501.
ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன்
றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க்
கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லா
வோடுகளி றொப்பவினி தோடியதை யன்றே.
502.
திரைகடருஞ் சங்குகலந் தாக்கித் திரண்முத்தம்
கரைகடலுட் காலக்கணை பின்னொழிய முந்நீர்
வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவி
னிரையிடறிப் பாய்ந்திரிய வேகியது மாதோ.
503.
மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பார்
அன்னமொடுந் தோகைநடை சாயலமிர் தன்னார்
துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க
நன்மையுடை நன்பொன்விளை தீவமடைந் தஃதே
504.
தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலுந் திருமுத்தாரங்
கோவினைக் குறிப்பிற் கண்டு கொடுத்தருள் சுமந்து செம்பொற்
பூவினுள் ளவளை யன்ன பொங்கிள முலையினார்த
நாவினு ளமிர்தங் கேட்டு நாடக நயந்து சின்னாள்
505.
புணர்ந்தவர் பிரித லாற்றாப்
போகமீன் றளிக்குஞ் சாய
லணங்கினுக் கணங்க னாரோ
டறுமதி கழிந்த பின்றைக்
கொணர்ந்தன பண்டம் விற்ற
கொழுநிதிக் குப்பை யெல்லா
முணர்ந்துதன் மதலை யேற்றி
யொருப்படுத் தூர்க்கு மீள்வான்
506.
அரசனைக் கண்டு கண்ணுற்
றவர்களை விடுத்து நன்னா
ளிரைவதி வியாழ வோரை
யிருஞ்சிலை முளைப்ப வேறிக்
கரைகட லழுவ நீந்திக்
காற்றினுங் கடுகி யைஞ்ஞா
றுரையுடைக் காத மோடி
யோசனை யெல்லை சார்ந்தே,
507.
களித்தலை மயங்கி யிப்பா
லிருத்தலுங் கலந்தோர் காற்றிற்
றுளித்தலை முகில்க ளீண்டித்
தூங்கிருண் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி
வெடிபட முழங்கிக் கூற்று
மொளித்துலைந் தொழிய வெம்பி
யுரறிநின் றிடிப்ப நாய்கன்
508.
எண்டிசை வளியு மீண்டி
யெதிரெதிர் கலாவிப் பவ்வங்
கொண்டுமே லெழுவ தொப்பக்
குளிறிநின் றதிர்ந்து மேகந்
தண்டுளி பளிக்குக் கோல்போற்
றாரையாய்ச் சொரிந்து தெய்வங்
கொண்டதோர் செற்றம் போலுங்
குலுங்கன்மி னென்று கூறும்.
509.
இடுக்கண்வந் துற்ற காலை
யெரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி
நகுகதா நக்க போழ்தவ்
விடுக்கணை யரியு மெஃகா
மிருந்தழு தியாவ ருய்ந்தார்
வடுப்படுத் தென்னை யாண்மை
வருபவந் துறங்க ளன்றே
510.
ஆடகச் செம்பொற் கிண்ணத்
தேந்திய வலங்கற் றெண்ணீர்
கூடகங் கொண்ட வாழ்நா
ளுலந்ததேற் கொல்லும் பவ்வத்
தூடகம் புக்கு முந்நீ
ரழுந்தினு முய்வர் நல்லார்
பாடகம் போலச் சூழ்ந்த
பழவினைப் பயத்தி னென்றான்.
511.
வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க்
கனைகட லழுவ நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா
நனைமலர்ப் பிண்டி நாத னாண்மலர்ப் பாத மூலம்
நினையுமி னீவி ரெல்லா நீங்குமி னச்ச மென்றான்.
512.
பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்பக்
குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே
நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதி
லுருமிடித் திட்ட தொப்ப வுள்ளவ ரொருங்கு மாய்ந்தார்.
வேறு
513.
ஓம்பிப் படைத்த பொருளும்முறு காதலாரும்
வேம்புற்ற முந்நீர் விழுங்கவ்விரை யாது நின்றான்
கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத்
தேம்பெற்ற பைந்தா ரவனைத்திரை யுய்த்த தன்றே.
514.
நாவா யிழந்து நடுவாருமி லியாம நீந்திப்போவாய்
தமியே பொருளைப் பொருளென்று கொண்டாய்
வீவா யெனமுன் படையாய்படைத்தாய்வினையென்
பாவாயெனப்போய்ப் படுவெண்மணற்றிட்டை சேர்ந்தான்.
வேறு
515.
பொரியரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரிதரு வண்டொடு தேனின மார்க்குந்
திருவிரி பூம்பொழிற் செவ்வனஞ் சேர்ந்தாங்
கருவரை மார்ப னவலித் திருந்தான்.
516.
ஓடுந் திரைக ளுதைப்ப வுருண்டுருண்
டாடு மலவனை யன்ன மருள்செய
நீடிய நெய்தலங் கான னெடுந்தகை
வாடி யிருந்தான் வருங்கல நோக்கா.
517.
ஆளிய மொய்ம்ப னிருந்தவப் பூம்பொழிற்
றாள்வலி யானொர் மகனைத் தலைப்பட்டுக்
கேளி ரெனக்குற்ற கேண்மின் னீரெனத்
தோள்வலி மிக்கான் றொடர்ந்துரைக் கின்றான்
518.
கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து
திருந்திய தன்பொருள் தீதுற்ற வாறும்
அரும்புணை சார்வா அவண் உய்ந்த வாறும்
இருந்தவற் கெல்லாம் எடுத்து மொழிந்தான்
519.
மானும் மரனும் இரங்க மதவலி
தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்
றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியன
வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான்.
520.
விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ
டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள்
வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன்
னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான்.
521.
உரையகங் கொள்ள வுணர்த்தின னாகி
வரையக மேற வலிமின மென்னா
விரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக்
குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான்.
522.
விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பகும்புயற் றண்டுளி பக்க நனைப்ப
நயந்தனர் போகி நறுமலர்ச் சோலை
யசும்பிவர் சார லருவரை சார்ந்தார்.
523.
கண்டா லினியன காண்டற் கரியன
தண்டா மரையவ டாழுந் தகையன
கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ
வுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான்.
524.
மழை தவழ் சோலை மலைமிசை நீண்ட
குழைதவழ் குங்குமங் கோழரை நாகந்
தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கி
யிழைதவழ் மார்ப னினிதி னுவந்தான்
525.
கோதை யருவிக் குளிர்வரை மேனின்று
காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதி
னாத னுறைவதோர் நன்னக ருண்டங்குப்
போது மெழுகெனப் போயினர் சார்ந்தார்.
526.
மேகமே மிடைந்து தாழ
விருள்கொண்ட வெள்ளிக் குன்ற
மாகத்து விளங்கித் தோன்றும்
வனப்புநாம் வகுக்க லுற்றா
னாகந்தான் கரிய தொன்று
கீழ்நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட
பான்மதி போன்ற தன்றே.
