கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 30 மார்ச், 2012

நாககுமார காவியம், -4

64 பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்
நையும்இடை மாதரும் நாகநல் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியே
வெய்யவேல்கண் தாயுடன் வியன்மனை அடைந்தனன்.

பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை

65 மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன்
நின்னுடைப் புதல்வன் நீராடல்காணப் போனதுஎன்
நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின் ஆடல்என்
நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன்.

தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்

66 அரசன்உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே
சிரசுஇறங்கித் துக்கமாய்ச் சீர்கரத்து இருந்தனள்
விரகுநல் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
அரசன்உரை சொல்லக்கேட்டு ஆனைமிசை ஏறினான்.


67 வாத்தியம் முழங்கவும் மதவாரணம் அடக்கவும்
ஏத்துஅரிய வீதிதொறும் ஈடுஇல்வட்ட சாரியும்
பார்த்துஅரிய நடனமும் பல்இயங்கள் ஆர்ப்பவே
சீற்றமொடு உலாச்செலச் சீர்அரசன் கேட்டனன்.

அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்

68 நன்அடியார் சொல்லினர் நாகநல் குமரன்என்
இன்உரையை மீறினன் இனிஅவன் மனைபுகுந்து
பொன்அணிகள் நற்பொருள் நாடிமிக் கவர்கொள
என்றுஅரசன் கூறலும் இனப்பொருள் கவர்ந்தனர்.

நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்

69 ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதர
நீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான்.

அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்

70 அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழ
அரவமணி ஆரமும் ஆன முத்து மாலையும்
கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும்
எரிமணிகள் இலதைவேந்து என்னஇக் கூற்றென.

நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்

71 சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன்
சூதில்ஆட என்னுடன் சுதன்அழைப்ப வந்தபின்
சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில்
சூதுஇரண்டு ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன்.

தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்

72 இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்துஉடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருள் கொடுத்தபின்
அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன்.

புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்

73 மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில்
நன்நகர் சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்று
அந்நகரின் நாமமும் அலங்கரிய புரம்எனத்
தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே.


மூன்றாம் சருக்கம்

கவிக்கூற்று

74 அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும்
பிரிவுஇன்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்¢கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன்.

நாககுமாரனின் தோழர் வரலாறு

75 பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர்அணி கொடிகள் ஓங்கும் உத்தர மதுரை தன்னில்
வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர் செயவர்மாவின்
சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும்.

வியாள-மாவியாளரின் தோற்றம்

76 வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும்
சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில்
காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர்
வேந்தன்வந்து அடி வணங்கி விரித்துஒன்று வினவினானே.


77 என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோ
அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை பண்ணும்
என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான்.

வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்

78 மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப்
பின்னவர் அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்இறை தேடிப் போந்தார் தரைமகள் திலதம் போலும்
பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே.

பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்

79 நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் றேவி பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன்
கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந் தரிஎன்பாள்ஆம்
விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார்.


80 மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டு
தன்உடையப் புதல்வி தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரிவியாளனுக்கு
மன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே.

நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்

81 சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநல் குமரன் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு
சிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே.

சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்

82 செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார்
கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே.

சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்

83 சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேல் குமரன் தோன்றி அவனும்வந்து எதிர்த்த போது
மானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை ஏவ
கோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே.

மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி

84 நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்ன
போகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன
ஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான்.

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்

85 நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே
செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே.

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்

86 தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து
தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து
அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில்.

மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்

வேறு

87 மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின்
இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன்.


88 எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று
அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும்
தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து
இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே.

வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி

வேறு

89 நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி
கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று
என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம்.

திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்

90 வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில்
உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;