சூளாமணி, கவிதைச் சுவையில் சீவக சிந்தாமணியைக் காட்டிலும் சிறந்தது என்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அருகனை வணங்கும் துதிப்பாடல்கள் சுவைமிக்கன. இவற்றில் பல ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்த கொச்சக ஒருபோகுப் பாடல்கள்.
ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வணங்கிநின் மலரடி வணங்கினம்
ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
சீரருள் மொழியைநின் திருவடி தொழுதனம்
இங்குப் பிரமன், சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளை அருகனாகவே கண்டு ஆசிரியர் வழிபடுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.