கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - உ

(1) உலகம் - பூமி
(2)உவகை - ஆனந்தம்
(3)உவகை - மகிழ்ச்சி
(4)உவகை - களிப்பு
(5)உகந்தது - பிரியமானது
(6)உகிர் - நகம்
(7)உகைத்தல் - செலுத்துதல்
(8)உக்கிரம் - மூர்க்கம்
(9)உக்கிரம் - கொடுமை
(10)உச்சவரம்பு - மேல் எல்லை
(11)உசாவுதல் - ஆராய்தல்
(12)உச்சி - தலைநுனி
(13)உடல் - தேகம்
(14)உடல் - மெய்
(15)உடற்றல் - வருத்தல்
(16)உடு - நட்சத்திரம்
(17)உடுக்கை - ஆடை
(18)உடுபதி - சந்திரன்
(19)உடை - ஆடை
(20)உடை - உடைத்தல்
(21)உடைமை - செல்வம்
(22)உடைமை - சொத்து
(23)உட்கிடக்கை - மனக்கருத்து
(24)உணர்வு - உணர்ச்சி
(25)உண்டி - உணவு
(26)உதரம் - வயிறு
(27)உதாசீனம் - அலட்சியம்
(28)உதாரணம் - மேற்கோள்
(29)உதிரம் - இரத்தம்
(30)உத்தண்டம் - வீரம்
(31)உத்தரம் - வடக்கு
(32)உத்தரம் - பதில்
(33)உத்தரவு - கட்டளை
(34)உத்தி - முறை
(35)உத்தியானம் - பூஞ்சோலை
(36)உந்தி - வயிறு
(37)உபகாரம் - உதவி
(38)உபசரணை - உபசாரம்
(39)உபதேசம் - போதித்தல்
(40)உபவாசம் - நோன்பு
(41)உபவாசம் - விரதம்
(42)உபாசனை - ஆராதனை
(43)உபாதை - வேதனை
(44)உபாயம் - தந்திரம்
(45)உமிதல் - துப்புதல்
(46)உம்பர் - தேவர்
(47)உயர்வு - மேன்மை
(48)உயிர் - மூச்சு
(49)உயிர் - ஆன்மா
(50)உயிரோம்பல் - உயிர்காத்தல்
(51)உயிர்ப்பு - மூச்சு
(52)உயில் - மரணச்சாசனம்
(53)உய்தி - ஈடேற்றம்
(54)உய்த்துணரல் - ஆராய்ந்தறிதல்
(55)உரகம் - பாம்பு
(56)உரம் - வலிமை
(57)உரவோர் - அறிஞர்
(58)உறிஞ் - உறிஞ்சுதல்
(59)உரித்து - உரிமை
(60)உருத்திரம் - பெருங்கோபம்
(61)உருளி - சில்லு
(62)உரை - சொல்
(63)உரோகம் - நோய்
(64)உரோமம் - மயிர்
(65)உலகவழக்கு - பொதுவழக்கு 
(66)உலா - பவனி
(67)உலுத்தன் -உலோபி
(68)உலை - உலைக்களம்
(69)உலைச்சல் -அலைதல்
(70)உலோபம் - ஈயாமை
(71)உவகை - மகிழ்ச்சி
(72)உவப்பு - மகிழ்ச்சி
(73)உவரி - கடல்
(74)உழுபடை - கலப்பை
(75)உழுவை - புலி
(76)உளவு - வேவு
(77)உள்ளம் - மனம்
(78)உள்ளல் - நிலைத்தல்
(79)உள்ளீடு - உட்கருத்து
(80)உள்ளுறை - பொருளடக்கம்
(81)உறழ்வு - விகற்பம்
(82)உறுகண் - துன்பம்
(83)உறுதல் - அடைதல்
(84)உறுதி - திடம்
(85)உறுப்பு - அவயம்
(86)உறுதிப்பாடு - திடப்பட்டு
(87)உறையுள் - தங்குமிடம்
(88)உற்சவம் - திருவிழா
(89)உற்பாதம் - துர்க்குறி
(90)உன்மத்தம் - பைத்தியம்
(91)உன்னதம் - உயர்ச்சி
(92)உச்சரிப்பு – பலுக்கல்
(93)உத்தியோகம் – அலுவல்
(94)உத்தேசம் – மதிப்பு
(95)உபகாரம் - நன்மை
(96)உபச்சாரம் - வரவேற்பு
(97)உபதேசம் - ஓதுவம்
(98)உபதேசியார் - ஓதுவார்
(99)உபயம் - கொடை (நன்கொடை) 

(100)உபவாசம் – உண்ணா நோன்பு
(101)உபாத்தியாயர் - ஆசிரியர்
(102)உபாயம் – ஆம்புடை, 

(103)உபாயம் – சூழ்ச்சி 
(104)உல்லாசம் - மகிழ்ந்திருத்தல்
(105)உலோகம் - மாழை
(106)உலோபி – இவறி
(107)உற்சாகம் - ஊக்கம்
(108)உஷ்ணம் – வெப்பம் 

(109)உலகம்- உகம், 
(110)உலகம்- குவலயம், 
(111)உலகம்- குவவு, 
(112)உலகம்- ஞாலம், 
(113)உலகம்- பார், 
(114)உலகம்- பொழில், 
(115)உலகம்- புடவி, 
(116)உலகம்- பூழில், 
(117)உலகம்- பொறை,
(118)உலகம்- நீரகம், 
(119)உலகம்- கூ, 
(120)உலகம்- கோ, 
(121)உலகம்- கிடக்கை, 
(122)உலகம்- மண்ணுலகு, 
(123)உலகம்- மண்ணகம், 
(124)உலகம்- இருநிலம், 
(125)உலகம்- வையம் ,
(126)உலகம்- மேதினி, 
(127)உலகம்- அகிலம், 
(128)உலகம்- அவனி, 
(129)உலகம்- தரணி, 
(130)உலகம்- காசினி,
(131)உலகம்-  புவி, 
(132)உலகம்- பூவுலகு, 
(133)உலகம்- உலகு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;