வாரம் செய்த கை கூடையில் களைதலும்,
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் - 25
யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து 30
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35
அசையா மரபின் இசையோன் - தானும் -
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,
வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப் பிடித்து, 40
இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து, ஆங்கு,
அசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும் -
ஆடல், பாடல், இசையே, தமிழே, 45
பண்ணே, பாணி, தூக்கே, முடமே,
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,
கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,
வார நிலத்தை வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும், 50
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,
கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,
சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் - 55
சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி, 60
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் - 25
யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து 30
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35
அசையா மரபின் இசையோன் - தானும் -
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,
வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப் பிடித்து, 40
இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து, ஆங்கு,
அசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும் -
ஆடல், பாடல், இசையே, தமிழே, 45
பண்ணே, பாணி, தூக்கே, முடமே,
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,
கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,
வார நிலத்தை வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும், 50
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,
கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,
சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் - 55
சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி, 60
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.