ஆற்றுப்படுத்தல்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு,
நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்,
செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன்,
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப,
இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே:
மதுரை மாநகரச் சிறப்பு
செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க,
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்,
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து,
மாடம் மலி மறுகின் கூடல் குடவயின்
திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்
இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர்,
அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.