கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 16 மார்ச், 2012

வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு
பொருளை வேறுபடுத்திக் காட்டத் துணை செய்யும்
உறுப்புக்கு வேற்றுமை உருபு என்று பெயர். இவ்வாறு
வேறுபடுத்துவதால்தான் ஒரு வாக்கியத்தின் பொருள்
நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.
உ.ம் -சேரன் சோழன் வென்றான் தமிழ்நாடு தில்லி
பேச்சு புலிகொல் யானை என்ற தொடர்களைக்
பாருங்கள். மேற்கண்ட தொடர்களின் பொருள்
விளங்கவில்லை.

 முதல் தொடரில் 
யார் யாரை வென்றது என்று பொருள் விளங்காமல்
இருக்கின்றது. சேரனைச் சோழன் வென்றானா?
அல்லது சோழனைச் சேரன் வென்றானா? என்பது
தெரியவில்லை. பொருள் நன்கு விளங்குவதற்காகச்
சேரன் என்னும் பெயரினை அடுத்து ‘ஐ’ என்னும்
 உறுப்பினைச் சேர்த்துவிட்டால் ‘சேரனைச் சோழன்
 வென்றான்’ என்று பொருள் நன்கு விளங்குகின்றது.
இல்லையென்றால் சோழன் என்னும் பெயரினை
அடுத்து ‘ஐ’ என்னும் உறுப்பினைச் சேர்த்துவிட்டால்
‘சேரன் சோழனை வென்றான்’ என்று பொருள் நன்கு
விளங்குகின்றது.

 இரண்டாம் தொடரில் 
தமிழ்நாட்டுடன் தில்லி பேச்சா? அல்லது தில்லியுடன்
தமிழ்நாடு பேச்சா? என்ற பொருள் விளங்காத நிலை
ஏற்படுகின்றது. தமிழ்நாடு என்பதை அடுத்து ‘உடன்’
என்னும் உறுப்பினைச் சேர்த்துவிட்டால் ‘தமிழ்நாட்டு
டன் தில்லி பேச்சு’ என்று பொருள் நன்கு விளங்குகின்
றது.

 மூன்றாம் தொடராகிய 
‘புலிகொல் யானை’ என்பதில் ‘புலியால் கொல்லப்பட்ட
யானையா?’ அல்லது ‘புலியைக் கொன்ற யானையா?’
என்ற பொருள் ஐயம் உண்டாகின்றது. புலி என்னும்
பெயரினை அடுத்து ‘ஆல்’ என்னும் உறுப்பைச் சேர்த்து
விட்டால் ‘புலியால் கொல்லப்பட்ட யானை’ எனப்
பொருள் ஆகின்றது. ‘ஐ’ என்னும் உறுப்பினைச் சேர்த்தால் ‘புலியைக் கொன்ற யானை’ எனப் பொருள்படுகின்றது.

வேற்றுமை இவ்வாறு சொற்றொடர்களில் தோன்றும் ஐயம் நீங்கி, பொருள் நன்கு விளங்குவதற்காகப் பெயர்களோடு சேர்க்கப்படும் உறுப்புக்கு உருபு என்று பெயர். பொருளை வேறுபடுத்துவதற்கு வேற்றுமை என்று பெயர். இவ்வேற்றுமை தமிழில் எட்டு வகைப்படும். ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப்பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;