527
துளங்குபொன் னகரின் றன்மை
சொல்லலாஞ் சிறிதோர் தேவன்
விளங்குபொன் னுலகத் துள்ள
துப்புர விடங்க ளெல்லா
மளந்துகொண் டின்பம் பூரித்
தணிநக ராக்கி மேலா
லிளங்கதிர்ப் பருதி சூட்டி
யியற்றிய தென்ன லாமே.
வேறு
528.
பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற்
செங்க ணாயிரஞ் சேர்ந்தவன் பொன்னகர்
கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேற்
றங்கு கின்றது போற்றகை சான்றதே.
529.
கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடி
மடங்க னோக்கியர் வாண்முகம் போலுமென்
றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தங்
குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே.
530.
திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி
பரவை யாழ்குழல் பண்ணமை மென்முழா
வுருவம் யாருடை யாரென் றொளிர் நக
ரரவ வாய்திறந் தார்ப்பது போன்றதே.
531
செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்திய
வம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள்
வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற்
பைம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே.
532.
உருளி மாமதி யோட்டொழித் தோங்கிய
வெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின்
மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத்
தருளி னாலழ லாற்றுவ போன்றவே.
533.
அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும்
பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை
நயந்து கொள்பவ ரின்மையி னன்னகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே.
534.
தேக்க ணின்னகிற் றேனொடு கூட்டமைத்
தாக்கப் பட்ட வளவில் கொழும்புகை
வீக்கி மாடந் திறந்திட மெல்லவே
வூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே
535.
தப்பில் வாய்மொழித் தானவர் வைகிய
வொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற்
கப்பத் திந்திரன் காமுறு மாமணிச்
செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே.
வேறு
536.
நன்னகர் நோக்கி நாய்கன்
நாகங்கொல் புகுந்த தென்னப்
பொன்னகர் பொலியப் புக்குப்
பொங்குமா மழைக டங்கு
மின்னவிர் செம்பொன் மாடத்
திருவரு மிழிந்து புக்குப்
பின்னவன் விருந்து பேணிப்
பேசினன் பிறங்கு தாரான்.
537.
மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக்
கேடில்சீர்க் கலுழனாய கலுழவே கற்குத் தேவி
தோடலர் கோதைத் தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணி
யாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள்.
538.
விண்ணகம் வணங்க வெண்கோட்
டிளம்பிறை முளைத்த தேபோற்
பண்ணகத் தினிய சொல்லாள்
பாவையைப் பயந்த ஞான்றே
யெண்ணிட மின்றி மன்ன
ரிம்மலை யிறைகொண் டீண்டி
யண்ணலங் களிற்றி னுச்சி
யருங்கல வெறுக்கை யீந்தார்
539.
மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்
கந்தரத் தோடு கோளின் சாதக மவனுஞ் செய்தா
னிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்கு
வந்தடை பான்மை மண்மேல் இராசமா புரத்த தென்றான்
540.
அவனுரை தெளிந்து வேந்த
னாசையு ளரசர் நிற்பக்
கவனங்கொள் புரவிக் கொட்பிற்
காதலுங் கரந்து வைத்தா
னவனதே கருதிற் றாங்கொ
லன்றுகொ லறிய லாகா
திவணது மறிது மென்று
கோயிலுக் கேகி னானே.
541.
பால்பரந் தன்ன பட்டார் பூவணை பசும்பொற் கட்டிற்
கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கி
வேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றை
போலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின்.
542.
என்வர விசைக்க வென்ன
வாயிலோ னிசைப்ப வேகி
மன்னர்தம் முடிகள் வேய்ந்த
வயிரம்போழ்ந் துழுது சேந்த
பொன்னவிர் கழல்கொள் பாதம்
பொழிமழைத் தடக்கை கூப்ப
வின்னுரை முகமன் கூறித்
தானத்தி லிருக்க வென்றான்.
543.
முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப
வதிர்குரன் முரச நாண வமிர்துபெய்ம் மாரி யேய்ப்பக்
கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதன்
மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான்.
544.
இன்றைய தன்று கேண்மை
யெமர்நும ரெழுவர் காறு
நின்றது கிழமை நீங்கா
வச்சிர யாப்பின் னூழா
லன்றியு மறனு மொன்றே
யரசன்யான் வணிக னீயே
யென்றிரண் டில்லை கண்டாய்
யிதுநின தில்ல மென்றான்.
545.
மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனந் தளிர்த்த தேபோல் சீதத்தன் றளிர்த்து நோக்கி
யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்ணை மென்று கேட்ப
முந்தைத் தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்புகின்றான்
546.
வெள்ளிவே தண்டத் தங்கண்
வீவில்தென் சேடிப் பாலிற்
கள்ளவிழ் கைதை வேலிக்
காசில்காந் தார நாட்டுப்
புள்ளணி கிடங்கின் விச்சா
லோகமா நகரிற் போகா
வெள்ளிவேற் கலுழ வேகன்
வேதண்ட வேந்தர் வேந்தன்.
547.
சங்குடைந் தனைய வெண்டா
மரைமலர்த் தடங்கள் போலும்
நங்குடித் தெய்வங் கண்டீர்
நமரங்கா ளறிமி னென்னக்
கொங்குடை முல்லைப் பைம்போ
திருவடங் கிடந்த மார்ப,
விங்கடி பிழைப்ப தன்றா
லெங்குல மென்று சொன்னான்.
548.
பெருந்தகைக் குருசி றோழன்
பெருவிலைக் கடக முன்கை
திருந்துபு வணங்கப் பற்றிச்
சென்றுதன் னுரிமை காட்டப்
பொருந்துபு பொற்ப வோம்பிப்
பொன்னிழை சுடர நின்ற
கருங்கண்ணி திறத்து வேறாக்
கட்டுரை பயிற்று கின்றான்.
549.
எரிமணிப் பளிக்கு மாடத்
தெழுந்ததோர் காம வல்லி
யருமணிக் கொடிகொன் மின்கொ
லமரர்கோ னெழுதி வைத்த
வொருமணி குயின்ற பாவை
யொன்று கொலென்று நாய்கன்
றிருமணிக் கொடியை யோரான்
றெருமர மன்னன் சொன்னான்.
550.
தூசுலாய்க் கிடந்த வல்கு
றுப்புறழ் தொண்டைச் செவ்வாய்
வாசவான் குழலின் மின்போல்
யருமணிக் கொடிகொன் மின்கொ
யூசல்பாய்ந் தாடிக் காதிற்
குண்டல மிலங்க நின்றாள்
காசில்யாழ்க் கணங்கொள் தெய்வக்
காந்தர்வ தத்தை யென்பாள்.
551
விளங்கினா ளுலக மெல்லாம்
வீணையின் வனப்பி னாலே
யளந்துணர் வரிய நங்கைக்
கருமணி முகிழ்த்த வேபோ
லிளங்கதிர் முலையு மாகத்
திடங்கொண்டு பரந்த மின்னிற்
றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா
துரவரு வென்ன வுண்டே.
552.
நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி
யின்னிசை பொருது வெல்வா னியாவனே யானு மாக
வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான்
றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்கதென்றாள்.
