமருவியகாலம்

தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம்மருவிய
காலம் என்பது கி.பி 300- கி.பி 700-வரையான
காலப்பகுதிஆகும் அத்துடன் இக்காலத்திலேயே
சில காப்பியங்கள் எழுதப்பட்டன
அவையாவன
1.பெளத்த தமிழ்க் காப்பியங்கள்
2.சமண தமிழ் காப்பியங்கள்
3.ஐஞ்சிறுகாப்பியங்கள்

1.
பெளத்த தமிழ்க் காப்பியங்களாவன
அ.சிலப்பதிகாரம்
ஆ.மணிமேகலை
இ.குண்டலகேசி

2.
சமண தமிழ் காப்பியங்களாவன
அ.சீவக சிந்தாமணி
ஆ.வளையாபதி

3.
ஐஞ்சிறுகாப்பியங்களாவன
அ.உதயணகுமார காவியம்
ஆ.நாககுமார காவியம்
இ.யசோதர காவியம்
ஈ.நீலகேசி
உ.சூளாமணி

அ.
உதயணகுமார காவியம்
இக்காப்பியமானது சைனம் அல்லது
சமணம் என்ற சமயத்தின்அரசன்
உதயணின் வரலாற்றினை பற்றி
கூறப்பட்டுள்ளது

ஆ.
நாககுமார காவியம்
இதுவும் சைனம் அல்லது சமண
சமயத்தைப் பற்றிய காவியமாகும்
ஆனால் இக்காவியத்தை பற்றிய
விளக்கம் எதுவும் கிடைக்கப்
பெறவில்லை

இ.
யசோதர காவியம்
இக்காவியமானது வடமொழியை
தழுவி எழுதப்பட்ட காவியமாகும்
அத்துடன் இக்காவியத்தில் உயிர்
கொலை கூடாது என்ற கருத்து
வலியுறுத்தப்பட்டுள்ளது


ஈ.
நீலகேசி
ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான
நீலகேசி தமிழில் எழுந்த முதல்
தர்க்க நூலாகக் கருதப்படுகிறது
அத்துடன் இதுவும் சைனம் அல்லது
சமண சமயத்தைப் பற்றிய காவிய
மாகும் அத்துடன் இக்காவியத்தில்
நிலி என்ற பெண்னைப்பற்றி
கூறப்படுகிறது

உ.
சூளாமணி
இக்காவியமானது வடமொழியை
தழுவிய காவியமாகும் அத்துடன்
இதில் சைனம் அல்லது சமணம்
சமயத்தை பற்றியதும் அத்துடன்
இதில் திவிட்டன் விஜயன் கதை
துறவு முத்தி ஆகியன பற்றிய
கதைகளும் அடங்கியுள்ளது

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 2 செப்டம்பர், 2011

குறுந்தொகை-2

கடவுள்வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி,
குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால்-உலகே.


பாரதம் பாடிய பெருந்தேவனார்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 1 செப்டம்பர், 2011

சிறுபாணாற்றுப்படை-2

பத்துப் பாட்டில் மூன்றாவது பாட்டு சிறுபாணாற்றுப்படை
ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இது 269 அடிகளை
உடையது. இதனைப் பாடியவர் இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். இப்பெயரில் மூன்று செய்திகள்
உள்ளன. அவை:
1) 
நத்தத்தனார்
இது புலவரின் இயற்பெயர். சிலர் தத்தனார் என்பதே
இயற்பெயர் என்பர். சான்றோர்களின் பெயர்களுக்கு
முன்னால் "ந" சேர்ப்பதுபழங்கால மரபு. அதனால்
தத்தனார் என்பதற்கு முன்பு "ந" சேர்ந்து நத்தத்தனார்
என்றாயிற்று என்பர்.


2)நல்லூர் என்பது இவர் பிறந்த ஊர்.

3) 
இடைக்கழி நாடு:
 நல்லூர் என்னும் சிற்றூர் இருந்த நாடு. இது
இன்றும் கூட மதுராந்தகத்துக்கு அருகில்
 எடக்கு நாடு என்னும் பெயரில் இருப்பதாகக்
கூறுவர்.     

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


#160;