கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 4 நவம்பர், 2011

மூதுரை-30

(29)
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து)  அவளோடும் ஆகும்இ அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்    

               
(பதவுரை) 
மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருளும், நல்ல உருவும் - நல்ல அழகும், உயர்குலமும் எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், திருமடந்தை ஆம் போது - சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும் - அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது - அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம் - அவளுடனே நீங்கிப் போகும்.

திருமடந்தை - இலக்குமி, ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும் விகாரப்பட்டன.

சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல எ - ம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;