553.
முனிவரும் போக பூமிப் போகம்முட் டாது பெற்றுந்
தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை
கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற்
பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான்.
554.
நூற்படு புலவன் சொன்ன
நுண்பொரு ணுழைந்தி யானும்
வேற்கடற் றானை வேந்தர்
வீழ்ந்திரந் தாலு நேரேன்
சேற்கடை மதர்வை நோக்கிற்
சில்லரித் தடங்க ணங்கை
பாற்படு காலம் வந்தாற்
பான்மையார் விலக்கு கிற்பார்.
555.
படைப்பருங் கற்பி னாடன்
பாவையைப் பரிவு நீக்கிக்
கொடைக்குரிப் பால வெல்லாங்
கொடுத்தபின் கூற்று முட்கும்
விடைப்பருந் தானை வேந்தன்
வேண்டுவ வெறுப்ப நல்கித்
தொடுத்தலர் கோதை வீணா
பதிக்கிது சொல்லி னானே.
556
. உடம்பினொ டுயிரிற் பின்னி
யொருவயி னீங்கல் செல்லா
நெடுங்கணுந் தோளும் போலு
நேரிழை அரிவை நீநின்
றடங்கணி தனிமை நீங்கத்
தந்தையுந் தாயு மாகி
யடங்கல ரட்ட வேலா
னாணையி ராமி னென்றான்.
557. அருமணி வயிரம் வேய்ந்த
வருங்கலப் பேழை யைஞ்ஞா
றெரிமணி செம்பொ னார்ந்த
விராயிரம் யவனப் பேழை
திருமணிப் பூணி னாற்குச்
சினந்தலை மழுங்க லின்றிக்
குருமணி முடியிற் றேய்த்த
தரன்றமர் கொள்க வென்றான்.
558. பல்வினைப் பவளப் பாய்காற்
பசுமணி யிழிகை வம்பார்
நல்லகில் விம்மு கட்டி
றவிசொடு நிலைக்கண் ணாடி
மெல்லிய தூப முட்டி
மேதகு நானச் செப்போ
டல்லவுங் கொள்க வென்றா
னணங்குடை நிணங்கொள் வேலான்.
559. விளக்கழ லுறுத்த போலும்
விசியுறு போர்வைத் தீந்தேன்
றுளக்கற வொழுகி யன்ன
துய்யறத் திரண்ட திண்கோல்
கொளத்தகு திவவுத் திங்கட்
கோணிரைத் தனைய வாணி
யளப்பருஞ் சுவைகொ ணல்யா
ழாயிர மமைக வென்றான்
560. அரக்கெறி குவளை வாட்க
ணவ்வளைத் தோளி னாளைப்
பரப்பமை காதற் றாயர்
பற்பல்காற் புல்லிக்கொண்டு
திருப்புறக் கொடுத்த செம்பொற்
றாமரை போன்று கோயில்
புரிக்குழன் மடந்தை போகப்
புலம்பொடு மடிந்த தன்றே
561. காம்புபொன் செய்த பிச்சங்
கதிர்மணி குடையொ டேந்தித்
தாம்பலர் கவரி வீசக்
கிண்கிணி ததும்ப நாகப்
பாம்புபைத் தனைய வல்குற்
பல்கலை மிழற்ற வேகி
யாம்பனா றமுதச் செவ்வா
யரசனைத் தொழுது நின்றாள்.
562. அடிக்கல மரற்ற வேகி
யரும்பெறற் றாதை பாத
முடிக்கலஞ் சொரியச் சென்னி
யிறைஞ்சலு முரிந்து மின்னுக்
கொடிப்பல நுடங்கி யாங்குத்
தோழியர் குழாத்து ணிற்ப
வடுத்தனன் புல்லி வேந்தன்
னாற்றுகி லாது சொன்னான்.
563. வலம்புரி யீன்ற முத்தம்
மண்மிசை யவர்கட் கல்லால்
வலம்புரி பயத்தை எய்தா
தனையரே மகளி ரென்ன
நலம்புரிந் தனைய காதற்
றேவிதன் னவையை நீங்கக்
குலம்புரிந் தனைய குன்றிற்
கதிபதி கூறி னானே.
564.
இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை
பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம் பொன்னார்
மென்புன மருளி னோக்கின் மானின மாதி யாகத்
தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள்.
565.
வெற்றிவேன் மணிமுடிக், கொற்றவ னொருமக
ளற்றமில் பெரும்படைச், சுற்றமோ டியங்கினாள்.
566.
கண்ணயற் களிப்பன, வண்ணல்யானை யாயிரம்
விண்ணகத் தியங்குதே, ரெண்ணவற் றிரட்டியே.
567. விற்படை விலக்குவ, பொற்படைப் புரவியு
முற்படக் கிளந்தவற்றி, னற்புடைய நாற்றியே
568.
பாறுடைப் பருதிவேல், வீறுடை யிளையரு
மாறிரட்டி யாயிரர், கூறுதற் கரியரே.
569.
மாகநீள் விசும்பிடை, மேகநின் றிடித்தலி
னாகநின் றதிர்ந்தவர்க், கேகலாவ தில்லையே.
570.
வெஞ்சின வெகுளியிற், குஞ்சர முழங்கலி
மஞ்சுதம் வயிறழிந், தஞ்சிநீ ருகுத்தவே
571.
வேழமும் மதத்தொடு, தாழ்புயல் கலந்துட
னாழ்கட லகம்புறம், வீழ்தர விரைந்ததே
572. மல்லன்மாக் கடலிடைக், கல்லெனக் கலங்கவிழ்த்
தல்லலுற் றழுங்கிய, செல்வனுற்ற செப்புவாம்.
573. பானிறப் பனிவரை, மேனிற மிகுத்தன
நீனிற நிழன்மணி, தானிரைத் தகமெலாம்.
574. வஞ்சமின் மனத்தினா, னெஞ்சகம் புகன்றுக
விஞ்சையம் பெருமகன், வஞ்சமென் றுணர்த்தினான்
575
. நங்கைதன் னலத்தினான், மங்குல்வெள்ளி மால்வரை
யெங்குமன்ன ரீண்டினார், சங்குவிம்மு தானையார்.
576.
ஈரலங்க லேந்துவே, லாரலங்கன் மார்பினான்
கார்கலந்த கைக்கணி, சீர்கலந்து செப்பினான்
577.
மாதர்வாழ்வு மண்ணதே! யாதலா லலங்கலந்
தாதவிழ்ந்த மார்ப! நின், காதலான் கடலுளான்.
578.
என்றுகூற வென்னையே, துன்றுகாதற் றோழனைச்
சென்றுநீ கொணர்கென, வன்றுவந்த வண்ணமே.
579.
துன்பமுற்ற வர்க்கலா, லின்பமில்லை யாதலி
னன்பமற்றி யானினைத், துன்பத்தாற் றொடக்கினேன்.
580.
பீழைசெய்து பெற்றனன், வாழியென்று மாக்கட
லாழ்வித் திட்ட வம்பினைத், தோழர்ச்சுட்டிக் காட்டினான்
வேறு
581.
