அகத்தியச் சூத்திரங்கள்
அகத்தியச் சூத்திரங்கள் என உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டன பல உள்ளன. ஆனால், அவற்றின் நடையும், பொருளும் ஐயத்திற்கு இடமானவையாகும். இவை பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் சூத்திரங்களைக் காணுங்கள். <ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும் சாலும் மூன்றாம் வேற்றுமைக்கு....

அகத்தியரின் மாணாக்கராகக் கருதப்படும் தொல்காப்பியர் ஒடு
உருபை மட்டுமே மூன்றாவதன் உருபாகக் கூறினார். ஓடு என்ற
வடிவத்தையோ ஆல் உருபையோ அவர் சொல்லவில்லை. சங்க
இலக்கியத்தில்
ஆல் உருபு இல்லை.
இலக்கியம் இன்றி இலக்கணம்
இன்றே எள் இன்றாகில் எண்ணெயும் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம் |
இதில் உள்ள இலக்கியம் என்பது பிற்காலச் சொல். எள் என்ற
வடிவம் சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் இல்லை.
மாறாக எண் என்றே உள்ளது.
இச்சான்றுகள் அகத்தியர் பெயரால் வழங்கும் சூத்திரங்கள்
பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன
என்பதனைக் காட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.