கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 16 ஜூன், 2012

நீலகேசி, -29

168வாயிலோ னுரைகேட்டு வடிக்கண்ணாண் முகநோக்கி
கோயிலையான் புகவிலக்குங்குறையென்னை முறைதிருத்தும்
பூசலிங் குடையையோபொருளிழவோ வுயிரிழவோ
நீயிலையார் புதனடற்குநிமித்தமிங் கென்னென்றாள்.


169என்கருமம் வினவுதியேலிலிங்கியரு ளென்னோடு
நன்குரைப்பார்த் தரவ்வேண்டிநாவற்கொம் பிதுநட்டே
னுன்கரும நீ செய்வாய்நுழைந்தறிவு முடையையேல்
மன்பெரியான் றிருந்தவையுண்மாற்றந்தா வெனச்சொன்னாள்.


170அப்படித்தே யெனின்வாயிலடைப்பொழிக யானைதே
ரெப்படியு மியங்குகநும்மிறைமகற்கு மிசைமினென்
றிப்படியா லிவையுரையாவிலைநாவ லிறுத்திட்டா
டுப்போடு கனிதொண்டை துயில்கொண்ட துவர்வாயாள்.


171வேந்தனு மதுகேட்டே விம்முயிர்த்த வுவகையனாய்ப்
பூந்தடங்க ணல்லார் புகுதுக வெனப்புகலும்
போந்திருக்க வெனவிருக்கை பொருந்திய வாறவர்கட்
கீந்துலகத் தியற்கையு மினிதினிற் செய்திருந்தான்.


172முதலவனோ டவனூலுமந்நூலின் முடிபொருளு
நுதலிய பொருணிகழ்வுந்நுங்கோளு மெமக்கறியத்
திதலைமா ணல்குலீர்தெருட்டுமி னெனச்சொன்னா
னதலையும் பெருங்கதவமடைப்பொழித்திட் டலைவேலான்.


173நன்றாக வுரைத்தனைநீநரதேவ நின்னவையுள்
வென்றார்க்கோர் விழுப்பொருளும்தோற்றார்க்கோர் பெரந்துயரும்
ஒன்றாக வுரையாக்காலுரையேன்யா னெனச்சொன்னாள்
குன்றாத மதிமுகத்துக்குண்டலமா கேசியே.


174அறத்தகைய வரசனுமதுகேட்டாங் கவர்க்குரைப்பான்
சிறப்பயர்வ னன்றாகவென்றார்கட் கின்றேயான்
புறப்படுப்பன் றோற்றாரைப்பொல்லாங்கு செய்தென்றாற்
கிறப்பவும் பெருதுவந்தாரிலங்கிழையா ரிருவருமே.


175வேனிரைத்த விரிதானைவேத்தவையார் வியப்பெய்தக்
கோனுரைத்த வுரைகேட்டே குண்டலமா கேசியுந்
தானுரைத்தாள் தான்வேண்டுந்தலைவனூற் பொருணிகழ்ச்சி
தேனிரைத்த கருங்குழலா டானும்பின றெருட்டினாள்.


176ஆதிதான் பெரியனாயறக்கெடு மளவெல்லா
மூதியமே யுணர்ந்தவனுறுதரும மேயுரைத்தான்
யாதனையுந் தான்வேண்டானயலார்க்கே துன்புற்றான்
போதியா னெம்மிறைவன்பொருந்தினா ருயக்கொள்வான்.


177முந்துரைத்தான் முந்நூலு மந்நூலின் முடிபொருடா
மைந்துரைப்பி லுருவுழப்பறிவோடு குறிசெய்கை
சிந்தனைகட் செலவோடுவரவுமே நிலையில்லை
தந்துரைப்பி னெரிநுதிபோற்றாங்கேடு நிகழ்வென்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;