தேன்றரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மா
லூன்றரு குருதி வேலா னுள்ளகங் குளிர்ந்து விஞ்சைக்
கோன்றரு துன்பம் மற்றென் குலத்தொடு முடிக வென்றான்
கான்றுவில் வயிரம் வீசும் கனமணிக் குழையி னானே
582.
தோடலர் தெரிய லான்றன் றோழரைக் கண்டு காத
லூடலர்ந் தெழுந்து பொங்க வுருவத்தார் குழையப் புல்லிப்
பாடிரும் பௌவ முந்நீர்ப் பட்டது பகர்த லோடு
நாடக நாங்க ளுற்ற தென்றுகை யெறிந்து நக்கார்.
583.
கட்டழற் கதிய புண்ணிற் கருவரை யருவி யாரம்
பட்டது போன்று நாய்கன் பரிவுதீர்ந் தினியர் சூழ
மட்டவிழ் கோதை யோடு மண்கனை முழவ மூதூர்க்
கட்டவிழ் தாரி னான்றன் கடிமனை மகிழ்ந்து புக்கான்.
584.
பெருமனை குறுக லோடும்பிறையென விலங்கித்
தோன்றுந்திருநுதன் மனைவி செம்பொற்
கொடியென விறைஞ்சி நிற்பவருமுலை பொதிர்ப்ப
வாங்கிவண்டின மிரியப் புல்லிக்கதிர்நகை முறுவன்
மாதர்கண்ணுறு கவலை தீர்த்தான்
585.
சந்திர காந்த மென்னுந்
தண்மணி நிலத்தி னங்கண்
வெந்தெரி பிசும்பொன் வெள்ளி
பளிங்கொடு பவளம் பாய்த்திக்
கந்தெரி மணியிற் செய்த
கன்னியா மாட மெய்திப்
பைந்தொடிப் பாவை யொன்றும்
பரிவிலள் வைகி னாளே.
586.
பாசிழைப் பரவை யல்குற்
பசுங்கதிர்க் கலாபம் வீங்கக்
காசுகண் பரிய வைகிக்
கடன்றலைக் கழிந்த பின்னாத்
தூசணி பரவை யல்குற்
றுளங்குநுண் ணுசுப்பிற் பாவை
யாசறு வரவும் தந்தை
வலித்தது மறியச் சொன்னான்.
587.
வண்டுண மலர்ந்த கோதை
வாயொருப் பட்டு நேரத்
தெண்கட லமிர்தம் பெய்த
செப்பெனச் செறிந்து வீங்கிப்
பெண்டிரு மாண்மை வெஃகிப்
பேதுறு முலையி னாளைக்
கண்டவர் மருள நாளைக்
கடிவினை முடித்து மென்றான்
588.
மால்வரை வயிறு போழ்ந்து
வல்லவர் மதியிற் றந்த
பால்வரை மணியும் பொன்னும்
பற்பல கொண்டு புக்குக்
கால்பொரு கழலி னானுங்
காவலற் கண்டு சொன்னான்
வேல்பொரு தானை யானும்
வேண்டுவ விதியி னேர்ந்தான்.
வேறு
589.
மையன்மத யானைநிரை மன்னன்மகிழ்ந் தானாப்
பொய்யில்புகழ் நாய்கன்மத வொளியினொடு போகி
நொய்தின்மனை யெய்தியிது செய்கென நொடித்தான்
மொய்கொண்முலை பாயமுகை விண்டலர்ந்த தாரான்.
590.
நானக்கிடங் காடைநகர் நாகத்திடை நன்பொன்
வானக்கிடு மாட்சியதோர் மண்டபங்செய் கென்ன
மீனத்திடை நாள்கிழமை வெள்ளிசயை பக்கம்
கானத்திடை வேங்கையெழக் கண்ணினர்கள் அன்றே
591.
நட்புப்பகை யுட்கினொடு நன்பொன்விளை கழனி
பட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு கான
மட்டசுவை வல்சியினொ டியாதுமொழி யாம
லொட்டிப்பதி னாயிரவ ருற்றுமுயல் கின்றார்.
592.
வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகிக்
கண்டதொழிற் கணிச்சிகளிற் கயம்படநன் கிடித்தாங்
கெண்டிசையு மேற்பப்படுத் தேற்றியதன் மேலாற்
கண்டுருகு பொன்னினிலங் காமுறுவ புனைந்தார்
593.
பொன்செய்குடங் கோத்தனைய வெருத்திற்பொலி
பொற்றூண்மின்செய் பசும் பொன்னிலத்துவீறுபெற
நாட்டிமன்பவள மேனவின்றுபளிக்கலகு பரப்பி
நன்செய்வெளி வேய்ந்துசுவர்தமனியத்தின் அமைத்தார்
594.
பாவையவ ளிருக்குமிடம் பளிக்குச்சுவ ரியற்றிக்
கோவைகுளிர் முத்தினியல் கோதையொடு கொழும்பன்
மாலையொடு மாலைதலை மணந்துவர நாற்றி
ஆலையமி தோவியர்கட் கென்னவணி யமைத்தார்.
595.
ஆயிதழ பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி
வாயருகு வந்தொசிந்து மறியமழை மின்போற்
சேயவர்க்குந் தோன்றியதோர் திலகமெனுந் தகைத்தாய்ப்
பாயதிரை முத்தமணல் பரந்துபயின் றுளதே
596.
காமர்களி றும்பிடியும் கன்றுங்கலை மானுந்
தாமரைய வாவிகளும் புள்ளுந்தகை நலத்தி
னேமுறுவ பாவையினொ டியக்கிநிலை யெழுதி
யாமொரையம் காண்பவர்க்கி தகம்புறமி தெனவே.
597.
உழந்தவரு நோக்கி மகிழ் தூங்கவொளி வாய்ந்து
விழுங்குமெனப் பறவைகளும் பிறவிலங்கும் அடையா
முழங்குதிரை வேலியினி னில்லையென மொய்கொண்
டெழுந்துகொடி யாடுமிதவ் வெழில்நகரி னியல்பே.
598.
ஓடுமுகில் கீறியொளிர் திங்கள்சிகை வைத்தே
மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும்
நாடிமுக நான்கதனி னான்முகனை யொக்கும்
நேடிநிமிர் தன்மையினி னேமியையு மொக்கும்
599.
கண்டவர்கள் காமுறலிற் காமனையு மொக்குங்
கொண்டுலக மேத்தலினக் கொற்றவனை யொக்கும்
வண்டெரிய லாரமுலை மாதர்மகி ழமுதம்
உண்டவர்க ளெவ்வகைய ரவ்வகைய தொன்றே.
600.
முகிற்றலை மதிய மன்ன முழுமணி மாடத் திட்ட
வகிற்புகை தவழ்ந்து வானத் தருவிசும் பறுத்து நீண்டு
பகற்கதிர்ப் பரப்பிற் றாகிப் பஞ்சவர் விமான முட்டிப்
புகற்கரு மமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே.
ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன்
றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க்
கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லா
வோடுகளி றொப்பவினி தோடியதை யன்றே.
502.
திரைகடருஞ் சங்குகலந் தாக்கித் திரண்முத்தம்
கரைகடலுட் காலக்கணை பின்னொழிய முந்நீர்
வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவி
னிரையிடறிப் பாய்ந்திரிய வேகியது மாதோ.
503.
மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பார்
அன்னமொடுந் தோகைநடை சாயலமிர் தன்னார்
துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க
நன்மையுடை நன்பொன்விளை தீவமடைந் தஃதே
504.
தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலுந் திருமுத்தாரங்
கோவினைக் குறிப்பிற் கண்டு கொடுத்தருள் சுமந்து செம்பொற்
பூவினுள் ளவளை யன்ன பொங்கிள முலையினார்த
நாவினு ளமிர்தங் கேட்டு நாடக நயந்து சின்னாள்
505.
புணர்ந்தவர் பிரித லாற்றாப்
போகமீன் றளிக்குஞ் சாய
லணங்கினுக் கணங்க னாரோ
டறுமதி கழிந்த பின்றைக்
கொணர்ந்தன பண்டம் விற்ற
கொழுநிதிக் குப்பை யெல்லா
முணர்ந்துதன் மதலை யேற்றி
யொருப்படுத் தூர்க்கு மீள்வான்
506.
அரசனைக் கண்டு கண்ணுற்
றவர்களை விடுத்து நன்னா
ளிரைவதி வியாழ வோரை
யிருஞ்சிலை முளைப்ப வேறிக்
கரைகட லழுவ நீந்திக்
காற்றினுங் கடுகி யைஞ்ஞா
றுரையுடைக் காத மோடி
யோசனை யெல்லை சார்ந்தே,
507.
களித்தலை மயங்கி யிப்பா
லிருத்தலுங் கலந்தோர் காற்றிற்
றுளித்தலை முகில்க ளீண்டித்
தூங்கிருண் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி
வெடிபட முழங்கிக் கூற்று
மொளித்துலைந் தொழிய வெம்பி
யுரறிநின் றிடிப்ப நாய்கன்
508.
எண்டிசை வளியு மீண்டி
யெதிரெதிர் கலாவிப் பவ்வங்
கொண்டுமே லெழுவ தொப்பக்
குளிறிநின் றதிர்ந்து மேகந்
தண்டுளி பளிக்குக் கோல்போற்
றாரையாய்ச் சொரிந்து தெய்வங்
கொண்டதோர் செற்றம் போலுங்
குலுங்கன்மி னென்று கூறும்.
509.
இடுக்கண்வந் துற்ற காலை
யெரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி
நகுகதா நக்க போழ்தவ்
விடுக்கணை யரியு மெஃகா
மிருந்தழு தியாவ ருய்ந்தார்
வடுப்படுத் தென்னை யாண்மை
வருபவந் துறங்க ளன்றே
510.
ஆடகச் செம்பொற் கிண்ணத்
தேந்திய வலங்கற் றெண்ணீர்
கூடகங் கொண்ட வாழ்நா
ளுலந்ததேற் கொல்லும் பவ்வத்
தூடகம் புக்கு முந்நீ
ரழுந்தினு முய்வர் நல்லார்
பாடகம் போலச் சூழ்ந்த
பழவினைப் பயத்தி னென்றான்.
511.
வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க்
கனைகட லழுவ நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா
நனைமலர்ப் பிண்டி நாத னாண்மலர்ப் பாத மூலம்
நினையுமி னீவி ரெல்லா நீங்குமி னச்ச மென்றான்.
512.
பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்பக்
குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே
நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதி
லுருமிடித் திட்ட தொப்ப வுள்ளவ ரொருங்கு மாய்ந்தார்.
வேறு
513.
ஓம்பிப் படைத்த பொருளும்முறு காதலாரும்
வேம்புற்ற முந்நீர் விழுங்கவ்விரை யாது நின்றான்
கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத்
தேம்பெற்ற பைந்தா ரவனைத்திரை யுய்த்த தன்றே.
514.
நாவா யிழந்து நடுவாருமி லியாம நீந்திப்போவாய்
தமியே பொருளைப் பொருளென்று கொண்டாய்
வீவா யெனமுன் படையாய்படைத்தாய்வினையென்
பாவாயெனப்போய்ப் படுவெண்மணற்றிட்டை சேர்ந்தான்.
வேறு
515.
பொரியரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரிதரு வண்டொடு தேனின மார்க்குந்
திருவிரி பூம்பொழிற் செவ்வனஞ் சேர்ந்தாங்
கருவரை மார்ப னவலித் திருந்தான்.
516.
ஓடுந் திரைக ளுதைப்ப வுருண்டுருண்
டாடு மலவனை யன்ன மருள்செய
நீடிய நெய்தலங் கான னெடுந்தகை
வாடி யிருந்தான் வருங்கல நோக்கா.
517.
ஆளிய மொய்ம்ப னிருந்தவப் பூம்பொழிற்
றாள்வலி யானொர் மகனைத் தலைப்பட்டுக்
கேளி ரெனக்குற்ற கேண்மின் னீரெனத்
தோள்வலி மிக்கான் றொடர்ந்துரைக் கின்றான்
518.
கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து
திருந்திய தன்பொருள் தீதுற்ற வாறும்
அரும்புணை சார்வா அவண் உய்ந்த வாறும்
இருந்தவற் கெல்லாம் எடுத்து மொழிந்தான்
519.
மானும் மரனும் இரங்க மதவலி
தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்
றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியன
வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான்.
520.
விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ
டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள்
வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன்
னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான்.
521.
உரையகங் கொள்ள வுணர்த்தின னாகி
வரையக மேற வலிமின மென்னா
விரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக்
குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான்.
522.
விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பகும்புயற் றண்டுளி பக்க நனைப்ப
நயந்தனர் போகி நறுமலர்ச் சோலை
யசும்பிவர் சார லருவரை சார்ந்தார்.
523.
கண்டா லினியன காண்டற் கரியன
தண்டா மரையவ டாழுந் தகையன
கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ
வுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான்.
524.
மழை தவழ் சோலை மலைமிசை நீண்ட
குழைதவழ் குங்குமங் கோழரை நாகந்
தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கி
யிழைதவழ் மார்ப னினிதி னுவந்தான்
525.
கோதை யருவிக் குளிர்வரை மேனின்று
காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதி
னாத னுறைவதோர் நன்னக ருண்டங்குப்
போது மெழுகெனப் போயினர் சார்ந்தார்.
526.
மேகமே மிடைந்து தாழ
விருள்கொண்ட வெள்ளிக் குன்ற
மாகத்து விளங்கித் தோன்றும்
வனப்புநாம் வகுக்க லுற்றா
னாகந்தான் கரிய தொன்று
கீழ்நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட
பான்மதி போன்ற தன்றே.
