121. குறிஞ்சி
மெய்யே, வாழி?-தோழி-சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என தட மென் தோளே.
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவழி, பின்னர் அவன் வரவு உணர்த்திய தோழிக்குக் கூறியது
கபிலர்
122. நெய்தல்
பைங்கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது
ஓரம்போகியார்
123. நெய்தல்
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒர சிறை,
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,
இன்னும் வாரார்; வரூஉம்,
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே.
பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்த, தலைமகட்குச் சொல்லியது
ஐயூர் முடவன்
124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர்பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே?
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுக்கோ
125. நெய்தல்
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி!-தோழி!-சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது
அம்மூவன்
126. முல்லை
"இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?" என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி!-நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஒக்கூர் மாசாத்தியார்
130. பாலை
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ? -நம் காதலோரே.
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; "நீ 'அவர் பிரிந்தார்' என்று ஆற்றயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக!" எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது; தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூஉம் ஆம்
வெள்ளிவீதியார்
131. பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே.
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது
ஓரேருழவனார்
132. குறிஞ்சி
கவவுக் கடுங்குரையன்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?-ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே.
கழற்றெதிர்மறை
சிறைக்குடி ஆந்தையார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.