கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 2 நவம்பர், 2011

சிறுபாணாற்றுப்படை-8


நல்லியக்கோடன் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
நல்லியக்கோடனைச் சான்றோர்கள் வீரர்கள் அரிவையர் பரிசிலர் என்று பலரும் புகழ்ந்து கூறுகின்றனர். இதன் மூலம் நல்லியக்கோடனின் சிறந்த மாண்புகள் வெளிப்படுகின்றன. இவை மனித சமுதாயத்தில் நிலைத்து நிற்க வேண்டி பண்புகளாக இருக்கின்றன.
1.
சான்றோர் புகழ்தல்
இன்முகம் உடையவன் - சிற்றினம் சேராதவன் - உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவன்.

2 .
வீரர்கள் புகழ்தல்
பகையைக் கண்டு அஞ்சாது அவர்களை அழிக்கும் பேராற்றல் மிக்கவன் - அடி பணிந்தாரிடத்து இரக்கமும் அருள் உள்ளமும் உடையவன்

3 .
அரிவையர் புகழ்தல் 
பெண்கள் வசப்படாதவன் - பெண்களின் வருத்தத்தைப் போக்குபவன் - பெண்களைப் பாதுகாப்பவன் 

4 .
பரிசிலர் புகழ்தல் 
அறிவு மடம்படுதல் - வாஞ்சையறிந்து பரிசு நல்கல் - வரையாது வழங்குதல்.
அறிவு மடம்படுதல் அறிவு நிரம்பப் பெறாதவர்கள் தன்னிடம் வந்து தவறானவற்றறைக் கூறினால் அவற்றை அறியாதவன் போல் விரும்பிக் கேட்பான் அறிந்தும் அறியாதவன்போல் இருக்கும் இப்பண்பை அறிவு மடம்படுதல் என்பர்.வாஞ்சையறிந்து பரிசு நல்கல் பரிசில் பெறும் நோக்கோடு தன்னிடம் வந்த பரிசிலர்களுக்கு வேண்டுவன வழங்கும் வள்ளல் குணம் கொண்டவன் இம்மன்னன். ஆயினும் பரிசிலர் தகுதி அறிந்து அவர்களின் தகுதிக்கு இழுக்கு ஏற்படாதவாறு வாரி வழங்குவான். இதனை வாஞ்சையறிந்து பரிசு நல்குதல் என்று கூறுவர்

5 .
வரையாது வழங்குவோன் 
பரிசிலரின் மனம் மகிழ்ச்சி அடையுமாறும், அவர்கள் மட்டுன்றி, அவர்களது உறவினர்களும் பெற்றுப் பயன் அடையும் வகையிலும் அளவில்லாப் பரிசுப் பொருட்களை வாரி வழங்குவான். இதனை வரையாது வழங்குதல் என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;