527
துளங்குபொன் னகரின் றன்மை
சொல்லலாஞ் சிறிதோர் தேவன்
விளங்குபொன் னுலகத் துள்ள
துப்புர விடங்க ளெல்லா
மளந்துகொண் டின்பம் பூரித்
தணிநக ராக்கி மேலா
லிளங்கதிர்ப் பருதி சூட்டி
யியற்றிய தென்ன லாமே.
வேறு
528.
பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற்
செங்க ணாயிரஞ் சேர்ந்தவன் பொன்னகர்
கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேற்
றங்கு கின்றது போற்றகை சான்றதே.
529.
கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடி
மடங்க னோக்கியர் வாண்முகம் போலுமென்
றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தங்
குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே.
530.
திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி
பரவை யாழ்குழல் பண்ணமை மென்முழா
வுருவம் யாருடை யாரென் றொளிர் நக
ரரவ வாய்திறந் தார்ப்பது போன்றதே.
531
செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்திய
வம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள்
வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற்
பைம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே.
532.
உருளி மாமதி யோட்டொழித் தோங்கிய
வெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின்
மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத்
தருளி னாலழ லாற்றுவ போன்றவே.
533.
அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும்
பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை
நயந்து கொள்பவ ரின்மையி னன்னகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே.
534.
தேக்க ணின்னகிற் றேனொடு கூட்டமைத்
தாக்கப் பட்ட வளவில் கொழும்புகை
வீக்கி மாடந் திறந்திட மெல்லவே
வூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே
535.
தப்பில் வாய்மொழித் தானவர் வைகிய
வொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற்
கப்பத் திந்திரன் காமுறு மாமணிச்
செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே.
வேறு
536.
நன்னகர் நோக்கி நாய்கன்
நாகங்கொல் புகுந்த தென்னப்
பொன்னகர் பொலியப் புக்குப்
பொங்குமா மழைக டங்கு
மின்னவிர் செம்பொன் மாடத்
திருவரு மிழிந்து புக்குப்
பின்னவன் விருந்து பேணிப்
பேசினன் பிறங்கு தாரான்.
537.
மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக்
கேடில்சீர்க் கலுழனாய கலுழவே கற்குத் தேவி
தோடலர் கோதைத் தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணி
யாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள்.
538.
விண்ணகம் வணங்க வெண்கோட்
டிளம்பிறை முளைத்த தேபோற்
பண்ணகத் தினிய சொல்லாள்
பாவையைப் பயந்த ஞான்றே
யெண்ணிட மின்றி மன்ன
ரிம்மலை யிறைகொண் டீண்டி
யண்ணலங் களிற்றி னுச்சி
யருங்கல வெறுக்கை யீந்தார்
539.
மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்
கந்தரத் தோடு கோளின் சாதக மவனுஞ் செய்தா
னிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்கு
வந்தடை பான்மை மண்மேல் இராசமா புரத்த தென்றான்
540.
அவனுரை தெளிந்து வேந்த
னாசையு ளரசர் நிற்பக்
கவனங்கொள் புரவிக் கொட்பிற்
காதலுங் கரந்து வைத்தா
னவனதே கருதிற் றாங்கொ
லன்றுகொ லறிய லாகா
திவணது மறிது மென்று
கோயிலுக் கேகி னானே.
541.
பால்பரந் தன்ன பட்டார் பூவணை பசும்பொற் கட்டிற்
கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கி
வேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றை
போலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின்.
542.
என்வர விசைக்க வென்ன
வாயிலோ னிசைப்ப வேகி
மன்னர்தம் முடிகள் வேய்ந்த
வயிரம்போழ்ந் துழுது சேந்த
பொன்னவிர் கழல்கொள் பாதம்
பொழிமழைத் தடக்கை கூப்ப
வின்னுரை முகமன் கூறித்
தானத்தி லிருக்க வென்றான்.
543.
முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப
வதிர்குரன் முரச நாண வமிர்துபெய்ம் மாரி யேய்ப்பக்
கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதன்
மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான்.
544.
இன்றைய தன்று கேண்மை
யெமர்நும ரெழுவர் காறு
நின்றது கிழமை நீங்கா
வச்சிர யாப்பின் னூழா
லன்றியு மறனு மொன்றே
யரசன்யான் வணிக னீயே
யென்றிரண் டில்லை கண்டாய்
யிதுநின தில்ல மென்றான்.
545.
மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனந் தளிர்த்த தேபோல் சீதத்தன் றளிர்த்து நோக்கி
யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்ணை மென்று கேட்ப
முந்தைத் தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்புகின்றான்
546.
வெள்ளிவே தண்டத் தங்கண்
வீவில்தென் சேடிப் பாலிற்
கள்ளவிழ் கைதை வேலிக்
காசில்காந் தார நாட்டுப்
புள்ளணி கிடங்கின் விச்சா
லோகமா நகரிற் போகா
வெள்ளிவேற் கலுழ வேகன்
வேதண்ட வேந்தர் வேந்தன்.
547.
சங்குடைந் தனைய வெண்டா
மரைமலர்த் தடங்கள் போலும்
நங்குடித் தெய்வங் கண்டீர்
நமரங்கா ளறிமி னென்னக்
கொங்குடை முல்லைப் பைம்போ
திருவடங் கிடந்த மார்ப,
விங்கடி பிழைப்ப தன்றா
லெங்குல மென்று சொன்னான்.
548.
பெருந்தகைக் குருசி றோழன்
பெருவிலைக் கடக முன்கை
திருந்துபு வணங்கப் பற்றிச்
சென்றுதன் னுரிமை காட்டப்
பொருந்துபு பொற்ப வோம்பிப்
பொன்னிழை சுடர நின்ற
கருங்கண்ணி திறத்து வேறாக்
கட்டுரை பயிற்று கின்றான்.
549.
எரிமணிப் பளிக்கு மாடத்
தெழுந்ததோர் காம வல்லி
யருமணிக் கொடிகொன் மின்கொ
லமரர்கோ னெழுதி வைத்த
வொருமணி குயின்ற பாவை
யொன்று கொலென்று நாய்கன்
றிருமணிக் கொடியை யோரான்
றெருமர மன்னன் சொன்னான்.
550.
தூசுலாய்க் கிடந்த வல்கு
றுப்புறழ் தொண்டைச் செவ்வாய்
வாசவான் குழலின் மின்போல்
யருமணிக் கொடிகொன் மின்கொ
யூசல்பாய்ந் தாடிக் காதிற்
குண்டல மிலங்க நின்றாள்
காசில்யாழ்க் கணங்கொள் தெய்வக்
காந்தர்வ தத்தை யென்பாள்.
551
விளங்கினா ளுலக மெல்லாம்
வீணையின் வனப்பி னாலே
யளந்துணர் வரிய நங்கைக்
கருமணி முகிழ்த்த வேபோ
லிளங்கதிர் முலையு மாகத்
திடங்கொண்டு பரந்த மின்னிற்
றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா
துரவரு வென்ன வுண்டே.
552.
நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி
யின்னிசை பொருது வெல்வா னியாவனே யானு மாக
வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான்
றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்கதென்றாள்.
