கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 11 மார்ச், 2013

வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் 
ஒரு வினைமுற்று, வினையை உணர்த்தாமல் பெயர்த் தன்மை பெற்று வந்தாலும் பெயர்த்தன்மை பெற்று வேற்றுமை உருபை ஏற்று வந்தாலும் வினையாலணையும் பெயர் எனப்படும். 

 (உ.ம்) 
 பாடியவன் பாராட்டுப் பெற்றான். 
பாடியவனுக்குப் பரிசு கிடைத்தது. 
 இதில் முதல் எடுத்துக்காட்டில் உள்ள வினைமுற்று, 
பெயர்த்தன்மை பெற்று வந்துள்ளது. 

இரண்டாவது எடுத்துக்காட்டு பெயர்த்தன்மை பெற்று 
வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது. 

 வினையாலணையும் பெயர் முன்று வகைப்படும். 
அவை, 
 1) தன்மை வினையாலணையும் பெயர் 2)
 முன்னிலை வினையாலணையும் பெயர் 3) 
படர்க்கை வினையாலணையும் பெயர் 
 என்பவை ஆகும்.


தன்மை வினையாலணையும் பெயர் 
 தன்மை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் 
தன்மை வினையாலணையும் பெயர் எனப்படும்.

 (உ.ம்) எடுத்தேனைப் பார்த்தாயா. 
எடுத்தேமைப் பார்த்தாயா. 
 இதில் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.

முன்னிலை வினையாலணையும் பெயர் 
 முன்னிலை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் முன்னிலை வினையாலணையும் பெயர் எனப்படும். 

(உ.ம்) சென்றாயைக் கண்டேன். 
சென்றீரைக் கண்டேன் 
 இதிலும் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.

படர்க்கை வினையாலணையும் பெயர் 
 படர்க்கை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் படர்க்கை வினையாலணையும் பெயர் எனப்படும். 

 ( உ.ம்)படித்தவனுக்குப் பரிசு கிடைத்தது. 
 தன்மை வினையாலணையும் பெயர், 
முன்னிலை வினையாலணையும் பெயர், 
படர்க்கை வினையாலணையும் பெயர் 
ஆகிய மூன்றும் உடன்பாட்டுப் பொருளில் 
வந்துள்ளன. 

வினையாலணையும் பெயர் எதிர்மறைப் பொருளில் வருவதும் உண்டு. 
 (உ.ம்) பாடாதவர் பரிசு பெறமுடியாது. இதில் பாடாதவர் என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது. 

தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் 
தொழிற்பெயர் வினையாலணையும் பெயர்
 1. தொழிலை மட்டும் உணர்த்தும்.
 1. தொழிலையும் தொழில் செய்த பொருளையும் உணர்த்தும்.

 2. படர்க்கை இடத்தில் மட்டும் வரும். 
 2. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும். 

3.காலம் காட்டாது.
3. காலம் காட்டும். வினையின் பெயரே படர்க்கை;

 தொழிற்பெயர், படர்க்கை இடத்தில்
 மட்டும் வரும். வினையாலணையும் பெயர் மூவிடத்திலும் வரும் என்பது இந்த நூற்பாவின் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;