3. அரங்கேற்று காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தெய்வ மால் வரைத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய
மலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5
பிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில் 10
சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி -
இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு, 15
ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை -
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்,
கொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை -
கூடை செய்த கை வாரத்துக் களைதலும், 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.