553.
முனிவரும் போக பூமிப் போகம்முட் டாது பெற்றுந்
தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை
கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற்
பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான்.
554.
நூற்படு புலவன் சொன்ன
நுண்பொரு ணுழைந்தி யானும்
வேற்கடற் றானை வேந்தர்
வீழ்ந்திரந் தாலு நேரேன்
சேற்கடை மதர்வை நோக்கிற்
சில்லரித் தடங்க ணங்கை
பாற்படு காலம் வந்தாற்
பான்மையார் விலக்கு கிற்பார்.
555.
படைப்பருங் கற்பி னாடன்
பாவையைப் பரிவு நீக்கிக்
கொடைக்குரிப் பால வெல்லாங்
கொடுத்தபின் கூற்று முட்கும்
விடைப்பருந் தானை வேந்தன்
வேண்டுவ வெறுப்ப நல்கித்
தொடுத்தலர் கோதை வீணா
பதிக்கிது சொல்லி னானே.
556
. உடம்பினொ டுயிரிற் பின்னி
யொருவயி னீங்கல் செல்லா
நெடுங்கணுந் தோளும் போலு
நேரிழை அரிவை நீநின்
றடங்கணி தனிமை நீங்கத்
தந்தையுந் தாயு மாகி
யடங்கல ரட்ட வேலா
னாணையி ராமி னென்றான்.
557. அருமணி வயிரம் வேய்ந்த
வருங்கலப் பேழை யைஞ்ஞா
றெரிமணி செம்பொ னார்ந்த
விராயிரம் யவனப் பேழை
திருமணிப் பூணி னாற்குச்
சினந்தலை மழுங்க லின்றிக்
குருமணி முடியிற் றேய்த்த
தரன்றமர் கொள்க வென்றான்.
558. பல்வினைப் பவளப் பாய்காற்
பசுமணி யிழிகை வம்பார்
நல்லகில் விம்மு கட்டி
றவிசொடு நிலைக்கண் ணாடி
மெல்லிய தூப முட்டி
மேதகு நானச் செப்போ
டல்லவுங் கொள்க வென்றா
னணங்குடை நிணங்கொள் வேலான்.
559. விளக்கழ லுறுத்த போலும்
விசியுறு போர்வைத் தீந்தேன்
றுளக்கற வொழுகி யன்ன
துய்யறத் திரண்ட திண்கோல்
கொளத்தகு திவவுத் திங்கட்
கோணிரைத் தனைய வாணி
யளப்பருஞ் சுவைகொ ணல்யா
ழாயிர மமைக வென்றான்
560. அரக்கெறி குவளை வாட்க
ணவ்வளைத் தோளி னாளைப்
பரப்பமை காதற் றாயர்
பற்பல்காற் புல்லிக்கொண்டு
திருப்புறக் கொடுத்த செம்பொற்
றாமரை போன்று கோயில்
புரிக்குழன் மடந்தை போகப்
புலம்பொடு மடிந்த தன்றே
561. காம்புபொன் செய்த பிச்சங்
கதிர்மணி குடையொ டேந்தித்
தாம்பலர் கவரி வீசக்
கிண்கிணி ததும்ப நாகப்
பாம்புபைத் தனைய வல்குற்
பல்கலை மிழற்ற வேகி
யாம்பனா றமுதச் செவ்வா
யரசனைத் தொழுது நின்றாள்.
562. அடிக்கல மரற்ற வேகி
யரும்பெறற் றாதை பாத
முடிக்கலஞ் சொரியச் சென்னி
யிறைஞ்சலு முரிந்து மின்னுக்
கொடிப்பல நுடங்கி யாங்குத்
தோழியர் குழாத்து ணிற்ப
வடுத்தனன் புல்லி வேந்தன்
னாற்றுகி லாது சொன்னான்.
563. வலம்புரி யீன்ற முத்தம்
மண்மிசை யவர்கட் கல்லால்
வலம்புரி பயத்தை எய்தா
தனையரே மகளி ரென்ன
நலம்புரிந் தனைய காதற்
றேவிதன் னவையை நீங்கக்
குலம்புரிந் தனைய குன்றிற்
கதிபதி கூறி னானே.
564.
இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை
பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம் பொன்னார்
மென்புன மருளி னோக்கின் மானின மாதி யாகத்
தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள்.
565.
வெற்றிவேன் மணிமுடிக், கொற்றவ னொருமக
ளற்றமில் பெரும்படைச், சுற்றமோ டியங்கினாள்.
566.
கண்ணயற் களிப்பன, வண்ணல்யானை யாயிரம்
விண்ணகத் தியங்குதே, ரெண்ணவற் றிரட்டியே.
567. விற்படை விலக்குவ, பொற்படைப் புரவியு
முற்படக் கிளந்தவற்றி, னற்புடைய நாற்றியே
568.
பாறுடைப் பருதிவேல், வீறுடை யிளையரு
மாறிரட்டி யாயிரர், கூறுதற் கரியரே.
569.
மாகநீள் விசும்பிடை, மேகநின் றிடித்தலி
னாகநின் றதிர்ந்தவர்க், கேகலாவ தில்லையே.
570.
வெஞ்சின வெகுளியிற், குஞ்சர முழங்கலி
மஞ்சுதம் வயிறழிந், தஞ்சிநீ ருகுத்தவே
571.
வேழமும் மதத்தொடு, தாழ்புயல் கலந்துட
னாழ்கட லகம்புறம், வீழ்தர விரைந்ததே
572. மல்லன்மாக் கடலிடைக், கல்லெனக் கலங்கவிழ்த்
தல்லலுற் றழுங்கிய, செல்வனுற்ற செப்புவாம்.
573. பானிறப் பனிவரை, மேனிற மிகுத்தன
நீனிற நிழன்மணி, தானிரைத் தகமெலாம்.
574. வஞ்சமின் மனத்தினா, னெஞ்சகம் புகன்றுக
விஞ்சையம் பெருமகன், வஞ்சமென் றுணர்த்தினான்
575
. நங்கைதன் னலத்தினான், மங்குல்வெள்ளி மால்வரை
யெங்குமன்ன ரீண்டினார், சங்குவிம்மு தானையார்.
576.
ஈரலங்க லேந்துவே, லாரலங்கன் மார்பினான்
கார்கலந்த கைக்கணி, சீர்கலந்து செப்பினான்
577.
மாதர்வாழ்வு மண்ணதே! யாதலா லலங்கலந்
தாதவிழ்ந்த மார்ப! நின், காதலான் கடலுளான்.
578.
என்றுகூற வென்னையே, துன்றுகாதற் றோழனைச்
சென்றுநீ கொணர்கென, வன்றுவந்த வண்ணமே.
579.
துன்பமுற்ற வர்க்கலா, லின்பமில்லை யாதலி
னன்பமற்றி யானினைத், துன்பத்தாற் றொடக்கினேன்.
580.
பீழைசெய்து பெற்றனன், வாழியென்று மாக்கட
லாழ்வித் திட்ட வம்பினைத், தோழர்ச்சுட்டிக் காட்டினான்
வேறு
581.
