முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்
தா இல் கொள்கை மடந்தையொடு, சில் நாள், 175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று,
4. திருவேரகம்
இரு பிறப்பாளரின் இயல்பு
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி,
அறு நான்கு இரட்டி இளமை நல்லி யாண்டு
ஆறினின் கழிப்பிய, அறன் நவில் கொள்கை, 180
மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து,
இருபிறப்பாளர், பொழுது அறிந்து நுவல
அந்தணர் வழிபடும் முறை
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்,
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து, 185
ஆறு எழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப் பாடி,
விரை உறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து,
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று,
5. குன்று தோறாடல்
வேலன் (பூசாரி) கட்டிய சிரமாலை
பைங்கொடி, நறைக் காய் இடை இடுபு, வேலன், 190
அம் பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்;
குரவைக் கூத்து
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்;
கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து,
தொண்டகச் சிறு பறைக் குரவை அயர
முருகனைச் சேவிக்கும் மகளிர்
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங் கான்,
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி,
இணைத்த கோதை, அணைத்த கூந்தல்; 200
முடித்த குல்லை, இலையுடை நறும் பூ,
செங் கால் மராஅத்த வால் இணர், இடை இடுபு,
சுரும்பு உணத் தொடுத்த பெருந் தண் மாத் தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ,
மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு 205
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.