(28)
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.
(பதவுரை)
மெல் சந்தனக் குறடு - மென்மையாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும் - தான் தேய்ந்து போன காலத்திலும், கந்தம் குறைபடாது - மணம் குறையாது; ஆதலால் - ஆதலினாலே, தார் வேந்தர் - மாலையை அணிந்த அரசர்கள், தம்தம் தனம் சிறியர் ஆயினும் - தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானாலும், கேட்டால் - அவ்வறுமையினாலே, மனம் சிறியர் ஆவரோ - மனஞ் சுருங்கினவராவாரோ (ஆகார்).
தார் - சேனை; மனம் - மன வலிமை என்று பொருள் கூறுதலும் ஆம்.
அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மன விரிவு (தளராத் தன்மை) குன்றார் எ - ம். (28)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.