ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். (பிற நூல்கள் சூளாமணி, யசோதரகாவியம், நாக குமார காவியம், நீலகேசி). இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக் காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன. இதில் நூல் முகப்பில் 'வணக்கம்' என்ற தலைப்பில் உள்ள இரு பாடல்களும், அவையடக்கப் பாடல் ஒன்றும், பயன் என்றதலைப்பில் உள்ள ஒரு பாடலும் அடங்கும். இதுவல்லாது காண்டங்களின் செய்யுள் தொகை என்ற தலைப்பில் இரண்டு விருத்தங்களும் இக் காவியத்தின் கடைசியில் அமைந்துள்ளன. ஆகவே மொத்த பாடல்களின் எண்ணிக்கை 369 ஆகும். இந் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை அத்துடன்
வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை.இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.