கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 7 நவம்பர், 2011

சிறுபாணாற்றுப்படை-9


அருள் உள்ளம்

1) சேர நாட்டில் மனிதர்களே அன்றி விலங்குகள் கூட எவ்வித துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததை சிறுபாணாற்றுப்படை 41-48 அடிகள் சுட்டுகின்றன.

2) அன்று முதல் இன்று வரை மக்கள் தங்ளுக்கு விருப்பமான விலங்குகளை வீடுகளில் வளர்த்து வந்தனர். இதனை வீட்டு விலங்குகள் அல்லது வளர்ப்பு விலங்குகள் (Pet animals) எனலாம். இவற்றைத் தங்கள் பிள்ளைகளைப் போல மக்கள் பாசத்துடன் வளர்ப்பர். இது பற்றிய ஒரு செய்தியும் சிறுபாணாற்றுப்படையில் காணப்படுகிறது.

கொற்கை மாநகர உப்பு வணிகர் உமணர். இவர்கள் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி ஊர்கள் தோறும் சென்று விற்பர். அப்பொழுது தம் மனைவி மக்களையும் அழைத்துச் செல்வர். அது மட்டுமன்றித் தம் குழந்தைகளைப் போல வளர்த்த மந்தியையும் உடன் அழைத்துச் செல்வர். அம்மந்தியை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துத் தம்முடன் அழைத்துச் செல்வர்.

அம்மந்திகள் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் முத்துக்கள் பெய்த கிளிஞ்சல் சிப்பிகளைக் கொண்டு கிளுகிளுப்பை ஆட்டி மகிழும். இவற்றின் மூலம் சேர, பாண்டிய நாடுகளின் அரசர்களின் அருள் உள்ளம் வெளிப்படுகிறது.

இதனைப் போலவே நல்லியக்கோடனும் தன் குடி மக்களிடம் மட்டுமல்லாது தன்னை அடி பணிந்து தன் கீழ் அடங்கி ஆட்சி செய்யும் பகைவரிடத்தும் கோபம் கொள்ளாது இரக்கம் காட்டும் அருள் உள்ளம் உடையவன் என்பதை, அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும் (210) என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;