கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

நற்றிணை-3

“நின்ற சொல்லர்” எனத் தொடங்கும் கபிலர் பாடல்
(நற்றிணை - 1)

கபிலர்

குறிஞ்சித்திணையை மிகச்சிறப்பாகப் பாடிய கபிலர் குறிஞ்சிக்
கபிலர்என்றே அழைக்கப்பட்டவர். புலவர்கள் போற்றும் புலவராக, பாரியின் ஆருயிர் நண்பராக, சங்கப் புலவர்களுள் மிகுதியான பாடல்களை வடித்தவராகக் கபிலரை அறிகிறோம். சிறுகோட்டுப்
பெரும்பழம் தூங்கியாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ
பெரிதே(சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல, இவள்
உயிர் மிகச் சிறியது; ஆனால் இவள் காதலோ மிகப் பெரியதாய்
உள்ளது- என்பது இதன் பொருள்) என்பது போன்ற அருமையான உவமைகளும், குறிஞ்சி நில வருணனைகளும், நுட்ப உணர்வு
வெளிப்பாடுகளும் கபிலர் கவிதையைத் தனித்து எடுத்துக் காட்டுவன.


திணை : குறிஞ்சி

கூற்று : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

தலைவன் பிரியக் கருதியதை அறிந்த தோழி தலைவியிடம்
அதனைத் தெரிவிக்கிறாள். தலைவனது அன்பையும்
மனப்போக்கையும் நன்கறிந்திருக்கும் தலைவி, அவன்
பிரியமாட்டான் என உறுதியாகக் கூறுகிறாள்.

தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள்: ‘தோழி ! என் தலைவர்
நிலைத்து நிற்கும் வாய்மைச் சொல்லுடையவர் ;      பழகப்பழக
நீடிக்கும் இனிமையுடையவர்; ஒரு நாளும்     என் தோள்களைப் பிரிந்தறியாதவர். அவரைப் போன்ற மலோனவர்களுடைய     நட்பு
தாமரைத் தாதையும்     சந்தனத் தாதையும் ஊதி எடுத்துச் சந்தன

மரத்தில் அமைத்த தேன் இறால் போன்ற மேன்மையுடையது.
நீரில்லா உலகம் வாழ முடியாததுபோல, ‘அவரில்லாமல் நான்
வாழமாட்டேன்’ என்பதை அவர் அறிவார். பிரிவினால் ஏற்படும்
என் நெற்றிப் பசலைக்கே அஞ்சுபவர் என்னைப் பிரிதலாகிய
சிறுமைச் செயல் செய்வாரா? சொல் !’ பாடலில் தெரியும் சுவை
உவகைச் சுவை. (உவகை = மகிழ்ச்சி) தலைவியின் உவகை,
தலைவன் மீது அவள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையின்
அடிப்படையில் தோன்றியது. தலைவனது சொல்லும் செயலும்
உணர்வும் மலோனவை என்பதை அவள்     சொற்கள்
உணர்த்துகின்றன. இலட்சியக் காதல் எப்படியிருக்கும் என்பதை
இத்தலைவியிடம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா ! கபிலர்,
உயர்ந்த மானிடப் பண்புகள் சிலவற்றை இப்பாடலில் சுட்டிக்
காட்டுகிறார்: 1) சொன்ன சொல்லை மீறுவது கூடாது 2)
உண்மையான அன்புறவு நீடித்து இனியதாக இருப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;