கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பாயசம் வைக்கவேணும்

பாயசம் வைக்கவேணும்
 பானையிலோ அரிசி இல்லை. 
முற்றிய நெற்கதிரே அரிசி 

கொஞ்சம் தருவாயோ?

இதற்கு

 நெற்கதிர் நானெப்படித்தர 
முடியும்? என்னை வளா்க்கும் 
வயலிடம் போய்க் கேள் என்றது 

வயலிடம் போன கொசு மாமி 
பாயசம் வைக்கவேணும் 

பானையிலோ அரிசியில்லை 
முற்றிய நெற்கதிரே    
கதிரை வளர்த்த வயலே 
கொஞசம் அரிசி தருவாயா? 
என்று கேட்டது

அதற்கு
 வயல் “நானெப்படி தர முடியும் 
ன்னை ஈரமாக்கி உதவும் 
நீரைப் போய்க் கேள்.. என்றது 

நீரிடம் போன கொசு மாமி 
பாயசம் வைக்க வேணும் 

பானையிலோ அரிசியில்லை
முற்றிய நெற்கதிரே 

கதிரைவளர்த்த வயலே 
வயலில் பாய்ந்த நீரே 
கொஞ்சம் அரிசி தருவாயோ என்றது. 

அதற்கு 
வயல் நானெப்படித் தரமுடியும் 
என்னை வரம்பு கட்டி இங்கே பாய விட்ட 
உழவனைப் போய்க் கேள் என்றது. 

உழவனிடம் போன கொசு மாமி 
பாயசம் வைக்க வேணும் 
பானையிலோ அரிசியில்லை 
முற்றிய நெற்கதிரே 
கதிரைவளா்த்த வயலே 
வயலை நனைத்த நீரே 
நீரைப்பாய்ச்சிய உழவா 
கொஞ்சம் அரிசி தருவாயோ?
என்று கேட்டது 

அதற்கு  உழவனும்
சரி தருகிறேன் என்றான் 

உழவன் நீரிடம்கொசுமாமிக்கு 
அரிசி கொடுக்கும்படி கூறினான் 
நீர் வயலிடம் கூறியது 
வயல் கதிரிடம் கூறியது 
கதிர் கொசு மாமிக்கு நெல்லை கொடுத்தது.
 கொசுமாமி நெல்லை குற்றியெடுத்து 
பாயாசம் வைத்து குடித்தாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;