கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 18 மார்ச், 2012

முதல் வேற்றுமை


முதல் வேற்றுமை திரிதல் இல்லாத (எந்த மாற்றமும் ஏற்படாத) பெயரே முதல் வேற்றுமை ஆகும். இதனை, எழுவாய் வேற்றுமை எனவும் கூறுவர். இதற்கு உருபு இல்லை. 

இது தானே தன்னை வினைமுதல் (வினையைச் செய்தவன்) பொருளாக வேற்றுமை செய்கிறது.

 ‘வளவன்’ - இது என்ன சொல்? பெயர்ச்சொல். இச்சொல் என்ன பொருளில் வந்தது? பெயர்ப் பொருளில் வந்தது. 

 வளவன் படித்தான் : தனியே நின்றபோது பெயர்ப்பொருளில் வந்த வளவன் என்னும் சொல் இத்தொடரில் படித்தல் தொழிலைச் செய்த வினைமுதல் பொருளாக வேறுபட்டது. 

படித்தான் என்னும் வினை, வளவனை வினைமுதல் பொருள் ஆக்கியது. இவ்வாறு பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை. படித்தான் என்பது இத்தொடரின் பயனைத் தெரிவிப்பதால் அதனைப் பயனிலை என்பர். 

 எட்டு வேற்றுமைகளுள் திரிபு இல்லாத (மாறுபாடு இல்லாத) பெயரே முதல் வேற்றுமையின் உருபு ஆகும். 

இது வினையையும், பெயரையும் வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும். 

பயனிலை (பயன் + நிலை) வாக்கியத்தின் கருத்தை முடித்து நிற்கும் சொல் ஆகும். 

 எடுத்துக்காட்டு குமணன் கொடுத்தான் வினையைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன. 

குமணன் வாழ்க குமணன் பெருவள்ளல் பெயரைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன. 

குமணன் இவன் குமணன் அரசனா? வினாவைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன. 

குமணன் கொடுப்பானா? அவற்றுள், எழுவாய் உருபு திரிபுஇல் பெயரே வினை பெயர் வினாக்கொளல் 

அதன் பயனிலையே(திரிபுஇல் = மாற்றம் இல்லாத) எழுவாய் வேற்றுமைக்குத் தனி உருபு இல்லை. என்றாலும், இக்காலத்தே ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை என்பனவும், என்பவன், என்பவள், என்பவர், என்பது, என்பவை என்பனவும் சொல் உருபுகளாக வரும் என உரையாசிரியர் கூறுவர். 

(1)குமணனானவன் கொடுத்தான் 
(2)ஒளவை என்பவர் பெரும்புலவர் 
(3)கோயிலென்பது குளிர்பொழில் தில்லை 
(4)யானையானது வந்தது 

 என வரும்.  மேலும், எல்லாப் பெயர்களும் எழுவாய்த் தன்மை பெற்று நிற்பதால் எல்லாப் பெயர்களுமே எழுவாய் வேற்றுமைகள் ஆகும். சுருங்கக்கூறின். முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை) கருத்தாப் பொருளை (வினைமுதலை) உணர்த்தி வரும். பெயர்ச்சொல் எத்தகைய வேறுபாடும் அடையாமல் வரும். வினை முதல், செய்பவன், கருத்தா என்பன ஒரே பொருளை உணர்த்தும் சொற்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;