தேன்றரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மா
லூன்றரு குருதி வேலா னுள்ளகங் குளிர்ந்து விஞ்சைக்
கோன்றரு துன்பம் மற்றென் குலத்தொடு முடிக வென்றான்
கான்றுவில் வயிரம் வீசும் கனமணிக் குழையி னானே
582.
தோடலர் தெரிய லான்றன் றோழரைக் கண்டு காத
லூடலர்ந் தெழுந்து பொங்க வுருவத்தார் குழையப் புல்லிப்
பாடிரும் பௌவ முந்நீர்ப் பட்டது பகர்த லோடு
நாடக நாங்க ளுற்ற தென்றுகை யெறிந்து நக்கார்.
583.
கட்டழற் கதிய புண்ணிற் கருவரை யருவி யாரம்
பட்டது போன்று நாய்கன் பரிவுதீர்ந் தினியர் சூழ
மட்டவிழ் கோதை யோடு மண்கனை முழவ மூதூர்க்
கட்டவிழ் தாரி னான்றன் கடிமனை மகிழ்ந்து புக்கான்.
584.
பெருமனை குறுக லோடும்பிறையென விலங்கித்
தோன்றுந்திருநுதன் மனைவி செம்பொற்
கொடியென விறைஞ்சி நிற்பவருமுலை பொதிர்ப்ப
வாங்கிவண்டின மிரியப் புல்லிக்கதிர்நகை முறுவன்
மாதர்கண்ணுறு கவலை தீர்த்தான்
585.
சந்திர காந்த மென்னுந்
தண்மணி நிலத்தி னங்கண்
வெந்தெரி பிசும்பொன் வெள்ளி
பளிங்கொடு பவளம் பாய்த்திக்
கந்தெரி மணியிற் செய்த
கன்னியா மாட மெய்திப்
பைந்தொடிப் பாவை யொன்றும்
பரிவிலள் வைகி னாளே.
586.
பாசிழைப் பரவை யல்குற்
பசுங்கதிர்க் கலாபம் வீங்கக்
காசுகண் பரிய வைகிக்
கடன்றலைக் கழிந்த பின்னாத்
தூசணி பரவை யல்குற்
றுளங்குநுண் ணுசுப்பிற் பாவை
யாசறு வரவும் தந்தை
வலித்தது மறியச் சொன்னான்.
587.
வண்டுண மலர்ந்த கோதை
வாயொருப் பட்டு நேரத்
தெண்கட லமிர்தம் பெய்த
செப்பெனச் செறிந்து வீங்கிப்
பெண்டிரு மாண்மை வெஃகிப்
பேதுறு முலையி னாளைக்
கண்டவர் மருள நாளைக்
கடிவினை முடித்து மென்றான்
588.
மால்வரை வயிறு போழ்ந்து
வல்லவர் மதியிற் றந்த
பால்வரை மணியும் பொன்னும்
பற்பல கொண்டு புக்குக்
கால்பொரு கழலி னானுங்
காவலற் கண்டு சொன்னான்
வேல்பொரு தானை யானும்
வேண்டுவ விதியி னேர்ந்தான்.
வேறு
589.
மையன்மத யானைநிரை மன்னன்மகிழ்ந் தானாப்
பொய்யில்புகழ் நாய்கன்மத வொளியினொடு போகி
நொய்தின்மனை யெய்தியிது செய்கென நொடித்தான்
மொய்கொண்முலை பாயமுகை விண்டலர்ந்த தாரான்.
590.
நானக்கிடங் காடைநகர் நாகத்திடை நன்பொன்
வானக்கிடு மாட்சியதோர் மண்டபங்செய் கென்ன
மீனத்திடை நாள்கிழமை வெள்ளிசயை பக்கம்
கானத்திடை வேங்கையெழக் கண்ணினர்கள் அன்றே
591.
நட்புப்பகை யுட்கினொடு நன்பொன்விளை கழனி
பட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு கான
மட்டசுவை வல்சியினொ டியாதுமொழி யாம
லொட்டிப்பதி னாயிரவ ருற்றுமுயல் கின்றார்.
592.
வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகிக்
கண்டதொழிற் கணிச்சிகளிற் கயம்படநன் கிடித்தாங்
கெண்டிசையு மேற்பப்படுத் தேற்றியதன் மேலாற்
கண்டுருகு பொன்னினிலங் காமுறுவ புனைந்தார்
593.
பொன்செய்குடங் கோத்தனைய வெருத்திற்பொலி
பொற்றூண்மின்செய் பசும் பொன்னிலத்துவீறுபெற
நாட்டிமன்பவள மேனவின்றுபளிக்கலகு பரப்பி
நன்செய்வெளி வேய்ந்துசுவர்தமனியத்தின் அமைத்தார்
594.
பாவையவ ளிருக்குமிடம் பளிக்குச்சுவ ரியற்றிக்
கோவைகுளிர் முத்தினியல் கோதையொடு கொழும்பன்
மாலையொடு மாலைதலை மணந்துவர நாற்றி
ஆலையமி தோவியர்கட் கென்னவணி யமைத்தார்.
595.
ஆயிதழ பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி
வாயருகு வந்தொசிந்து மறியமழை மின்போற்
சேயவர்க்குந் தோன்றியதோர் திலகமெனுந் தகைத்தாய்ப்
பாயதிரை முத்தமணல் பரந்துபயின் றுளதே
596.
காமர்களி றும்பிடியும் கன்றுங்கலை மானுந்
தாமரைய வாவிகளும் புள்ளுந்தகை நலத்தி
னேமுறுவ பாவையினொ டியக்கிநிலை யெழுதி
யாமொரையம் காண்பவர்க்கி தகம்புறமி தெனவே.
597.
உழந்தவரு நோக்கி மகிழ் தூங்கவொளி வாய்ந்து
விழுங்குமெனப் பறவைகளும் பிறவிலங்கும் அடையா
முழங்குதிரை வேலியினி னில்லையென மொய்கொண்
டெழுந்துகொடி யாடுமிதவ் வெழில்நகரி னியல்பே.
598.
ஓடுமுகில் கீறியொளிர் திங்கள்சிகை வைத்தே
மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும்
நாடிமுக நான்கதனி னான்முகனை யொக்கும்
நேடிநிமிர் தன்மையினி னேமியையு மொக்கும்
599.
கண்டவர்கள் காமுறலிற் காமனையு மொக்குங்
கொண்டுலக மேத்தலினக் கொற்றவனை யொக்கும்
வண்டெரிய லாரமுலை மாதர்மகி ழமுதம்
உண்டவர்க ளெவ்வகைய ரவ்வகைய தொன்றே.
600.
முகிற்றலை மதிய மன்ன முழுமணி மாடத் திட்ட
வகிற்புகை தவழ்ந்து வானத் தருவிசும் பறுத்து நீண்டு
பகற்கதிர்ப் பரப்பிற் றாகிப் பஞ்சவர் விமான முட்டிப்
புகற்கரு மமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.